Followers

Tuesday, November 2, 2010

முதிய பருவத்திலே (ஓல்ட் இஸ் கோல்ட் பள்ளி)

இது யாரையும் நேரிடையாகவோ, மறைமுகமாகவே,எந்த சந்து பக்கத்திலிருந்துமோ குறிப்பிடவில்லை)

ராஜாவின் ஓல்ட் இஸ் கோல்ட் ஸ்கூலுக்கு உங்களை வரவேற்கிறேன்.
 ----------------------
ராஜா (பாரதி அல்ல) தனது பள்ளிக்கு வரும் வயதான மாணவர்களிடம் ஏன் காலதாமதம் என்று அறிய முயல்கிறார்.


ராஜா: ஏன்யா ஸ்கூல் ஆரம்பிச்சு இவ்ளோ நேரமாகுது இப்பதான் வரே ஏன் லேட்டு?

கதிரவன்: அய்யா என் குடும்பத்து அங்கத்தினரெல்லாம் இன்று காலையில் வீட்டில் பெரிய அமளியில் ஈடுபட்டு விட்டனர். அவர்களுக்கு அவர்கள் பகுதி எது எந்தபாகம் யாருடையது என்று விளக்கி விட்டு வர நேரமாகிவிட்டது என்னை மன்னியுங்கள்

ராஜா: அது சரி பெரிய குடும்பத்துல இருந்தாலே அப்படித்தான். அது சரி உன் சட்ட பேக்கேட்டேல்லாம் கிழிஞ்சிருக்கு?

கதிரவன்: சண்டையில் கிழியாத சட்டை எங்குள்ளது அய்யா>  எனது பெரிய மகன் திடும் என ஒரு கேள்வி கேட்டு விட்டான். அதனால் தான் சண்டையே.

ராஜா: அப்பிடி என்னப்பா கேட்டுட்டான்?

கதிரவன்: எனக்கும் தம்பிக்கும் சரிபாதியா நாட்ட பிரிச்சி குடுக்க முடியுமா முடியாதா என்றும், என்னைப்போல் அவனுக்கு கத்தி சுத்த தெரியுமா அல்லது நாட்டு வெடிகுண்டு  வீச தெரியுமா என்றும் கேட்டுவிட்டான்.

ராஜா: அதுக்கு தம்பி என்ன சொன்னாரு?

கதிரவன்எனது இளையவாள் கூறினான் - என்னை போல் பெண் மடிக்க தெரியுமா என்றும் அடிக்கடி அரசு சார்பாக வெளி நாடு சென்றுவர இயலுமா என்றும் கேட்டு விட்டான். அவர்கள் இருவரையும் சமாதானபடுத்தும்போது  என் மகள் கோபித்து கொண்டாள்.

ராஜா: இது வேறயா உங்க பாடு திண்டாட்டம் தான்!

கதிரவன்: நாங்கள் பெரிய பரம்பரை அல்லவா. எங்கள் வீட்டில் ஆண் பெண் என்ற பேதமே கிடையாது யாருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு திருமணம் ஊருக்கு தெரிந்து சிலது, தெரியாமல் பல செய்து கொள்வோம்
அவள் வழி பேரனை அரசராக அறிவிக்க வேண்டும் என்று சண்டையிட்டாள்.

ராஜா: சரி ஒரு வழியா முடிஞ்சிதா.

கதிரவன்இதன் நடுவே ஆங்கில பள்ளியில் படித்து மத்தியில் வேலை பார்க்கும் என் இன்னொரு பேரன் என்னை மிரட்ட ஆரம்பித்து விட்டான்
வெளியில் நான் புலியாகவும் வீட்டில் எலியாகவும் வாழ்ந்து வருகிறேன். என்னவோ நான் மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக்கொள்ள வேண்டி உள்ளது (பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மண்டு வீக்கு). 

ராஜா: சரி விடுங்க பெரியவரே. ஏம்மா மின்னலு என்னாச்சி ரொம்ப நாளா ஸ்கூல் பக்கமே காணோம்

மின்னலு: யாரப்பாத்து என்ன கேள்வி கேக்குற? நான் ரெஸ்ட் எடுக்க போயிட்டு இப்ப தான் வரேன்.

ராஜா: என்னமா மரியாதையே குடுக்க மாட்டேங்குறே.

மின்னலு: டே வாத்தி நான் என் பழைய வாத்தியார தவிர எவனுக்கும் மரியாதையை குடுக்கமாட்டேன். முடிஞ்ச மோதி பாரு

ராஜா: முடியல, முடியல. ஏம்பா மரவெட்டி நீ எங்க போயிருந்தே?

MR. மரம்வெட்டி:  என்ன நக்கலா, அது என்னோட பழைய பேரு. இப்பதான் ஸ்டைலா ஜோக்கர் கன்னாயிரம்னு மாத்திடனே உன் மரமண்டைக்கு ஞாபகம் இல்லையா.

ராஜா: ஏன இப்படி பேர் மாத்திகிட்டீங்க பழைய பேரே நல்லா தான இருந்துச்சி.

MR. மரம்வெட்டி: அது வந்து நான் இல்லாம யாராலையும் சீட்டு ஆடமுடியாது. ஜோக்கர் இல்லாம ஆடமுடியுமா ரம்மி
அப்புறம் என புள்ள ஓன்னு அழுதுகுனு இருந்துச்சி. என்னடா மவனே என்னாச்சின்னு கேட்டேன்.

ராஜா: அய்யயோ அப்புறம்

MR. மரம்வெட்டி: தோட்டத்த மட்டும் நல்லா வளைச்சு போட்டியே அப்டியே எனக்கு மறுபடியும் மத்தியில வேல வாங்கி குடுன்னு அழுவுறான். இல்லைடா கண்ணு இப்போ முடியாதுன்னு சொன்னா கேக்க மாட்டேங்குறான்

-பெல் அடித்து விட வயதான மாணவர்கள் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.-

கிளாஸ் ரூம் தொடரும் ........................






மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

5 comments:

Philosophy Prabhakaran said...

ஆட்டோ வருதாம் அலர்ட்டா இருங்க...

விக்கியுலகம் said...

இதுக்கெல்லாம் பயந்துட்டா எப்புடி, எங்கூருக்கு ப்ளைட் புடிச்சிதான் வரணும்ல.

பட்டாபட்டி.... said...

இதுக்கெல்லாம் ஆட்டோ வராதுண்ணே..
நீங்க அடிச்சு ஆடுங்க...

THOPPITHOPPI said...

என் வகையராடா நீ

♫வாழ்த்துக்கள்♫

விக்கியுலகம் said...

நன்றி நண்பரே