Followers

Wednesday, June 8, 2011

ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 8)

வணக்கம் டைரி தொடர்கிறது..........



விவாதம் ஆரம்பித்தது...........


நாங்க சொல்றத கேக்க கூடாதுன்னு இருக்கியா!

நீங்க சொல்றத நான் என்னா கேக்கல...........

ஏன் கல்யாண பேச்சி எடுத்தாலே முடியாதுங்கற...........

நான் இப்படியே இருந்திடறேன்........விட்ருங்களேன்.......ப்ளீஸ்!

சொல்றத கேளு நாளைக்கு நீ எங்க கூட வர்ற அவ்ளோதான்......

அடுத்த நாள் வீட்டில் இருக்கும் பெரியவர்களின் அடக்கு முறையால்(!) அந்த இடம் நோக்கி கிளம்பினோம்........


ஏற்கனவே அந்த வீட்டிற்க்கு போய் வந்து இருக்கிறார்கள் போல..........அங்கு சென்ற பிறகு கொஞ்ச நேரம் கழித்து அந்த பெண்ணை பார்த்தேன்.......அமைதியான முகம்........நமக்கும் அமைதிக்கும் ரொம்ப தூரமாசேன்னு யோசிச்சேன்......பிறகு பெரியவர்கள் முன் பேச முடியல...

வீட்டுக்கு திரும்பியாச்சி..........

அக்கா என்ன உம்பாட்டுக்கு முடிவு பண்ணிட்ட.......

ஏன் உன்ன கேட்டு தான் முடிவுபண்ணனுமோ.......ஏன் அந்த பொண்ணுக்கு என்னா குறச்சலு........

எனக்கு தான் குறை அதிகம்னு நான் நினைக்கிறேன்......நான் அவங்க கிட்ட தனியா பேசணும்....ப்ளீஸ்!

அதெல்லாம் வேண்டாம்......நீ முதல்ல அந்தப்பொண்ணு புடிச்சிருக்கான்னு சொல்லு......மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன்.....

நான் பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்க விரும்பல அவ்ளோதான்...........

சரிடா இப்போ என்னாங்கற......முதல்ல அந்த பொண்ணுக்கு உன்ன புடிச்சிருக்கான்னு தெரிஞ்சிப்போம்......இன்னொன்னு சொல்றேன் கேளு......இந்த மாதிரி பேசிட்டு இருந்தே உனக்கு கல்யாணமே ஆகாது......


நான் ஒன்னும் ஆசைப்படலே.....நீ தான் உன் விருப்பத்துக்காக இன்னொரு பொண்ணோட வாழ்கைய கெடுக்கப்பாக்குற.........நாளைக்கே எனக்கு ஏதாவது ஒரு பிரச்சன உடலளவுல ஏற்பட்டுட்டா அது வர்ற பொண்ணத்தான் ரொம்ப பாதிக்கும்.......

இப்போ என்னா சொல்றே.........

நான் அந்த பொண்ணுக்கூட கொஞ்சம் பேசணும்..........

சரி விடு.......ஆனா இதெல்லாம் போய் அவங்க அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டு இருக்கப்போற லூசுகணக்கா!.............உனக்கு ஒன்னும் இல்ல ஒன்னும் ஆகாது........இனிமே உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குடா தம்பி......ஏன் இப்படி மனச போட்டு குழப்பிக்கற.............


(போன் போட்டு கேட்ட அக்கா......அந்தப்பெண்ணுக்கு சம்மதம் என்பதை தெரிஞ்சிகிட்டு....அவளிடம் என்னை தனியாக சந்திக்க வரும்படி குறிப்பிட்ட இடத்தை தெரிவித்தாள்.......அந்தப்பெண் முதலில் மறுத்து பின் வந்தாள்.....!)

மேடம் எனக்கு கொஞ்சம் விஷயம் உங்க கிட்ட சொல்லணும்....எப்படி சொல்றதுன்னு தெரியல......

சொல்லுங்க...என்னமோ நீங்க எங்கிட்ட தனியா பேசணும்னு உங்க அக்கா சொன்னாங்க........!

(என் முற்கால வாழ்கையின் டைரியை புரட்டிக்காட்டினேன்!.........அந்த விபத்து எந்த அளவுக்கு என்னை பாதித்தது என்பதையும்.......அதனால் நான் எந்த அளவுக்கு உடலால் நொடிந்து போனேன் என்பதையும் விளக்கினேன்!)


