Followers

Wednesday, November 10, 2010

என்னாச்சி ........

என்னடா வேல பாக்குறீங்க….

திடீரென்று எல்லோரும் திமு திமு என ஓடுகிறார்கள். ஹலோ என்னங்க ஆச்சி ஏன் இப்படி ஓடுறீங்க. எவனும் பதில் சொல்ற மூட்ல இல்லன்னு நினைக்கிறேன்.

டேய் எவ்ளோ நேரமா கத்திகினு இருக்கேன் எவனாவது சட்ட பண்றானா. என்னடா ஆச்சி உங்களுக்கு இப்படி நடந்துக்கிறீங்க

மிஸ்டர் என்ன பண்றீங்க?

கேள்வி வந்த திசையை நோக்கி என் பார்வை ஈட்டி போல் பாய்ந்தது. அடுத்த நிமிடம்……….

காய்ந்த சருகு போல என் பார்வை நிலத்தை பார்த்தது. காரணம் கேட்டது என் மேலதிகாரி

சார் வேலைதான் பண்ணிட்டு இருக்கேன். இதோ இப்போ முடிச்சிடுவேன்

இத தான் ரொம்ப நேரமா சொல்லிட்டு இருக்கே. தெரியும்ல  லேட் ஒர்க் கிடையாது சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு அவன் அவன் வீட்டுக்கு சீக்கிரம் போயாகனும்

சரியா..............................

சரி சார்.

என்னடா இது நல்லா தானே போயிட்டு இருந்தது. இந்தாளுக்கு என்னாச்சி, ஓவர் டைம் வேலை இல்லைன்றான். சாதரணமா 12 மணிநேரமாவது வேலை செய்தாகனுமே.

என்னாச்சி இவருக்கு இவ்வளவு டெண்சனாகுராரே.

என்னுடன் வேலை செய்யும் நண்பன் ஒருவன் அந்த பக்கமாக வர......

டேய் மச்சான் என்னாச்சி

உனக்கு மேட்டரே தெரியாதா

என்ன சொல்லு.

இன்னைக்கு மதியத்துல இருந்து கவர்மெண்டு மாறிடுச்சு

அப்டியா. சரி அதுக்கு என்ன?

என்னவா! அடப்பாவி இப்போ ராணுவ ஆட்சி அமலாயிருக்குது. அதுனால சட்டங்கள் திருத்தப்பட்டு இப்பதான் அறிவிச்சாங்க.

அப்டியா,  என்னனு அறிவிச்சிருக்காங்க?

நீயே படி ..... அவன் காட்டிய திக்கில் இருந்த ஆபீஸ் கணிணியில் நியூஸ் ஓடிக்கொண்டு இருந்தது.

அதன் படி இன்று முதல் 

1. அரசியல்வாதிகளின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டு, அவர் இது வரை உண்மையில் எவ்வளவு உழைத்து சம்பாதித்து இருக்கிறாரோ அந்த அளவு பணத்தை அவருக்கு அவர் உழைப்பின் சாதனையாக அரசு திருப்பி அவருக்கே அளிக்கிறது.

2. சோம பானம் விற்கும் மையங்கள் இந்த பொழுதுடன் மூடப்படுகிறது. இனி இந்த நாட்டில் மக்கள் இருக்க வேண்டும் என்றால் புகை மற்றும் சோம பானம் ஆகியவைகளை மறந்தாகவேண்டும். இந்த மயக்க வஸ்துக்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இன்று முதல் மூடப்படும்

3. மொத்த தொலைகாட்சிநிலையங்கள் மூடப்பட்டு ஒரு மாநிலத்துக்கு ஒரு தொலைக்காட்சி நிலையம்(பொதிகை போல் அல்லாமல்வீதம் வழங்கப்படும். அதிலும் இனி சீரியல்கள் இடம் பெறாது. அதற்கு பதில் எப்படியெல்லாம் ஆண்களும், பெண்களும் தங்கள் உழைப்பை தொழிற்கல்வி  மூலம் பணமாக மாற்றுவது என்பது காட்டப்படும்

4. அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டுடைமை ஆக்கப்பட்ட சொத்துக்கள் மூலமாக வெளிநாட்டு கடன்கள் அடைக்கப்படும்

5. இனி , ,, என்ற பிரிவுகள் மட்டுமே இருக்கும். ஜாதிகள் குறிப்பிடப்படாது

7. திறமை கேற்ற வேலை வாய்ப்புக்கள் அரசால் நேரிடையாக வழங்கப்படும்

8. இனி ஜாதியை சொல்லி பிழைப்பு நடத்துபவர்களை நடு ரோட்டில் நிற்க வைத்து டங்குவார் உருவப்படும்

9. இனி எந்த ஒருவனும் சோம்பேறியாக சுற்றிக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு ராணுவத்தில் குதிரையின் சாணம் அள்ளும் பனி கொடுக்கப்பட்டு சாப்பாடாக புண்ணாக்கு மட்டுமே போடப்படும்

10. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அலுவலகங்கள் செயல்படும் (விடுமுறை - ஞாயிறு

11. இனி ஒவ்வொரு கல்லூரியின் மாணவர்களும் வருடத்தில் இரண்டு மாத விடுமுறை காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்களில் வேலை செய்யவேண்டும். அப்போது தான் விவசாயிகளின் கஷ்டமும், நமக்கு கிடைக்கும் உணவுக்கு எவ்வளவு உழைப்பு தேவை படுகிறது என்பது நம் வருங்கால மன்னர்களுக்கு தெரியவரும்.

அடேய் எந்திரிடா வேலைக்கு நேரமாச்சி

ஐயோ அம்மா என்னாச்சி நல்லவேளை கனவா. என்னடா எதோ நல்லது நடக்குதேனு பார்த்தேன்

வேலைக்கு கெளம்பனும்…. வரட்டுங்களா 

வாழ்க ஜனநாயகம்!!!!!!!!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 comments:

Philosophy Prabhakaran said...

நீங்கள் Vietnamல் தானே இருக்கிறீர்கள்...? நான் கூட உங்கள் நாட்டில் உண்மையில் ராணுவப் புரட்சிதான் நடந்துவிட்டதோ என்று நினைத்தேன்...

விக்கியுலகம் said...

இந்த நாட்ல ஒரே கட்சிதான். அதனால்தான் இந்த நாடு வேகமா வளருது.
நம்ம நெனப்பு எப்போதுமே நம்ம ஊர பத்தி தான் நண்பா.