Followers

Friday, February 25, 2011

சரக்கடித்த பிறகு (ஒன்லி ஆண்களுக்கு மட்டும்!

காலையில ஒரு வரலாற்று பதிவு போட்டேன்...........நம்ம சிபி ரொம்ப மனசு கஷ்டமாயிடுசின்னு பதில் சொல்லி இருந்தாப்புல! அதான் இன்னொரு மொக்க பதிவு ஹி ஹி!.............(எப்படியெல்லாம் காரணம் சொல்ல வேண்டி இருக்கு!)போன வாரத்துல ஒரு நாளு நம்ம வட இந்திய நல்லவரு ஒருத்தரு போன் பண்ணி இருந்தாரு...........(நான் ஏற்கனவே ஒரு போன் கால் யாருன்னு தெரியாம மண்ட காஞ்சி இருந்த நேரம்.....ஹி ஹி!)

அவரோட கம்பெனி விழாவுக்கு என்னை கூப்பிட்டாரு...........நான் சாதரணமா இந்த மாதிரி அழைப்புகள விரும்பறது இல்ல.......(எல்லாம் வட இந்திய அறிவாளிகளா(!) வருவாங்க ஹி ஹி!)..........ஏன்னா சரக்கு கண்டிப்பா அடிக்க சொல்லி வற்புறுத்துவாங்க..................நமக்கு வேற பித்த உடம்பு வேறயா அதேன்.....

ரொம்ப அழுத்தம் குடுத்து என்னை 4 முறை அழச்சதினால போனேன்.........ஒரே இந்தி பட்டாளம்........நான் மட்டும் தான் இந்தியால இருந்து ஒதுக்கப்பட்ட தமிழன்(நமக்கு ஒன்னும் புதுசில்லையே ஹி ஹி!)..........ஒவ்வருத்தரா பாத்து நலம் விசாரிச்சாங்க........(எல்லோரும் அண்ணி எங்கண்ணே அப்படின்னு.......கேட்டாங்க அது தணிக்கத!)


ஒருத்தர ஒருத்தர் விசாரிக்கும்போது பெண்கள அண்ணி எப்படி இருக்கீங்க என்றே சொல்லுவாங்க...கொஞ்ச நேரம் கையில ஆப்பிள் ஜூஸ் வச்சிக்கிட்டு சீன் போட்டுட்டு இருந்தேன்(மானங்கெட்ட பொழப்பு!)............அப்போ போனு வந்துச்சி..........என்ன சொல்லும்மா என்றேன்...........என் மனைவி என்ன சாப்பிட்டாச்சா என்றாள்............இல்ல இன்னிக்கி ஒரு பார்ட்டி அதான்........ சரி சரி நான் இல்லன்னு சந்தோசத்துல ரெண்டுக்கு மேல போடாதீங்க(பெக்காம்!....அது எப்படி இருக்கும் ஹி ஹி!) சரியா என்றாள்...........என் மேல எவ்வளவு நம்பிக்க ச்சே..........இதுக்கு சரக்கே அடிச்சிட்டு இருக்கலாம்னு நெனச்சேன்........ஒரு நண்பர் வந்து இப்போ நீ இந்த சரக்க குடிச்சே ஆவரன்னு சொல்லி கையில கொடுத்திட்டாரு...............

சரி அடிப்போமுன்னு ஆரம்பிச்சேன்...........கொஞ்ச நேரத்துல எத்தன ரவுண்டு போச்சின்னு தெரியல.......ஒருத்தரு பேச்சு குடுத்தாரு........ஆமாம்.........அண்ணி ஊருல இல்ல போல........அடங்கொன்னியா ஏன்டா..........போடா டேய் என்றேன்.............அவன் உடனே ஏன்பா என் மனைவி கூடத்தான் ஊருல இல்ல.......நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் என்றான்.