இந்த விஷயங்களை எல்லாம் உங்க வீட்டு பெரியவங்க கிட்ட சொல்ல சொல்லி நான் என் அக்கா கிட்ட சொல்லி இருந்தேன்......அவங்க சொன்னாங்களான்னு எனக்கு தெரியாது..........எனக்கு இதெல்லாம் மறைச்சி திருமணம் பண்ணிக்கறதுல விருப்பமில்ல.......

இப்போ சொல்லுங்க........உங்களுக்கு இந்த திருமணத்துல சம்மதமா.........

தொடரும்.........

கொசுறு: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா!

கொசுறு இன்னும்: திரு. நாஞ்சில் மனோ அவர்களுடன் நேற்று இரவு பேசினேன்...அப்போது அவர் 11 ஜூன் அன்று மும்பை திரும்பி விடுவதாகவும்....அனைவருக்கும் தெரிவிக்கும்படியும் சொல்லச்சொன்னார்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

18 comments:

சி.பி.செந்தில்குமார் said...

அய்யாவும், அம்மாவும் கூட்டணி அமைச்சா எப்படி இருக்கும்? ஹா ஹா புருஷன் ,பொண்டாட்டி 2 பேரும் மாத்தி மாத்தி பதிவு போடறீங்களே.. முருகா

சி.பி.செந்தில்குமார் said...

இன்னைக்காவது பதிவைப்படிக்கலாமா? மாப்ளை மாதிரி நைஸா எஸ்கேப் ஆகிடலாமா?

கந்தசாமி. said...

உங்க வெள்ளந்தி மனசை பார்த்து சம்மதம் னு சொல்லியிருப்பாங்க எண்டு நினைக்கிறான் ...)

பிரவின்குமார் said...

ம்ம்.. கதை அருமையாக செல்கிறது தல.. கதையை விட நீங்க இணைத்து இருக்கும் படங்கள் திகில் ஏற்படுத்துகிறது.. ஹி..ஹி..

குணசேகரன்... said...

அடடே சஸ்பென்சா சொல்றீங்க...nice .

பிரவின்குமார் said...

//கொசுறு: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா!//

ம்ம் அருமையான தன்னம்பிக்கை தத்துவம்.!

மதுரை சரவணன் said...

வாழ்த்துக்கள்.. நல்ல நடை.

பிரவின்குமார் said...

//கொசுறு இன்னும்: திரு. நாஞ்சில் மனோ அவர்களுடன் நேற்று இரவு பேசினேன்...அப்போது அவர் 11 ஜூன் அன்று மும்பை திரும்பி விடுவதாகவும்....அனைவருக்கும் தெரிவிக்கும்படியும் சொல்லச்சொன்னார்!// அடடா.. இது அல்லவா ப்ளாஷ் நியுஸ்... அண்ணன் வெற்றிகரமாக திரும்பட்டும். தகவலுக்கு நன்றி தல.

நா.மணிவண்ணன் said...

அண்ணே வணக்கம்னே

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உங்களின் பெண் பார்க்கும்(பேசும்) படலம் உங்களின் மனதை பிரதி பலிக்கிறது..

ஜீ... said...

சூப்பர் மாம்ஸ்!

நிரூபன் said...

சஸ்பென்ஸாக இந்தப் பாகத்தினையும் கொண்டு செல்கிறீர்கள் சகோ.

வாழ்வின் முக்கியமான ஒரு தருணத்தில், ஏமாற்றம் ஏதுமின்றி மனம் விட்டுப் பேச வேண்டும் எனும் உங்களின் உணர்வு பூர்வமான சிந்தனைக்கு ஒரு சல்யூட்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அண்ணே அனுபவம் புதுமை, உங்கள் பதிவினில் கண்டேன்! தொடருங்க!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா போகுது மாப்ள, இடைல விடுபட்ட பதிவுகளையும் படிச்சிட்டேன்!

இரவு வானம் said...

மாம்ஸ் சஸ்பென்ஸ் தாங்கலை சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க...

மைந்தன் சிவா said...

ம்ம் அனுபவம் அருமையான விளக்கம்

செங்கோவி said...

அப்போ அமைதியாத் தானே இருந்திருக்காங்க..அப்புறம் ஏன் இப்போ இப்படிப் பயப்படுறீங்க?

FOOD said...

வாழ்வின் வசந்த காலம் தொடங்கட்டும், வாழ்த்துக்கள் நண்பரே!