Followers

Monday, November 22, 2010

இந்தியா - ஜனநாயகம் அல்ல பணநாயகம்

அரசியலல்ல யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க என்ற பொது விஷயத்துக்கு போறதுக்கு முன்னாலஎன்னுடைய தாழ்மையான கருத்துக்கள்.

அடிப்படையில சில விஷயங்கள இங்க வைக்கிறேன் மக்களை நினைச்சவங்க எல்லாம் போய் சேர்ந்து ரொம்ப நாளாச்சி.

ஆங்கிலேய ஆட்சி போனப்புறம் நம்ம தலைவருங்க அவங்களுக்குல்லையே முதுவுல குத்துரத சாணக்கியதனம்னு சொல்லிகிட்டாங்க

இப்போ இருக்குற அரசியல்வாதிங்க யாருமே சும்மா வரலை (வாரிசுகளைதவிர). என்னமோ அவங்க நேரா வந்து தலைவர் பதவியில உர்காந்துட்டாத யாரும் சொல்லவேணாம்இங்க எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதுதான் 

பணம் போடும் producers டைரெக்டா களத்துல இறங்கி வேலை பாக்க மாட்டாங்கஅதுக்கு சில அடிமைகள வச்சிருப்பாங்க(அரசியல்வாதி

நேரு காலத்துல அவங்க அப்பா செலவுபன்னதோட returns இன்னும் அவரோட குடும்பத்துக்கு திருப்பி குடுக்கப்பட்டுகொண்டு இருக்கு.

ஆனா அதே நேரம்மாநில விஷயத்துல நமக்கு முன் generation  பண்ண தப்பு அதாவது அப்பாக்கள் காலத்து(இப்போ நமக்கு ஒரு 35 வயது இருந்தால்தவறு நம்மளையும் நம்ம அடுத்த தலைமுறையையும் பாதிக்குது.

இங்க யாருக்கு அறிவும்அதிர்ஷ்டமும் ஒரே நேரத்துல உச்சத்துல வேல செய்யுதோ அவர் தான் தலைவர்

மற்றவங்க எல்லாம் அவருக்கு அடிமை என்பதே உண்மை(பேருக்கு ஜனநாயகம்).

மிகப்பெரிய பணக்காரர்கள் என்றுமே நம்மை மறைமுகமாக ஆட்டுவிக்கும் producers.இந்த அரசியல்வாதிகள் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான இயக்குனர்கள் மட்டுமே

இப்போ இந்த உதவியாளர்களுக்கு தானே producers ஆனா என்ன என்ற பார்வை பிறந்ததின் காரணமாக அரசியல் என்பது பொது மக்களுக்கு ஒரு விளையாட்டு பந்தயமாகிப்போனது.

ஆனால் யார் ஜெயித்தாலும் தோற்கப்போவது என்னமோ இந்த பார்வையாளர்களான(ஓட்டுபோட்ட) பொது மக்களே


அம்மா ஜெயிச்சா அய்யா கொள்ளடிச்ச பணத்த பிடுங்கி அரசாங்க கஜானாக்கு கொண்டுவரப்போரதில்ல. அய்யா செயிச்சா இன்னும் மேல மேல சேக்கறத விடப்போறதில்ல. 


இதுல கூட ஒரு சுயநலம் இருக்கத்தான் செய்கிறது.  ஏன்னா நாமளும் இந்த மாதிரி ஒரு பெரிய மனுசனோட புள்ளயா இருந்தா இத பத்தி கவலைப்படவா போறோம்!!!!!!!!!
பதவிக்கு வந்ததுக்கப்புறம் மக்களை நினைவில் கொள்பவன் முட்டாள்.

பதவிக்கு வந்ததுக்கப்புறம் தன்(பிள்ளைகளைமக்களை நினைவில் கொள்பவன் அறிவாளி மற்றும் பிழைக்கத்தெரிந்தவன்.
  
இந்த விஷயங்களில் உள்ள main உள்ளர்த்தம் - இங்கே producer பணக்காரங்க.
 directors -  அரசியல்வாதிங்கநடிகர்கள் - இது அவங்க விடுற தேர்தல் வாக்குறுதிகள்

படம் நல்லா இருந்தா(பாக்க மட்டும்தான் காஸ்ட்லி வகை)  - அவர்தான் அரசாங்கம் 

படம் நல்லா இல்லைன்னா - அவர் எதிர் சண்டைக்காரர் அடுத்த படம் வரும் வரை.

ஆக மொத்தம் பணம் போட்டவன் அத எப்படி 100 மடங்கா திருப்பி எடுக்கறதுன்னு நினைப்பானா? அத விட்டுட்டு நம்மள போல சாதரனவங்களுக்கு பங்கு(நாட்டுக்கு நல்லது செய்யறதாம்கொடுக்க நினைப்பானா?
  
ஒரு அரசியல்வாதியின் பார்வையில்

என்னப்பா உங்க எதிர்பார்ப்பு –


ஓட்டு போட பணம் தரனும்இலவசமா tv தரனும்காதுல மூக்குல போட்டுக்கறதுக்கு நகை தரனும்சாப்புடறதுக்கு 1 ரூபால அரிசி தரனும்இருக்கறதுக்கு வீடு இலவசமா தரனும் etc......

இவ்வளவுக்கு முதல் போடுறது யாரு?

ங்கொய்யால எதுவுமே செய்யாம எங்கள திட்டுவீங்க அதையும் காதுல விழாத மாதிரி (செவிடன் காதில் ஊதிய சங்கப்போலநாங்க சும்மா இருக்கணும்இதெல்லாம் எவ்ளோ கஷ்டம்ன்னு அந்த பதவில இருந்து பார்த்தா தான் தெரியும்!


இதையும் மீறி நாங்க நாட்டுக்காக உழைக்கிறோம்ன்னு டெய்லி அறிக்கை வேற கொடுக்கணும்(ங்கொய்யால நைட்டு அடிச்ச மப்பு கலையறதுக்குள்ள எவனாவது ஒரு அறிக்கை உட்டுடரானுங்க

இப்படியல்லாம் கண்ணு கட்டிப்போய் நாங்க படுற பாடு....................

கொசுறு: 
துட்ட குடுத்துட்டு பாக்கற ஆட்டம் முடிஞ்ச உடனே நாம கெளம்பலாம்ஆனா இந்த சமுதாய ஆட்டம் முடிய சான்சே இல்ல...................


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 comments:

THOPPITHOPPI said...

இந்தியா - ஜனநாயகம் அல்ல பணநாயகம் -

மாற்றம் வரும் எதுவும் நிரந்தரம் கிடையாது

Philosophy Prabhakaran said...

ஓ... உங்கள் வயது முப்பத்தி ஐந்தா (பயனுள்ள தகவல்)...

வேறொரு நாட்டில் இருந்துக்கொண்டு தமிழக அரசியலை புட்டு புட்டு வைக்கிறீர்களே...

விக்கியுலகம் said...

நன்றி திரு. THOPPITHOPPI அவர்களே,

தளத்திட்டு வருகை தந்ததட்க்கும், பின்நூட்டமிட்டதட்க்கும் நன்றி.

விக்கியுலகம் said...

நன்றி திரு. philosophy prabhakaran அவர்களே,

தளத்திட்டு வருகை தந்ததட்க்கும், பின்நூட்டமிட்டதட்க்கும் நன்றி.

உள்ளூரில் இருப்பவர்களை விட வெளியூரில் இருப்பவர்களுக்கு கண்ணு எப்போதும் அவங்க ஊரையே சுத்தி வரும் தம்பி.