Followers

Sunday, February 27, 2011

வியாபாரி பேட்டி - (!?)

வியத்னாம் - தமிழனின் பாதம் இனி அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! 
இந்த புதிய தளத்தில் பகிர உள்ளேன்....

வியத்னாம் - வலியவன் எளியவனிடம் - புலனாய்வு தொடர் இங்கேயே தொடரும்.......ஏனெனில் இரண்டும் வெவ்வேறு பார்வையில் நான் பார்ப்பதால் ஹி ஹி!...................சிரமத்துக்கு மன்னிக்கவும்...........வணக்கம் இந்த பேட்டி ஒரு தலை சிறந்த வியாபாரியிடம் எடுக்கப்பட்டது.............


வணக்கமுன்னேன்...................

வாங்க வணக்கம்.............பேட்டின்னு சொன்னீங்களே எனக்கு கோவம் வராத மாதிரி கேள்வி கேளுங்க சரியா....................

சரிங்கன்னேன்..........

அது சரி அது என்னா தலைப்பு வியாபாரின்னு போட்டுகிறீங்க ..............நான் ஒரு பெரிய குடும்பத்தலைவனாச்சே........

இப்போ தான் குடும்பம்னாலே வியாபாரம்னு ஆயிடுசிங்களே அதேன்..............

சரி ஓகே பாப்போம்.......கேளுங்க..........

நிருபர்: நீங்க எப்படி இந்த அளவுக்கு முன்னேறுனீங்க.............


வியா: அது ஒன்னும் பெரிசில்லப்பா.............அந்தக்காலத்துல எனக்கு வேல வெட்டி எதுவும் கிடைக்கல..........சும்மா சுத்தி வரும்போது..........என்னா பண்ணலாம்னு யோசிச்சி.........நான் அடிப்படையில ஒரு மூளைக்காரன்னு நம்ம நண்பர்கள் சொல்லுவாங்க................சரி தொழில் தெரியாதவங்க ஒரு தொழில் கத்துக்குராமாதிரி.............நான் இந்த வியாபாரத்த ஏத்துகிட்டேன் அவ்வளவு தான் ஹி ஹி!

நிருபர்: ஆமாண்ணே இந்த கடைய வாங்கும் போது எவ்ளோ குடுத்து வாங்குனீங்க?

பதில்: இந்த கடைல நான் ஒரு சாதாரண பொட்லம் சுத்துற பையனா தான் வேலைக்கு சேர்ந்தேன்........அப்போ கடை ஓனருக்கு நல்லா வியாபாரம் போயிட்டு இருந்துது............ஆனா அந்த மனுஷன் என் அளவுக்கு நெளிவு சுளிவு தெரியாதவாறு.......திடீர்ன்னு உடம்பு சரி இல்லாம இறந்துட்டாரு.........அப்போ மத்த பய புள்ளைங்க எப்படியாவது கடைய ஆட்டைய போடப்பாத்தாங்க......நான் விடுவனா இன்னொரு நண்பன் அப்போதான் கடையில சேர்ந்து இருந்தான்.......அவன கூட்டாளியா சேத்துகிட்டு.......மத்தவங்கள ஓடவிட்டுட்டு நான் முதலாளியா ஆயிட்டேன் எப்பூடி!


நிருபர்: சூப்பரு..........அப்புறம் அந்த நண்பேன்டா என்ன ஆனாரு........../

பதில்: ஏன்யா இவ்ளோ பிளான் பண்ணி கடைய கைக்கு கொண்டு வந்த நானு அவரு கிட்டயா கொடுப்பேன்.......இன்னொரு ப்ளான் பண்ணி அவர கடையில இருந்து கழட்டி விட்டுட்டேன்........ஆனா மனுஷன் என் எதிர்லயே இன்னொரு கடை போட்டு வியாபாரம் ஆரம்பிச்சிட்டாரு.......இப்போ எதிர்ல இருக்க கடை அவரோடது தான்.......அவரோட சொந்த காரங்க நடத்திட்டு வராங்க.........ஆனா நல்ல மனுஷன்.......நான் அவர எவ்ளோ கேவலமா திட்டி இருக்கேன் ....ஆனா மனுஷன் அசரவே இல்ல.......ஒரு வேல என் பிளானு அவருக்கிட்ட சரியா ஒர்க் அவுட் ஆகல்லன்னு நெனைக்கிறேன் ஹி ஹி!


நிருபர்: சரிண்ணே உங்களுக்கு உண்மையிலே எத்தன மனைவிங்க..............?

பதில்: பாத்தியா நான் பேட்டி குடுக்குறேன்னு சொன்னதும்.........இந்த மாதிரி வரலாற்று விஷயத்த எல்லாம் தோண்டுறியே.........சரி கேட்டுட்ட...........நான் எண்ணிக்கைய எல்லாம் கணக்குல வச்சிக்கறது இல்ல..........அந்த டைரி தொலைஞ்சி போச்சி..............அதான் ஹி ஹி!

நிருபர்: அடிக்கடி உங்க குடும்பத்துல பிரச்சன வரும்போது எப்படி 
சமாளிக்கிறீங்க?

பதில்: அது ஒன்னும் பெருசில்ல..........ங்கொய்யால இனி நீங்களே குடும்ப பொறுப்ப பாத்துக்கங்கன்னு சொல்லிபுடுவேன்..........

நிருபர்: என்னனே உங்க புள்ளைங்க........சரி நீங்க ஒதுங்கி கோங்கன்னு சொல்லிட்டாங்கன்னா.............!

பதில்: அதுக்கு தான் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இடத்துல செக் வச்சிருக்கேன் ஹி ஹி!................என்ன பண்றது தொழில்ல செய்ஞ்சி செய்ஞ்சி வீட்டுலயும் அப்படியே பழகிப்போச்சி..............பய புள்ளைங்களுக்கு அந்த அளவுக்கு புரிஞ்சிக்க தெரியாது ஹி ஹி!
நிருபர்: ஆமாண்ணே உங்க பங்காளிப்பசங்க கடை எப்படி போகுது?

வியா: அவங்களுக்கு என்ன பய புள்ளைங்க இப்போ கடைய பெருசாக்கி எங்கேயோ போயிட்டாங்க......கொஞ்சம் கூட என்ன மதிக்கறது இல்ல.....ஆனா நானும் அவங்கள பகைசிக்கறது இல்ல..........இல்லன்ன நம்மையே போட்டுபாத்துருவாங்க அதான்............(கொய்யால துருவி துருவி கேக்குறானே ஏதாவது தெரிஞ்சி போச்சா!)

நிருபர்: சரிண்ணே...........வியாபாரம் எப்படிப்போகுது...........?

பதில்: அதுக்கு என்ன.......அடிக்கடி மக்கார் பண்ணும்.............அப்போல்லாம் கடைக்கு வர்ற கஷ்டமருங்களுக்கு கொஞ்சம் உடைச்ச கடலை ப்ரீயா கொடுப்பேன்...........அந்த நாதாரிங்களும்.........அண்ணே ரொம்ப நல்லவருன்னு சொல்லி அத கொண்டு போவாங்க ஹி ஹி!

நிருபர்: உங்க எதிர் கடகாரங்க திடீர்ன்னு நல்லா கல்லா கட்டுராங்கலாமே?

பதில்: படுவா பிச்சி புடுவேன்.............யாரு இந்த மாதிரி எல்லாம் சொல்றாங்கன்னு எனக்கு தெரியும்...........அந்த எதிர் கடக்காரங்க சரியான தண்ணி கேசு...........இப்போ கூட பாருங்க.........வியாபாரம் காலி ஆகப்போகுதுன்னு நெனச்சி இன்னொரு.......தண்ணி கேச கூட சேத்துகிட்டு இருக்காங்க.....ஆனா நான் இதுக்கெல்லாம் கவலைப்படுற ஆளு இல்ல........என் கடையில வேல செய்யுற அடிமைகள் அவ்ளோ நல்லவங்க........ஹி ஹி!

நிருபர்: ஆமாண்ணே.......எப்படி இவ்ளோ விஷயங்கள தனி ஆளா இந்த வியாபார போட்டில சமாளிக்கிறீங்க...............

நிருபர்: அது வந்து தம்பி...............எவன் தன்னை அறிவாளின்னு நெனச்சி நம்மள போட்டு பாக்கலாம்னு நினைக்கிறானோ.........அவன வச்சி ஒரு பெரிய வியாபாரம் பண்ணி துட்ட எடுத்துகுனு.........ஒரு இடத்துல மாட்டி விட்டுருவேன்...........அப்புறம் அவன் பாட்டுக்கு கெஞ்சிட்டு கெடப்பான் அத எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன் ஹி ஹி!...........இதுவரைக்கும் நறைய பய புள்ளைங்க எங்கிட்ட இப்படிதான் மாட்டிகிட்டு முழிச்சிட்டு இருக்குங்க ஹி ஹி!......எல்லாத்தையும் சொல்ல முடியாது வியாபார ரகசியம் ஹி ஹி!

நிருபர்: அது என்னன்னே எப்ப பாரு ஒரு சிரிப்பு சிரிச்சிகிறீங்க..........

பதில்: பின்னே உன்ன மாதிரி நாதாரிய என்ன பண்றது அதான் என்ன நானே தேத்திக்கிறேன்......

நிருபர்: ஆமாண்ணே அரிசி பிரச்சின பெரிசா ஆன போது நீங்க ஒண்ணுமே பண்ணலியாமே...........

பதில்: ஏன்யா அதான் அரிசியெல்லாம் மொத்தமா காணாம போக வச்சிட்டேன் இல்ல...........இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேக்காத>....

நிருபர்: சரிண்ணே உங்க கடைக்கு இப்போ அந்த சண்டைக்கார கடைக்கறாரு வந்து நல்லா பேசுறாராமே...........

பதில்: அந்த மொச்ச பயறு விக்றாரே அவர சொல்றியா........அந்தாளுக்கு இப்போ சனி என் ரூபத்துல வந்து இருக்கு........என்ன என்னல்லாம் பேசுனாரு தெரியுமா...........அதான் நம்ம கட வியாபாரத்துல சேர்த்துக்கிட்டு நேரம் வரும்போது கழட்டி விட்டுடுவேன் ஹி ஹி!

நிருபர்: ஆமாம் நீங்க எப்போ தூங்க போவிங்க.....எவ்ளோ நேரம் தூங்குவீங்க.........

பதில்: அதுவா..........நான் பொதுவா 6 மணி நேரம் தூங்குவேன்..........ஆனா முதலை கணக்கா கண்ண தெறந்து வச்சி கிட்டே தூங்குவேன்...........ஏன்னா வீட்டுல யாரையும் நம்ப முடியாது...............அதான்!.....கஸ்டமருங்களே பரவாயில்ல....!

நிருபர்: சரிண்ணே நீங்க நெறைய கலப்படம் செய்யறதா சொல்றாங்க......?

பதில்: அதுவா............என்ன பிடிக்காதவங்க சொல்றது அது........பய புள்ளைங்க என் கையுல கெடச்சா பாத்துக்கறேன்!

கேள்வி: ஆமான்னேன் சாமியப்பத்தி என்ன நெனைக்கிறீங்க.......?

பதில்: எங்க எங்க ..........(அதிர்ச்சியுடன் நாலு பக்கமும் பார்க்கிறார்!)

நிருபர்: அண்ணேன் நான் கடவுளப்பத்தி கேட்டேன்.......

பதில்: ஏன்டா புரியிறாமாதிரி கேளு.......ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்..........உன் கிட்ட மட்டும் சொல்றேன் இத பேட்டில போட்டுறாத சரியா.........

சரிங்கண்ணே...........

அதாவது..........மத்தவங்களுக்கு அது கிடையாது...........ஆனா அவரு இல்லாம எப்படியா என் வியாபாரம் இவ்ளோ ஜோரா நடக்கும்............எல்லாம் நம்ம வீட்டு காரங்க..........அவரோட பங்க கொண்டு போய் சரியா உண்டியல்ல போட்ருவாங்க ஹி ஹி! அதெல்லாம் யாருக்கும் தெரியாத மாதிரி பாத்துப்பேன் ஹி ஹி!

நிருபர்: சரிண்ணே இவ்ளோ நேரம் அருமையா பதில் சொன்னீங்க நன்றி............
ஒரு டம்ளர் தண்ணி கொடுங்க குடிக்க............

பதில்: எனக்கு குடுத்து பழக்கமில்ல ஹி ஹி நீங்க கெளம்புங்க தம்பி இது எடுத்து சிவந்த கை ஹி ஹி!.

கொசுறு: மறுபடியும் சொல்றேன் இது வியாபார நிமித்தமாக எடுக்கப்பட்ட பேட்டி யாரும் வேறு ஏதாவது(!) கண்ணோட்டத்துல பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

24 comments:

செங்கோவி said...

என்ன இருந்தாலும் நீங்க ’தமிழின வியாபாரியை’ இப்படி ஓட்டக்கூடாது..அதுசரி, என் ப்ளாக்ல கமெண்ட் போடுற அந்த திருப்பி அடிப்பவன் நீங்க தானா..நான் யாரோன்னு பேரைப் பார்த்து பயந்துட்டேன்..ரெண்டு ப்ளாக் எப்படித்தான் மெயிண்டெய்ன் பண்றீங்களோ..தமிழ்மணம் இன்னைக்கும் போச்சா..

தமிழ்வாசி - Prakash said...

ஏன்யா வேற ஆளு கிடைக்கவில்லையா?

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
உங்கள் கேள்விகளை கேளுங்கள். பதிலளிக்க காத்திருக்கிறார்.

வசந்தா நடேசன் said...

அது என்ன கடை, எனக்கு இப்ப தெரிஞ்சாகணும், இதுல ‘பயபுள்ளை‘ங்களுக்கு ஏதும் உள்குத்து இருக்கா தலை??

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆஜருங்கோ! ஒட்டு போட்டோமுங்கோ! கேளம்புறோமுங்கோ!! இன்னிக்கு நேரம் கொஞ்சம் கம்மி பாஸ்! தப்பா நெனைக்காதீங்க!

மாணவன் said...

//வியத்னாம் - தமிழனின் பாதம் இனி அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்!
இந்த புதிய தளத்தில் பகிர உள்ளேன்....//

நீங்கதானா அது? வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க... :)

Philosophy Prabhakaran said...

இந்த பேட்டியை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு எனது இதயத்தில் இடமளிக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

ரெண்டு தளத்தை எப்படித்தான் மெயின்டெயின் பண்ணப்போறீங்களோ...

விக்கியுலகம் said...

@செங்கோவி
"என்ன இருந்தாலும் நீங்க ’தமிழின வியாபாரியை’ இப்படி ஓட்டக்கூடாது..அதுசரி, என் ப்ளாக்ல கமெண்ட் போடுற அந்த திருப்பி அடிப்பவன் நீங்க தானா..நான் யாரோன்னு பேரைப் பார்த்து பயந்துட்டேன்..ரெண்டு ப்ளாக் எப்படித்தான் மெயிண்டெய்ன் பண்றீங்களோ..தமிழ்மணம் இன்னைக்கும் போச்சா.."

>>>>>>>>>>>
அவன்,அவன் 4, 5 பொண்டாடீங்கலையே மெயின்டைன் பண்றான் ஹி ஹி!.........எனக்கு அந்த அளவுக்கு சாமர்த்தியம் இல்லனாலும் ரெண்டு தளத்தயாவது...........ஹி ஹி!..........

தமிழ்மணம் ஓட்டுப்பட்ட எதோ பிரச்சினைங்க......இப்போ வந்துடுச்சி திரும்பி வாங்க நண்பா!

we need repeat audience!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

"ஏன்யா வேற ஆளு கிடைக்கவில்லையா?"

>>>>>>>>>>
ஏன்யா சரக்கு சரி இல்லன்னா யாரு இப்போ கடை வச்சிகிறாரோ அவரு கிட்ட தான் போக முடியும் ஹி ஹி!

நான் சில கேள்விகள் கேட்டு இருக்கேன் அதுக்கு பதில் குடுங்க நண்பா!

விக்கியுலகம் said...

@வசந்தா நடேசன்

"அது என்ன கடை, எனக்கு இப்ப தெரிஞ்சாகணும், இதுல ‘பயபுள்ளை‘ங்களுக்கு ஏதும் உள்குத்து இருக்கா தலை??"

>>>>>>>>>>
"பல சரக்கு கடை" என்ன சகோ தெரியாதமாதிரியே feel பன்றீங்கோ ஹி ஹி!

அந்தாளு குத்துனதே தாங்க முடியல இதுல எங்க இருந்து உள் சைடு குத்துன்னு//////////ஹி ஹி!

விக்கியுலகம் said...

@மாணவன்

வருகைக்கு நன்றிங்கோ!

வாழ்த்துரைக்கும் நன்றிங்கோ!

விக்கியுலகம் said...

@ஓட்ட வட நாராயணன்
"ஆஜருங்கோ! ஒட்டு போட்டோமுங்கோ! கேளம்புறோமுங்கோ!! இன்னிக்கு நேரம் கொஞ்சம் கம்மி பாஸ்! தப்பா நெனைக்காதீங்க!"

>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றிங்கோ கடமை அழைக்கும்போது செல்லுங்க நண்பா ஒன்னும் problem இல்ல!

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

"ரெண்டு தளத்தை எப்படித்தான் மெயின்டெயின் பண்ணப்போறீங்களோ.."

>>>>>>>>>>>

அவன்,அவன் 4, 5 பொண்டாடீங்கலையே மெயின்டைன் பண்றான் ஹி ஹி!.........எனக்கு அந்த அளவுக்கு சாமர்த்தியம் இல்லனாலும் ரெண்டு தளத்தயாவது...........ஹி ஹி!..........
........................

இந்த பேட்டியை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு எனது இதயத்தில் இடமளிக்கிறேன்...

>>>>>>>>>>>>>>>

உங்க இதயத்துல இப்போ வாடகைக்கு குடி வந்துகிறாங்க போல.......சரிப்பா நோ personal ஓகே நண்பா ஹி ஹி!...........எனக்கு இடம் இருந்தா சரி..........அந்த கடைக்காரரு இதயத்த சொல்லலியே தப்பிச்சேன்..........அங்க வெறும் ஓல்ட் மோட்டாரு மட்டுமே இருக்கு அதேன் ஹி ஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க ...

கக்கு - மாணிக்கம் said...

// கொஞ்சம் உடைச்ச கடலை ப்ரீயா கொடுப்பேன்...........அந்த நாதாரிங்களும்.........அண்ணே ரொம்ப நல்லவருன்னு சொல்லி அத கொண்டு போவாங்க //

சிரிப்பாசிரிக்குது போங்க. சமீபத்தில் வலையில் வந்த பயங்கர சடையர். நல்ல நகைசுவை.

Jana said...

வியத்னாம் - தமிழனின் பாதம் இனி அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! இந்த புதிய தளத்தில் பகிர உள்ளேன்.......ஆவலுடன் வெயிடிங்

sathish777 said...

ஏன்யா இவ்ளோ பிளான் பண்ணி கடைய கைக்கு கொண்டு வந்த நானு அவரு கிட்டயா கொடுப்பேன்.//
அதானே..சூப்பர் பதிவு

MANO நாஞ்சில் மனோ said...

அந்த பொண்ணை பற்றி இன்னும் சொல்லவே இல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்....

மைந்தன் சிவா said...

அட பாசு,அது உங்க ப்ளாக்'ஆ??சொல்லவே இல்ல?

சி.பி.செந்தில்குமார் said...

tamilmanam vote cant work.y?

சி.பி.செந்தில்குமார் said...

>> சரிண்ணே உங்களுக்கு உண்மையிலே எத்தன மனைவிங்க..............?hi hi reply pls

Speed Master said...

ம்ம் யாரைனு தெரியவில்லை

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

வருகைக்கு நன்றிங்கோ

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

வருகைக்கு நன்றி தலைவரே