Followers

Wednesday, February 23, 2011

கிரிக்கெட்டு என் பார்வையில்(!?)

எல்லோருக்கும் வணக்கமுங்கோ.............சும்மா கெடந்த சங்க ஊதினாறு ஒருத்தரு அவரு பேரு திரு. ஆர்.கே.சதீஷ்குமார் இநத மனுஷன் சும்மா இல்லாம கிரிக்கெட்டு எனும் புனித விளையாட்டு பத்தி தொடர் பதிவுக்கு என்னை அழைச்சிருக்காரு அதுக்கு அவரு மேல எனக்கு தம்மத்தம் கோவம் இருக்கு. 

இருந்தாலும் பெரிய ஆளுங்கன்னாலே இப்படித்தான் சின்ன புள்ளைங்கள ஆட வச்சி பாப்பாங்க ஹி ஹி!(நோ பேட் வார்ட்ஸ்!! தலைவரே!)

எதோ என்னால முடிஞ்ச அளவுக்கு சொல்லிகிறேன். பாத்துட்டு சொல்லுங்கோ!

இநத உலகக்கோப்பையில பங்கேற்று இருக்கும் அணிகள்ள நாலு அணி தான் ரொம்ப ஸ்ட்ராங்கா(!) இருக்கறதா நெனைக்கிறேன். 

இந்தியா, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்ரீலங்கா.

இதுல மத்த நாடுகள பத்தி அவங்க அவங்க நாட்டுக்கார பதிவருங்க எழுதிக்கட்டும் ஹி ஹி!(இதுல இலங்கைய பங்காளி நாடா சேர்த்துக்கலாமா வேணாமா டவுட்டு!)

இந்தியா - மாபெரும் தேசம் ஆனா குட்டியுண்டு நாட்டுக்கிட்டல்லாம் முட்டு சந்துல அடிவாங்குரத தான் தாங்க முடியல!(நான் கிரிகெட்டுல மட்டும் தாங்க சொல்றேன் நோ பொலிடிக்ஸ்!)

11 புலிகள் சாரிபா...........விளையாட்டு வீரர்கள் களம் கானுறாங்க............அவங்களப்பத்தி கொஞ்சம் என் வழில சொல்றேன் கேளுங்கோ........

தல - தோனி 
என்ன நடந்தாலும் அசராத கேப்டன். மவனே ஒரு போலரு 25 ரன்னு ஒரே ஓவருல கொடுத்தாலும் அடுத்த போட்டிக்கு அவருக்கு சான்சு வாங்கி கொடுக்கும் அளவுக்கு நல்ல மனுஷன்..........ஆனா இவரு நம்புற பய புள்ளைங்க எல்லாமே இவர அடிக்கடி நட்டாத்துல உட்டுட்டு போறது தான் கவலையா இருக்கு. எப்படியும் இந்த முறை CUP வாங்கி காட்டி எல்லோரையும் மூக்கு மேல கை வைக்கும் படி முடிவு பண்ணி இறங்கி இருக்காரு 

ஆசை - அந்த பய புள்ள சச்சின அப்படியே இந்த கோப்பை வாங்கிட்டு டீம விட்டு துரதிடனும்.

பிடிச்ச ஷாட்டு- (பீமனோட!)கதாயுதத்துல அடிக்கிராப்புல ஆடும் ஷாட்டு

சேவாக் 


நல்ல பார்ம்ல இருக்க வீரர். ஆனா யாருக்குமே தெரியாது எப்ப எப்படி ஆடுவாருன்னு. கொஞ்ச நாளைக்கு முன்னி ஒரு முடிவெடுத்து இருக்காரு........அதாவது 50 ஓவரு வரைக்கும் அவுட்டு ஆவறது இல்லன்னு...போன போட்டில முடிஞ்ச வரைக்கும் அத செயல் படுத்தினாரு.

ஆசை: எப்படியாவது 200 அடிக்கணும்(!) ஒரு நாள் போட்டில.

பிடிச்ச ஷாட்டு- எல்லாமே (அவுட்டு ஆகுற ஷாட்ட தவிர ஹி ஹி!)

