Followers

Friday, November 12, 2010

அப்பா நான் பாசாயிட்டேன்


நான் ஒரு சாதாரண தமிழ்குடிமகன்(சார் நான் சொல்ல வந்தது தமிழ் கல்வியில படிச்சவன்). என்னோட ஆட்டம் ஸ்டார்ட் ஆன போது அதாவது ஸ்கூல் லைப் முடிஞ்சி காலேஜ் லைப்பு ஸ்டார்ட் ஆகும்போதுதான் தெரிஞ்சிது எனக்கு அந்த விஷயம்

அதாவது நாம இது வரைக்கும் படிச்சி வந்தது தமிழ் மீடியம் ஆனா இப்போ இந்த காலேஜில இங்குலீசுல தான் பேசுனம்னு சொல்லுறாங்க.

 நமக்கு இது சரிப்பட்டு வருமா - இப்படி யோசிச்சுகினு இருந்தப்போ, எங்கப்பாரு சொன்னாரு ராசா நானோ என் அப்பன் பாட்டனோ காலேஜு வரைக்கும் போனதில்ல. நீயாவது அந்த ஆசைய நிறைவேத்துவியா?
 என்னப்பா இப்படி கேட்டுடீங்க கண்டிப்பா நான் படிச்சி முடிகிறேன்பா.

எங்கப்பா பாவம் அவரு படிக்காததால பட்ட கஷ்டத்த நான் படக்கூடாதுன்னு என்னோட சின்ன வயசுல இருந்து எங்கிட்ட கோபமா கூட பேசுனது கிடையாது. எப்பவுமே அவருக்கு ஒரே ஆச நான் ஒரு டிகிரி (பட்டம்) வாங்கணும் என்பது மட்டுமே

இதுக்காக அவர் உழைச்சது நெனச்சா பல நேரத்துல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.
 டேய் டாபிக்கு மாறாதே ................... சாரி நண்பர்களே ஒரு யு டர்ன் உடு ரைட்.
 காலைல காலேஜுக்குள்ள நுழைஞ்சேன். முதல் கிளாஸ் இங்குலீசு உடம்பெல்லாம் ஒரே ஜர்க்காயிடுச்சி. நமக்கு பாடி ஸ்ட்ராங்கு இங்குலீஸ் வீக்கு……… இதோ வந்துட்டாங்க மிஸ்ஸு.............

ஒவ்வொருத்தரா அவங்கள அறிமுகப்படுத்திகிட்டு வந்தாங்க. என் முறை வந்துச்சி பாக்கணுமே........... மொத்த கிளாசும் என் மொகத்தையே பாக்கறானுங்க. என்ன எல்லோரும் நல்ல அழகா இன் பண்ணிக்கிட்டு சும்மா ராசா கணக்கா இருக்கானுங்க. நாம சட்டைய வெளியில விட்டுக்குனு ஒரு தோல் செருப்போட(புதுசு) போயிருந்தோம்


மேடம் மை நேமிஸ் ....................................................................ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தொண்டைல கிச் கிச்................ சாரி மேடம்

அந்த மேடம் என் முகத்த பாத்து "it is ok dear" ...."next"  போய்ட்டாங்க. கிளாஸ்ல எல்லோரும் கொல்லுனு சிரிச்சிட்டானுங்க

மறுபடியும் என் ரௌண்டு வரும் போது கரிக்டா சொல்லிட்டேன்.  முதல் நாள்ல முழு வெற்றி, அன்னிக்கி என்னோட நெனப்பு எப்படி இருந்திச்சினா " ரெக்க விரிச்சி பறக்கற பறவை போல"


அடுத்த நாளே எனக்கு ஆப்பு ஆரம்பிச்சிடுச்சி சீனியர் மூலமா. காலேஜு கேண்டீன்ல உக்காந்து இருந்தப்போ அந்த நல்லவன்

ஆளு செம ஸ்டைலா இருந்தான் எல்லாம் துட்டு படுத்துற பாடு(baadu அல்ல).

டேய் இங்க வா சீனியர பாத்தா வணக்கம் வெக்க மாட்டியா.

இல்லைங்க நான் கவனிக்கல .................. 
சாரி இப்போ சொல்லிடறேன்னு அவனுக்கு ஒரு வணக்கத்த வச்சிட்டு ஒரு பிளேட் தோசை எங்கிட்ட இருந்த காசுல வாங்கி கொடுத்துட்டு கிளம்பிட்டேன்.

ம்ம் எங்கப்பாவால அப்போ அஞ்சு ரூவா தான் தினமும் கொடுக்க முடியும். எப்படியும் போக வர பஸ் பாஸு இருக்கறதால ஒன்னும் பெரிய தேவை இல்ல.

அடப்பாவி அஞ்சு ரூபாயும் கொடுத்திட்டியா - என் நண்பன் கேட்டான்.

 என்ன பண்றது கொடுக்கலைனா பேண்டு சட்டையே கழட்ட சொல்லி இருப்பான்

ஏன்டா இப்படி பயப்படறே போய் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன் பன்லாமில்ல.

விடுறா விட்டு புடிப்போம். ..............................


அந்த அஞ்சு ரூபா எனக்கு அப்போ ஐநூறு ரூபா மாதிரி. என்ன பண்றது சீனியரா போயிட்டான் நமக்கிருக்கு அம்மா குடுத்த தக்காளிசாதம். அப்போ எனக்கு தெரியல அந்த விஷயம் மறுபடியும் தொடரும் என்று.....

அடுத்த நாள் காலைல கிளாஸ் முடிச்சி வெளிய வரும்போது அந்த சீனியர் எதிர் வந்து நின்னான்

எங்க போற .......              என்ன சொல்லுங்க .............  வா வந்து கொஞ்சம் உக்காரு கேண்டீன்ல. இல்லங்க நான் HOD  ரூமுக்கு போகணும்

அவன் வார்த்தை தடித்தது.  சொல்லிகிட்டே இருக்கேன் எங்க போறே மவனே etc etc etc.

தொடரும்.....


ஒவ்வொரு பதிவும் என் குழந்தை போன்றது. குழந்தை நல்லா வளரனும்னா என்ன செய்யணும் நல்ல, சத்தான உணவு கொடுக்கணும். அதுனால சத்தான உங்க ஓட்ட போடுங்க.  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 comments:

THOPPITHOPPI said...

புகைப்படங்களை கொஞ்சம் பெரிதாக போட்டால் அழகாக இருக்கும்.

♫வாழ்த்துக்கள்♫

Philosophy Prabhakaran said...

ஓ தொடரா... ம்ம்ம் கலக்குங்க... ராகிங் சம்பந்தப்பட்ட உங்கள் எழுத்துக்கள் என் வாழ்வில் நடந்த சம்பவங்களை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது...

விக்கியுலகம் said...

வருகைக்கு நன்றி திரு.THOPPITHOPPI அவர்களே
இப்படங்களை பெரிதாக போட அனுமதி இல்லை. முயற்சித்தேன்.
மன்னிக்கவும்

விக்கியுலகம் said...

வருகைக்கு நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே. கல்லூரி வாழ்கை பலரின் எதிர்காலத்தையே மாற்றி அமைத்து இருக்கிறது நண்பா.