Followers

Monday, February 14, 2011

அன்பு,காதல்,பாசம்=மனைவி(!?)-(காதலர் தினம்!)

நான் படிச்ச நெறய பதிவர்கள் கவிதையா போட்டு கலக்குறாங்க......... எனக்கும்கவிதைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது(எட்டிட்டாலும்!). சரி காதலர் தினம் என்பதால் ஒரு சர்சைப்பதிவ போடுவோம்(!).........என்னதான் response வருதுன்னு யோசிச்சி பார்த்தேன்(யோசிச்சி!) அதன் பாதிப்பே இது பொறுத்துக்கோங்கோ.................இன்னும் நம்ம நாட்டுல குடும்பம் அப்படிங்கற விஷயம் தொடருதுன்னா அதுக்கு காரணம் நம்ம கலாச்சாரம்(!).........ஏன்னா கல்யாண விஷயத்துல வீட்டுல பாத்து முடிக்கரதுனால அவங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கரதுக்கே ஒரு வருசம் ஆகிடும்(!). அதுக்கப்புறம் வாண்டு வந்துட்ட அப்புறம் பயணம் தொடரும்..........(இது என்னோட தாழ்மையான கருத்து - காதல் கல்யாணம் பண்ணவங்க சண்டைக்கு வராதீங்கப்பு!)

அது நான் வேலைக்கு கொஞ்சம் ஒழுங்கா போயிட்டு இருந்த நேரம்(!)...........அந்த நேரத்துல கல்யாணபேச்சி வீட்டுல ஆரம்பிச்ச நேரம்......சரி ஆச யார விட்டுது...........ஓகேன்னு சொன்னதால ரொம்ப தீவிரமா பொண்ணு பாத்துட்டு இருந்தாங்க........

டேய் உன்னோட அபிப்ராயத்த சொல்லிடு..........அப்புறம் இவங்க கட்டி வச்சிட்டாங்க.....என்ன ஒரு வார்த்த கேட்டு இருந்தா..........இப்படியெல்லாம் நடந்திருக்குமான்னு சொல்லுவே..........

அக்கா.......எனக்கு ரொம்ப படிச்ச பொண்ணு வேணாம்(ஆணாதிக்கம் கொண்டவனே!)

ஏன்............

வேணானா விடுங்களேன்...........(எனக்கு தானே தெரியும் நான் யாருன்னு ஹி ஹி!)

(பொண்ண பாத்து வீட்டுல இருக்கவங்களுக்கு புடிச்சி போச்சி...........சரி நீ போயி ரெண்டு நிமிஷம் பேசிட்டு வான்னு சொன்னாங்க!)

வணக்கம்ங்க.............

சொல்லுங்க...........

நான் ரொம்ப நல்லவன் அப்படின்னு சொல்லமாட்டேன்.....(நல்லவனா இருந்துட்டா மட்டும்!)

சரி...............

எனக்கு சிகிரெட் பழக்கம் இருக்கு........வாரத்துல ஒரு நாளு தண்ணி அடிக்கிற பழக்கமும் இருக்கு.........நாளைக்கு இதெல்லாம் தெரிஞ்சி நீங்க மனசு கஷ்டப்படுரத விட நானே முன்னமே சொல்லிடுறது நல்லது..........இனி முடிவெடுக்க வேண்டியது நீங்க தான்..........எனக்கு உங்கள பிடிச்சிருக்கு..............

சரிங்க...........

அவங்க ஒண்ணுமே பதில் சொல்லல.............சரி நாம reject அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்.........மனசுல பாரமில்ல(உண்மைய சொல்லிட்டாராம்.....இனிமே தாண்டி உனக்கு இருக்கு!!)


நாங்க கெளம்பி வந்த்தாச்சி...........கொஞ்ச நாளுக்கு பிறகு...........எங்க அக்கா எனக்கு போன் பண்ணி டேய்...நாளு குறிசாச்சி(ஆடு வெட்டவா!)..........நிச்சயதார்த்தத்துக்கு ரெண்டு நாளு முன்னாடி கெளம்பி வந்து சேருன்னாங்க(அப்போ சேலத்துல இருந்தேன்!)

நிச்சயத்தார்த்தம் ஆரம்பிச்சி...........கல்யாணம் வரை இனிதே முடிந்தது(இடைவெளி 6 மாசம்!-தனிப்பதிவா போடுற அளவுக்கு விஷயம் இருக்கு ஹி ஹி!)

திருமணம் முடிஞ்சி கொஞ்ச நாளுக்கு அப்புறம் ஒரு நாளு நானா அவங்க கிட்ட கேட்டேன்.........ஏங்க(மரியாதை மாற்றப்பட்டுள்ளது!) இன்னிக்கு வரை என் பழக்கங்கள பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லலியே...........(இத கேக்கும் போது ஒரு restaurant ல இருந்தோம்!)


நீங்க ரொம்ப படிச்சிருக்கீங்க(நான் என்ன கிழிச்சேன்னு எனக்கு தானே தெரியும்!).........உங்களுக்கு தெரியாதா எந்த கெட்டப்பழக்கம்.........எந்த அளவுக்கு உங்க உடலை பாதிக்கும் என்பது.....அதனால நான் எதுக்கு உங்களுக்கு அறிவுற சொல்றதுன்னு நான் எதுவும் சொல்லல....(எதாலையோ அடிச்சா மாதிரி இருந்தது!)

அன்னில இருந்து கொஞ்ச கொஞ்சமா ரெண்டு நல்ல காரியத்தயும் கொறசிட்டேன்(ஒன்னே விட்டேபுட்டேன்!!)

நானிருந்த தொழில் மிகவும் டென்சனான தொழில் - target அப்படிங்கற பேருல கொலையா கொல்வானுங்க.............

ஆண்களோட பெரிய கய்யாலாகத்தனமே வேலையில ஏற்படுற டென்சன கொண்டு போயி வீட்டுல காட்டி டென்சன குறைச்சிப்பாங்க(இது என் தாழ்மையான கருத்து ஹி ஹி!)

அப்படி வீட்டுக்கு போகும்போது.............முதல்ல ஒரு டம்ப்ளர் தண்ணி மட்டும் கொண்டு வந்து கொடுத்துட்டு வேலைய பாக்க போயிடுவாங்க என் மனைவி.............என்ன ஒண்ணுமே கேக்க மாட்டேங்குறாங்கன்னு நெனச்சி ஒரு நாளு நானா கேட்டேன்(வம்பு இழுப்பது இப்படித்தானோ!)..........

அதுக்கு அவங்க சொன்ன விஷயம்...........

வேலைக்கு போயிட்டு வரும்போது ரொம்ப டென்சனா வருவீங்க.............ஒரு தம்ப்ளர் தண்ணி குடிச்சி முடிச்சி 5 நிமிஷம் ஆன பிறகு உங்களுக்கு கோபம் மறஞ்சி போயிடும்னு சொன்னாங்க...........(இன்னைக்கு வரை இத follow பண்றாங்க ஹி ஹி!)

கொசுறு: சொல்லுங்க நான் சொன்னது சரிதானே ...........i am the happiest man in the world up to now ஹி ஹி!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

29 comments:

ஜீ... said...

//சொல்லுங்க நான் சொன்னது சரிதானே ...........i am the happiest man in the world up to now ஹி ஹி!//
உண்மை! வாழ்த்துக்கள்! :-)

விக்கியுலகம் said...

@ஜீ...நன்றி நண்பரே

பாரத்... பாரதி... said...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

மீதிய நீங்களே பாடிக்கோங்கோ...

பாரத்... பாரதி... said...

தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்..

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

மீதிய நீங்களே பாடிக்கோங்கோ..."

"தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்"
>>>>>>

நன்றி பாடிட்டேதான் இருக்கேன் ஹி ஹி!!

பாட்டு ரசிகன் said...

இன்றைய பாடல் இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_14.html

பாட்டு ரசிகன் said...

பதிவு அருமை
உங்களுக்கு காதலர் தின நல்வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

மனைவியை காதலிச்ச பதிவு போட்டதை விட உங்க காதலிகளை பற்றி பதிவு போட்டிருந்தா இன்னும் கிளு கிளுப்பா இருந்திருக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

இன்னும் கிளு கிளுப்பு சேர்த்திருக்கலாம். ஹி ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//(இது என் தாழ்மையான கருத்து ஹி ஹி!)//

ஆமா உங்களை கிச்சன்ல கொண்டு போயி வச்சு அன்னைக்கு பூரி கட்டையால அடிச்சாங்களே அதை சொல்லவே இல்ல...

விக்கியுலகம் said...

@பாட்டு ரசிகன்

வருகைக்கு நன்றி

உங்க பதிவு அருமை

வாழ்வில் மறக்க முடியாத பாடல்

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"மனைவியை காதலிச்ச பதிவு போட்டதை விட உங்க காதலிகளை பற்றி பதிவு போட்டிருந்தா இன்னும் கிளு கிளுப்பா இருந்திருக்கும்"

>>

சீக்கிரத்துல போடறேன் ஹி ஹி

எப்படியோ என்னை சூப்பு வைக்காம விடமாட்டீங்க போல ஹி ஹி!

நா.மணிவண்ணன் said...

வாழ்த்துக்கள் சார்

வைகை said...

வேலைக்கு போயிட்டு வரும்போது ரொம்ப டென்சனா வருவீங்க.............ஒரு தம்ப்ளர் தண்ணி குடிச்சி முடிச்சி 5 நிமிஷம் ஆன பிறகு உங்களுக்கு கோபம் மறஞ்சி போயிடும்னு சொன்னாங்க..........///


நல்ல காரியம்.....உங்களுக்கும்...அவங்களுக்கும்....:))

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

நன்றிங்கோ Happy lovers day

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"ஆமா உங்களை கிச்சன்ல கொண்டு போயி வச்சு அன்னைக்கு பூரி கட்டையால அடிச்சாங்களே அதை சொல்லவே இல்ல.."
>>>

அதெல்லாம் இப்படி பப்ளிக்கா கேக்கப்படாது ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@வைகை

"நல்ல காரியம்.....உங்களுக்கும்...
அவங்களுக்கும்....:))"

>>


இது எல்லோருக்கும் பொருந்தும்னு நெனைக்கிறேன் ஹி ஹி!!

ஆதவா said...

அவங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கரதுக்கே ஒரு வருசம் ஆகிடும்(!)சிலருக்கு ஓரிருநாட்கள் கூட ஆகலாம்.. எவ்வளவு தூரம் புரிஞ்சுக்கறாங்கங்கறதுல இருக்குங்க...பதிவு நல்லாருக்குங்க.

பாரத்... பாரதி... said...

//"ஆமா உங்களை கிச்சன்ல கொண்டு போயி வச்சு அன்னைக்கு பூரி கட்டையால அடிச்சாங்களே அதை சொல்லவே இல்ல.."
>>>//


நல்லதொரு குடும்பம் பல்கலை....

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...

நல்ல வேல கழகம்னு நீங்க சொல்லல இல்லன்னா நானும் இந்நேரம் அரசியல்ல இருந்திருப்பேன் ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@ஆதவாவருகைக்கு நன்றி

தமிழ்வாசி - Prakash said...

அட அருமைங்கோ!

இதையும் படிங்க: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி

# கவிதை வீதி # சௌந்தர் said...

கலக்கிட்டிங்க தலைவா..
நானும் வந்துட்டேன்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

முத்தான மூன்று ஓட்டுகள்..
வருகிறேன்..

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakashவந்து படிச்சிட்டு வந்தேங்க

நல்ல தான் இருக்கு......

டக்கால்டி said...

அருமைங்க...மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை..

விக்கியுலகம் said...

@டக்கால்டி
இதுவும் நல்லாத்தான் இருக்கு ஹி ஹி!!

டக்கால்டி said...

@டக்கால்டி
இதுவும் நல்லாத்தான் இருக்கு ஹி ஹி!!//

என்னோட டையலாக் இல்லீங்க இந்த டையலாகை சேரன் பாண்டியன் படத்துல கவுண்டமணி சொல்லி இருப்பாரு...

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"என்னோட டையலாக் இல்லீங்க இந்த டையலாகை சேரன் பாண்டியன் படத்துல கவுண்டமணி சொல்லி இருப்பாரு."

>>>>>

அடங்கொன்னியா அப்படியா சரி சரிங்கோ ஹி ஹி!!