Followers

Tuesday, November 30, 2010

அரசியல்வாதி வாழதெரியாதவனா?




இவ்விஷயத்துக்கு போகும் முன் சற்று உலக நடப்புகளைப்பார்ப்போம்:


1. அரசியல்வாதி கோடி கோடியாக கொள்ளையடித்து விட்டான்.
2. பணக்காரன் இன்னும் பணக்காரனாக ஆகிக்கொண்டு இருக்கிறான்.
3. ஏழை இன்னும் ஏழை ஆகிக்கொண்டு இருக்கிறான்.
 (உபயம் - சிவாஜி the boss)
இந்த மூன்றுமே ஒன்றை உணர்த்துகிறது. அது இன்று இருக்கும் சமுதாயத்தில்அவரவர்களின் நிலை.

இவ்விஷயங்களில் கூர்ந்து கவனித்தால் பொதுவான ஒரு கோபம் இருக்கும். அது நடந்து போகும் ஒருவன் பைக்கில் செல்பவனைப்பர்த்து பொறாமைப்படுவது போல் தான் (அந்த பைக்க maintain பண்ற கஷ்டம் அவனுக்கு தெரியாதே),
இந்த விஷயம் படிப்படியான வர்க்கப்பிரசினையாக உருவெடுக்கிறது

ஒரு அரசியல்வாதி கோடி ருபாய் எப்படி கொள்ளையடிக்க முடிகிறது என்றால் அது அவனுடைய வாய்ச்சவடால் எனும் மூலதனம் மூலமே, அதுவும் எளிதல்ல. அவன் அளவுக்கு நமக்கு பொய் சரளமாக சொல்ல வருவதில்லை. அதே நேரத்தில் அவனுக்கு அதிர்ஷ்டமும் (பகுத்தறிவாதிகள் மன்னிக்கவும்) உதவி செய்கிறது. இல்லையெனில் பல காலம் அவனால் தொடர்ந்து சம்பாதிக்க முடியாது.

நம்ம மக்கள் எப்பவுமே யார் மீதாவது குற்றம் சொல்லிகொண்டே இருக்கின்றனர்.
 .தா. அவனுக்கென்னப்பா நேத்து வரைக்கும் சும்மா சுத்திட்டு இருந்தான் திடீர்னு பணக்காரனாயிட்டான்.

நாம எங்க ஆகுறது, நேர்மையா உழைச்சு என்னத்த கண்டோம்!?

இந்த வார்த்தைகளை கவனியுங்கள் உங்களுக்கே தெரியும் - தன் நேர்மை தனக்கு என்ன தந்தது என்ற ஆற்றாமை

நம்ம ஊருல சொல்வாங்க  - நேர்மையா உழைச்சி கிடைக்கிற காசுக்கு என்றுமே மரியாதை இருக்கும் என்று.

என்னதான் உழைச்சாலும் நாலு காசு சேக்க முடியல

இப்படிப்பட்ட உணர்வுகளும் பணக்காரர்களுக்கு எதிராக திரும்புகின்றன. இருப்பது ஜனநாயகம் பேசும் பணநாயக நாட்டில் பேசுவதோ சோஷலிசமும், கம்யுனிசமும்.

எப்படிப்பா நடக்கும்!  ஒவ்வொரு பணக்காரனுக்கும் ஒரு வரலாறு(வரலாறுன்னா history தானேன்னுல்லாம் கேக்கப்படாது) உண்டு. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம்

ஒரு ஆட்சிய மக்களுக்கு புடிக்கலன்னாலும் அத  மாத்துறதுக்கு எதிர்கட்சிங்க கோடி கோடியா செலவு செய்ய வேண்டி இருக்கே(இது அவங்க ஆட்சி கொண்டு வர). ஆக மொத்தம் எதுவும் உடனே கெடச்சிடாது. எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு அது உழைப்பா இல்ல உங்க அறிவா என்பதே இப்போதைய கேள்வி?
(அறிவு சார்ந்த உழைப்பாகவும் இருக்கலாம்)     
                                 
நாம ஏன் ஒருத்தன பார்த்து சரில்லன்னு சொல்றோம். அவனுக்கு அது சரியா போயிட்டு இருக்கும் பட்சத்தில், அதேநேரத்துல நம்மளால அந்த விஷயத்த மனசார ஏத்துக்க முடியல

.தா. - வீட்ல இருக்க பெண்கள் tv  பாத்துட்டு இருக்கும் போது நமக்கு ஒரு கோபம் வரும் பாருங்க. அப்போதான் எதாவது அவங்ககிட்ட பேசி அவங்கள divert பண்ணப்பார்போம். இந்த விஷயத்துல அவங்களோட தனிப்பட்ட விருப்பத்துல நாம் நம் விருப்பத்த திணிக்கிறோம் இல்லையா(அப்பாடா பெண்கள் அதரவு விக்கிக்கு கெடச்சிடும்!).

ஒருத்தன் நல்லா வசதியா வாழரான்னா அது அவனோட தனிப்பட்ட ஏதோ ஒரு தெறமைக்கு கிடைத்த வெற்றி என்பதே என் கருத்து.

ஆனா நாம பேசுறது எல்லாம் நம்மை விட உயர்ந்த விஷயங்களை பற்றியே உள்ளது. இவ்ளோ சோஷலிசம் பேசுறவங்க தன் வீட்டுல எப்படி நடந்துக்கராங்கன்னு யாருக்கு தெரியும் (என்னையும் சேர்த்துதாங்க). பாதிப்பேரு கம்பியுட்டர மனைவி ஆக்கி ரொம்ப காலம் ஆச்சி

பொய், புரட்டு, ஏமாற்றுதல் மட்டுமே வாழ்கை என்று வாழும் பல பேர் பார்க்க மட்டுமே காஸ்ட்லி வகையை சேர்த்தவர்கள். கொஞ்சம் உள்ள போய் பாத்தீங்கன்னா  தெரியும் பல ஓட்டைகள்(நோ டபுள் மீனிங்விக்கி ரொம்ப நல்லவன்!)
உண்மைல பாவப்பட்ட ஜீவன்கள் இவர்கள்.

கொஞ்சம் உற்று நோக்கி பாருங்கள் - அரசியல்வாதியை -

தான் பல புரட்டு செய்து சம்பாதித்ததை சரியாக கவனிக்க கூட முடியாதவன். தான் இருக்கும் போதே அந்த பணத்திற்க்காக தன்னை பிணமாக்க காத்திருக்கும் கூட்டதிட்க்கு நடுவில் நடை பிணமாக வாழ்பவன்.
ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் நாலு பேரு துணை இல்லம் செல்ல இயலாத பிணம்(இல்லைனா கொன்னு புடுவாங்களோ என்கிற பயம்).
வாழ்கையை வாழும்போதே கைதி போல வாழ்பவன்

தனக்கு எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்று நித்தம் உயிரை பிடித்துகொண்டு வாழ்வது ஒரு வாழ்கையா.
(நமக்கு குவாட்டரும், கோழி பிரியாணியும் ரெடி பண்ணிப்புட்டு அவங்க பாவம் என்னத்த சாப்புடராங்கன்னு தெரியல)

நம்மள பாருங்க - நினச்ச நேரத்துக்கு எங்க வேணா போகலாம், வரலாம். நமக்கு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆக்க டாக்டரு தேவையில்ல

கொசுறு: இந்த வாழ்கை நித்தம் சுவர்க்கம் இதை விடுத்து என்னை நரகத்தில் தள்ளிவிடாதே இறைவா.





மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

10 comments:

Saravanakumar Karunanithi said...

Really a nice one :)

வெறும்பய said...

நல்ல பதிவு..

ஹரிஸ் said...

நீங்க யோசிக்கிற மாதிரி நான் இதுவரை யோசிக்காம போய்ட்டனே..அருமை..

Philosophy Prabhakaran said...

என்ன நீங்க பாட்டுக்கு எழுதிட்டே போறீங்க... இன்னும் ஒரு வாரத்துல கமல் படங்கள் பற்றிய பதிவை எழுதலைன்னா ஆட்டோ வரும் எப்படி வசதி...

விக்கியுலகம் said...

நன்றி திரு. Saravanakumar Karunanithi அவர்களே.

விக்கியுலகம் said...

நன்றி திரு. ஹரிஸ் அவர்களே.

விக்கியுலகம் said...

நன்றி திரு. philosophy prabhakaran அவர்களே.

தங்களுக்கு பதில் அனுப்பி உள்ளேன்.

விக்கியுலகம் said...

நன்றி திரு. வெறும்பய அவர்களே.

THOPPITHOPPI said...

தொடர்ந்து எழுதுங்க மாற்றம் வரும் வாழ்த்துக்கள்

வினோத் said...

சரிதான்..