Followers

Monday, November 8, 2010

குவாட்டரும் vs மேட்டரும்


நெறைய பேர் சரக்கு விஷயத்த பத்தி எழுதும் போது அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணியே எழுதறாங்க. இதுல எத்தன பேர் இன்னும் வாரத்துல ஒரு நாளோ இல்ல சில நாளோ சரக்கடிகிரவங்கனு தெரியல.

நான் சொல்லவந்தது சரக்கடிக்கிரதுக்கு காரணம் தேடுற ஆட்களை பற்றி அல்ல.  சரக்க ருசிபாக்க காத்திருக்கிற இளவட்டங்கள பத்தி சொல்றேன்

இப்போ லேட்டஸ்டா ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துற படம் ரிலீஸ் ஆகி இருக்கு. படத்தோட பேரு “வ”குவாட்டர் கட்டிங்”(படம் பேரு கேட்டாலே காலு சரக்கு கடை பக்கமா திரும்புது).

இந்த படத்தோட விமர்சனத்த அழகா நம்ம சகா திரு. philosophyprabhakaran அவர்கள் அருமையாக எழுதி இருந்தார்
லிங்கு http://philosophyprabhakaran.blogspot.com/  நன்றி.  இப்போ பிரச்சினை விமர்சனத்த பத்தி இல்ல.

என்ன ஒரு அற்புதமான கதை. இந்த படத்தோட விமர்சனத்த படிக்கும் போதே இந்த மாதிரி படம் இப்ப இருக்க காலகட்டத்துக்கு எவ்வளவு தேவை அப்டிங்கற விஷயம் எனக்கு தெளிவா உறைக்குது. நம்ம டாஸ்மாக்குக்கு எப்படி எல்லாம விளம்பரம் கொடுக்கறதுன்னு யோசிச்சி கவர்மண்டு இந்த மாதிரி படத்துக்கெல்லாம் அனுமதி கொடுக்கறாங்க போல

ஒரு குவாட்டருக்காக எத்தன கோடி போட்டு படம் எடுக்குறாங்க. அடப்பாவிகளா அத யாராவது உருப்படறமாதிரி படம் எடுக்க கூடாதா. இப்ப இருக்க பசங்க சாதரணமாவே டீ கடைல புழங்கரத விட சரக்கு கடைலதான் அதிகமா புழங்கறாங்க

என்னமோ தெரியல, ஏற்கனவே 8 வது படிக்கிற பசங்கல்லாம் சரக்கு வாங்கிட்டு போய் அடிக்குது நம்ம நாட்டுல. இத இன்னும் உசுப்பி விடராமதிரியே படங்களும் வந்துகிட்டு இருக்கு

எப்படியோ எவன் புள்ள எந்த கடைல சரக்கடிச்சா எனக்கென்ன எம் புள்ள நல்லா இருந்தா சரின்னு நினைக்கிற ஆட்கள் இருக்கிறவரை யாரும் எதையும் மாத்த முடியாது

டை டக்கருகலே தயவுசெய்து நாட்டுக்கு நல்ல விஷயங்களா சொல்றா மாதிரி படம் எடுங்க. அப்படியே உங்க கல்லாவையும் நிரப்பிக்கோங்கோ யாரு தப்புன்னு சொன்னா.

எதோ பாத்து செய்யுங்கோ

"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ ,
தெரிஞ்சும் தெரியாம இருந்திருந்தா அது திரும்பவும் வராம பத்துக்கோ"



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

7 comments:

சௌந்தர் said...

ஒரு குவாட்டருக்காக எத்தன கோடி போட்டு படம் எடுக்குறாங்க. அடப்பாவிகளா அத யாராவது உருப்படறமாதிரி படம் எடுக்க கூடாதா.////

அப்படி எடுத்தா மட்டும் பார்த்து விடுவார்களா...?

Philosophy Prabhakaran said...

இதற்கெல்லாம் அனுமதி கேட்க தேவையில்லை நண்பா... அது சரி... நீங்க நல்லவரா கெட்டவரா...

விக்கியுலகம் said...

நல்லவனா think பண்ண
நினைக்கிற போது நல்லவன். மத்த சமயங்களில் சரிபாதி.

sathish777 said...

ஓட்டு போட்டாச்சுங்க

sathish777 said...

ஒரு குவாட்டருக்காக எத்தன கோடி போட்டு படம் எடுக்குறாங்க. அடப்பாவிகளா அத யாராவது உருப்படறமாதிரி படம் எடுக்க கூடாதா//
சூப்பர்

sathish777 said...

அவங்களோட ஓரம்போ நல்லாதான் இருந்திச்சி ஏன் இப்படி ஆனாங்களோ

விக்கியுலகம் said...

நன்றி திரு. ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே