Followers

Saturday, February 12, 2011

அந்த 12 மணி நேரம்(!?)


            பேர் தெரியாத ஊர்ல மாட்டிகொண்டு விழி பிதுங்குவதை கேள்விப்பட்டு இருக்கிறேன் . ஆனால் முதன் முதல் அனுபவபூர்வமாக உணர்ந்தது இப்போதுதான். என்ன செய்ய வீட்டுலே இருக்க சொல்லி சொன்னதை கேட்காம போனது எவ்வளவு பெரிய விஷயமாயிடுச்சி. 


                ஹனோயில் இருந்து கிட்ட தட்ட 400 கி. மி. தூரம் உள்ளது சொன்லா எனும் இடம். வீடவர்க்கு அங்கு ஒரு முக்கிய வேலை இருந்ததால் அவர் செல்ல வேண்டி இருந்தது. நானும் என் குட்டியும் அவரிடம் அடம் பிடித்து கூடவே என்றோம். போகும் வழியெலாம் அழகிய இயற்கை வளங்கள் நிறைந்தாக இருந்தது. கார் செல்லும் பாதையெல்லாம் மக்கள் சிறிய சிறிய சைக்கிள்களில் சென்று கொண்டு இருந்தனர். நாங்கள் செல்ல வேண்டிய இடம் மலைசார்ந்த இடம் என்பதால் ஓட்டுனர் 60 கி.மி வேகத்திலேயே சென்றார்.


அவ்விடத்தை சேரும் பொது இருட்டிவிட்டது. நிர்வாகத்தின் ஓட்டலில் தங்கினோம்.

                                                         சொன்லா

அடுத்த காலையில் வீட்டவருக்கு டாமின்(DAM) மத்திய இடத்திட்டு செல்ல வேண்டி இருந்ததால் அவர் உடனே தூங்கிவிட்டார். நானும் குட்டிசும் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு தூங்க போனோம்.இரவு சரியான மழை ஓஒ வென்று பெய்தது.

காலையில் 6 மணிக்கெல்லாம் வீட்டவர் சென்றுவிட்டார். இந்த இடம் வியட்நாமில் அழகிய இடமாகும். சுற்றி முழுவதும் மலைகள். நடுவில் இந்த ஊர் அமைந்துள்ளது.
                                              
காலை 8 மணி : குட்டிசுக்கு பாலும் எனக்கு நூடுல்சும் முடிந்தது. இந்த இடத்தில கைபேசி விட்டு விட்டு தான் கேட்கும் என்று முன்னமே வீட்டவர் சொல்லிசென்றார்.  மதியம் வந்து எங்களை சுற்றி பார்க்க கூட்டி செல்வதாக சொல்லிசென்றார். மணி 3  ஆயிற்று அவரை காணவில்லை, அவருடைய கைபேசிக்கும் பேச இயலவில்லை. 
சரி ஹோட்டலின் வரவேற்பு இடத்திற்கு சென்று கேட்டு வரலாம் என்று சென்றேன். அப்போது அவர்கள் சொன்னது தூக்கி வாரிபோட்டது. சுற்றிலும் அதிகபடியான வெள்ளம் காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஊராகிபோனது சொன்லா. 

அங்கிருந்த யாருக்கும் ஆங்கிலம் தெரியாது மற்றும் எனக்கு தகவல் சொன்ன அந்த பெண்ணும் சென்று விட்டாள். மற்றவர்கள் எல்லாமே அவர்கள் தாய் மொழியில் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தனர் (வியத்னாமீஸ் மொழி). அறையில் சென்று தொலைகாட்சியில் பார்த்தால் மிகபெரிய வெள்ளத்தில் வியட்நாமின் பல பகுதிகள் மிதப்பதை காண்பித்தார்கள்.

என்ன செய்வது என்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட இரவு 10 மணி வரை இதே நிலை. ஆனால் குட்டிஸ் மட்டும் அவன் விளையாட்டில் மூழ்கி இருந்தான். எனக்கு அழுகை வந்து கொண்டு இருந்தது.

