Followers

Friday, November 5, 2010

ஒரு மாலை நேரத்து மயக்கம்



என்னப்பா என்னன்னவோ எழுதறோம் இத எழுதமாட்டோமா

ஒன்னும் இல்ல மக்களே சரக்கு சமாச்சாரம்தான். இன்னைக்கு தீபாவளி நேத்தே எல்லாரும் உசார் பண்ணி வெச்சிருப்பாங்க. காலையில வீட்டுல சில பல கடமைகள முடிச்சிட்டு. தோ வரேன்னுட்டு போனா தெளிஞ்சி வரதுக்கு சாயந்திரம் ஆயிடும். என்ன பண்றது நம்ம அரசாங்கமே குடி மகனே, குடி என்ன ஆனாலும் நான் இருக்கேன் அப்படின்னு சொல்லுது. இந்த கொடுமைய எங்க போய் சொல்றது. நாம கொடுக்குற காச எடுத்து நமக்கே நல்லது செய்யறதா சொல்லிபுட்டு பாதி அவனுங்க குடும்பத்துக்கு தேத்திக்கறாங்க. சரி விடுங்க எப்போ இதுக்கு விமோசனம்னு தெரியல(நாட்டுமேல அக்கறையாம்).

நான் சொல்ல வந்தது என்னன்னா ஒரு பத்து வருசத்துக்கு முன்னால வந்த படங்களில் எல்லாம் இந்த அளவுக்கு சரக்கடிக்கிற காட்சிகள் இல்லன்னு சொல்லலாம். ஆனா இப்ப வர படங்க எல்லாமே புல் மப்புலதான் வருதோனு எனக்கு ஒரு டவுட்(மெசேஜ்)

ஹீரோ, வேற எந்த வேலைய பாக்குராரோ இல்லையோ. சரக்க மட்டும் பாக்காம இருக்க மாட்டேங்குறாரு
கொஞ்ச நாள் முன்னால வந்த படத்துல ஹீரோவ, ஹீரோயின் கலாய்சிட்டானு சரக்கடிக்கிற சீன். அதுல நம்ம டாஸ்மாக்க சுத்தி சுத்தி காமிகிரானுங்க. ஏன்டா டே படத்த பாத்து முடிச்சதும் நம்ம ரியல் ஹீரோங்க நேரா அங்க தானடா போவாங்க

இப்போ வர படங்களோட நெறைய காட்சிகள்ல சரக்கடிகிரா மாதிரியோ, இல்ல குடிச்சிட்டு பாடுராமாதிரியோ நெறைய சீனு வருது

அத பாக்கும் பொது என்ன மாதிரி குடும்பஸ்தன் மனசு என்னமா ஜர்காகுதுன்னு இவனுங்களுக்கு எப்படி புரிய வைக்கறது

நண்பன் நேத்து போன்ல மாட்டினான்,  என்னடா எப்படி இருக்கேனு ஒரு கேள்வி கேட்டுட்டேன். ஓன்னு அழுதுட்டான்.

 மச்சான் நாம தீபாவளிய எப்டில்லாம் கொண்டாடுவோம்டா. நம்ம வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேடா.நீ ஒரு மூலைல நான் ஒரு மூலைல என்ன விடுடா தனியாளு
எப்படிடா சரக்கையும், உன்னையும்  மறக்கறது. இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல தெரியாம நேத்து பூரா  தூங்கல(ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் - அழுகாச்சி)

இறந்தகாலம் -

அது ஒரு காலம் - அடிச்சி புடிச்சி வேலைய முடிச்சிட்டு ஓடிவருவேன்

மச்சான் எங்கடா ஆளையே காணும்

இல்லடா  இன்னிக்கி சனி கிழம அதுவும் இந்த மாசத்துல கடைசி சனி. அதான் மீட்டிங் இருக்கும்னு நேத்தே சொன்னான்டா.

அவன் வந்தா தான் சரக்க ஓபன் பண்ணனும் வைட் பண்ணுவோம்டா(நண்பேண்டா)

நான் வரும்போது இரவு 9 மணி . இன்னா மச்சி உனக்காக தாண்டா வைட் பண்ணின்னு இருக்கோம்

அதுக்கப்புறம் நடந்தத விவரிக்க தேவையில்லை.  

நிகழ்காலம் -

கடைசில அவன் போனை வைக்கும்போது சொன்னது -

ஆனா மச்சான், துட்டு தான் பெருசுன்னு எங்கள விட்டுட்டு குடும்பத்தோட நாட்டைவிட்டு ஓடிபுட்டியே டா டேய்.

இப்படி பல அவமானரகமான பேச்சுகளுக்கு பிறகு போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது

முன்னெல்லாம் நண்பர்களை சந்திக்க டீ கடைக்கு போய் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் இப்போ சரக்கு கடைல தான் மீட் பண்றாங்க(ரிபீட் மெசேஜ்)

யாராவது இந்த டைர டக்கருங்ககிட்ட சொல்லி இப்படில்லாம் சீன் வெக்க வேணாம்னு சொல்லுங்கப்பா

முடியல ....ஞாபகம்வருதே........ஞாபகம்வருதே(ஆட்டோகிராப்.........................)

(டிஸ்கி : நாம மத்தவங்க மாதிரி யோகியம் இல்லப்பா 
  
மனைவியின் குரல் கேட்டது - 

யாருங்க போன்ல .............. நம்ம பூபதி தான் எப்டியிருகான்னு கேட்டேன்.

அதுக்கா இவ்ளோ நேரம் பேசிடிருந்தீங்க. இல்ல பழைய விஷயமெல்லாம் கொஞ்சம் பேசவேண்டி ஆயிடுச்சி

வீட்ல சொல்ல முடியுமா சரக்கே, சரக்கே நலமா சீ சாரி நண்பா ஓ நண்பா ........................(அவ்வ்வ்வவ்வ்வ்வ்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 comments:

Philosophy Prabhakaran said...

ஹா... ஹா... முழுநீலக்காமெடி... ஒவ்வொரு வரிகளையும் ரசித்து படித்தேன்...

விக்கியுலகம் said...

நன்றி நண்பரே