ஆமா.......சாப்பாட்டுக்கெல்லாம் என்னா பண்றே என்றேன்........அவன் எந்த சாப்பாடு என்று வேறொரு அர்த்தத்தில் கேட்டான்......இது வேலைக்காகாது என்று நினைத்தேன்...........உனக்கொன்னு தெரியுமா இங்க ஒருவிஷயம் ஆரம்பிச்சி இருக்கோம்.........என்னாது..........6 மாச ஒப்பந்தம் போட்டுக்கலாம்...........உனக்கு வேணுமுன்னா சொல்லு என்றான்..........எனக்கு முதலில் புரியவில்லை...........பிறகுதான் புரிந்தது..........அடப்பாவிங்களா இது உங்க பொண்டாட்டிங்களுக்கு செய்யுற துரோகமில்லையா என்றேன்...........

அந்த க்ரூப் என்னை ஏற இறங்க பார்த்தது...........உன் மனைவி 6 மாசமா ஊருல இல்லையே...........நீ என்னதான் பண்றே என்றான் ஒரு *#*# .......அதற்க்கு நான்..........சரிப்பா.......இப்போ அவங்களும் இதே மாதிரி நெனச்சி சரி 6 மாசத்துக்கு யாரையாவது இந்தியால சேத்துகிட்டாங்கன்னா ........என்றேன்.......உடனே அவர்களுக்கு வந்த கோவத்தை பார்க்கணுமே...........அடித்த போதை அவர்களுக்கு இரங்கி விட்டு இருந்தது.......என்னுடன் சண்டைக்கு வந்து விட்டனர்..............


நான் சொன்னது.......ஏன்டா டேய்..........உங்க பொண்டாட்டிங்க மட்டும் கண்ணகியா இருக்கணும்............நீங்க மார்கழி மாசத்து நாய் கணக்கா சுத்தி வருவீங்க..............இந்த நாதாரி பொழப்புக்கு என்னை வேற கூப்புடுறீங்க..........இன்னொரு முறை இந்த மாதிரி பேசினீங்க...........தக்காளி எத கட் பன்னனமோ அத கட் பண்ணிபுடுவேன் என்று சொல்லிவிட்டு வேகமாய் வீடு வந்து சேர்ந்தேன்............மறு நாளில் இருந்து நான் அவர்களின் போன் அழைப்பை ஏற்பதில்லை..........ஆனாலும் மன்னிப்பு கேட்டு தினம் குறும் செய்தி அனுப்பியவண்ணம் உள்ளனர்........

கொசுறு: எங்கடா நான் அவங்க வீட்டுக்காரங்க வந்தா போட்டு உடச்சிடுவனொன்னு பயம் வேற என்னத்துக்கு மன்னிப்பு கேக்குறாங்க...............என்னைப்பொறுத்தவரை அழகை ரசிப்பது தவறில்லை அனுபவிக்க நினைப்பதே தவறு(அதுவும் மனைவி என்பவள் வாழ்வில் கலந்த பிறகு ஹி ஹி!)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

41 comments:

இரவு வானம் said...

முடியல விக்கி உங்க தத்துவம் awasome :-)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

செங்கோவி said...

//தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்.// ஏங்க, அண்ணாத்த எவ்வளவு ஃபீலிங்ஸா ‘நியூயார்க் நகரம்’னு பாடிக்கினே நல்ல மேட்டரு சொல்றாரு..நகைச்சுவைன்னு லந்தக் கொடுத்து மெர்சலாக்குறீங்க..

கக்கு - மாணிக்கம் said...

சரிதா. நீங்கெல்லாம் கண்ணாலம் கட்டுன புள்ளைங்களா? சரிதான்.
ரொம்ப யோக்கியமான புள்ளிங்கதான்.

அஞ்சா சிங்கம் said...

ரொம்ப பாவம் .......நான் என்ன சொன்னேன் .........தமிழ்மணத்தில் இணைக்கவும்

Jana said...

