Followers

Tuesday, November 23, 2010

காதலியும் மனைவியும் சந்தித்தால்…………!?

இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால் எப்படி இருக்கும். நான் சொல்றது நிசமா சந்திக்கறது. சினிமா மாதிரி இல்ல(ரீலு இல்ல ரியலு).

இப்படி ஒரு நிகழ்வு என் வாழ்வில் நடந்தது
நான் வெளிநாடு வந்து(குடும்பத்துடன்) ஒரு வருடம் கழித்து இந்தியாவுக்கு வருட விடுமுறைக்காக சென்றேன். அப்போது என் மனைவி முன்னமே(1 மாதம்) குட்டிசுடன் சென்று விட்டார்கள்.

எப்பவுமே நாம இந்தியா வரும்போது வீட்டுல செம மரியாத கிடைக்கும். ஏன்னா வாய்க்கு ருசியா உணவு கிடைக்காத நாட்டுல இருக்காருன்னுதான். சரி சொந்த கதை போதும், சோக கதைக்கு வரேன்

கிடைச்சது 21 நாள்தான் லீவு அதுல எத்தன ஊரை மற்றும் சொந்த காரங்களா பாக்கறதுன்னு ஒரு அன்பு சண்டை. இதுக்கு  நடுவுல ஒரு நாளு அபிராமி மாலுக்கு போயிருந்தோம். சனி பகவான் என்ன விட்டு ரொம்ப வருஷம் ஆச்சே நமக்கு என்ன ஆகப்போகுது என்று இருந்த எனக்கு லைட்டா அலர்டாகனும்னு திடீர்னு தோணிச்சி பாருங்க ......

என் மனைவியும் குழந்தையும் அந்த மால்ல இருந்த ஒரு விளையாட்டு எடத்துக்கு போறேன்னு போய் இருந்தாங்க.

என்ன சார் எப்படி இருக்கீங்க ........... 


திடீர்ன்னு ஒரு குரல்................. வந்த திசையே திரும்பி பார்த்தேன். அவள் என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தாள்.

நான் உட்காந்து இருந்த table எதிர்ல அவ வந்து உக்காந்தா..............

நல்லா இருக்கேன் நீங்க(இவளா) ?

ம்ம் இருக்கேன் அப்புறம் life எப்படி போயிட்டு இருக்கு?

(இதுவரைக்கும்)நல்லா போயிட்டு இருக்கு(உன்ன பாத்துட்டனே இனிமே எங்க)!

ம்ம் உங்களுக்கு((மரியாத குடுக்குரானாம்)?

பரவாயில்ல .... தனியாவா வந்து இருக்கீங்க .....

நான் என் wife வோட வந்து இருக்கேன்

என்ன ஒரு interesting கா பேச மாட்டேன்கிறீங்க?

அப்படியில்ல உங்கள பாத்து ரொம்ப வருசமாச்சி இல்லையா அதான்(சாமி இன்னைக்கு முழுசா ஊடு போய் சேந்தா உனக்கு பொங்கல் வைக்கறேன்)! 

எவ்வளவு நாளு ஆச்சி பாத்து

(அய்யய்யோ இன்னிக்கி இவ கடா வெட்டி பொங்க வைக்காம போக மாட்ட போலயே)

சரி உங்க மனைவிகிட்ட என்னை introduce செஞ்சு வெக்கமாடீங்களா (இதுவேறயா)?

(என்னன்னு சொல்லி) அப்படி இல்ல அவங்க குழந்தையோட விளையாட போயிருக்காங்க வந்துருவாங்க

நீங்க சொல்லுங்க உங்க life எப்படி போயிட்டு இருக்கு( டேய் லூசுப்பயலே மறுபடியும் முதல்ல இருந்தா)?

இப்போ நான் தனியாதான் இருக்கேன்

சாரி உங்க கணவர் .........

diverse ஆகி 3 வருஷம் ஆகுது. அப்பாவும் மேல போய் சேந்துட்டார்

அப்படியா சாரிங்க.... …

பரவாயில்ல போயிட்டு இருக்கு .

அப்புறம் உங்க கல்யாணத்துக்கு கூட எனக்கு invitation குடுக்கவே இல்லையே (குடுத்துருந்தா மட்டும்)

இல்லங்க அப்போ நீங்க ஊருல இல்லன்னு உங்கப்பா சொன்னாரு. நானும் ராஜேஷும் வந்து பத்திரிக்கை கொடுத்துட்டு வந்தோமே!

அப்படியா !!!!!!!!!!

எங்கப்பா எங்கிட்ட சொல்லவே இல்லையே(எப்படி சொல்லுவான் woodlands hotell உக்காந்து டீல் பேசனவனாசே)

தெரியலீங்களே (இப்போ அவன எங்க போய் தேடுறது அதான் போய் சேந்துட்டானே)

அப்புறம் வேலையெல்லாம் எப்படி போகுது?

நல்லா போயிட்டு இருக்குங்க(டேய் உளறிடாத உண்மைய)

எனக்கு எங்கப்பா போனதுக்கப்புறம் அவரோட business நான் தான் பாத்துக்கறேன். but வாழ்க்கையே வெறுத்து போச்சி, நான் நம்புனவங்க எல்லாம் என்னை தனிய விட்டுட்டு போய்ட்டாங்க .....................(அழுகை)

ஏங்க அப்படி சொல்றீங்க please  கண்ணை தொடச்சிக்கோங்க....

இல்ல நான் உனக்கு பண்ணதுக்கு இப்போ அனுபவிக்கிறேன்.


