Followers

Saturday, February 5, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?)-5.02.2011

ஒண்ணுமே புரியலே உலகத்துலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.........

என்ன மானி என்னாச்சிகுடிகார குடிலிலிருந்து..........

மானி: ஒன்னுமில்லப்பா இந்த தாஸு நிலமைய நெனச்சி பார்த்தேன் அதேன்......

குவா: என்னப்பா ஊரே ராசா விஷயத்த பேசிட்டு இருக்கு........நீ என்னாடான்னா இந்தாலப்பத்தி பேசுற..........

மானி: இது எதிர்பார்த்ததுதானே இவனுங்க என்னமோ புத்சா படத்துல வர்ற டுவிஸ்ட்டு கணக்கா பண்றா மாதிரி நெனைக்கிறாங்க.......நாம தெளிவாத்தானே இருக்கோம்........தல டெல்லில இருந்து வந்த போதே தொங்கிப்போய் தான் வந்துச்சி.......அப்பவே எனக்கு தெரியும் எங்கேயோ செக்கு வச்சிட்டாங்கன்னு.......ஹி ஹி.........

குவா: அப்படியா..............

மானி: எப்பவுமே ஒன்னு தெரிஞ்சிக்க..........இந்த அரசியல்வாதிங்க எங்க கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்குன்னாலே ஏதோ உள்ள தில்லாலங்கடி நடக்குதுன்னு அர்த்தம் ஹி ஹி!!

குவா: அடுத்து என்னாதான் நடக்கும்?

மானி: போன மவராசா சீகிரதுல திரும்பி வருவாரு பாரு..........வேற இன்னா நடக்கும்........ஏன்னா அந்தாளுக்கு கட்சில இருக்க மேடத்தோட அவ்ளோ பயக்கம் ஹி ஹி!!

குவா:கட்சி பொதுக்குழு கூட்டி என்னம்மா பேசுனாங்க பாத்தியா...........

மானி: நீ பாத்தியா......யாரு மூஞ்சிலயும் ஈ ஆடல..........அடுத்து எந்தப்பக்கம் மத்தில இருந்து மிரட்டுவாங்கன்னு தெரியாம ஒரே டென்சனுபோல..........பயபுள்ளைங்க நம்மள ஒரு நாளு நிம்மதியா தூங்கா விட்டுதுங்களா......பெட்ரோலு, விலைவாசி எல்லாத்தையும் ஏத்திவிட்டுட்டு இன்னாமோ இதுங்களுக்கு நாம பொதி மாடுங்க மாதிரி தெரின்ஜோமிள்ள...........இப்போ பாரு துட்டு இருந்து என்னா பயன் மன அழுத்தம் அதிகமாயிடுசில்ல ஹி ஹி!!

குவா: சரி அந்தக்கப்பல் தலைவரு என்னா தான் முடிவுபண்ணிகிராறு?

மானி: அதுக்கு ஆச அதிகம்பா.........பொஞ்சாதிய துணை அரசியாக்கனுமா.........

குவா: அப்போ மச்சான..........

மானி: அது இன்னோம் முடிவுபன்னளையாம்........போற போக்க பாத்தா நாம சரக்கடிச்சிட்டு பேசுரதவிட இவரு பேசுறது டாப்பா இருக்கும் போல.............

குவா:சரி இப்படி யாரும் சரியில்லன்னு சொல்றீயே........யாருக்கு தான் ஓட்டு போடுறது..........

மானி: நான் சொன்னா யாரு கேக்கப்போறா...........

குவா:நான் கேக்குறேன் சொல்லு.............

மானி: மொதல்ல மக்கள் இந்த 49 O பிரிவு ஓட்டளிப்பு விஷயத்த இந்த ஓட்டளிக்கிற மிஷினுள்ள வரவைக்க போராடனும்..........

குவா:அதனால என்னா பிரயோசனம்.........

மானி:அப்போ தான் எல்லோரும் எல்லா துட்டையும் வாங்கிகினு எவனுக்கும் ஓட்டு போடாமே இந்தப்பிரிவுல ஓட்டு போட்டா எவனும் அடுத்த தேர்தல்ல நிக்க யோசிப்பானுங்க......

குவா:எவ்ளோ துட்டு வேஸ்ட்டுப்பா.........

மானி:அப்போதான் நமக்கு யாரு வேணுமுன்னு அடுத்த முறை நம்ம மக்களே தேர்ந்தெடுக்குற மாதிரி வரும்....இல்லைன்னா இப்படி சரக்கடிச்சிட்டு புலம்ப வேண்டியது தான்.............

குவா: உலக விஷயம் ஏதாவது இருக்கா......

மானி: நம்ம விக்கிலீக்ஸ் அசாஞ்சேக்கு நோபல் பரிசுக்கு பரிந்துற பண்ணிகிராங்கலாம்........

குவா:நல்ல விஷயம்தாம்பா..........

மானி:அப்படியே இந்த சுவிஸ் பேங்கு மேட்டரையும் அவரு தொறந்து விட்டாருன்னா எல்லா அரசியல்வாதிங்க கதையும் நாறிடும்.............பாப்போம்......

குவா: பாத்தியா மானி ஒரு நடிகரு பத்திரிக பேட்டில எப்படி கஷ்ட்டப்பட்டு புலம்பி இருக்காரு......

மானி:அதுவா....ரொம்ப ஓவருப்பா.......எம்ஜிஆர் கூட இந்த மனுஷன் தன்னை ஒப்பிட்டு பேசிகிரதப்பாத்து நான் ஆடிபோயிட்டேன்.......

குவா:ஏன்பா....

மானி:டேய் அந்த மனுஷன் எவ்ளோ கஷ்ட்டப்பட்டு சினிமால ஜெயிச்சி....கடைசி வரைக்கும் கொடுத்து சிவந்த மவராசண்டா அவரு.........சரியா படிக்கலன்னா ஹீரோ ஆகுற பணக்கார பசங்க காலம்டா இது............இது மாமியாருக்கு சோப்பு போடுறதும்.........நாலு பிட்டு படத்துல நடிச்சிட்டு.......அவரும் நானும் ஒண்ணுன்னு பேட்டி கொடுக்குது..........அரசியலபத்தி இன்னா தெரியும் இவருக்கு.......மவனே நாலு படம் ஓடலன்ன உடனே என்னமா அடக்கி வாசிசுது........இப்போ ஒரு படம் ஏதோ கொஞ்சம் ஓடுதுன்ன உடனே......ஸ்ஸ்ஸ் முடியல.......இந்த கொடுமையெல்லாம் அந்த மவராசன் பாத்தாரு.......இவர கொண்டு போய் தோட்டத்துல வச்சி வெளுத்திருப்பாறு.......

குவா: அப்புறம் ஏன் ஒரே கவலையா கீர?

மானி: மனசு கஷ்டமா கீது பா.............ரெண்டு ஹீரோயினுங்களுக்கு இந்த வருசம் கல்யாணம் ஆகப்போது..........

குவா:அப்படியா.........யாருப்பா அவங்க..........

மானி:ஒன்னு தாரா..........இன்னொன்னு....3 ஷா ஆடுன கால அமைதியா வச்சுக்கிட்டு செட்லானா சந்தோசம்தான்.............ஹி ஹி!!

குவா:சரி மானி ஒரு பன்ச்சு சொல்லு.....

மானி: ஆசைப்படலாம் தப்பில்லே அதுக்கு நாம தகுதியான்னும் யோசிக்கணும்.....

இன்றைய தத்துவம்:இந்திய ஜொள்ளு:


வியட்நாமிய ஜொள்ளு:


கொசுறு:நான் கொஞ்சம் யோசிக்கிறா மாதிரி பதிவு போட்டா ஓட்டும் பின்னூட்டமும் போடாம ஓடிப்போகும் என் நண்பர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் ஹி ஹி!!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

9 comments:

எப்பூடி.. said...

விஜட்டாம் ஜொள்ளு > இந்தியன் ஜொள்ளு :-))

விக்கியுலகம் said...

@எப்பூடி..உங்களுக்கே சொல்றேன் எப்பூடி!

நா.மணிவண்ணன் said...

ஆமா மானி எனக்கும் அந்த விசை பேட்டிய படிச்சோடன செம கடுப்பா பூச்சு இவரு ஒரு ஆளுன்ட்டு யாரு கூட கம்பார் பண்ணுதுன்னுஅந்த வியட்நாமிய சொள்ளு முழுசா டிரசு போட்ருகது கொஞ்சம் வருத்தமா இருக்கு

sathish777 said...

படங்கள் தேர்வு நல்லாருக்கு

sathish777 said...

மூர்த்தி செம கலக்கு கலக்குறாரு

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும்,வாக்குகளும்...

வைகை said...

மவனே நாலு படம் ஓடலன்ன உடனே என்னமா அடக்கி வாசிசுது........இப்போ ஒரு படம் ஏதோ கொஞ்சம் ஓடுதுன்ன உடனே......ஸ்ஸ்ஸ் முடியல......///


காவலன் படத்தை பார்த்து களிப்புறவும்!

ஜீ... said...

அருமை பாஸ்! :-)

சி.பி.செந்தில்குமார் said...

MONITER IS BECOMING YR TRADE MARK POST.. GOOD