Followers

Monday, February 28, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 28.2.11

ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா..............

வாங்க மானி பாட்டு ரொம்ப அர்த்தத்தோட கீது.............

மானி: நீ வேறப்பா நான் எங்கம்மாவ நெனச்சி பாடிகின்னு வந்தேன்..........

குவா: சரிங்க மானி..........என்னதான் நிலவரம்.......!
மானி: எதிர் பார்த்தது தான் ஆனா சும்மா சொல்லக்கூடாது அம்மாவ...........யாரு ஓவரா ஆடுனாலும் கூட்டிவச்சி சீட்டு குடுக்குற மனசு பெருசு..........இப்படித்தான் அந்த விறகு வெட்டிய வளத்து விட்டாங்க.......இதயக்கனி தலைவரு இருக்குற வரைக்கும் பம்மிட்டு இருந்த அந்தாளு இந்த அளவுக்கு உதாரு விடுறதுக்கு அம்மாதானப்பா காரணம் ஹி ஹி!

குவா: சரி...........கொஞ்சம் இழுபறியா இருந்தது போல..........

மானி: இப்பவும் கொஞ்சம் அப்படித்தான் இருக்கு............ஆனா இந்த முறை மீன் பீர் மொதலாளி நான் பண விஷயத்த பாத்துக்கறேன்னு சொன்னதால அம்மாவும் சரின்னுட்டாங்க ஹி ஹி!................A/C குடியும் டாஸ்மாக்கும் சேர்ந்து ஒரே குடியா மாறிப்போச்சி...........!

குவா: அந்த மத்திய கட்சிக்கு இன்னும் பேரம் சரியா படியளியாமே.............


மானி: நம்ம தலிவரு யாரு.........சும்மாவா...........15 சீட்டுக்கு பம்மிட்டு நின்னவருக்கு இவ்ளோ வாரி வழங்கும்போதே தெரியலியா.........இந்த முறை ரிசல்ட்டு தெரிஞ்சி போச்சின்னு...........அதான் அவங்க கிட்ட இவ்ளோ தான் முடியும்னு கறாரா சொல்லிட்டாங்க.......ஹி ஹி!...........இதுல அந்த தலைவருங்க ரொம்ப டென்சன் ஆயிட்டாங்க.........எல்லாரும் ஒரு மப்பா திரியுறாங்க...........

குவா: இந்த கட்சி தாவலுக்கு ஏதாவது தடை வருமாபா..........


மானி: என்ன இப்படி கேட்டுபுட்ட...........அதுக்கு மட்டும் தடை வந்துச்சினா நம்ம நாட்டுல அரசியல் வாதிங்கள தேடித்தான் கண்டு பிடிக்கணும்...........பாரு கடந்த முறை எதிர்ல இருந்து இந்த முகாமுக்கு வந்த பல பேரு ஒரே டென்சனா கீறாங்க..........

குவா: ஏம்பா...........

மானி: அந்தம்மா மறுபடியும் வந்துட்டாங்கன்னா கொய்யால எங்க அடிப்பாங்கன்னே தெரியாதுல்ல ஹி ஹி!

குவா: நம்ம மண்ணு சொல்லிகிறாரு பாத்தியா..........மீனவங்கள கொல்றத ஏற்க முடியாதுன்னு............

மானி: டேய்.............இப்படிதான் அடிக்கடி உதாரு விட்டுக்கனும்...........இல்லன்ன நீங்க என்னதான் செய்வீங்கன்னு கேக்குறவங்களுக்கு............பாரு நான் எத்தன முறை உதாரு உட்டுகிறேன்னு சொல்லிக்கலாமுள்ள.........இந்த கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவு வராமலா போகும்........பாப்போம்.

குவா: ஆமா அந்த சினிமா நடிக கன்னட அரசியல்வாதியாள நல்லா செட்டுலாயிட்டாங்க போல........

மானி: ஆமா, அந்த இயற்க பொண்ணுதானே..........அது ரொம்ப நாளா நடக்குது அந்த தலீவரு அந்த பொண்ணுக்கு தனி சேனலு வாங்கி குடுத்து கிறாரு.......ஹி ஹி!

குவா: பாரு மானி இவ்ளோ கஷ்டப்பட்டு இப்படி ஆயிடுச்சே கிரிகெட்டுல இந்தியா நிலைமை..........!

மானி: நேத்து ஆனத சொல்றியா...........எப்பவுமே ரெண்டு ராசி உண்டு நம்ம டீமுக்கு........ ஒன்னு கிரிகெட்டு தெய்வம் செஞ்சுரி போட்டாலே அன்னிக்கி இந்தியா உதவாங்கும்னு சொல்லுவாங்க.......ரெண்டாவது அந்த யுவி அர செஞ்சுரி போட்டாலே இந்தியா ஜெயுக்கும்னு சொல்லுவாங்க...........நேத்து ரெண்டுமே நடந்ததால ட்ரா ஆயிருச்சி...........ஆனா சரியான காரணம் என்னான்னா நமக்கு சரியான பந்து வீச்சாலருங்க இல்லாததுதான்.