//...தக்காளி எத கட் பன்னனமோ அத கட் பண்ணிபுடுவேன் //ஆஹா...பொல்லாத அளுதான் நீங்கள்.

Jana said...

தமிழ் மணம்????

மைந்தன் சிவா said...

//Jana said...
தமிழ் மணம்???//
அதே!!!

மைந்தன் சிவா said...

ஹிஹி தத்துவத்த பாருங்கையா...
கெளம்பிட்டாங்க ஆளுக்கு ஒரு தத்துவத்தோட..
நெசமாலுமே நீங்க போகல?
இல்ல ஓய்ப்'க்கு பயந்துகிட்டு இப்பிடி பதிவு போடுறீங்களா ?

பாட்டு ரசிகன் said...

நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...

தெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html

பாட்டு ரசிகன் said...

கோடை கால பதிவா..

MANO நாஞ்சில் மனோ said...

//கே. ஆர்.விஜயன் said...
உங்களுக்கும் ஷாகீலா வுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. சமீபகாலமா உங்களால அவங்களை மறக்க முடியல .அவங்களுக்கு பெரிய மனசு!!! அது எல்லோருக்கும் தெரியும்.ஆன உங்களுக்கு ??//

டச்சிங் டச்சிங் சூப்பர் மக்கா....

ராஜகோபால் said...

அப்பா பேச்சுலரா இருக்கறது எவ்வளவு பெரிய ஆனந்தம் அதுவும் 18 இருந்து 30 வயசு வரை உள்ள எல்லா பிகரையும் சைட் அடிப்பது என்னா ஒரு சொகம்...

Philosophy Prabhakaran said...

// காலையில ஒரு வரலாற்று பதிவு போட்டேன்...........நம்ம சிபி ரொம்ப மனசு கஷ்டமாயிடுசின்னு பதில் சொல்லி இருந்தாப்புல! //

படிச்சிட்டு வர்றேன்...

Philosophy Prabhakaran said...

ஆஹா... மெசேஜ் சூப்பர்...

மாணவன் said...

//நான் சொன்னது.......ஏன்டா டேய்..........உங்க பொண்டாட்டிங்க மட்டும் கண்ணகியா இருக்கணும்............நீங்க மார்கழி மாசத்து நாய் கணக்கா சுத்தி வருவீங்க..............இந்த நாதாரி பொழப்புக்கு என்னை வேற கூப்புடுறீங்க..........இன்னொரு முறை இந்த மாதிரி பேசினீங்க...........தக்காளி எத கட் பன்னனமோ அத கட் பண்ணிபுடுவேன் என்று சொல்லிவிட்டு வேகமாய் வீடு வந்து சேர்ந்தேன்.///

சூப்பர் பாஸ்...

உங்க நேர்மை புடிச்சிருக்கு... ஐ லைக் இட்.. :))

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம் டூல் பார் லேட்டா இணைஞ்சதால ஓட்டு கம்மியா இருக்கு. கமெண்ட் போட்டவங்க ளுக்கு எல்லாம் ஒரு மெயில் போட்டு ஓட்டு போடச்சொல்லி மிரட்டுங்க.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>என்னைப்பொறுத்தவரை அழகை ரசிப்பது தவறில்லை அனுபவிக்க நினைப்பதே தவறு(அதுவும் மனைவி என்பவள் வாழ்வில் கலந்த பிறகு ஹி ஹி!)

innaila இன்னைல இருந்து உங்க ஃபிரண்ட்ஷிப்பை கட் பண்ணிக்கறேன்.. ஹி ஹி நானும் உங்களை மாதிரியே யோக்கியனா ஆகிடுவனோன்னு பயமா இருக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில் பார்த்து லேடீஸ் பயந்துட்டு வர்லை போல.. உங்களை யாரு இப்படி டைட்டில் வைக்க சொன்னது..?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"nnaila இன்னைல இருந்து உங்க ஃபிரண்ட்ஷிப்பை கட் பண்ணிக்கறேன்.. ஹி ஹி நானும் உங்களை மாதிரியே யோக்கியனா ஆகிடுவனோன்னு பயமா இருக்கு?"

