திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சொந்தக்காரர்களின் வருகைகள் தான்....அது அந்தக்காலம் என்று சொல்வோரும் உண்டு....அதைபற்றிய ஒரு பதிவே இது....
சிறு வயதில் திருமணங்களுக்கு செல்லும் போது அம்மா ஒரு சிறிய கவரில் ரூபாய் 51 வைத்து அதை மூடி ஒட்டி அதன் மேலாக என் தந்தையாரின் பெயரை எழுதி வைப்பதை பார்த்து இருக்கிறேன்....அந்த திருமணத்துக்கு சென்று திரும்பும் போது "மொய் செய்யுமிடத்தில்" அதனை கொடுத்து விட்டு வருவார்கள்...
கேட்டால்....இதுதான் ராசா மொய் செய்யறது...அப்படின்னு சொல்லுவாங்க.....
இப்போ என்னடான்னா ரூபாய் 501 கொடுத்து விட்டு வந்தாலும் மரியாதையாக இல்லை என்று சொல்லுகிறார்....
உண்மை தானோ.......இப்போ மதிப்பு பணத்துல தான்யா இருக்கு...ஒரு கல்யாணம் பண்றத்துக்கு எவ்ளோ செலவாகுது...அதுவும் வர்றவங்க எல்லாம் எதோ ஓட்டல்ல ஆர்டர் பண்ணிபுட்டு சாப்பிட வந்தவங்க போல...சாப்பிட்டு முடிச்சதும்...இது சரியில்ல, அது சரியில்லன்னு நொட்டு சொல்லிட்டு போறாங்க....
முன்னல்லாம் திருமணம்னா முன்னாலே சொந்தங்கள் எல்லாம் ஒன்னு கூடுவோம்..வீட்ல இதுக்காக ஒரு வாரத்துக்கு முன்னமே ஸ்கூல்ல லீவு சொல்ல சொல்லிடுவாங்க...என்னமா ஜாலியா(!) இருக்கும்....எல்லா சொந்தக்காரன்களையும் ஓரிடத்தில் பார்க்கப்போறோம்னு பெரியவங்களுக்கும்...நம்ம மாமன், மச்சான், மாப்ள எல்லாருடனும் கும்மியடிக்கப்போறோம்னு நாமளும் மகிழ்ச்சியா இருந்த நாட்கள் அவை....
இப்போ என்னடான்னா இவை ரொம்ப குறைஞ்சிடுச்சி...நிதி நிலை(விலைவாசி!) இதற்க்கு காரணமாக சொல்லப்பட்டாலும்...குழந்தைகளை திருமணத்துக்கு இட்டு செல்லும் பெற்றோர் குறைஞ்சிட்டாங்க...அதுவும் முன் நாள் போற பழக்கமும் குறைஞ்சிடுச்சி...
முன் நாள் போனாத்தான் பல மாதங்களாக நடந்த விஷயங்களை ஒரு இரவில் பேசி முடிக்க முடியும்...பல விஷயங்களை நினைத்து துக்கப்பட்டும் இருப்போம்...இப்போ இருக்க குழந்தைகளுக்கு இந்த சவுகரியம் கிடைக்காமல் போய்க்கொண்டு இருப்பது வருத்தமே(நமக்கும்தான்!)....
இப்போ மொய் என்பது கூட மாறிப்போச்சி....முடிஞ்சவரை திருமணத்தை கோயில்லையும்...உணவுக்கு..பக்கத்துல இருக்க ஓட்டல்லையும் முடிச்சிடுறாங்க...இப்படித்தான் திருமணம் செய்யனும்னு நெனைக்கரவங்களும் அல்லது இன்னும் இந்த மரபுகளை தொடர்ரவங்க தான் இந்த முன்னாள் ரிசப்ஷன் அப்படிங்கற விஷயத்த தொடர்றாங்க...
என்ன இருந்தாலும் அன்பு மாறாமல் இருந்தா சரிதான்...ரூபாயோட மதிப்பு மாறிட்டு தானே இருக்கும்...

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
37 comments:
மாப்ள கொசுறு எங்கய்யா இப்படிக்கு கொசுறு ரசிகர்கள் சங்கம்
தக்காளி இன்னைக்கு தெளீவா இருக்கும் போது போட்ட பதிவு போல. புரியுது
இன்று பணத்துக்கு இருக்கும் மதிப்பு
மனுசனுக்கு எங்கே இருக்கு..??
என்ன இருந்தாலும் அன்பு மாறாமல் இருந்தா சரிதான்...ரூபாயோட மதிப்பு மாறிட்டு தானே இருக்கும்...
மிக அழகாச் சொன்னீங்க நண்பா.
"251" மொய் எழுதியிருகேனுங்க ஞாபகத்தில் வைச்சுக்கோங்க....
இப்போது திருமணத்தில் பல ஆடம்பரச் செலவுகளை வலிய இழுத்துவிட்டுக்கொண்டு அல்லாடுகிறார்கள். என் அலுவலகத்தில் கடைநிலை ஊழியர் ஒருவரது மகளின் திருமணத்துக்கு மொத்தம் ஏழு லட்சம் செலவாகியது என்று சொன்னபோது பகீர் என்றிருந்தது.
