Followers

Wednesday, November 3, 2010

முதிய பருவத்திலே (ஓல்ட் இஸ் கோல்ட் பள்ளி)-2

கிளாஸ் ரூம் : 2

ராஜா: என்னப்பா இன்னிக்கு எல்லாரும் டைமுக்கு வந்துட்டீங்க. ஒரே ஆச்சரியமா இருக்கு.

நீங்க தான் இந்த ப்ளாக் டைசன திடீர்னு வர சொல்லிடீங்களே

ராஜா: ஏம்பா கேப்டன் என்ன அட்டன்டன்ஸ் எடுக்கலாமா ???

கேப்டன்: சார் எடுக்கலாம் ஆங் !

ராஜா: சரி நம்ம பள்ளில ஆண்டு விழா வருது. ஆளாளுக்கு எதாவது வித்தியாசமா செய்யுங்கப்பா.

கேப்டன்: சார் நாந்தான் முதல்ல சரியா

ராஜா: சரி சொல்லு என்ன பண்ண போற

கேப்டன்: சில விஷயங்கள முதல்ல சொல்லிபுடறேன். நான் உண்மைய சொன்ன உடனே என் பென்சில் டப்பாவ உடைகறது. அப்புறம் என் சைக்கிள்ள காத்து இறக்கி விடறது எல்லாம் கூடாது ஆங்


கதிரவன்: தம்பி உன் சொல் உனக்கே உண்மையாக படுகிறதா அன்று உனக்கு மணம் முடித்த இந்த கைகள் இன்று உனக்காக குவியாதா. ஏன் என்னிடம் நீ பகை கொள்கிறாய்.

ராஜா: ஏன் அய்யா அவரு உங்கள ஏதும் சொல்லலியே.

நான் தானே இப்போது இங்கு தலைவனாக உள்ளேன் மற்றும் அவருடைய உள் நோக்கம் எனக்கு தெரியும்.

ராஜா: ஏம்பா உன்ன இங்கிலீஷ் பாடம் எழுதினு வர சொன்னனே என்னாச்சி ?

கேப்டன்: இந்த வகுப்பறையில மொத்தம் 40 பேர் இருக்கிறார்கள். அதுல 25 ஆம்பள 15 பொம்பள. அதுல 10 இன்னிக்கோ, நாளைகோனு இருக்காங்க

ராஜா: ஏன்டா உன்ன நான் என்ன கேட்டேன், நீ என்ன உளர்றே.

கேப்டன்: எனக்கு தெரிஞ்சத தான் நான் சொல்லுவேன்.

ராஜா: ஏம்பா அந்த ஓரமா உக்கார்ந்து இருக்கறது யாரு, மூஞ்சியே சரியா தெரியலையே?

டேய் நான்தாண்டா உங்கப்பன் நல்ல முத்து பேரன் ஏய் டண்டனக்கா ஏய் டணக்குணக்கா.

ஸ்ஸ் ஸ் முடியல 

ராஜா: சரி பாடத்துக்கு போவோம்....

A Apple 

கேப்டன்: அய்யா இது தமிழ் பள்ளிக்கூடம் நீங்க ஆங்கிலத்துல பாடம் நடத்துறீங்க ஆங்

ராஜா: ஏம்பா பெரிய அய்யாவே சும்மா இருக்காரு நீ என்ன இப்படி கேக்குற என்ன அய்யா எதாவது பேசுங்க 

கதிரவன்: என் தம்பி சொல்வதை கேளடா இந்த தமிழ் வழி கல்வி நாட்டில் உள்ளோருக்கு தானடா நமக்கும் நம்மை அண்டி இருக்கும் குடும்பத்துக்கும் இல்லையடா இது ஏன் உனக்கு புரியவில்லை.

கடந்த 50  வருட காலமாக இதை சொல்லிதானே நாங்கள் பிழைத்து வருகிறோம். அண்டை மாநிலங்கள் எல்லாம் மற்ற மொழிகளை கற்று முன்னேறினாலும் 

நம் தமிழ் மக்களை முடிந்தவரை இங்கேயே வைத்துள்ளேன் பார்த்தாயா

ராஜா: சரி தலைவரே உங்களுக்கும் மத்தியில் உள்ள அன்னைக்கும் எதோ பிரச்சினணு கேள்விபட்டேன்

கதிரவன்: யார் சொன்னார்கள் ? இது அந்நிய நாட்டு சதி , இங்கு நானே  மாணவர் தலைவனாக இருக்க வேண்டும் மற்றும் என் குடும்பத்தார் வழி வழியாக இந்த மக்களை வழி நடத்தி செல்ல வேண்டும் என்று தானே அன்னையின் பாத கமலங்களில் பால் மற்றும் நீர் ஊற்றி காலையில் கூட அபிஷேகம் செய்து விட்டு வந்தேன்.

ராஜா: சரிங்க அதுக்காக உங்க பக்கத்துக்கு வீட்டுல தீ புடிச்சப்போ கூட நீங்க உதவி பண்ண போகலியாமே.

கதிரவன்: என்ன இப்படி சொல்லிவிட்டீர், அது ஒரு காலத்தில் நமக்கு அண்டை வீடு அவ்வளவே மற்றும் அவ்வீட்டு விஷயத்தில் தலையிட்டால் என் தலை தப்பாது என்று அன்னை கூறியதை கேட்டு விட்டுவிட்டேன்.
ஆனால் அடிகொருதடவை அண்டை வீட்டுக்காக குரல் கொடுத்தேனே உங்களுக்கு கேட்கவில்லையா 

ராஜா: ஏம்மா உங்களுக்கும் உதவி செய்யனும்னு தோணலியா

மின்னலு: டேய் வாத்தி அப்போ வீட்டு பொறுப்பு எல்லாம் அய்யா கிட்ட இருந்துது வீட்டு சாவி யாரு கைக்கு போறதுன்னு ஒரு முடிவு எடுக்க மக்கள் கிட்ட கேட்டா அவங்க அய்யா கைலையே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க நான் என்ன பண்றது

ஏம்பா கேப்டன் நீ எதாவது செஞ்சு இருக்கலாமே

கேப்டன்: நீங்க வேற அப்ப தான் மத்தில நல்லா சாப்பாடு வயிறு முட்ட போட்டாங்க. அந்த சாப்பாடு அடுத்த பந்தி வரைக்கும் போதுமானதா இருந்தது. அது இல்லாம நமக்கு எதுக்கு வம்பு, அந்த சாப்பாட்ட வச்சிதான் புச்சா ஒரு ஓட்டல் கட்டிகினேன் ஆங்.

ராஜா: அடப்பாவிகளா 

தொடரும் ........................

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 comments:

roshaniee said...

முடியல ...தொடருங்கள்

THOPPITHOPPI said...

அருமை.

தீபாவளி வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

:))

வாழ்த்துகள் நண்பரே

விக்கியுலகம் said...

நன்றி திரு. நிகழ்காலத்தில்.. அவர்களே