Followers

Monday, November 15, 2010

அப்பா நான் பாசாயிட்டேன் - 2

என்னதான் நம்ம குடும்ப சூழ்நிலைகள் நம்மை தடுத்தாலும் இளமை வேகம் அப்டிங்கற முரடன் வெளிய வந்துடறான். என்ன பண்றது. 
அவனுக்கு அன்னைக்கு நேரம் சரி இல்லையா இல்ல எனக்கான்னு தெரியல. எங்கப்பாரு சொன்ன விஷயம் அடிக்கடி எனக்கு ஞாபகம் வரும் - "யாரு உன்ன என்ன சொன்னாலும் உன்னோட கவனம் எல்லாம் அர்ஜுனன் எப்படி கிளியோட கண்ணு மட்டும் தெரியுதுன்னு சொன்னானோ அந்த மாதிரி படிப்பு மட்டும் தான் உனக்கு தெரியனும்" (அவரு பாட்டு சொல்லிபுடறாரு நாம அர்ஜுனனா இல்ல பீமானான்னு தெரிஞ்சிக்க வேணாமா).

ஒரு கணம் அவர் சொன்ன வார்த்தைங்க மறைஞ்சி அந்த சீனியரோட அசிங்கமான வார்த்தைங்க மட்டும் தான் கேட்டது. எனக்கு வந்த கோபத்த அடக்க நெனச்சி முடியாம அவன விட்டேன் ஒரு அடி. அவ்ளோதான் சூழ்நிலையே மாறிடுச்சி. 

என் போறதா காலம் அந்த பக்கம் வந்த ப்ரோபாசர் என்னை பாத்துட்டாரு. 


நீ HOD ரூமுக்கு வானு சொல்லிட்டு போயிட்டாரு. 
சீனியர் என்ன முறைசிகிட்டே போய்ட்டான். 
அவனுடைய பார்வைல தெரிஞ்ச ஒரு விஷயம் "இருக்குடி மாப்பிள உனக்கு தீபாவளி".

அப்பத்தான் ஒரு விஷயம் எனக்கு புரிஞ்சது. (இது ஒரு கிளைக்கதை - சமூகம் முக்கியம் மக்களே)
எங்க மாமா ஒரு சாதாரண மெக்கானிக் அவரு ஒரு பொண்ணை விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டாறு. அதனால அவரோட எங்க அப்பாரும், மத்த சொந்தக்காரங்களும் பேசுறது இல்ல. 

ஆனா நான் அவருக்கு ரொம்ப பிடித்தமானவன். அவரு அடிக்கடி சொல்ற வாக்கியம் யார்கிட்டயும் வீண் சண்டைக்கு போகக்கூடாது.

அதே நேரம் சண்டை உன்ன தேடி வந்தா முதல் அடி உன்னோடதா இருக்கணும். எதிராளி எவ்வளவு பெரிய பலசாலிய இருந்தாலும், முதல் அடி உன்னோடதா இருந்தா வெற்றி உனக்குத்தான். ஏன்னா அவன் அடுத்து யோசிக்க தான் செய்வானே தவிர உடனே திருப்பி அடிக்க மாட்டான்.
இந்த விஷயத்த ரொம்ப நாலா யோசிச்சிட்டு இருந்த எனக்கு அன்னிக்கிதான் செயல் முறை விளக்கம் கிடைச்சது.

HOD ரூமுக்கு போனா அங்க அவரு இல்ல என்னை வரவேத்தது என் ப்ரொபசர் தான். 

அவரு கேட்ட கேள்வி - 
என்ன தைரியம் உனக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகல. ஒரு சீனியர் பையன அதுவும் கேண்டீன்ல வச்சி அடிச்சிருக்கே(மனசுக்குள்ள - ரோட்டுல போட்டு அடிச்சிருந்தா  கேட்டிருக்க மாட்டாரோ).
இந்த கல்லூரியோட History தெரியுமா உனக்கு(History னா வரலாறுதானே-உபயம் வடிவேலு அண்ணே)
இல்ல சார் நான் ஒன்னும் செய்யல. அவர்தான் என்ன கண்டபடி அசிங்கமா பேசுனாரு. என்னையும் மீறி கோபத்துல அடிச்சிட்டேன். மன்னிச்சிடுங்க சார், இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன். எனக்கு என் படிப்பு ரொம்ப முக்கியம் சார்(ரெகுலர் டயலாக்கு ரிப்பீட்டு).

ஒரு சில நிமிடங்களில் அந்த சீனியரும் ரூமுக்குள் நுழைந்தான். அவனிடம் ப்ரோபாசர் ஏதோ சொல்ல வந்தார். 

அதற்குள் நானே - சீனியர் என்ன மன்னிச்சிடுங்க தப்பு பண்ணிட்டேன்.

 அவன் என் முகத்தை ஒருமுறை ஏற இறங்க பார்த்தான். பின்பு ப்ரோபாசரிடம் - சாரி சார் இனிமே இப்படி எல்லாம் நடக்காது. 
உடனே ப்ரோபாசரும் - இனிமே இப்படி நடந்த நீ வேற கல்லுரி தேடிக்க வேண்டியது தான். தம்பி உனக்கும் சொல்றேன், புரிஞ்சிதா. 
ரெண்டு பேரையும் கைகுலுக்க சொல்லிட்டு அப்போதைக்கு அப்பிரச்சனைக்கு முற்றும் போட்டார். ஆனா எனக்கு என்னமோ இது தொடரும் என்றே தோணிச்சி. 
அடுத்த நாள் நான் எப்பவும் போல பஸ்சுல வந்துட்டு இருக்கும்போது......யாரோ என்ன எத்துனா மாதிரி இருந்துச்சி ..................


தொடரும் >>>>>>>>>>>>>>

நான் என்ன ஆனேனோ அப்டிங்கறத கொஞ்சம் பேரு தெரிஞ்சிக்கணும்னா நீங்க ஓட்டு போட்டாத்தான் முடியும். 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

6 comments:

THOPPITHOPPI said...

///அதே நேரம் சண்டை உன்ன தேடி வந்தா முதல் அடி உன்னோடதா இருக்கணும். எதிராளி எவ்வளவு பெரிய பலசாலிய இருந்தாலும், முதல் அடி உன்னோடதா இருந்தா வெற்றி உனக்குத்தான்////

அதுக்காக சமாதனம் பேசவந்தவன முதல் அடின்னு அடிச்சிட போறீங்க. ஹிஹிஹி

Philosophy Prabhakaran said...

Present Sir :-)

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்...

தமிழ்மணத்தில் இணைக்கவில்லையோ...

விக்கியுலகம் said...

நன்றி திரு. THOPPITHOPPI அவர்களே,

நமக்கு அணைக்கவும் தெரியும், அடிக்கவும் தெரியும். 3 வருட ராணுவ வாழ்கை கற்று கொடுத்திருக்கு.

விக்கியுலகம் said...

தங்கள் வருகைக்கு நன்றி திரு. philosophy prabhakaran. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.

உங்கள் வருகைக்கும் பின்னூட்டதிட்கும் நன்றி.

JOTHIG ஜோதிஜி said...

ராணுவ வாழ்கை கற்று கொடுத்திருக்கு

தெரிநது கொள்ள ஆசை.

விக்கியுலகம் said...

நன்றி ஜோதிஜி அவர்களே,

சீக்கிரமே ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன். என்ன ரொம்ப மொக்கைனு யாரும் சொல்லிடக்கூடாதுன்னு ஒரு சின்ன வருடல்.