காம்பிர் 


பய புள்ள பாக்க ஹீரோ கணக்கா இருந்து கிட்டு பண்ற சேட்டஎல்லாம் வில்லன் கணக்கா பண்றாரு(!). நிலைச்சி ஆடக்கூடிய தகுதி இருந்தும் எதிர் ஆடுற பேட்ச்மானு எதாவது 4 இல்ல 6 அடிச்சிட்டா தானும் பொங்கி அவுட்டு ஆவுறத குறச்சிகிட்டா இவரும் உருப்படுவாறு டீமும் தப்பிக்கும்!

ஆசை: சீகிரதுல கேப்டனாகுறது 

பிடிச்ச ஷாட்டு: இடப்பக்க ஷாட்டு (off drive)

கோஹ்லிஇந்தியாவுக்கு கெடச்சிருக்க அடுத்த டிராவிட்டு என்பது என் எண்ணம். கொஞ்சம் நிதானத்த கட பிடிச்சா இன்னும் உச்சத்துக்கு போக எல்லா தகுதியும் கொண்ட ஆளு. சின்ன பயலா இருந்தாலும் பல அனுபவம் வாய்ந்த போலர்கல உருட்டி எடுக்கறதுல பெரிய ஆளுதான். நல்ல பீலடரும் கூட என்பது அணிக்கு பெரிய வரப்பிரசாதமே.

ஆசை: இப்போதைக்கு டீமுல தொடர்ந்து விளையாடுறது(அப்புறமா சொல்றேன் ஹி ஹி!) 

பிடிச்ச ஷாட்டு: வலப்பக்க ஷாட்டு (on drive)


கொசுறு:நானும் ஒரு முன்னால் மட்டைப்பந்து ஆட்டக்காரன் என்பது நீங்கள் அறிந்ததே (ஹி ஹி!)............பதிவின் நீள அகலம் அதிகமாயிட்டதால அடுத்த பதிவுல முடிச்சிடறேன் ஹி ஹி!........இனி யாரவது தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்க.........

இன்னொரு கொசுறு: பல நல்ல நண்பர்கள் என்னை இசை(வசை!)பாடி பல அசிங்கமான வார்த்தைகளால் பூசப்பட்டு அனுப்பிய மெயில்களை நான் அழித்து விட்டாலும் திருப்பி அடிக்க ஒரு ப்ளாகு ஆரம்பிச்சி இருக்கேன்........சீகிரத்துல என்வழி கருத்துக்களோடு அடிப்பேன்(அசிங்கமாக அல்ல!)

முடிந்தால் வரவும் - http://gladiatorveeran.blogspot.com/
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

41 comments:

Jana said...

டாஸ் வின். நான்தான் 1st பட்டிங்.

ரேவா said...

கோஹ்லி

இந்தியாவுக்கு கெடச்சிருக்க அடுத்த டிராவிட்டு என்பது என் எண்ணம். கொஞ்சம் நிதானத்த கட பிடிச்சா இன்னும் உச்சத்துக்கு போக எல்லா தகுதியும் கொண்ட ஆளு. சின்ன பயலா இருந்தாலும் பல அனுபவம் வாய்ந்த போலர்கல உருட்டி எடுக்கறதுல பெரிய ஆளுதான். நல்ல பீலடரும் கூட என்பது அணிக்கு பெரிய வரப்பிரசாதமே.

உண்மைதான் எனக்கு பிடித்த வீரரும் கூட

Jana said...

கோஹ்லி -இந்தியாவுக்கு கெடச்சிருக்க அடுத்த டிராவிட்டு ரைட் சார்..

மைந்தன் சிவா said...

2nd.....

மைந்தன் சிவா said...

எனது பேவரிட் விராட் தான்

sathish777 said...

நன்றி..தொடர்ந்ததற்கு

sathish777 said...

இநத மனுஷன் சும்மா இல்லாம கிரிக்கெட்டு எனும் புனித விளையாட்டு பத்தி தொடர் பதிவுக்கு என்னை அழைச்சிருக்காரு //
hahaa

பாரத்... பாரதி... said...

//இந்தியா - மாபெரும் தேசம் ஆனா குட்டியுண்டு நாட்டுக்கிட்டல்லாம் முட்டு சந்துல அடிவாங்குரத தான் தாங்க முடியல//

SUPERRRRRRRR..

பாரத்... பாரதி... said...