பல பேர் அவர்களின் சொந்தங்களை இழந்து கதறிக்கொண்டு இருப்பதை தொலைகாட்சியில் காட்டிக்கொண்டு இருந்தனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரியவில்லை எனினும் அவர்களின் துயரம் என் தொண்டையை அடைத்தது. ஐயோ நம்ம வீட்டவர் என்ன ஆனாரோ என்பதை நினைத்து நான் அழுது கொண்டு இருந்தேன். என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

அப்போது அந்த வரவேற்பறை பெண் வந்தாள். அவள் என்னிடம் கவலை படாதிர்கள் உங்கள் கணவர் நன்றாக இருப்பார் பயப்படாதீர்கள் என்று எனக்கு ஆறுதல் கூறினாள். எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் புலம்பிக்கொண்டு இருந்தேன். என் குட்டிசும் என் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான் வெகு நேரமாக. 

இப்போது மழை விட்டு இருந்தது. அவர் வந்து சேர்ந்தார் எனக்கு உயிர் வந்தது போலிருந்து. அவர் சென்ற ஜீப் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும் அதனால் ஒரு காட்டு பகுதியில் தங்க வேண்டி வந்ததாகவும் என்னவர் விளக்கினார். எப்படியோ உயிர் திரும்ப வர 12 மணி நேரம் ஆயிற்று.

திரும்பி வரும்போது இருமலைகளுக்கு நடுவேயான பாதை காணாமல் போயிருந்தது


வழியில் சென்ற இரண்டு வாகனங்கள் மண்ணில் புதையுண்டன.
நாங்கள் திரும்ப வரும் போது இந்தவழியாக எங்கள் வாகனம் சிக்குண்டபோது...........சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் தைரியமான பெண்ணாக நான் வளரவில்லை என்பதை உணர்ந்தேன். நாங்கள் திரும்ப ஹானாய்க்கு வர அடுத்த இரண்டு நாட்களாயிற்று. 

வித்யா வி 

கொசுறு: என் மனைவியின் பதிவு இது - அவங்களோட அனுமதியுடன் வெளியிட்டு இருக்கிறேன் அனுமதியளித்ததற்கு நன்றி மேடம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

20 comments:

டக்கால்டி said...

ஆணடவன் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது பல பேரின் சோகம் என்றாலும், உங்கள் மனைவியின் அன்பை நீங்கள் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைந்து விட்டது...
தசாவதராம் படத்தில் வரும் சுனாமி போல...

:-)

விக்கியுலகம் said...

@டக்கால்டிஉண்மையில் சொல்லனும்னா அவங்க அன்புனால தான் நான் நல்ல நிலமையில நல்லா இருக்கேன்.......என் தாய்,தமக்கைக்கு அடுத்து என் மனைவிதானுங்க எல்லாமே!

ஜீ... said...

அங்கேயும் வெள்ளமா? என்ன கொடுமை பாஸ்..ம்ம்ம்
படங்கள் நல்லாருக்கு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வித்தியாசமான அனுபவம்? வெளிநாட்டிலும் இப்படியா?

ரஹீம் கஸாலி said...

கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்

MANO நாஞ்சில் மனோ said...

//மழை ஓஒ வென்று பெய்தது.//

பின்னே மழை ஈஈ என்றா பெய்யும்......:]
படங்கள் சூப்பர்.....
புதிய எழுத்தாளருக்கு என் வாழ்த்தும் வரவேற்ப்பும் அசத்துங்க மக்கா....

அஞ்சா சிங்கம் said...

படங்கள் மிக அருமை இந்த மாதிரி சந்தர்பங்கள் அன்பை வளர்க்க கடவுள் ஏற்படுத்தி தருவது

தில்லு முல்லு said...

///// கொசுறு: ////என்னே ஒரு பணிவு !! ஹி ஹி ஹி ஹி

விக்கியுலகம் said...

@ஜீ...
"அங்கேயும் வெள்ளமா? என்ன கொடுமை பாஸ்..ம்ம்ம்
படங்கள் நல்லாருக்கு!"

