Followers

Wednesday, February 9, 2011

சாருவாகா(Phil) - தனி மனித தத்துவம்(!?)

                                                              அஹம்ப்ரம்மாஸ்மீ


சாருவாகா - இந்தப்பேர நெறயபேருக்கு தெரியாது.................நாமளும் தொடர்ந்து அரசியல் பதிவா எழுதி மக்களை கொன்னுட்டு இருக்கோமே அதான் கொஞ்சம் மாற்றமா எழுதலாம்னு......மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றம் இல்லாதது இல்லீங்களா. இது ஒன்னும் ஆன்மிகத்தோட கத இல்ல. தத்துவம்னு சொல்றோமே அதோட உண்மைதான் இது.



நாம அன்றாட வாழ்கைல கடைப்பிடிக்கிற தத்துவம் தான் இது.

சாருவாகா - அடிப்படையில் இந்திய தத்துவமாக இருந்தாலும் இந்து தத்துவத்தின் ஆறு வண்ணங்களில் இது இடம் பெறவில்லை.

இந்து தத்துவங்கள் இரண்டு வகைப்படும் அவை :

1. ஆஸ்திகா 2. நாஸ்திகா -
ஆஸ்திகா - உட்பிரிவுகள் ஆறு - சாம்கியா,யோகா,நியாயா,வைஷிகா,மிமாம்சா,வேதாந்தா

நாஸ்திகா - புத்த தத்துவம், ஜைன தத்துவம், சாருவாகா.

இந்த மூணு தத்துவங்களில் சாருவாகா - heterodox - அதாவது வைதீகத்துக்கு எதிரானது.

இதுல நாம பாக்க போற தத்துவம் பேரு தான் சாருவாகா.............அப்படியே ஒரு பின் பக்க சினிமா இசையோட(அதாங்க background music ஹிஹி!!) ஆரம்பிப்போமா!

இப்போ நம்மல்ல பல பேரு இந்த தத்துவத்த தான் கடைப்பிடிக்கிறோம் தெரியுமா.ஆனா இந்த தத்துவத்தோட மகத்துவம் 15 வது நூற்றாண்டுலேயே அழிஞ்சிட்டதா சொல்லிகிறாங்க.

இதன் படி இறப்புக்கு பின்னாடி வேற எந்த விதமான வாழ்கையும் இல்ல - நம்ம லெவலுக்கு இத சொல்லும்போது - தீ சுடுது, தண்ணி குளிருது - இந்த தன்மைய யாரு அதுக்கு கொடுத்தாங்க. யாருமில்லைங்க பிறந்தததுல இருந்தே அப்படி தான் அது இருக்கு(!).

நாம பாக்கற விஷயங்கள் இப்போதைக்கு நிஜம்.............நாம இறந்து எரிக்கப்பட்ட பிறகு மறுபடியும் எப்படி சாம்பல் உயிரா உருவெடுக்கும்(!?).

மக்களின் பார்வையில் பல காலங்களாக இருக்கும் வேதங்களான ரிக்,யஜுர், சாம மற்றும் அதன் துணையான அதர்வண விஷயங்கள் புனையப்பட்டவை என்றும் அவை கோமாளிகளின் பதிவுகள் என்றும் இவங்க சொன்னாங்க.

வாழ்கை வாழ்வதற்கே, மற்றும் ஒரு முறை கொடுக்கப்பட்ட பரிசு வாழ்கைங்கறது அதை நாம சரியா பயன் படுத்திக்கணும்.

சாவு என்பது முடிவு எனவே வாழும்வரை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போ(பல்லாக்கை தூக்காதே பல்லக்கில் நீ ஏறு - மனிதன் எந்திரம் சிவசம்போ!!)

சாவுக்கு பிறகு சொர்க்கம் நரகம்ன்னு ஒன்னு இல்ல அதனால வாழும்போது அத நெனச்சி கவலைப்பட்டு உன் வாழ்நாளை சந்தோசம் இல்லாம கொன்னுடாதே.


நீ செய்யிற விஷயம் உனக்கு உண்மையில சந்தோசத்த கொடுக்கும்னா என்னா வேணும்னாலும் செய் ஆனா அதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சி செய்(think before you ink!).

வாழ்வுக்கு எப்படி ஒரு முடிவு சாவு என்று ஒன்று இருக்கிறதோ அதுவே நிஜம் அதனை யாராலும் மாற்ற இயலாது. வேண்டுமென்றால் தன்னை தானே ஏமாற்றிகொள்ளலாம் அதுவே மற்ற தத்துவங்களில் உள்ள சாராம்சம்.

இறப்பு என்பதை ஒரு தெய்வீக நிகழ்வாக மாற்ற நினைத்தே பல வைத்தீக வேதங்கள் உருவாகின.

கண்ணால் பார்ப்பது மட்டுமே நிஜம் அதனால் கனவில் வாழாமல் நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் பக்கும் மனிதனுக்கு தேவை அதுவே என்றும் அவனுக்கு சந்தோஷத்தைக்கொடுக்கும்.

- இவைகள் சாருவாகாவின் துளிகளே........

நீங்க ஆசைப்பட்டா தொடருவேன்.........

கொசுறு: நெனச்சதும் நெனைக்காததும் வாழ்கைல நடக்கும் போதும், அத எப்படி தனக்கு சாதகமா மாத்திக்கரதுன்னு யோசிக்கும் போதும்தான் ஒருவன் உண்மையான வாழ்கைய அனுபவிக்கிறான்(!?)  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

26 comments:

கக்கு - மாணிக்கம் said...

நெனச்சதும் நெனைக்காததும் வாழ்கைல நடக்கும் போதும், அத எப்படி தனக்கு சாதகமா மாத்திக்கரதுன்னு யோசிக்கும் போதும்தான் ஒருவன் உண்மையான வாழ்கைய அனுபவிக்கிறான்carry on.

DrPKandaswamyPhD said...

ஆஜர்.

Philosophy Prabhakaran said...

பாபா கன்பார்ம்ட் மா...கீழ்ப்பாக்கம் தான் மா...

தப்பா எடுத்துக்காதீங்க... என்னை நானே சொல்லிக்கிட்டேன்...

வைகை said...

நீ செய்யிற விஷயம் உனக்கு உண்மையில சந்தோசத்த கொடுக்கும்னா என்னா வேணும்னாலும் செய் ஆனா அதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சி செய்(think before you ink!).////

உண்மைதான்....செய்து விட்டு வருத்தப்படாத வரை எதையும் செய்யலாம்!

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்நன்றி தலைவரே

விக்கியுலகம் said...

@DrPKandaswamyPhDவருகைக்கு நன்றி சார்

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranதப்பா எடுத்துக்க இதுல ஒன்னுமில்லைங்க..........

நாம ஒரு விஷயத்த ஆதரிக்கரோம்னா அதுக்கு சரியான காரணம் வேணும்...........அதே போலதான் எதிர்கரதுக்கும்......பொத்தாம் பொதுவா எந்த விஷயமும் இந்த உலகில் இல்ல என்பதே உண்மை

விக்கியுலகம் said...

@வைகைநன்றி........
இந்த யோசிக்கிற பகுதி எப்பவுமே சிரமமானதும் கூட.....

Speed Master said...

வந்தேன் ஓட்டளித்து சென்றேன்

உலகக்கோப்பை முன்னோட்டம்

http://speedsays.blogspot.com/2011/02/blog-post_09.html

விக்கியுலகம் said...

@Speed Masterவருகைக்கு நன்றி...........

உங்க பதிவு உங்க உழைப்ப காட்டுது..........அதே போல பய புள்ளைங்க எவ்ளோ பணம் ப்ளான் பண்ணி இருக்காங்கன்னு போடுங்க ஹி ஹி!!

அஞ்சா சிங்கம் said...

எனக்கு லைட்டா ஹங் ஓவர் வரமாதிரி இருக்கு நமக்கு புரியாது செலபஸ் கொஞ்சம் கஷ்டம் ...

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்கொஞ்சம் கஷ்டம்தான் ஆனா இததான் நாம தினமும் நம்ம வாழ்கைல கடைபுடிக்கிறோம் ஹி ஹி

நா.மணிவண்ணன் said...

எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விமர்சனம் செய்வதுதான் சிறப்பு

நீங்கள் தொடருங்கள்

sathish777 said...

புது ஆராய்ச்சியா இருக்கு ஆனா பயமா இருக்கு

ரஹீம் கஸாலி said...

present vicky

ஜீ... said...

//கண்ணால் பார்ப்பது மட்டுமே நிஜம் அதனால் கனவில் வாழாமல் நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் பக்கும் மனிதனுக்கு தேவை அதுவே என்றும் அவனுக்கு சந்தோஷத்தைக்கொடுக்கும்//
அட! இது நல்ல இருக்கே!

அதுவும் நமது கண்ணுக்கு முன்னால் நடப்பதை மட்டுமே நிஜமென்று நம்பி வாழ்ந்தால் எந்தத் தொல்லையும் இல்லையோ! :-)

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்அதே அதே நன்றி

விக்கியுலகம் said...

@ஜீ...அதே அதே

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலிthank you

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்புதுசு இல்லைங்க ரொம்ப பழசு......நம்மாளுங்க பொதச்சி வச்ச உண்மைங்க ஹி ஹி!!

சி.பி.செந்தில்குமார் said...

நல்லாருக்கு சார்

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்நன்றி சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

present

வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

நல்ல முயற்சி! தொடருங்கள்!!

விக்கியுலகம் said...

@வழக்கறிஞர் சுந்தரராஜன்வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@T.V.ராதாகிருஷ்ணன்வருகைக்கு நன்றி