Followers

Friday, November 19, 2010

ஒரு புலி புல்லு ....................


என்னுடைய மட்டைப்பந்து விளையாட்டின் ரோல் மாடலாக நான் என் சிறு வயதில் என் மனத்தில் பதிந்த உருவம்.



நான் அப்போது மிகவும் ஒல்லியாக இருப்பேன். என் கனவு பல கோடி இந்திய மக்களின் நடுவே நானும் ஒரு சிறந்த கிரிகெட் வீரனாக வலம் வர நினைத்தேன். என்ன செய்வது காலத்தின் கொடுமை காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. எல்லாமே இருண்டு போனதாக எனக்குப்பட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் விளையாடிவந்த விளையாட்டு கிரிக்கெட்.


எங்க அப்பா எவ்வளவோ முயற்சி செய்தும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாத விஷயமாக கிரிகெட் இருந்தது.  கிரிகெட் டிவி போட்டாலே வயித்துவலின்னு சொல்லி லீவு போட்ட நாட்கள் எத்தனை ஞாபகமில்லை

நான் சொல்ல வர்றது கிரிகெட்டு பாக்கறவங்கள பத்தி. அய்யா கனவான்களே இப்போ மக்கள் எப்படியோ நான் கிரிகெட் ஆட ஆரம்பிக்கும் போது, கிரிகெட் தான் சினிமாவ விட பெரிதா இருந்தது எனக்கு.

எனக்கு நினைவு தெரிந்த காலகட்டங்களில் விளையாடிய விளையாட்டு மட்டைப்பந்து மட்டுமே. ஆனால் அவ்விளையாட்டை தொலைகாட்சி மூலம் பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கும்

அதாவது எங்க வீட்டில் அப்பெட்டி இல்லையென்பதால் பக்கத்தில் உள்ள என் நண்பனின் வீட்டில் அமர்ந்து எல்லோரும் பார்ப்போம். அதுவும் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடும்போது ஒரு போர் மூளுவது போல ஒவ்வொரு பந்திற்கும் ஓசை அதிகமாக இருக்கும்

கிரிக்கெட்டில் என்னோட ரோல் மாடல் அசார்.



நான் இவரை தேர்ந்தெடுதத்தட்க்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. நான் இவரைப்போலவே ரொம்ப ஒல்லியான உருவம்(சின்ன வயசில சிங்கக்குட்டி கூட பூனை குட்டி மாதிரி இருக்கும் - ஏன் மனுசனாவே இருக்க மாட்டியா அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது என்ன பண்றது தமிழ் சினிமா பாத்து வளந்தவன் இல்லையா அதான் sorry).

2. இவர் ஆடிய style, அது மாதிரி எந்த ஆட்டக்காரரும் ஆடி நான் பார்த்ததில்ல


ஒரு ஒல்லியான மனுஷன் ஒரு வெயிட் இல்லாத பேட்ட வச்சுக்கிட்டு சுத்தி சுத்தி அடிப்பாரு. என்னதான் சொல்லுங்க அந்த flick யாருக்கு வரும். இப்படி என் துரோனாசாரியாரா  இவர நெனச்சிக்கிட்டு ஆடிய ஆட்டங்கள் எத்தனை எத்தனை.
  
இவரு மாதிரி பீல்டுல காலர தூக்கி நின்னுக்கிட்டு slip எத்தன காட்ச் புடிச்சிருக்கேன். எல்லாம் ஒரு காலம் அப்படி  ஒரு மனுஷன் இருந்தான் இப்ப கூட அத நெனச்சா மனசு என்னவோ பண்ணுது


அப்படிப்பட்ட ரோல் மாடலால நான் காலேஜு லெவெல்ல ஆடும் போதும் பேசப்பட்டேன். அவரு பத்தி பேசிபேசியே  பல காலம் போச்சி

திடீர்ன்னு துட்டு வாங்கி கவுத்துட்டார்னு கேள்விபட்ட போது, மனசு ரொம்ப வலிச்சது. என்ன துட்டுக்காக கவுரவர் பக்கம் போயிட்டாரே என்று நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா போச்சி


ஒரு புலி புல்லு தின்ன போயிடுச்சி ......................