>>>>>

என்ன இப்படி கேட்டுட்டீங்க, இங்க வருசத்துக்கு மூணு முறை வெள்ளம் வரும். அதுவும் புயல் காத்து எல்லாம் ஓவரா இருக்கும்.

விக்கியுலகம் said...

@மாத்தி யோசி
"வித்தியாசமான அனுபவம்? வெளிநாட்டிலும் இப்படியா?"

>>>>>>

நம்ம ஒரு பரவா இல்லைங்கோ.......இந்த ஊருல சில இடங்கள் இயற்கையால அடிக்கடி சேதாரமாகுற இடங்கள்!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி
"கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்"

>>>>>>>>>

பரவாயில்லைங்க......

திரும்பி வந்ததுக்கு நன்றிங்கோ

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ
"பின்னே மழை ஈஈ என்றா பெய்யும்......:]
படங்கள் சூப்பர்.....
புதிய எழுத்தாளருக்கு என் வாழ்த்தும் வரவேற்ப்பும் அசத்துங்க மக்கா..."
>>>>>

சில நேரத்துல ஜோன்னு கூட பெய்யுமுங்க............

நன்றி

அவங்க தாங்க முதல்ல ப்ளாக் எழுத ஆரம்பிச்சாங்க......நான் அடுத்து தான் ஆரம்பிச்சேன் ஹி ஹி

அவங்க அளவுக்கு ரசனை எனக்கு கம்மி ஹிஹி!!

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்
"படங்கள் மிக அருமை இந்த மாதிரி சந்தர்பங்கள் அன்பை வளர்க்க கடவுள் ஏற்படுத்தி தருவது"

>>>>>

நன்றி

உண்மைதானுங்க

விக்கியுலகம் said...

@தில்லு முல்லு
"///// கொசுறு: ////என்னே ஒரு பணிவு !! ஹி ஹி ஹி ஹி"

>>>>
இந்த விக்கயுலகம் ப்ளாக் அப்படிங்கற விஷயமே அவங்களால நான் ஆரம்பிச்சதுங்க ஹி ஹி!

பணிவு என்னிக்குமே நல்லதுங்கோ ஹி ஹி!!

சி.பி.செந்தில்குமார் said...

படங்கள் நல்லாருக்கு ( இந்த கமெண்ட்டை மனைவி கிட்டே பர்மிஷன் வாங்கிட்டுதான் மாடரேட் பண்ணுவீங்களா/ ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் சினிமா படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு?

மனைவிக்கு மரியாதை

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்
"விக்கி உலகம் சினிமா படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு?"

மனைவிக்கு மரியாதை
>>>>>>

இப்படியும் வைக்கலாமுங்க மரியாதைக்கு மரியாதை!

அமைச்சரு முக்கியம் தலைவரே!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"படங்கள் நல்லாருக்கு ( இந்த கமெண்ட்டை மனைவி கிட்டே பர்மிஷன் வாங்கிட்டுதான் மாடரேட் பண்ணுவீங்களா/ ஹா ஹா ஹா"

>>>>
என் ப்ளோக்ல நான் மாடரேசன் வைக்கறது இல்ல.

காரணம் நான் ஒரு கண்ணாடி மனசுக்காரன் ஹி ஹி!!

உங்க சினிமா பாணில சொல்லனும்னா>>>>

ஜில்லு படத்துல வர்ற வசனம் மாதிரி என் வாழ்கை>>>>

"i am the happiest man in the world"

up to now ஹிஹி!!

உண்மைல என் மனைவிக்கு நிஜக்கோபம் வந்து நான் பார்த்ததில்ல

டக்கால்டி said...

உண்மையில் சொல்லனும்னா அவங்க அன்புனால தான் நான் நல்ல நிலமையில நல்லா இருக்கேன்.......என் தாய்,தமக்கைக்கு அடுத்து என் மனைவிதானுங்க எல்லாமே!//

Santhosham magizhchi...
Ippadi patta purithaludan oru aatharsa thambathigal nangu vaazha aandavanidam vendugiren...

விக்கியுலகம் said...

@டக்கால்டிநன்றி நண்பரே