Followers

Thursday, November 18, 2010

பெண்களின் திருமண வயது என்னவாக இருக்கவேண்டும்?நான் இவ்வாறு சொல்வதால் யாரும் என்னை தவறாக என்ன வேண்டாம். என்னை பொறுத்தவரை இப்போதைய பெண்கள் மிகுந்த உத்வேகத்துடன் படித்து நல்ல நிலையில் தங்களை உயர்திக்கொள்ளுகிரார்கள். ஒரு நல்ல சமுதாயம் என்பது ஆண், பெண் இரு பாலரும் இணைந்து சரி நிகர் சமானமாக உருவாக்குவதே ஆகும்

ஆனால் இப்போதைய நிலை சற்று வித்தியாசமாக போய் கொண்டு இருக்கிறது. அதாவது இரு பாலாரும் உழைப்பிலும் வாழ்கையின் பல விஷயங்களிலும் விட்டு கொடுத்து போனால் பிரச்சினைகள் இல்லை. மாறாக இப்போது பல பெண்கள் நல்ல கல்வி பெற்று இருகிறார்கள், இருப்பினும் திருமணத்துக்கு பிறகு தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என ஒரு தரப்பினரும்,  மாப்பிள்ளை வீட்டில் வேண்டாம் என்றாலும் வேலைக்கு செல்வேன் என்று ஒரு தரப்பினரும் நினைக்கின்றனர்.இங்கு நாம் ஒரு விஷயத்தை சற்று உள்வாங்கி கவனிக்க வேண்டும். யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம், ஒரு இன்ஜினியரிங் படித்த மாணவி திருமணத்துக்கு பிறகும் வேலைக்கு செல்வார் எனில் அந்த படிப்பு அவருக்கு வருவாயையும் அவருடைய குடும்பத்துக்கும் உதவியாக இருக்கும்(படிச்ச படிப்புக்கு மரியாதையாகவும் இருக்கும்). அத விட்டுட்டு பல பேர் திருமணத்துக்கு பிறகு வீட்டிலேயே இருக்குறாங்க(தவறா புரிந்து கொள்ள வேண்டாம், எல்லோரையும் சொல்லவில்லை). எத்தனையோ அறிவாளி மாணவர்கள் பணம் இல்லைங்கற காரணத்துக்காக இன்று கல்லூரி செல்லாமல் வேலைக்கு செல்கின்றனர். ஒரு பக்கம் என்னடானா காச கொட்டி படிக்கவச்சா புருசனோட வீட்ல போய் வேல உண்டு(வீட்டு வேல),தான் உண்டுன்னு செட்டில் ஆயிடறாங்க. கொஞ்சம் நெனச்சு பாருங்க அந்த சீட்டு ஒரு சாதாரண குடும்பத்து பய புள்ளைக்கு கெடச்சிருந்தா அவன் குடும்பத்த காப்பாத்த உதவி இருக்கும்.


பெண் கல்வி என்பதே சமுதாயத்தை உயர்த்தும் அதே நேரத்தில் பெண்கள் தங்களின் எதிர்கால திட்டத்தில் தெளிவாக இருக்க வேண்டுகிறேன். பையன் ஒரு பொண்ண பாத்துட்டு படிப்ப கோட்ட விட்ட கதை நிறைய. மாறாக என்ன பிரச்சின வந்தாலும் கல்வி விஷயத்துல(பொறாமை அல்ல) பெண்கள் கருத்தா இருப்பாங்க
நான் பாத்து எந்த பொண்ணும் கவித எழுதி டைம் வேஸ்ட் பண்ணதில்ல. நம்ம பய புள்ளைங்க தான் இம்ப்ரசு பண்றேன்னு இருந்த கொஞ்ச படிப்பையும் தாரவார்துடரானுங்க.

   
இத விட இப்ப இருக்க பெண்கள்(பொதுவாக சொல்ல வில்லை குறிப்பிட்ட)  29 வயசு வரைக்கும் நல்ல படிப்பு மற்றும் வேலைல இருக்க மாப்ளைய தேடுறாங்க. அப்புறம் 30 வயது வந்த உடனே தங்கள தாங்களே compramise  பண்ணிக்கிட்டு கல்யாணம் செய்துக்கறாங்க
எனக்கு தெரிஞ்சு எங்க சொந்தக்கார பொண்ணுங்க ரெண்டு பேரு இருக்காங்க.