குவா: சினிமா மேட்டரு.......

சரக்கு 1. 3 ஷா நடிகைக்கு குயந்த கீதாமே..........

நெசம் : விசாரிச்சதுல அது உண்மை இல்லன்னு சொல்றாங்கப்பா ஹி ஹி!

சரக்கு 2. நிசி டைரடக்கரு இந்திக்கு போறாரு!

நெசம்: இல்லைங்கோ அந்தப்படம் பப்படம் ஆனதால இன்னொரு காதல் படம்  எடுக்க முடிவு பண்ணி கீறாரு.

சரக்கு 3. எம் பேரு மீனா குமாரி நடிகை சொந்தப்படம் எடுக்கப்போறாங்களாம்!


நெசம்: ஆமாங்கோ.........தெலுங்குல எடுக்குறாங்களாம்.

ஆரோக்கியசாமி சொல்றாரு:

சுறுசுறுப்பாய் வாழ பச்சை பட்டாணி சாப்பிடுங்க. தினமும் ஒரு கைப்பிடி அளவு உணவுல சேர்த்துகிட்டீங்கன்னா உங்க இதயம் பலம் பெரும். ஒல்லியாய் இருப்பவர்கள் தொடர்ந்து இதை உணவில் சேர்த்துக்கொண்டால் உடம்பு ஆரோக்கியமாக சதைப்பிடிக்கும். 

செய்தி: தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை ஆரம்பித்தது!

பன்ச்: தெய்வம்னா அம்மா, அம்மான்னா சும்மா இல்ல 

இந்த வார தத்துவம்:முத வெட்டு: (இந்திய ஜொள்ளு!)ரெண்டாவது வெட்டு: (வியத்நாமிய ஜொள்ளு!)


கொசுறு: பொண்ணு எப்படி ஹி ஹி!(சிபி,மனோ கவனிக்க!)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

39 comments:

நா.மணிவண்ணன் said...

அப்பறம் வந்து கமெண்ட் போடுறேன்

நா.மணிவண்ணன் said...

வந்துட்டேன்

THOPPITHOPPI said...

//அப்பறம் வந்து கமெண்ட் போடுறேன் //

அப்புறம் வந்து கமன்ட் போடுறேன்னு சொல்லுறதுக்கு ஒரு கமண்டா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எல்லா பக்கமும் கம..கம...
கலக்கல் தல..

sathish777 said...

அப்புறம் வந்து கமன்ட் போடுறேன்னு சொல்லுறதுக்கு ஒரு கமண்டா?//
அண்ணே விட்ருங்க பாவம்

sathish777 said...

மூர்த்தி இன்னிக்கும் கலக்கிட்டாரு

சங்கவி said...

கலக்கல்...

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
கொசுறு: பொண்ணு எப்படி ஹி ஹி!(சிபி,மனோ கவனிக்க!)

உங்க பிளாக்தான். அதுக்காக எப்படி வேணும்னாலும், யாரை வேணும்னாலும் நக்கல் பண்றதா?அட.. சரீபோகட்டும் நான் தான் இளிச்சவாயன்... எதும் கண்டுக்க மாடேன்.. எங்க அண்ணன் நாஞ்சில் மனோ கோபக்காரர் ஆச்சே.. உங்களை என்ன பண்ணப்போறாரோ..?( ஹி ஹி என் கடமை முடிஞ்சுது)

சி.பி.செந்தில்குமார் said...

>>நா.மணிவண்ணன் said...

அப்பறம் வந்து கமெண்ட் போடுறேன்

ஓஹோ, விக்கியோட ஐடியாவா இது...அடிக்கடி வந்தா ஹிட்ஸ் அதிகம் கிடைக்கும்.. ம் ம்

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்றைய பதிவும் கலக்கல்..
வாழ்த்துக்கள்..

மாணவன் said...

வழக்கம்போலவே மானிட்டர் பக்கங்கள் செம்ம கிக்.... அசத்தல்

:)

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்


வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"வந்துட்டேன்

"அப்பறம் வந்து கமெண்ட் போடுறேன்"

>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி

அருவா அருவா நண்பா ஹி ஹி!

விக்கியுலகம் said...

@சங்கவி

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்


வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@THOPPITHOPPI

"//அப்பறம் வந்து கமெண்ட் போடுறேன் //

அப்புறம் வந்து கமன்ட் போடுறேன்னு சொல்லுறதுக்கு ஒரு கமண்டா?"

