Followers

Wednesday, November 17, 2010

அடி அடியாம் காரணமாம் - அப்பா பாசாயிட்டேன் - 3என்னை யாரோ எத்தியது போலிருந்தது...................

மக்கள் கூட்டம் நிரம்பி இருந்த காரணத்தால் மூன்றாவது படியில் நின்று இருந்த நான் ஓடும் பேருந்தில் இருந்து உருண்டு விழுந்தேன். பக்க வாட்டில் வந்து கொண்டு இருந்த ஆட்டோ என்னோடு மோதியது. கிட்ட தட்ட ஒரு பத்து அடி தூரம் தள்ளிப்போய் விழுந்தேன்.

நான் என் தலையை தூக்கி பார்க்கும் போது பேருந்து வெகு தூரம் சென்று விட்டது. என்னால் வலி பொறுக்கமுடியவில்லை.

அந்த ஆட்டோ டிரைவர் என்னை தூக்கி உட்கார வைத்து குசலம் விசாரித்தார்.

 ஏம்பா ஏன் படியில தொங்கணும் இப்படி விழுந்து வாரணும். 

இல்லைங்க யாரோ என்னை எட்டி உதச்சா மாதிரி இருந்தது.

நல்ல வேளை ஆட்டோல இடிச்சே லாரி இடிச்சி இருந்தா என்ன ஆயிருப்பே.

பெருமூச்சி விட்டு எழுந்து பார்த்தால் உடம்பில் பல இடங்களில் சிராய்ப்புகள் மற்றும் முதுகில் வலி உயிர் போவது போல் இருந்தது

எப்படி அங்கிருந்து காலேஜுக்கு பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடலுக்கு அந்த ஆட்டோக்கார அண்ணன் தூக்கி வந்தார் என்பது தெரிய வில்லை. ஏன்னா எனக்கு ரத்தத்த பார்த்த உடனே மயக்கம் வந்துடுச்சி(அன்றே கடவுள் எனக்கு புரியவைத்திருக்கிறான் நான் நிறைய ரத்தங்களை பார்க்க வேண்டி இருக்கிறது என்பதை).

நல்ல வேளை என் நண்பர்களுக்கு விஷயம் தெரிந்து அந்த மருத்துவமனைக்கு வந்து விட்டனர். உடம்பெல்லாம் வலி என்னவோ மூட்டை சுமந்தா மாதிரி இருந்தது

என்னோட பேராசிரியர் எங்கிட்ட வந்து - எத்தன தடவ சொல்றோம் இந்த மாதிரி படியில பயணம் செய்யாதிங்கன்னு(5 நிமிஷம் லேட்டா வந்தா  கிளாசுக்கு வராதன்னு சொன்னவர் நீர் தானே)

சார் தயவு செய்து மன்னிச்சிடுங்க, உண்மைல நான் படில தொங்கல ஏதோ என்னோட கவனக்குறைவால நடந்துடுச்சி.

சரிப்பா உடம்ப பாத்துக்க நாங்க வர்றோம்.

எல்லோரும் கிளம்பியவுடன் என் நண்பன் எங்கிட்ட வந்து சொன்னான். டேய் நீயா விழல சீனியர் ஒருத்தன் உன்ன பஸ்சுக்குள்ள இருந்து எட்டி உதச்சதனாலதான் விழுந்தே.....................
நான் தான் உனக்கு சொன்னேனே!

நீதான் கேக்கல ம்ம்ம்மம்மம்ம்ம்ம்………….. இனிமே என்னன்ன நடக்கபோகுதோ தெரியல

ஒரு வாரம் ஆச்சி நான் குணமாகி மறுபடியும் என்னோட காலேஜுக்கு திரும்ப போக.
முதல் வேலையா என்னோட பேரசிரியர மீட் பண்ணனும்னு போனேன். அவர் என்னை பார்த்த உடனே என்னப்பா உடம்பு சரி ஆயிடுச்சா என்று கேட்டாரு.

இப்ப பரவாயில்ல சார். உடனே அவர் உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க. உனக்கு உடம்பு இருக்குற அளவுக்கு மூளை இல்ல(தெரிஞ்ச விஷயம்தானே- இவருக்கு இப்பதான் தெரியுதோ).

உனக்கு நான் காலேஜுல சீட் கொடுக்கும் போது உங்கப்பா கிட்ட என்ன சொல்லி சேர்த்தேன்?

ஞாபகம் இல்ல சார் சொல்லுங்க

நீ காலேஜு தொடங்கிய பிறகு NCC  class சேரணும்னு சொன்னேன்ல

 நீ அப்பவே சேர்ந்துட்டு இருந்தேனா காலைல சீக்கிரமே வரவேண்டி இருக்கும். கூட்டத்துல வரவேண்டியது இல்ல.

ஆமாம் சார் மறந்திட்டேன். இன்னில இருந்து சேர்ந்துடறேன் என்று அவரிடம் உறுதியளித்து விட்டு அந்த cllass இல் சேர்ந்தேன்

இது என்ன சினிமாவா தள்ளிவிட்ட சீனியர் பசங்கள கூட்டமா போய் கும்மரதுக்கு.

ஆனா அவன் அன்னிக்கு செஞ்ச அந்த செயலால தான் நான் என்னை NCC  யில் இணைத்துக்கொள்ள முடிந்தது

அப்படி ஆரம்பித்து என் வாழ்கையை திருப்பிபோட்ட அந்த NCC!!!!!!!!!!!!!!

அதுக்கு பிறகு ராணுவ பயிற்சி மற்றும் அந்த வாழ்க்கை என்னை எந்த அளவு புரட்டி போட்டது என்பதும் ....................மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

9 comments:

sathish777 said...

ஹை முத வடை

sathish777 said...

ஓட்டு போட்டாச்சி

sathish777 said...

ரொம்ப நல்லாருக்கு இந்த தொடர்..தொடருங்கள்

Philosophy Prabhakaran said...

// 5 நிமிஷம் லேட்டா வந்தா கிளாசுக்கு வராதன்னு சொன்னவர் நீர் தானே //
உங்க பீலிங் எனக்கு புரியுது...

// இது என்ன சினிமாவா தள்ளிவிட்ட சீனியர் பசங்கள கூட்டமா போய் கும்மரதுக்கு //
ஹி... ஹி... ஹி...

THOPPITHOPPI said...

தொடர்ந்து எழுதுங்க
வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

நன்றி திரு. ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே.

விக்கியுலகம் said...

நன்றி திரு. THOPPITHOPPI அவர்களே.

விக்கியுலகம் said...

நன்றி திரு. philosophy prabhakaran அவர்களே.

NHACF.COM said...

Thêm chức năng nghe nhạc cho blog: cho code này vào gadget để blog của bạn có thêm chức năng nghe nhạc pro..