முதல் பொண்ணு Msc படிச்சி முடிச்சிட்டு வேலைக்கு போகாம வீட்டுலயே இருந்துடுச்சி. கேட்டா படிக்க ஆசைப்பட்டேன் படிச்சிட்டேன் அப்படின்னு சொல்லுது. கல்யாணத்துக்கு மாப்பிள தேடி தேடி அவங்க அப்பா ஓஞ்சி போயிட்டாரு. அந்த பொண்ணுக்கு தன்னை விட அதிகம் படிச்ச மாப்பிள்ள தான் வேணும்னு ரொம்ப நாள் கழிச்சி 33 வயசுல திருமணம் முடிச்சாங்க. மூணு வருஷம் ஆச்சி. இந்த மூணு வருசத்துல பல முறை சண்டையாகி அந்த பொண்ணு பிறந்த வீட்டுக்கு வந்து போயிட்டு இருந்தது. என்ன விஷயம் என்று கேட்டால் ego தான் என்று புரிந்தது. இப்போ பெரிய சண்ட வந்து ரெண்டு பேரும் விவாகரத்துக்கு விண்ணப்பிச்சு இருக்காங்க. குழந்த பிரச்சினையும் பெரிய அளவுல சண்டைக்கு காரணமா போச்சி.


ரெண்டாவது பொண்ணு mechanical engineer  படிச்சி முடிச்சிடுச்சி. அப்புறம் கேட்டா MBA  படிக்க  போறேன்னு சொல்லிச்சி. அதையும் முடிச்சிட்டு ரெண்டு வருஷம் வேலைக்கு போனாங்க. அப்புறம் முடியலன்னு சொல்லி வீட்டுலே இருந்துடுச்சி. மாப்பிளை நல்லா படிச்சவர மாசம் 1 லட்சம் சம்பதிக்கரவரா வேணும்னு வைட் பண்ணிட்டு இருக்கு. வயசு 32 ஆயிடுச்சேன்னு அவங்க வீட்டுல விசனப்படுறாங்க. ஆனா அந்த பொண்ணு கல்யாணம் பண்ணா காஸ்ட்லி மாப்பிளே தான் பண்ணுவேன்னு இன்னும் வைட் பண்ணிட்டு இருக்கு.
 இங்க நான் ஒண்ணுமே சொல்ல வரல என்ன, இது வரைக்கும் பெண்ணுக்கு கல்வி கொடுக்கறதில்ல அப்படின்னு சொல்லி வந்தாங்க இப்ப கெடச்ச கல்விய வச்சு ஒண்ணுமே பண்ணாம இருக்காங்க என்ற ஆதங்கம் தான். 
வயசு ஏற ஏற குழந்தைப்பேறு என்பது பெரிய விஷயமா போயிட்டிருக்கு பெண்களே கொஞ்சம் யோசிங்க. 
பெத்தவங்க உங்கள பெண் போல பாக்காம பொன் போல பாக்கறாங்க அதனால நீங்களும் புரிஞ்சி நடந்துக்கங்க. சமுதாயத்துக்கும் நீங்க பெற்ற கல்வி மூலமா ஏதாவது செய்யுங்க,

இப்படிக்கு நான் ஒரு முட்டாளுங்க........ ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க................

கொசுறு: சத்தியமா இந்த பதிவுக்கும் ஐஸ் க்கும் சம்பந்தமில்லிங்கோ.மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

3 comments:

ஹரிஸ் said...

சத்தியமா இந்த பதிவுக்கும் ஐஸ் க்கும் சம்பந்தமில்லிங்கோ//
தப்பிச்சிட்டீங்க..

பூங்குழலி said...

நான் இவ்வாறு சொல்வதால் யாரும் என்னை தவறாக என்ன வேண்டாம்.
யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்
தவறா புரிந்து கொள்ள வேண்டாம், எல்லோரையும் சொல்லவில்லை
பொறாமை அல்ல)பொதுவாக சொல்ல வில்லை குறிப்பிட்ட


?????

Jeyachandran said...

Magaleer, ovvoruvarum sinthikka vaendiya pathivu....
Ubayogamaaga irunthathu,,,,
Arumai ///