>>>>>>>>>>>>>>>

அதையே ஒரு கமெண்டா போட்ட தொப்பி தொப்பி அவர்களுக்கு நன்றி ஹி ஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"உங்க பிளாக்தான். அதுக்காக எப்படி வேணும்னாலும், யாரை வேணும்னாலும் நக்கல் பண்றதா?அட.. சரீபோகட்டும் நான் தான் இளிச்சவாயன்... எதும் கண்டுக்க மாடேன்.. எங்க அண்ணன் நாஞ்சில் மனோ கோபக்காரர் ஆச்சே.. உங்களை என்ன பண்ணப்போறாரோ..?( ஹி ஹி என் கடமை முடிஞ்சுது)"

>>>>>>>>>>>

சிண்டு முடியும் சிபி அரசியலுக்கு செல்லவும் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@மாணவன்

வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"அப்பறம் வந்து கமெண்ட் போடுறேன்

ஓஹோ, விக்கியோட ஐடியாவா இது...அடிக்கடி வந்தா ஹிட்ஸ் அதிகம் கிடைக்கும்.. ம் ம்"
>>>>>>>>>>>>>

அருவா அருவா ஹி ஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா..............//

முன்னால் முதல்வரை'தானே சொல்றீங்க...

MANO நாஞ்சில் மனோ said...

//கொசுறு: பொண்ணு எப்படி ஹி ஹி!(சிபி,மனோ கவனிக்க!)//

யோவ் எங்களை பாத்தா ஜொள்ளு பார்ட்டியாவா தெரியுது பிச்சிபுடுவேன் பிச்சி....
ஹி ஹி ஹி இருந்தாலும் என் ஒட்டு இந்திய ஜொள்ளுகே....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"முன்னால் முதல்வரை'தானே சொல்றீங்க"
>>>>>>>>>>>>>>>

இங்க யாரும் அரசியல் பேசாதிங்கப்பா!
.....................................


யோவ் எங்களை பாத்தா ஜொள்ளு பார்ட்டியாவா தெரியுது பிச்சிபுடுவேன் பிச்சி....
ஹி ஹி ஹி இருந்தாலும் என் ஒட்டு இந்திய ஜொள்ளுகே....
>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஜொள்ளர்கள் கழகம்

தலைவர்: சிபி

சம தலைவர்: மனோ

அப்பாவி தொண்டன்: விக்கி

ஹி ஹி!!

மைந்தன் சிவா said...

என்ன சி பி மனோ??
அவங்க தான் இந்த மாதிரி படங்களுக்கு agent 'டா?#டவுட்டு

வைகை said...

1. 3 ஷா நடிகைக்கு குயந்த கீதாமே.........//


ஹி..ஹி..அந்த நடிகையே குயந்ததானே?

தமிழ்வாசி - Prakash said...

அட செம தொகுப்பு.

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

Jana said...

மானிட்டர் பக்கங்கள் கலக்கல்

பாட்டு ரசிகன் said...

/////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////

விவரம் அறிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

பாட்டு ரசிகன் said...

நானும் வந்துட்டேன்..
இன்றைய தொகுப்பும் அருமை..

செங்கோவி said...

மானிட்டர் பக்கங்களில் ஸ்டடியா நிக்குறீங்க!

♔ம.தி.சுதா♔ said...

///// நம்ம தலிவரு யாரு.........சும்மாவா...........15 சீட்டுக்கு பம்மிட்டு நின்னவருக்கு இவ்ளோ வாரி வழங்கும்போதே தெரியலியா.////

எங்க பாத்தாலும் இதே ரோதனை தானா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

யாரோ யாருக்குள் இங்கு யாரோ............பாட்டு கேட்டு கீறிங்களா நண்பா ஹி ஹி!

விக்கியுலகம் said...

@வைகை

"ஹி..ஹி..அந்த நடிகையே குயந்ததானே?"

>>>>>>>>>>>

போற போக்குல அந்தப்பொண்ண தூக்கி இடுப்புல...............ஹி ஹி!

விக்கியுலகம் said...

@பாட்டு ரசிகன்
வருகைக்கு நன்றி

உங்க கடவுள் பாட்டு அருமைங்கோ

விக்கியுலகம் said...

@Jana

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@♔ம.தி.சுதா♔

வருகைக்கு நன்றி

ரோதனை மாற்றும் நம் சாதனை நண்பா

விக்கியுலகம் said...

@செங்கோவி

வருகைக்கு நன்றி

வாழ்த்துரைக்கும் நன்றி

Speed Master said...

//ஒன்னு கிரிகெட்டு தெய்வம் செஞ்சுரி போட்டாலே அன்னிக்கி இந்தியா உதவாங்கும்னு சொல்லுவாங்க.......ரெண்டாவது அந்த யுவி அர செஞ்சுரி போட்டாலே இந்தியா ஜெயுக்கும்னு சொல்லுவாங்க...........நேத்து ரெண்டுமே நடந்ததால ட்ரா ஆயிருச்சி...

ஹி ஹி என் மனசில் இருந்த அதே கருத்தை சொல்லியிருக்கீங்க

விக்கியுலகம் said...

@Speed Master

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா