Followers

Sunday, February 13, 2011

வியத்னாம் வாழ் தமிழன்(!?)

நான் வாழும்(தற்காலிகமாக!) நாட்டைப்பற்றி நன்கு அறிந்து கொண்டு அதனை தெளிவாக அடுத்தவங்களுக்கும் தெரிவிக்கனும்னு எண்ணியதன் விளைவே இந்த தொடர்.


   ஹோசிமின்(1890-1969) - வியத்நாமின் சுபாஷ் 

தொழில் நிமித்தமாக தற்போது வாழும் நாடு - வியட்நாம்.
மக்கள் தொகை - 86 மில்லியன்
பேசும் மொழி - வியத்னாமீஸ்
உலகிலேயே பிரசித்தி பெற்ற நாடுகளின் வரிசையில் - 13 வது இடம்
உலகில் உள்ள சந்தோசமான மக்கள் வாழும் வரிசையில் - 5 வது இடம்
நல்லா கவனிங்க மக்கள் சந்தோஷமானவங்க.

அழகிய நாட்டுக்கு சொந்தக்காரங்க இந்த வியத்நாமியர்கள்.



இந்த நாட்டைப்பற்றி நான் என் சிறு வயது பாடப்புத்தகத்தில் மட்டுமே அறிந்து இருந்தேன். அப்போது தெரியாது இங்கு வந்து உலை வைத்து சாப்பிடப்போகிறேன் என்று.

அந்தப்பாடப்புத்தகதிலும் வியத்னாம் என்பதை ஒரு போர் நாடாக மட்டுமே அறிந்திருந்தேன்......இன்று வேலை நிமித்தமாக இங்கு தங்க வேண்டிவந்ததால் சற்று இந்த நாட்டைப்பற்றி நான் அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.





வியத்னாம் 4000 வருட பாரம்பரியம் கொண்ட நாடு. 1000 வருடமா சைனாவினுடைய  ஆதிக்கததுல இருந்தது வியத்னாம்.மிக நெடும் போர் நடந்த நாடு வியத்னாம்.10 வது நூற்றாண்டுல இருந்து புத்தமதத்த தழுவ ஆரம்பித்தது வியத்னாம். 19 வது நூற்றாண்டுல இருந்து இரண்டாவது உலகப்போர் வரை பிரான்ஸ் நாட்டோட காலனியா இருந்தது வியத்னாம்.


இரண்டாவது உலகப்போர் நடந்த போது ஜப்பான் கைக்கு போனது வியத்னாம். ஆன ரொம்ப நாள் நீடிக்கல. மறுபடியும் பிரான்சு நாட்டோட கைக்கு போனது............மிங் தலைமையில நடைபெற்ற போர்ல 1954 ல பிரான்ஸ் வியத்னாமோட வடக்குல இருந்து வெளியேறியது.........பின்பு ஏற்பட்ட ஜெனிவா ஒப்பந்த அடிப்படையில வடக்கு மற்றும் தெற்குன்னு இரண்டா பிரிஞ்சது.


வடக்கு வியத்னாம் சோசலிச கோட்பாடுடன்(ரஷ்யா, சீனா பின்புலமாக) செயல்பட்டது. தெற்கு வியத்னாம் அமெரிக்க ஆதரவோட செயல்பட்டது.



இரண்டாவது உலகப்போருக்கு பிறகு சோஷலிச நாடுகள் ஒரு வரிசையிலும், ஜனநாயக கோட்பாட்டு நாடுகள் ஒரு வரிசையிலும் நின்றன........இந்த நிலமையில அமெரிக்க நலம்விரும்பிகள் அப்படிங்கற நாடுகள் வரிசையில தெற்கு வியத்னாம் சேந்தது. வடக்கு வியத்னாம் ரஷ்யா மற்றும் சீனா ஆதரவு நாடாகியது.

1945 மற்றும் 1954 வருடங்களில் ஏற்பட்ட பிரான்சுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் இருந்து $2.6 பில்லியன் டாலர்களை உதவியாகப்பெற்றது. இதை வைத்து பிரான்சை வீழ்த்தியது......பின்பு ஏற்பட்ட அமைதி உடன்படிக்கைப்படி வடக்கு, தெற்க்கு என தற்காலிகமாக இரு நாடுகளாக பிரிக்கப்பட்டன. கம்யுனிசம் இல்லாத நாடு ஒரு புறமும், கம்யுனிச கொள்கைகொண்ட நாடு மறுபுறமும் எனப்பிரிந்தது. 1956 இல் பொதுவான தேர்தலுக்கு தெற்க்கு நாட்டை சேர்ந்தவர்கள் ஒத்துவர(அமெரிக்க துணை இருந்ததால்!) மறுத்தனர் இதனை அமெரிக்காவும் ஆதரித்தது.

1958 இல் வடக்கு தெற்க்கு மீது போர் தொடுத்தது.......அப்போது தான் "வியட்கோங்" என்றழைக்கப்படும் கம்யுனிச கொரில்லாக்கள் உருவாயினர். 1963 தெற்க்கு நாட்டவரிடம்  இருந்து மேகாங் எனப்படும் வளமான இடத்தை வென்றது வடக்கு.

1964 - இந்த நேரத்துல தெற்குக்கு ஆதரவா அமெரிக்க படை போர்ல இறங்கியது(சின்னப்பசங்கன்னு நெனச்சி இறங்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டுப்போனது!). ஜனவரி 1973 அமெரிக்கா, போரை நிறுத்தி கொள்வதாகவும் தங்கள் படைவீரர்களை விடுதலை செய்யும் படியும் கேட்டுக்கொண்டது. இதன் பிறகு 1975 ஏப்ரல் தெற்க்கு, வடக்கிடம் சரணடைந்தது. இதன் பிறகு வியத்னாம் முழு நாடாக உருப்பெற்றது.

இந்த தொடர் போர்(1954 - 1975) மற்றும் மிகப்பெரிய வல்லரசு என சொல்லிக்கொள்ளும் நாடு எப்படி பின் வாங்கியது, இவர்களின் போர் முறை எப்படிப்பட்டது, அப்பாவி மக்கள் எப்படி ஆயுதம் எடுத்து போராடினர், பெண்களின் மிகப்பெரிய பங்கு என்ன போன்ற.......பல கேள்விகள் எழும் என்று நினைக்கிறேன்........அதைப்பற்றிய தொடர்தான் இது...........

இது ஆரம்பம் மட்டுமே இனி பல உண்மைகள நீங்க தெரிஞ்சிக்கப்போறீங்க.....காத்திருங்கள்.....



தொடரும்.....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

32 comments:

விக்கியுலகம் said...

@ம.தி.சுதாநன்றி

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கீங்க.

உங்க தகவலும் அருமைங்க, விவாதத்துக்கு உரியதுன்னு சொல்லப்போறாங்க ஹி ஹி!!

நன்றி

♔ம.தி.சுதா♔ said...

சகோதரா இப்போ வாரத்தில் 2 நாள் தான் இணையப் பயணம்...

நா.மணிவண்ணன் said...

சார் சூப்பர்

சண்டை இல்லாத நாட்டுக்கு சரித்திரம் கிடையாது

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க வரலாற்றில் எம் ஏ வா? பெரும்பாலும் சரித்திரப்பதிவா போட்டு அசத்தறீங்களே../

சி.பி.செந்தில்குமார் said...

நாளை காதல் பதிவா?

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்நன்றி

எப்போவுமே சண்டையோட இருந்த நாடு - ஆனா மக்கள் ரொம்ப அமைதியானவங்க மற்றும் ரொம்ப simple.

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்வருகைக்கு நன்றி

காதல் மனைவியுடன் மட்டுமே அதனால் கவிதைங்கற risk நான் எடுக்கறது இல்ல ஹி ஹி!!

நான் படிச்சது M.A Phil மற்றும் MBA- marketing அவ்ளோதாங்க என் சரக்கு ஹி ஹி(ஒரு சுய விளம்பரம்!)

வைகை said...

வியட்நாமிய பெண்கள் அழகானவர்கள்......இங்கு பணிபுரியும் பெண்களை பார்த்திருக்கிறேன்...நாட்டைப்பற்றி அதிகம் அறிந்ததில்லை.....சொல்லுங்கள் அறிந்துகொள்கிறோம்..........

தமிழ்வாசி - Prakash said...

வியட் நாம் - வரலாறு மிகவும் அருமை.

Philosophy Prabhakaran said...

பத்தாம் நூற்றாண்டில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு தாவி விட்டீர்கள்... இடைப்பட்ட காலத்தில் வியட்நாம், சோழ மன்னர்களின் ஆட்சிப்பொறுப்பில் இருந்ததாக சரித்திரம் ஏதும் இருக்கிறதா...?

Philosophy Prabhakaran said...

பத்தாம் நூற்றாண்டில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு தாவி விட்டீர்கள்... இடைப்பட்ட காலத்தில் வியட்நாம், சோழ மன்னர்களின் ஆட்சிப்பொறுப்பில் இருந்ததாக சரித்திரம் ஏதும் இருக்கிறதா...?

Indian said...

தொடருங்கள்.இதையும் பாருங்க.

விக்கியுலகம் said...

@வைகைபொண்ணுங்க ரொம்ப அழகுதானுங்கோ!

எனக்கு இருக்குற ரெண்டு உதவியாளர்களும் பெண்கள் தான் ஹி ஹி!

இந்த தொடர் வெறும் வரலாற்று தொடர் மட்டும் இல்ல நிகழ்கால பதிவா இருக்க முயற்சி பண்றேன்!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakashவருகைக்கு நன்றி தொடர்ந்து வருகையை எதிர் பார்க்கும் நண்பன்

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranநீர் தமிழன் என்பதை உறுதி படுத்தியதை எண்ணி வியக்கிறேன் ஹி ஹி!!

அந்த இடைப்பட்ட காலத்ததுல தான் நெறய மறைக்கப்பட்ட விஷயங்க இருக்கு அத தோண்டி எடுக்கறதே இந்த பதிவோட நோக்கம்......மற்றும் போர் விஷயங்களையும் அலசுவேன்.

தொடர்ந்து வாரும் நண்பரே!

பல அதிசயங்கள் இருக்கு நீங்க தெரிஞ்சிக்க.....வரலாறுல
மறைக்கப்பட்ட தமிழன் இங்கு உண்டு........அதைத்தேடித்தான் இந்த பதிவே..

விக்கியுலகம் said...

@Indianஉங்க பதிவு அருமை அதையும் சீக்கிரம் தெளிவு படுத்துறேன் தொடருவீங்கன்னு நம்பிக்கையுடன் ஓர் தமிழன்(நண்பன்!)

Philosophy Prabhakaran said...

சூப்பர்... கடற்புறத்தான் கருத்துக்களையும் பின்னர் ஆற அமர்ந்து படிக்க வேண்டும்...

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranயதார்த்த நடையில எழுதி இருக்காரு மறக்காம படிங்க

மாதேவி said...

தொடருங்கள்...

விக்கியுலகம் said...

@மாதேவிவருகைக்கு நன்றி

பாரத்... பாரதி... said...

//சண்டை இல்லாத நாட்டுக்கு சரித்திரம் கிடையாது//

பாரத்... பாரதி... said...

வியட்நாம் என்றாலே அமெரிக்காவுக்கு எதிராக செய்த வீரப்போர் தான், நினைவுக்கு வருகிறது.

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...

"வியட்நாம் என்றாலே அமெரிக்காவுக்கு எதிராக செய்த வீரப்போர் தான், நினைவுக்கு வருகிறது"

>>>>>
வருகைக்கு நன்றி..........வியத்னாம் அமெரிக்க போர் மட்டுமல்ல சைனா,பிரான்ஸ்,ஜப்பான்,கம்போடிய கூடயும் போரிட்டு இருக்கு........

எல்லாம் இந்த நாட்டு இயற்கை வளத்த கொள்ளை அடிக்க முயன்ற முயற்சிகளே........

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...

"//சண்டை இல்லாத நாட்டுக்கு சரித்திரம் கிடையாது/"

>>>>>

சண்டையிட்டு கிடச்ச சுதந்திரத்த சந்தோசமா அனுபவிக்கிறாங்க.......

நாம....அஹிம்ச வழியில கிடச்ச சுதந்திரத்த வச்சிக்கிட்டு தினம் செத்து செத்து பொழைக்கிறோம்..

Speed Master said...

நான் கேட்டது போல பதிவிட்டமைக்கு நன்றி

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல தகவல் தந்துள்ளீர் நன்றி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்தபதிவு அனைவரையும் சென்றடைய நான் எல்லா ஓட்டையும் போட்டுட்டேன்..

விக்கியுலகம் said...

@Speed Master

"நான் கேட்டது போல பதிவிட்டமைக்கு நன்றி"

>>>>>>>>

இன்னும் நெறய விஷயங்கள் காத்திருக்கு நண்பரே

தொடர்ந்து வாருங்கள் நன்றி

Indian said...

//@Indianஉங்க பதிவு அருமை அதையும் சீக்கிரம் தெளிவு படுத்துறேன் தொடருவீங்கன்னு நம்பிக்கையுடன் ஓர் தமிழன்(நண்பன்!//

அவை திரு ஜோவினுடைய இடுகைகள்.

விக்கியுலகம் said...

@Indianபிழைக்கு மன்னிக்கவும் நன்றி

விக்கியுலகம் said...

@ம.தி.சுதா


நன்றி நண்பரே

தொடர்ந்து வாருங்கள் நன்றி