>>>>>>>>>>>>>>
தங்களை தாங்களே எப்படிப்பட்டவருன்னு சொன்ன நேர்மை எனக்கு புடிச்சிருக்கு ஹி ஹி!
சொல்லவே இல்லை.........இது உங்க நலம் விரும்பிகளுக்கு தெரியுமா!

..................

தமிழ்மணம் டூல் பார் லேட்டா இணைஞ்சதால ஓட்டு கம்மியா இருக்கு. கமெண்ட் போட்டவங்க ளுக்கு எல்லாம் ஒரு மெயில் போட்டு ஓட்டு போடச்சொல்லி மிரட்டுங்க.. ஹி ஹி
>>>>>>>>>>>>>>>>>

எல்லோருக்கும் அருவா அனுப்பி இருக்கேன் ஹி ஹி

..................

டைட்டில் பார்த்து லேடீஸ் பயந்துட்டு வர்லை போல.. உங்களை யாரு இப்படி டைட்டில் வைக்க சொன்னது..?
>>>>>>>>>>>>>>>>>

வேணாம்பா எதுக்கு வம்பு ஹி ஹி!

ரஹீம் கஸாலி said...

நல்லா கேட்டீங்க....நாக்க புடுங்கற மாதிரி....
நம்ம கடையில் இன்று என்னவா பீட்டர் விடுறாங்க இந்த பசங்க....

கே.ஆர்.பி.செந்தில் said...

தத்து பித்துவம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏண்ணே?

Speed Master said...

இத படிச்சுட்டு அண்ணி என்ன சொன்னாங்க?கணிணி நிரல் சி & சி ++ விளக்கம் (C vs C ++)
http://speedsays.blogspot.com/2011/02/c-vs-c.html
பதிவர்களுக்கும் பதியவர்களுக்கும் புரியும் வண்ணம்
கணிணி மொழியில் மிகவும் புகழ்பெற்ற மொழிகள் (எனக்கு நன்கு தெரிந்த மொழிகளில்) சி மற்றும் சி ++ பற்றி சிறிய விளக்கம் கொடுத்துள்ளேன், நிச்சயம் பயன்படும்

விக்கியுலகம் said...

@இரவு வானம்

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

"எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்.."

>>>>>>>
வருகைக்கு நன்றி

உண்மைல இது ஒரு சீரியசான விஷயம் ஹி ஹி!.................ஆண் என்பதால் கற்பு என்பது இல்லாமல் போய் விடுமா ஹி ஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி
"தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்.// ஏங்க, அண்ணாத்த எவ்வளவு ஃபீலிங்ஸா ‘நியூயார்க் நகரம்’னு பாடிக்கினே நல்ல மேட்டரு சொல்றாரு..நகைச்சுவைன்னு லந்தக் கொடுத்து மெர்சலாக்குறீங்க.."

>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி

புரிந்து கொண்டதற்க்கு நன்றி ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

"சரிதா. நீங்கெல்லாம் கண்ணாலம் கட்டுன புள்ளைங்களா? சரிதான்.
ரொம்ப யோக்கியமான புள்ளிங்கதான்"

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி

என்ன தலைவரே அப்படி சொல்லிட்டீங்க ...........கடமை கண்ணியம் ஹி ஹி..........கட்டுப்பாடு இது ரொம்ப முக்கியமில்ல!

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"ரொம்ப பாவம் .......நான் என்ன சொன்னேன் .........தமிழ்மணத்தில் இணைக்கவும்"

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி

need repeat audience ஹி ஹி!

விக்கியுலகம் said...