//என்ன இருந்தாலும் அன்பு மாறாமல் இருந்தா சரிதான்...ரூபாயோட மதிப்பு மாறிட்டு தானே இருக்கும்.//
இப்படித்தான் மனசுக்கு சமாதானம் சொல்லிட்டுப் போக வேண்டியிருக்குது! :-)
அதெல்லாம் அந்த காலம் அப்பிடின்னு பெருமூச்சு விட்டுட்டு போகவேண்டியது தான் மாம்ஸ்
தமிழ் மணம் 4
சிறு வயதில் திருமணங்களுக்கு செல்லும் போது அம்மா ஒரு சிறிய கவரில் ரூபாய் 51 வைத்து அதை மூடி ஒட்டி அதன் மேலாக என் தந்தையாரின் பெயரை எழுதி வைப்பதை பார்த்து இருக்கிறேன்....அந்த திருமணத்துக்கு சென்று திரும்பும் போது "மொய் செய்யுமிடத்தில்" அதனை கொடுத்து விட்டு வருவார்கள்...//
அடடா...மொய் கொடுக்கும் விளையாட்டு..
திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சொந்தக்காரர்களின் வருகைகள் தான்....அது அந்தக்காலம் என்று சொல்வோரும் உண்டு....அதைபற்றிய ஒரு பதிவே இது...//
நம்ம மாம்ஸிற்கு கல்யாண ஆண்டு விழா பற்றிய நினைவு வந்திட்டுப் போல இருக்கே...
முன்னே 51 இப்போ 501 போதல(!?)//
வணக்கம் மாம்ஸ்,
தலைவர் மொய் எழுதுறார் போல இருக்கே....
அன்பு மிகவும் குறைஞ்சிடுச்சி மக்கா அதான்...!!!
கேட்டால்....இதுதான் ராசா மொய் செய்யறது...அப்படின்னு சொல்லுவாங்க.....
இப்போ என்னடான்னா ரூபாய் 501 கொடுத்து விட்டு வந்தாலும் மரியாதையாக இல்லை என்று சொல்லுகிறார்....//
அவ்....அப்போதைய பொருளாதார நிலைக்கு 51 ரூபா போதுமென்ற மனம்,,,
ஆனால் இப்பொ....நெறைய எல்லே எதிர்பார்க்கிறாங்க.
உண்மை தானோ.......இப்போ மதிப்பு பணத்துல தான்யா இருக்கு...ஒரு கல்யாணம் பண்றத்துக்கு எவ்ளோ செலவாகுது...அதுவும் வர்றவங்க எல்லாம் எதோ ஓட்டல்ல ஆர்டர் பண்ணிபுட்டு சாப்பிட வந்தவங்க போல...சாப்பிட்டு முடிச்சதும்...இது சரியில்ல, அது சரியில்லன்னு நொட்டு சொல்லிட்டு போறாங்க....//
ஆமா மாம்ஸ்...வரப்புயர நீர் உயரும் என்பது போல இப்போ.....
வாழ்க்கைச் செலவும் கூடிக்கிட்டுப் போகுதில்லே.....
சரி சரி மனசை தேத்திக்கோ எல்லாம் சரியாகிடும்...
இப்போ என்னடான்னா இவை ரொம்ப குறைஞ்சிடுச்சி...நிதி நிலை(விலைவாசி!) இதற்க்கு காரணமாக சொல்லப்பட்டாலும்...குழந்தைகளை திருமணத்துக்கு இட்டு செல்லும் பெற்றோர் குறைஞ்சிட்டாங்க...அதுவும் முன் நாள் போற பழக்கமும் குறைஞ்சிடுச்சி...//
ஆமா மாம்ஸ்...
இதற்கான பிரதான காரணம்.
முன்பெல்லாம் வீடுகளில் கலியாணம் நடத்தினாங்க.
இப்போ ஓட்டலில் எல்லே கலியாணம் வைக்கிறாங்க.
அதான்.....
சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி இன்னைக்கு தெளீவா இருக்கும் போது போட்ட பதிவு போல. புரியுது//
இல்லை இல்லை நேற்றைக்கு ஞாயிற்று கிழமை மறந்து போச்சாடா உனக்கு...? நேற்றைய சரக்கின் ஹேங் ஓவர் ஹி ஹி...
எல்லா சொந்தக்காரன்களையும் ஓரிடத்தில் பார்க்கப்போறோம்னு பெரியவங்களுக்கும்...நம்ம மாமன், மச்சான், மாப்ள எல்லாருடனும் கும்மியடிக்கப்போறோம்னு நாமளும் மகிழ்ச்சியா இருந்த நாட்கள் அவை...//
அதெல்லாம் ஒரு காலம் பாஸ்..
மீளவும் வருமா அந்த நாட்கள்...
சசிகுமார் said...
மாப்ள கொசுறு எங்கய்யா இப்படிக்கு கொசுறு ரசிகர்கள் சங்கம்//
அவ்.....
