Followers

Wednesday, November 24, 2010

காதலியும், மனைவியும் சந்தித்தால்...........!?-பாகம்-2என்னம்மா விளையாட்டு முடிஞ்சுதா....


ஆச்சிங்க ... ஆம்மாம் யாரு இவங்க ... இவங்க என்னோட காலேஜுல sorry ………….கம்ப்யூட்டர் கிளாஸ்ல என்கூட படிச்சவங்க.

அப்படியா... வணக்கங்க 

வணக்கம் 

எப்படி இருக்கீங்க.. (ஆரம்பிச்சிட்டாங்க குசலம் விசாரிக்க என்ன ஆகப்போகுதோ சொக்கநாதா - எனக்கு திக் திக் என்றது)

அப்புறம் உங்களுக்கு எந்த ஊரு(ரொம்ப முக்கியம் தெரிஞ்சு என்ன பண்ண போறா தெரியலையே

சென்னை தாங்க….. உங்களுக்கு................ எனக்கும் தான் ..........

எங்க கல்யாணத்துல உங்கள பாக்கலையே (ஆஹா திரி start)

வந்தவள் என் முகத்தை பார்த்து என்ன குமார்…. கேக்குறாங்க சொல்லுங்க ...........

இல்லம்மா அவங்களுக்கு நான் அனுப்பிய invitation கிடைகலயாம் அதான் விஷயம் .......................

அப்படிங்களா sorry ங்க....

அட பரவா இல்லைங்க விடுங்க.....  இதுக்கெல்லாம் சாரி கேட்டுகிட்டு…..

 அப்படி இல்லைங்க… இவருடைய எல்லா friends களையும் நான் பார்த்து இருக்கேன் உங்கள தவிர.

உங்க கணவருக்கு நான் ரொம்ப close ஆனா ரொம்ப நாளா நான் வெளி நாட்டுல இருந்ததால தொடர்பு இல்லாம போச்சி (ரொம்ப க்ளோசா அடிப்பாவி பிட்ட போட்டுடாளே). (சரி சமாளிப்போம், இவங்க சரக்குக்கு நான் உறுகாயா)

சரிம்மா நமக்கு டைம் ஆகுதுல்ல கிளம்பலாமா…..

 சரி பூர்ணிமா

அப்புறமா பாக்கலாமா......

என்ன குமார் எவ்வளவு நாளாச்சி பார்த்து.

I like your wife.

உங்க wife ரொம்ப நல்லா பேசுறாங்க

வாங்க இன்னைக்கு என்கூட lunch சாப்பிடலாம்.

பரவாஇல்ல இன்னொரு நாளைக்கு வரோமே

ஏன் குமார் என்னோட lunch வரக்கூடாதா.... நீங்க சொல்லுங்க friend.... 

(சாப்பாடு போட்டு வம்பு இழுப்பாலோ)

என்னங்க எவ்வளவு அன்போட கூப்பிடறாங்க வாங்க போயிட்டு வரலாம். இன்னும் மூணு நாள்தான் இருக்கு அப்புறம் நாம கிளம்பிடுவோமே, அதுக்குள்ளே உங்க friend கூடநானும்  கொஞ்ச நேரம் பேசுனா மாதிரி இருக்கும்ல(ஸ்ஸ்ஸ் ஓகே start music - நான் பொத்தி பொத்தி சொல்லவேணாம்னு நெனச்சத என்னா மாதிரி உடசாச்சி).  

ஏன் 3 நாளைக்கு அப்புறம் எங்க போறீங்க .....

ஏன் உங்களுக்கு தெரியாதா நாங்க இப்போ (நான் இடை மறித்து) வாயேன் போற வழியில பேசிப்போம்.

நீங்க அந்த entrance wait பண்றீங்களா நான் கார எடுத்துக்கிட்டு வந்துடறேன்.

(தாயே இப்படியே விட்டன்னா குறுக்கால பூந்து ஓடிடுவேன், எப்படி ஓடுறேன்னு மட்டும் நீ பாரு எங்க தலைவரு தர்மத்தின் தலைவன்ல ஓடுனத விட பாஸ்டா ஓடுவேன்

சரிங்க நாங்க wait பண்றோம்.

உங்கள் குட்டீஸ் அழகா இருக்கான்

ஏம்மா அவங்களுக்கு எதுக்கு தொந்தரவு கொடுக்கற, நாம கிளம்பி இருக்கலாம்ல......

நீங்க ஏங்க இவ்வளவு டென்சன் ஆகுறீங்க. நீங்க இந்த மாதிரி டென்சன் ஆகி நான் பார்த்ததில்லையே.

அப்படில்லாம் ஒன்னும் இல்லையே.

(இன்னிக்கி இருக்குடி மாப்பிள உனக்கு தீபாவளி


இல்ல அவங்க பெரிய business women அதான் சொன்னேன்

அவங்களுக்கு நெறைய வேலை இருக்கும் நாம டைம் பாஸ் பண்ண வந்திருக்கோம். எதுக்கு அவங்கள disturb பண்றதுன்னு நெனச்சேன்.

வேற ஒன்னும் இல்ல

(என்னால் முடிந்தவரை cut செய்ய முயன்று தோற்றுப்போனேன்)

..................

கொசுறு : பல இடங்களில் மனசு சொல்ற விஷயங்களுக்கு உதவிய திரு. வடிவேலு (நகைச்சுவையாளர்) அவர்களுக்கு நன்றி. 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

7 comments:

வெறும்பய said...

நல்லாத் தானே போய் கிட்டிருக்கு... அப்புறம் என்ன ஆச்சு தலைவா.... சீக்கிரம் சொல்லுங்க..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////எங்க கல்யாணத்துல உங்கள பாக்கலையே (ஆஹா திரி start)///
ஹி ஹி ஹி . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ohh my god awesome man . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///உங்க கணவருக்கு நான் ரொம்ப close ஆனா ரொம்ப நாளா நான் வெளி நாட்டுல இருந்ததால தொடர்பு இல்லாம போச்சி (ரொம்ப க்ளோசா அடிப்பாவி பிட்ட போட்டுடாளே). ////

சூப்பர்ர்ர்ர் . . . . ஹ ஹ ஹ . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

Really u got a good sense of humor man . .
keep going . . .

http://rockzsrajesh.blogspot.com/

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///
ஏன் குமார் என்னோட lunch வரக்கூடாதா.... நீங்க சொல்லுங்க friend....

(சாப்பாடு போட்டு வம்பு இழுப்பாலோ)////

இதுவும் சூப்பர்ர்ர்ர்ர் . . .

Philosophy Prabhakaran said...

அடுத்த பாகம் இருக்குதானே... க்ளைமாக்ஸ் வந்து நீங்க அடி வாங்கினது மாதிரியே தெரியலையே...