@Jana

"//...தக்காளி எத கட் பன்னனமோ அத கட் பண்ணிபுடுவேன் //ஆஹா...பொல்லாத அளுதான் நீங்கள்."

>>>>>>>

வருகைக்கு நன்றி

நான் ஒரு அப்பாவிங்க ஹி ஹி!
.................................

"தமிழ் மணம்????"

>>>>>>>>>>>>>>>
அவங்களுக்கு எனக்கும் கொஞ்சம் வாய்க்கா தகராறு ஹி ஹி!

முடிஞ்ச திரும்ப வாங்க அதுக்குள்ளே இணைஞ்சி இருப்பாங்க ஹி ஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"ஹிஹி தத்துவத்த பாருங்கையா...
கெளம்பிட்டாங்க ஆளுக்கு ஒரு தத்துவத்தோட..
நெசமாலுமே நீங்க போகல?
இல்ல ஓய்ப்'க்கு பயந்துகிட்டு இப்பிடி பதிவு போடுறீங்களா ?"

//Jana said...
தமிழ் மணம்???//
அதே!!!

>>>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி

நான் ஒரு அப்பாவிங்க ஹி ஹி!

அவங்களுக்கு எனக்கும் கொஞ்சம் வாய்க்கா தகராறு ஹி ஹி!

முடிஞ்ச திரும்ப வாங்க அதுக்குள்ளே இணைஞ்சி இருப்பாங்க ஹி ஹி!

விக்கியுலகம் said...

@பாட்டு ரசிகன்

"கோடை கால பதிவா"

>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி

இது ஒரு குளிர்கால பதிவுங்கோ ஹி ஹி!

உங்க பாடல் பதிவு அருமைங்கோ!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

என்னாது இது எதோ உள் குத்து கணக்கா இருக்கே ஹி ஹி!

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@ராஜகோபால்

"அப்பா பேச்சுலரா இருக்கறது எவ்வளவு பெரிய ஆனந்தம் அதுவும் 18 இருந்து 30 வயசு வரை உள்ள எல்லா பிகரையும் சைட் அடிப்பது என்னா ஒரு சொகம்"

>>>>>>>>>>
வருகைக்கு நன்றி

அவ்ளோ தானே வேற ஏதாவது இருக்கா ஹி ஹி!

விக்கியுலகம் said...

@மாணவன்

"சூப்பர் பாஸ்...

உங்க நேர்மை புடிச்சிருக்கு... ஐ லைக் இட்.. :))"

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி

ரொம்ப நன்றிங்கோ(ஏதாவது உள் குத்தோ!)

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

"நல்லா கேட்டீங்க....நாக்க புடுங்கற மாதிரி....
நம்ம கடையில் இன்று என்னவா பீட்டர் விடுறாங்க இந்த பசங்க....

>>>>>>>>>
வருகைக்கு நன்றி"

இவனுங்களுக்கு எத கட் பண்ணாலும் திருந்த மாட்டனுங்க ஹி ஹி!

உங்க பதிவுல பாட்டி சும்மா பின்னிப்புட்டங்க நண்பா

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

"ஏண்ணே?"

>>>>>>>>>>
வருகைக்கு நன்றி தல

முடியல ஹி ஹி!

விக்கியுலகம் said...

@கே.ஆர்.பி.செந்தில்

"தத்து பித்துவம்..."
>>>>>

வருகைக்கு நன்றி தல எதோ சொல்றீங்க அப்படினா!

விக்கியுலகம் said...

@Speed Master

"இத படிச்சுட்டு அண்ணி என்ன சொன்னாங்க?"

>>>>>>>>
வருகைக்கு நன்றி

இவனுங்கல்லாம் உனக்கு நண்பனுங்க............இப்படித்தான் சொன்னாங்க..........காலக்கொடும இத வேற சொல்லி ஸ்ஸ்ஸ் முடியல ஹி ஹி!

டக்கால்டி said...

அருமை