என்ன இருந்தாலும் அன்பு மாறாமல் இருந்தா சரிதான்...ரூபாயோட மதிப்பு மாறிட்டு தானே இருக்கும்...//
கடைசியில வைச்சீங்க பாருங்க ஒரு பஞ்சு...
அது சூப்பர்...
என்ன இருந்தாலும் அன்பு மாறாமல் இருந்தா சரிதான்...ரூபாயோட மதிப்பு மாறிட்டு தானே இருக்கும்...//
கடைசியில வைச்சீங்க பாருங்க ஒரு பஞ்சு...
அது சூப்பர்...
முன் நாள் போனாத்தான் பல மாதங்களாக நடந்த விஷயங்களை ஒரு இரவில் பேசி முடிக்க முடியும்...பல விஷயங்களை நினைத்து துக்கப்பட்டும் இருப்போம்...இப்போ இருக்க குழந்தைகளுக்கு இந்த சவுகரியம் கிடைக்காமல் போய்க்கொண்டு இருப்பது வருத்தமே(நமக்கும்தான்!)....//
அவ்...அதான் காலம் மாறிக் கொண்டு போகிறதே மாப்பு............
சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி இன்னைக்கு தெளீவா இருக்கும் போது போட்ட பதிவு போல. புரியுது//
ஆகா...சைட் கப்பில இது வேறையா....
நடக்கட்டும், நடக்கட்டும்,
எவ்வளவு போட்டால் மரியாதை என்று புரியாததால் எந்த கல்யாணத்துக்கும் செல்லவே கை கால் உதறுகிறது சாமி..
money make money
money made any
பணத்தின் பெறுமதி உயர்கின்றது சமுதாய கட்டமைப்பு குலைகின்றது :)
இன்னைக்கு 501 கொடுத்தாலும்
வந்துட்டான்யா ஆட்டிகிட்டு நு தானே
சொல்றாங்க....
பணமென்னும் காகிதத்திற்கு
இருக்கும் மதிப்பு.. உயிருடன் நடமாடும்
நமக்கு எங்கே இருக்கு..
பதிவு நல்லா இருக்கு மாம்ஸ்.
என்ன இருந்தாலும் அன்பு மாறாமல் இருந்தா சரிதான்...ரூபாயோட மதிப்பு மாறிட்டு தானே இருக்கும்...///
மாப்ள சூப்பரா முடுச்சிருக்க..
மாற்றம் என்பதுதான் மாறாதது என்பார்கள் அதுபோல நம் உறவுகள் பணத்தின் மதிப்பை பார்க்க வில்லை இது சிறந்த வரலாற்று நிகழ்வு திருமண நிகழ்வுதான் . நல்ல செய்திஉளம் கனிந்த பாரட்டுகள் தொடர்க.
10 ரூபாய் மொய் எழுதின காலமெல் லாம் உண்டு விக்கி!நம் மதிப்பு ஏற வேண்டுமெனில் மதிப்புக் குறைந்து விட்ட மொய்ப் பணதின் அளவு ஏற வேண்டியதுதான்!
அன்பு மட்டும் மாறாமல் இருந்தால் அதுவே போதும்..
மாம்ஸ்.. கரெக்டா சொன்னீங்க...
4நாளா என் ஆபிஸ்ல நெட் கனெக்சன் கட்டாயிருச்சு மாம்ஸ்.. அதா வரமுடியல..
ஆனா நாங்க மாற மாட்டோம்
கலக்கல் பதிவு
மாப்ள இப்போ எல்லாமே மாறிப்போச்சு. மாப்பிள்ளை தாலி கட்டியவுடன் எல்லோரும் ரெடியா எழுந்து நிக்கிறாங்க. மாலையை மாற்றியவுடன், குடுகுடு என்று ஓடி பந்தியில் அமர பெரிய ஓட்ட பந்தயமே நடக்கிறது. கொண்டாட்டங்கள் கூட டைம் டேபிளாக மாறிவிட்டது கொடுமை.
அசத்தல் விஷயம் ஆனா இன்னைக்கு யாரு உறவு முறைன்னு பார்த்து விசேசத்துக்கு கூப்பிடுறா?
எவ்வளவு நாம செஞ்சோம் அவங்க நமக்கு எவ்வளவு செய்வான்னு கணக்கு பண்ணி தானே கூப்பிடவே செய்யுறாங்க!!??
all voted
ஆஹா...பயனுள்ள பதிவா மாம்ஸ் அசத்துங்க
முதலில் திருமணத்திற்காக லட்சக்கணக்கில் செலவழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை... (ஒருநாள் கூத்துக்காக மீசையை மழிக்கனுமா...?)
அப்புறம், திருமணத்திற்கு பொக்கே தருவதும், பரிசுப்பொருள் தருவதும் எனக்கு பிடிக்காது... முடிந்தவரையில் பணமாக கொடுத்தால் திருமண செலவிற்காக வாங்கிய கடனை அடைக்க முடியுமே...
Post a Comment