அப்படில்லாம் இல்ல நடக்கனும்னு இருந்தது நடந்துடுச்சி. அத பத்தி பேசி இப்ப என்ன ஆகப்போகுது விடுங்க (கெளம்பு தாயி சீக்கிரம்). 

அப்படியில்ல..........அது வந்து 

என் மனைவி entry.....................

கொசுறு: இந்த சம்பாஷணைகளில், நீங்களா எங்க அவன் வரும் அவள் வரும்ன்னு போட்டுக்கோங்க.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

14 comments:

நா.மணிவண்ணன் said...

உங்க மனைவி வந்தோன செம காமெடி யா இருந்துருக்குமே

கே.ஆர்.பி.செந்தில் said...

சரியான இடத்தில் நிறுத்தி இருக்கிறீர்கள் சபாஷ்...

சம்பத்குமார் said...

என்னங்க இன்டரஸ்டிங்க கொண்டு வந்து இப்படி மொட்டையா முடிச்சுடிங்க , கடைசியா என்ன நடந்தது உண்மைய சொல்லுங்க , சொல்லுங்க சொல்லுங்க என்ன நடந்தது ???????

சம்பத்குமார் said...

கடைசியா என்ன தான் ஆச்சு உண்மைய சொல்லுங்க

வெறும்பய said...

இந்த நேரத்தில போய் சஸ்பென்ஸ் வைக்கணுமா... சீக்கிரம் சொல்லுங்க தலைவா..

THOPPITHOPPI said...

இதேமாதிரி நான் எழுதி இருந்தா?

காதலியும் காதலியும் சந்திச்சா எப்படி இருந்திருக்கும்?

ஹிஹி........

உங்கள் பதிவ படிக்கும்போது எனக்குள் சில நினைவுகள் நன்றி

Philosophy Prabhakaran said...

// சொந்த கதை போதும், சோக கதைக்கு வரேன் //
நல்ல வார்த்தை பிரயோகம்...

பழைய காதலியை பார்த்திருக்கிறீர்கள் ஒரு பீலே இல்லையே...

So, அடுத்த பாகம் எப்போது...

கொஞ்சம் பிஸி தான்... ஆனால் நான் பொதுவாகவே நள்ளிரவு நேரத்தில்தான் மற்றவர்கள், உற்றவர்கள் பதிவுகளை படிப்பேன் (இந்திய நேரப்படி)...

விக்கியுலகம் said...

நன்றி திரு. நா.மணிவண்ணன்,

தளத்திற்க்கு வந்ததட்க்கும் பின்னூட்டமிட்டதட்க்கும் நன்றி.

இன்று 2 வது பதிவு

விக்கியுலகம் said...

நன்றி திரு. கே.ஆர்.பி.செந்தில்,

தளத்திற்க்கு வந்ததட்க்கும் பின்னூட்டமிட்டதட்க்கும் நன்றி.

சீனியர் சொன்னா சரியாதான் இருக்கும்.

விக்கியுலகம் said...

நன்றி திரு. சம்பத்குமார்,

தளத்திற்க்கு வந்ததட்க்கும் பின்னூட்டமிட்டதட்க்கும் நன்றி.

நான் மொட்டையா முடிக்கல. எப்பவுமே தொடரும்னு போடுவாங்க. ஆனா இது ஒரு புது முயற்சி. படிக்கறவங்களுக்கு இது முடிவா, தொடருமா, இல்ல இவன் தொடரும்னு போட மறந்துட்டான அப்படின்னு நினைக்க வச்சாலே பெரிய விஷயம் என்னை போன்றவர்களுக்கு......

மற்றும் இங்க உண்மை மட்டும் தான்.

Philosophy Prabhakaran said...

நண்பரே... நேற்று சென்னையில் பதிவர் சந்திப்பு சுவாரஸ்யமாக இருந்தது.... நீங்கள் சென்னையில் இல்லாதது குறித்து வருந்துகிறேன்...

விக்கியுலகம் said...

நன்றி திரு. வெறும்பய,

தளத்திற்க்கு வந்ததட்க்கும் பின்னூட்டமிட்டதட்க்கும் நன்றி.

உங்களை போன்ற பிரபலங்களை தளத்திற்கு வரவைக்கவே 20 பதிவு போட வேண்டி இருக்கு.

please wait பண்ணுங்க.

விக்கியுலகம் said...

நன்றி திரு. THOPPITHOPPI,

தளத்திற்க்கு வந்ததட்க்கும் பின்னூட்டமிட்டதட்க்கும் நன்றி.

காதலியும், காதலியும் சந்திச்சா அன்னிக்கு மட்டும் தான் நீங்க காலி.

நான் சொல்ல வர்றது அடுத்த generation வரைக்கும் நம்ம பேரு நெலைக்கற விஷயத்த பத்தி,

விக்கியுலகம் said...

நன்றி திரு. philosophy prabhakaran ,

தளத்திற்க்கு வந்ததட்க்கும் பின்னூட்டமிட்டதட்க்கும் நன்றி.

-
"பழைய காதலியை பார்த்திருக்கிறீர்கள் ஒரு பீலே இல்லையே..."

-
தம்பி நான் பீல் பண்ணியிருந்தா இன்னிக்கு குடும்பத்தோட இருக்க முடியாது. சிங்கிளா தான் இருக்க முடியும்.

இன்னிக்கி 2 வது பாகம்.

உங்களுக்கும், வந்திருந்த பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி