Followers

Friday, February 18, 2011

எங்கிட்ட மோதுனா(!?)

என்னவோ தலைப்ப பாத்துடனே சிக்குனாண்டா அப்படின்னு நெனைக்காதீங்கோ.........


எங்கிட்ட மோதுனா விளைவுகள் மோசமா இருக்கும்(!?) - தெலுங்குப்பட தலைப்பு இல்ல............இது உண்மை சம்பவம்


ஒரு கொசுவத்தி எடுத்து சுத்திக்கிறேன்(ப்ளாஷ் பேக்! -நாங்கல்லாம் எப்போ டைரடக்கராவறது ஹி ஹி!!)

அப்போ நான் இளநிலை முடித்த நேரம். என் நண்பன் ஒருவன் எங்கிட்ட சொன்னது PMRY(Prime Minister Rozgar Yojana) - பிரதம மந்திரியின் வேலை இல்லா பட்டதாரிகளுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் மூலம் கடன் பெற்று தொழில் ஒன்று ஆரம்பிக்கப்போவதாக சொன்னான்..

அந்த நேரத்தில் டாப்பா இருந்தது கம்ப்யூட்டர் சென்டர் தொழிலே. அதில் அவன் பட்டம் வேறு வாங்கி வைத்திருந்தான். சரி எல்லாம் தான் இருக்கே ஈசியா துட்ட வாங்கி சென்டர(!) develop பண்ணிடலாம்னு முடிவு பண்ணி இறங்குனோம்.


அதுக்கான ஆயத்தப்பணிகலான project work, நடைமுறை ஆவணங்கள் எல்லாத்தையும் ஒன்னு விடாம ரெடி பண்ணினோம்.........

அப்போ எங்களுக்கு தெரிஞ்சு APTECH சென்டருல வொர்க் பண்ணிட்டு இருந்த மேடத்து மூலமா என்னமாதிரி சென்டர வைக்கலாம் அப்படிங்கற முழு விஷயத்தையும் தெரிஞ்சிகிட்டோம்............

முறையா கிண்டில இருந்த (இப்போ இருக்கா தெரியாது!) அந்த அலுவலகத்தோட தலைமையிடத்துக்கு போய் பதிவு பண்ணி காத்து இருந்தோம்..........

கிட்டத்தட்ட ஆறு மாசம் பாவம் நண்பன் dog கணக்கா அலைஞ்சான்.......நானும் நம்ம நண்பர்கள் கூட்டமும் அவனுக்கு சொன்னோம்........விட்ரு மச்சி....வேற வேலயப்பதுக்கலாமுன்னா அவன் கேக்கல............இதுன்னா லவ்வா(!) விட்ருன்னா விடுறதுக்கு "லைப்" டான்னான் ....

திடீர்ன்னு ஒருநாள் வந்து எனக்கு லோன் ஓகே ஆயிடுச்சின்னு ட்ரீட் வேற கொடுத்தான்............(அப்போல்லாம் ட்ரீட்டுன்னா ஒரு பீரு ரெண்டு பேரு ஹி ஹி!)

கொஞ்ச நாளாச்சி ஒன்னும் வேல நடக்கல...........சரின்னு நானும் அவனும் அந்த சம்பந்தப்பட்ட பேங்குக்கு போனோம்...........

அங்க இருந்த மேஸ்திரி சாரிபா மேலாளரு எங்க கிட்ட இன்னும் கொஞ்சம் நாளு ஆகும்னு சொல்லிட்டாரு.......

கொஞ்ச நாளு பொறுத்து மீண்டும் போனோம்...........அப்பவும் அதே பதில் கெடச்சது.........

மூணு தபா அதே மாதிரி ஆனதால......தலைவரு(!) கணக்கா 1,2,3 அப்படின்னு எண்ணிட்டு மறுபடியும் போனோம்............


இந்த முறை அவரு நண்பன் கிட்ட தனியா கூட்டிட்டு போய் பேசினாரு..........அப்போ அவன் கோபமா வெளிய வந்தான்...........என்னடான்னா.....மச்சி apply பண்ணதுல ஒரு இலட்சத்த முதல்ல அவரு கிட்ட முன்னாடியே கொடுத்துட்டா லோன் பணம் 5 லட்சமும் கிடைக்குமாம்..........இல்லன்ன உன்னால ஆனத பாத்துக்கோன்னுட்டாருன்னு அழுதான்............

மறுபடியும் நான் போய் பேசிப்பாத்தேன்.........அப்பவும் லோனுக்கு அசையா சொத்து 10 லட்சத்துக்கு காட்டினா தான் அத வச்சிக்கிட்டு தான் லோன் தருவேன்னு சொன்னாரு.......அதுக்கு நானு அப்படி ஒன்னும் rules ல இல்லைங்களே அப்படின்னேன்............அரசாங்கம் அப்படித்தான் லோன் கொடுக்க சொல்லி இருக்குன்னு சொல்லிட்டாரு..........கடைசியா நீங்க தலைகீழா நின்னாலும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டான்(சினிமா பட வில்லன் கணக்கா!)


அப்புறம் விசாரிச்சதுல நெறைய பேருகிட்ட இப்படித்தான் அந்தாளு பேசுறதா தகவல் கெடச்சது............சரின்னு நம்ம இன்னொரு நண்பனோட அப்பாரு vigilance ல அப்போ வேல செய்ஞ்சுகிட்டு இருந்தாரு........அவரு மூலமா ப்ளான் போட்டு அந்த மேஸ்திரி(manager) கிட்ட முத தவனையா 25000 பவுடர் தடவுன நோட்ட கொடுத்து வகையா புடிச்சி கொடுத்துட்டோம் போலீசுக்கிட்ட....அப்போ அவரு சொன்னாரு -"எங்கிட்டா மோதுனா விளைவு மோசமா இருக்கும்" னு சொன்னாரு.........

கொஞ்ச நாளு கழிச்சி பாத்தா அதே ஆளு அதே branch ல மறுபடியும் manager நாற்காலில உட்காந்து இருக்கான்.......கடைசி வரைக்கும் நண்பனால அவன ஒன்னும் பண்ணவும் முடியல...........அந்தாளு சொன்னா மாதிரி.......இவனாளையும் அந்த லோன கடைசி வரைக்கும் வாங்க முடியாம பண்ணிபுட்டான் அந்த நல்ல அரசு அதிகாரி.............

கொசுறு: நம்ம அப்போதைய நண்பர்கள் சேர்ந்து அந்த ஆள சுளுக்கு எடுத்தது தணிக்கத.........ஹி ஹி!!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

36 comments:

மைந்தன் சிவா said...

வடை

மைந்தன் சிவா said...

தமிழ்மணம் வேலை செய்யவில்லையா?

மைந்தன் சிவா said...

அப்ப லோன் வாங்கி பாருங்களேன்!!


என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.html

டக்கால்டி said...

சுளுக்கு எடுத்த கிலுகிலுப்பை சீக்கிரம் போடவும்...

கக்கு - மாணிக்கம் said...

அதிக பட்சம் சுளுக்குகாவது எடுத்தீர்களே! படிக்கும் போதே ஒரு ஆனந்தம் பரவுதய்யா! :))

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வருகைக்கு நன்றி....

"அப்ப லோன் வாங்கி பாருங்களேன்!!

>>>>>

ஒன்னுத்துக்கே இன்னைக்கு அவன் நடக்க முடியாம கெடக்குறான் ஹி ஹி!

...............
என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!"

>>>>>>

உங்களைமா எனக்கு அழுவாச்சியா வருது...........

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா
"தமிழ்மணம் வேலை செய்யவில்லையா?"

>>>>>>>>>>>
என்னப்பிரசினன்னு தெரியல....ம்ம் ம் யாரோ சூனியம் வச்சிட்டாங்க........!

விக்கியுலகம் said...

@டக்கால்டி
"சுளுக்கு எடுத்த கிலுகிலுப்பை சீக்கிரம் போடவும்.."

>>>>>>>>>>>>

ஏன் நண்பா நான் எதோ இருக்கறது நல்லதாபடலையா ஹி ஹி!

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

"அதிக பட்சம் சுளுக்குகாவது எடுத்தீர்களே! படிக்கும் போதே ஒரு ஆனந்தம் பரவுதய்யா! :))"

>>>>>>>

ஏன் தல நீங்களுமா அத நெனச்சி இன்னிக்கும் நான் வேதனைப்படறேன்(!?)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணம் வேலை செய்யவில்லை ...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உஷாராத்தான் இருக்கனும்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

அஞ்சா சிங்கம் said...

எனக்கு தினமும் போன் வருது லோன் வாங்க சொல்லி . ஆனால் லோன் கேக்குறவங்களுக்கு கஷ்டம் தான் போல

விக்கியுலகம் said...

@sakthistudycentre-கருன்

"தமிழ்மணம் வேலை செய்யவில்லை"

>>>>

வருகைக்கு நன்றி நண்பரே

ஆமாங்க என்ன பிரச்னைனு தெரியல.........
>>>>>>>

உஷாராத்தான் இருக்கனும்

>>>>>

துட்டு வச்சிட்டு இருக்கணும்னு சொல்லுங்க!

>>>>>>>>>

ஓட்டும் போட்டுட்டோம்ல்ல..

>>>>>>>

மிக்க நன்றி

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"எனக்கு தினமும் போன் வருது லோன் வாங்க சொல்லி . ஆனால் லோன் கேக்குறவங்களுக்கு கஷ்டம் தான் போல"

>>>>>
சிங்கம் நான் சொல்றது 15 வருசத்துக்கு முன்னால.....இப்போ மாதிரி தனியார் வாங்கிங்க கிடையாது....!

மாணவன் said...

//நம்ம அப்போதைய நண்பர்கள் சேர்ந்து அந்த ஆள சுளுக்கு எடுத்தது தணிக்கத.........ஹி ஹி!!//

சுளுக்கு எடுத்தவரையும் சந்தோஷம் :))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அந்த சுளுக்கு மேட்டரையும் சொல்லுங்க! நம்ம ஏரியாவுக்கும் வருக!!

விக்கியுலகம் said...

@மாணவன்

அன்னைக்கு எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல வெறும் உடல் வலிம வச்சி உழைக்க முடியும் இல்லனா உதைக்க முடியும் அவ்வளவே.......அன்று இருந்த சூழல் அப்படி என்ன செய்ய!

விக்கியுலகம் said...

@மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன்

"அந்த சுளுக்கு மேட்டரையும் சொல்லுங்க! நம்ம ஏரியாவுக்கும் வருக!!"

>>>>>>>>
ஒருத்தர அடிச்ச வரலாறு வேணாமுங்க........அணைச்ச(!) கதைன்னா பராயில்ல..........அண்ணே நான் இப்போ வந்தாச்சி உங்க தளத்துக்கு மன்னிப்பீராக!

Speed Master said...

கடைசியில அடிதான் போல?

இரவு வானம் said...

appa anaicha kathaiyaavathu sollunga :-)

செங்கோவி said...

பத்து லட்சம் அசையாம(!) நம்ம கிட்ட இருந்தா நாம ஏன் லோன் கேட்கப் போறோம்..இவங்க எப்பவுமே இப்படித் தான் பாஸ்..

விக்கியுலகம் said...

@இரவு வானம்
"கடைசியில அடிதான் போல?"

அவருக்கு என்ன கெடைக்கனுமோ அது அவரு எதிர்பர்த்தத விட நல்லாவே கெடச்சதுங்க ஹி ஹி!

"appa anaicha kathaiyaavathu sollunga :-)"

வருகைக்கு நன்றி பிட்டு படம் இங்க கிடையாது ஹி ஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

"பத்து லட்சம் அசையாம(!) நம்ம கிட்ட இருந்தா நாம ஏன் லோன் கேட்கப் போறோம்..இவங்க எப்பவுமே இப்படித் தான் பாஸ்.."

>>>>>>

வருகைக்கு நன்றி
ஒவ்வொருத்தனும் படிக்க எவ்ளோ கஷ்டப்படுறான்! அந்தப்படிப்ப வச்சி டீ ஆத்தக்கூட அப்போ முடியல.............இப்போ பரவா இல்லைங்க.........

வைகை said...

நம்ம அப்போதைய நண்பர்கள் சேர்ந்து அந்த ஆள சுளுக்கு எடுத்தது தணிக்கத.........ஹி ஹி!!////


இதுக்கு பார்ட்டி வச்சிங்களா இல்லையா?

MANO நாஞ்சில் மனோ said...

சுளுக்கு எடுக்க என்னையும் கூபிடாததுக்கு மாபெரும் கண்டனத்தை நான் இங்கே பதிவு செய்கிறேன்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

நானும் உள்ளே வந்துட்டேன்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்ட்லி ok தமிழ் 10 ok

தமிழ்மணம் ??????????

சி.பி.செந்தில்குமார் said...

thamizmanam?

விக்கியுலகம் said...

@வைகை
"இதுக்கு பார்ட்டி வச்சிங்களா இல்லையா?"

>>>>
நண்பர்கள் வட்டத்துல ஜெயிச்சத விட தோத்ததுக்கு தாங்க பார்டி அதிகம்.............அப்படித்தான் நாங்களும் போலிசோட இருந்தவன...............!

பார்ட்டியும் பெரிசுதான் ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"சுளுக்கு எடுக்க என்னையும் கூபிடாததுக்கு மாபெரும் கண்டனத்தை நான் இங்கே பதிவு செய்கிறேன்..."

>>>>>>>>>>>>
என்னா தல நீங்க எடுக்காத சுளுக்கா ஹி ஹி!

விடுங்க இன்னொருமுற சொல்லுங்க ஹி ஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்


யாரு கண்ணு பட்டுதோ தெரியல தல மணம் வீசவே மாடீங்குது......
அழுவாச்சியா வருது...........

rajan said...

சூப்பர் bro

சௌந்தர் said...

மறுபடி லஞ்சம கொடுத்து வேலைக்கு சேர்ந்திருப்பார் ....இவனுங்க இப்படி தான்

விக்கியுலகம் said...

@சௌந்தர்

"மறுபடி லஞ்சம கொடுத்து வேலைக்கு சேர்ந்திருப்பார் ....இவனுங்க இப்படி தான்"

>>>>>>>>>>>>
அதே தான்!

வருகைக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@rajan

வருகைக்கு நன்றி நண்பரே