கொசுறு: இன்றும் நான் sunday மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கிரிக்கெட் ஆட்டமே என் உடலை ஓட வைத்து கொண்டு உள்ளது. அப்போ கிரிகெட் பால் இப்போ டென்னிஸ் பால்ல கிரிகெட்டு(ஆர்வத்துக்கு ஏதுங்க வயசு)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

12 comments:

Philosophy Prabhakaran said...

அசாருதீன் எனக்கும் பேவரிட் பிளேயர்... அசாருதீன் அவுட் ஆனதால் புரண்டு புரண்டு அழுத காலமெல்லாம் உண்டு...

உங்களுடைய முந்தய பதிவைப் படித்தேன்... சுவாரஸ்யமாக இருந்தது... சில பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து வர முடியாமல் போனது... மன்னிக்கவும்...

விக்கியுலகம் said...

நன்றி,

வருகைக்கும் பின்னூட்டதிட்கும் நன்றி நண்பா.

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

தனிப்பட்ட விஷய்ஙக்ளை விட்டு பார்த்தால் மிடில் ஆடரில் மிதமான நிதானத்துடன், அதிரடி ஆட்டத்தை கொடுத்த அசார்.. எனக்கும் பிடிக்கும்.

விக்கியுலகம் said...

நன்றி திரு. Cable Sankar அவர்களே,

தளத்திட்டு வருகை தந்ததட்க்கும், பின்நூட்டமிட்டதட்க்கும் நன்றி.

அவர் செய்தது சாதாரண விஷயம் அல்ல, தேசதுரோகம் எப்படி மன்னிப்பது. நான் ஒன்றும் அரசியல்வாதி அல்லவே அவரை M.P ஆக்கி அழகு பாக்க.

ஜிஎஸ்ஆர் said...

நீங்கள் Links In என்பதில் அருகில் இருக்கும் No data வை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் அது நாளடைவில் உங்கள் டிராபிக் வரும் வழியை வைத்து வந்துவிடும் அது ஒன்றும் பிரச்சினை இல்லை

அலைக்ஸா தரப்பட்டியை இரண்டு முறை இனைத்திருக்கிறிர்கள் ஒன்று மட்டும் போதுமே மேலும் ஒரு சின்ன ஆலோசனை இந்த வகையான டெம்ப்ளேட்டுகள் ஸ்குரோல் செய்வதற்கும் தளம் திறப்பதற்கும் சிறப்பாய் இருக்காது ஆலோசனை செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

விக்கியுலகம் said...

உங்கள் வருகைக்கும் எனக்கு அளித்த பதிலுக்கும் நன்றி.

நா.மணிவண்ணன் said...

அசார் உடைய அந்த பீல்டிங் ஸ்டைல் தனி தாங்க
மேக்ஸ்சிமம் டைமிங் சாட் ஆடுவாரு .

Philosophy Prabhakaran said...

உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா...

விக்கியுலகம் said...

நண்பரே நீங்க சொல்லி மறுக்க முடியுமா...

இதோ ஆரம்பிக்கிறேன்.

தவறு இருந்தால் மன்னிக்கவும்.

விக்கியுலகம் said...

நன்றி திரு. நா.மணிவண்ணன் அவர்களே,

தளத்திட்டு வருகை தந்ததட்க்கும், பின்நூட்டமிட்டதட்க்கும் நன்றி.

Philosophy Prabhakaran said...

நண்பரே... இப்போது இல்லை... நான் இரண்டொரு நாட்களில் எனது தளத்தில் பதிவொன்றினை எழுதி அதன் மூலமாக உங்களை அதிகாரப்பூர்வமாக அழைக்கிறேன்... அதன்பிறகு எழுதவும்... அதுவரை பொறுமை காக்கவும்...

விக்கியுலகம் said...

நீங்க சொன்ன பிறகுதான்.

சரி நண்பரே