//இதுல மத்த நாடுகள பத்தி அவங்க அவங்க நாட்டுக்கார பதிவருங்க எழுதிக்கட்டும் ஹி ஹி//

ஆஹா...

பாரத்... பாரதி... said...

சேவாக் பத்தி சொன்னது நல்லா இருந்தது..

ஜீ... said...

கலக்குறீங்களே பாஸ்! :-)

அஞ்சா சிங்கம் said...

(பீமனோட!)கதாயுதத்துல அடிக்கிராப்புல ஆடும் ஷாட்டுஅது எலிகாப்டர் ஷாட் எனக்கும் பிடிக்கும்

வைகை said...

அப்பிடியே மந்த்ரா பேடிய விட்றாதிங்க தலைவா.. கிரிக்கெட் உலகம் உங்களை மன்னிக்காது :))

பாலா said...

நல்லா சுவாரசியமாத்தானே எழுதி இருக்கீங்க? அது சரி டெண்டுல்கரை பத்தி ஒண்ணும் சொல்லலயே? சரி விடுங்க...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

கக்கு - மாணிக்கம் said...

// //இந்தியா - மாபெரும் தேசம் ஆனா குட்டியுண்டு நாட்டுக்கிட்டல்லாம் முட்டு சந்துல அடிவாங்குரத தான் தாங்க முடியல//

ஜாக்கிரதை, இந்தியாவின் இறையாண்மை யை பாதிக்கும் இது போன்ற வார்த்தைகளை கொண்ட வலைத்தளங்கள் முடக்கபடலாமாம் பாரத். :))))

கே.ஆர்.பி.செந்தில் said...

சரிங்க அண்ணா!..

விக்கியுலகம் said...

@Jana

ஓகே ஓகே டாசு வின் பண்ணா போதுமே பேட்டிங் ஆட வந்துடுரீங்களே. போலிங்கும் போடுங்க எப்ப பாத்தாலும் பேட்டிங்கு தான் ஹி ஹி!

எல்லா பாலையும் 6 க்கு ட்ரை பண்ணக்கூடாது ஓகே

விக்கியுலகம் said...

@ரேவா

ஆனா சுவருக்கு இன்னும் கொஞ்ச பொறுமை வேணும் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@Jana

ஆனா சுவருக்கு இன்னும் கொஞ்ச பொறுமை வேணும் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

ஒவுட்டாகக்கூடாது ஓகே

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வரும்போது எல்லாம் நல்லாத்தான் ஆடுறாங்க கொஞ்சம் நிரந்தரமா இடம் குடுத்துட்டா............பாப்போம்

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்


"நன்றி..தொடர்ந்ததற்கு"

>>>>>>>

இப்போ சந்தோசமா தல!

விக்கியுலகம் said...

@ஜீ...

நன்றிங்கோ

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...


//இதுல மத்த நாடுகள பத்தி அவங்க அவங்க நாட்டுக்கார பதிவருங்க எழுதிக்கட்டும் ஹி ஹி//

"ஆஹா..."

>>>>>>>>>>
எப்பவாவது ஜெயுக்கிற நாமலே இப்படி துல்லுரோமே.........தினம் ஜெயிக்கிறவன்.........ஹி ஹி!!
......................

//இந்தியா - மாபெரும் தேசம் ஆனா குட்டியுண்டு நாட்டுக்கிட்டல்லாம் முட்டு சந்துல அடிவாங்குரத தான் தாங்க முடியல//

SUPERRRRRRRR.

>>>>>>>

thaanks

.................................
சேவாக் பத்தி சொன்னது நல்லா இருந்தது..

>>>>>>
நன்றிங்கோ

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்
"(பீமனோட!)கதாயுதத்துல அடிக்கிராப்புல ஆடும் ஷாட்டுஅது எலிகாப்டர் ஷாட் எனக்கும் பிடிக்கும்"

>>>>>>>>>>>>>>>>>>>
இது தான் சுத்தி சுத்தி அடிக்கறதா ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

நன்றிங்கோ

விக்கியுலகம் said...

@பாலா
"நல்லா சுவாரசியமாத்தானே எழுதி இருக்கீங்க? அது சரி டெண்டுல்கரை பத்தி ஒண்ணும் சொல்லலயே? சரி விடுங்க..."

>>>>>>>>>>>>>>>>>>>>>>

கண்டிப்பா அவங்க இல்லாமையா ஹி ஹி!

தெய்வம் அடுத்த பதிவுல வருதுங்க don't worry!!

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்
"ஜாக்கிரதை, இந்தியாவின் இறையாண்மை யை பாதிக்கும் இது போன்ற வார்த்தைகளை கொண்ட வலைத்தளங்கள் முடக்கபடலாமாம் பாரத். :))))"

>>>>>>>>>>>>>>>>>>>
எங்க எங்க...............என்னா தலைவரே ஊர அடிச்சி உலையில போடுற நல்லவங்களே பாதுகாப்பா ஜெயில்ல வீட்டு சாப்பாடு சாபிடுறாங்க............இதுல எங்க போச்சி இவனுங்க இறையாண்மை!

விக்கியுலகம் said...

@கே.ஆர்.பி.செந்தில்

வருகைக்கு நன்றிங்கண்ணோவ்!

# கவிதை வீதி # சௌந்தர் said...

உள்ளேன் ஐயா...

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

அட்லீஸ்ட் இப்போ ஆஃபீஸ்ல கரெக்ட் பண்ணுன ஃபிகர் ஃபோட்டோவாவதையாவது தனி மெயிலில் இடவும்,.

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு மானஸ்தன் என் கிட்டே 100வது பதிவுல முகத்தை காட்டுவேன்னாரு (அவரோட)

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சாரி ஃபார் லேட்"

>>>>>>>

எப்பவும் போல....விடுங்க ஹி ஹி!!
...............................

ஒரு மானஸ்தன் என் கிட்டே 100வது பதிவுல முகத்தை காட்டுவேன்னாரு (அவரோட)
>>>>>>>>>>>>>>>>>>>>>

எங்க எங்க............ஆமாம் யாரு அந்த மானஸ்தன்..........அதுக்கு தான் சொல்றது பதிவு போட்டா........என்ன பின்னூட்டம் போட்டு இருக்காங்கன்னு போய் பாக்கணும்கிறது..........எப்ப பாத்தாலும் எந்த காலேஜு எத்தன மணிக்கி விடுவான்னு..........!!!!!!!!!!!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அட்லீஸ்ட் இப்போ ஆஃபீஸ்ல கரெக்ட் பண்ணுன ஃபிகர் ஃபோட்டோவாவதையாவது தனி மெயிலில் இடவும்,.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சார் டீ இன்னும் வரல ஹி ஹி!!

MANO நாஞ்சில் மனோ said...

கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது மக்கா...எனக்கு கிரிக்கெட் தெரியாது. ஆனால் சச்சின் பிடிக்கும். மும்பையில் அவர் ரெஸ்டாரண்டில் அடிக்கடி சாப்பிட போவேன்...

Philosophy Prabhakaran said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_8099.html

வசந்தா நடேசன் said...

தொடருங்கள், வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

// திருப்பி அடிக்க ஒரு ப்ளாகு ஆரம்பிச்சி இருக்கேன்... //

என்னா மேட்டரு ஒன்னும் புரியலையே... எதுவும் வெட்டுகுத்து ஆகிடுச்சா...

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது மக்கா...எனக்கு கிரிக்கெட் தெரியாது. ஆனால் சச்சின் பிடிக்கும். மும்பையில் அவர் ரெஸ்டாரண்டில் அடிக்கடி சாப்பிட போவேன்.."

>>>>>>>>>>>>>>

விடுங்க தல நாங்க மட்டும் புரிஞ்சா பாக்குறோம் ஹி ஹி!

என்ன சாப்பிட்டீங்க சொல்லலியே!

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran
"இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்..."
>>>>>>>>>>>>>>>

நன்றி நண்பா.....
...............................

என்னா மேட்டரு ஒன்னும் புரியலையே... எதுவும் வெட்டுகுத்து ஆகிடுச்சா...
>>>>>>>>>>>>>>>>>>>>>>

விடுங்க இதெல்லாம் அரசியல்ல சகஜம்.......ஹி ஹி!

உங்கள என்னோட புதிய ப்ளோக்ல இணைச்சதுக்கு நன்றி