Followers

Tuesday, February 15, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 15.2.11


எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே..........சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்...........சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்..........

வா மாப்பு மானி...........


தெளியவைக்கும் குடிலிலிருந்து..........

குவா: என்னப்பா உன்ன பாக்குறதே அதிசயமா இருக்கு..........காதலர் தின வாழ்த்துக்கள்

மானி: உனக்கும் நான் சொல்லிகிறேன்.....நேத்துல இருந்து இந்த காதலர் தினத்துக்காக ஒரு போட்டி நடக்குது தெரியுமா..........

குவா: இன்னாது அது...........


மானி: தாய்லாந்து நாட்டுல தொடர்ந்து யாரு அதிக நேரம் முத்தம் கொடுக்குறாங்கன்னு ஒரு போட்டி நடக்குது...........நெறைய ஜோடிங்க கலந்துகிட்டு இருக்கு.........போன வருசம் 34 மணி நேரம் உதட்டுல வச்ச உதட்ட எடுக்காம இருந்தாங்கலாம்........இந்த வருசம் பாப்போம் ஹி ஹி ..........இதுல ஒரு பொண்ணு மயங்கி வேறு உழுந்துடுச்சாம் அய்யோ அய்யோ........நம்ம ஊருல இந்த மாதிரி ஏதும் இல்லப்பா ஹி ஹி!

குவா: அப்புறம் என்னப்பா நம்ம தலிவரு சுதி இறங்குனா மாதிரி கீறாரு.............

மானி: ஆமாம்பா எனக்கு கூட கவலையா கீது அவரு வயசுக்கு எவ்ளோ டென்சனு பாவம்(!)...........எவ்ளோ பேருக்கு எவ்ளோ செஞ்சிகிறாரு(!) அவருக்கு போயி இப்படி........

குவா: இதுல எதுவும் உள்குத்து இருக்கா............ஹி ஹி......

மானி:இன்னாபா இப்படி சொல்லிட்டே...........இந்த சாமிய போய் அவரு பொண்ணு மூணு முறை சந்திச்சி வேணாம் விட்றுன்னு கெஞ்சி பாத்துச்சி..........அந்த சாமியும் பாக்கலாம்னு சொல்லி வச்சாரு.........இதுக்கு நடுவுல நம்ம தலீவரு கொஞ்சம் டென்சனாயி அந்த சாமி மேல நோட்டீசு உட்ட உடனே.......அவரு டென்சன் ஆயி பிரச்சினையே பெருசா ஆக்கிட்டாரு........

குவா: நம்ம தல தான் மத்தில போய் பாத்துட்டு வந்துட்டாரே அப்புறமென்ன............

மானி: உனக்கு விஷயமே தெரியாதா.........அங்க போய் அவரால ஒன்னும் பேச முடியலியாம்.....5 நிமிஷத்துல மேடம் டாட்டா காமிச்சி அனுப்பிட்டாங்களாம்.........

குவா: ஏம்பா...........


மானி: கைதாயிருக்காரே முன்னால்..........அவரு வெளி நாட்டு மேடத்தோட ரெண்டு சகோக்களுக்கு நெறைய பணத்த சுவிசுல போட்டு வச்சிட்டாராம். இந்த விஷயமே அவங்களுக்கு லேட்டா தான் தெரியுமாம்..........அதில்லாம பல ஆயிரம் கோடிக்கு மேல வெளிநாட்டுல தனி நிறுவனத்துல பணத்த போட்டு வசிருக்கரதய்யும் நம்ம மத்தி போலீசு கண்டு பிடுச்சிடுச்சி............

குவா: அப்போ இதுல சிங் அய்யாவுக்கு பங்கா..............

மானி: எல்லாருக்கும் டவுட்டு இருக்கு...........ஆனா சீக்கிரத்துல கூட்டணி பிச்சிகும்னு நெனைக்கிறேன்........

குவா: எப்படி சொல்றே.........

மானி: இங்க கப்பல் தலைவரு ஒரு பக்கம் அம்மாகிட்ட கூட்டணி பேசிக்கிட்டே அத தள்ளிப்போட்டு கிட்டே வாராரே.........

குவா: அதுனால என்னா.........

மானி: என்னவா...........அவரோட சொந்தக்காரார டெல்லில போய் பேச சொல்லிருக்காரு....அவருக்கு மத்தில ஆள்றவங்க சொன்னது தான் ஹை லைட்டே.....

குவா: அது என்னாபா......

மானி: அவங்க சொன்னாங்களாம்.......இப்படியே கொஞ்ச நாளு போக்கு காட்டுங்க........மாநில கூட்டணி உடன்சாலும் உடைஞ்சிடும்........நாம ரெண்டு பேரு சேர வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இருக்காங்களாம்.......

குவா: இன்னாபா நீ ...........ஓட்டு போடுற நம்பள பத்தி இவங்கல்லாம்.......என்ன நெனச்சிட்டு இருக்காங்க...........

மானி: அவங்க நெனப்பு.....துட்டும்.......சரக்கும் கொடுத்தா நம்மள மாதிரி இருக்குறவங்க வந்து ஓட்ட குத்தப்போகுதுங்க அப்படிங்கற தைரியம் போல......

குவா: ஆமா மானி.....இந்த தலைவலி நடிகரு இப்போ மீனவர்கள் பிரச்சினையே கையில எடுத்திருக்காரு பாரு........இவராவது அவங்களுக்காக போராட வந்தாரே.........

மானி: நீ எல்லாம் திருந்தவே மாட்டியா.........உன்னயெல்லாம் திருத்தவே முடியாது....

குவா: நான் என்னா தப்பு பண்ணேன்னு நீ இப்படி திட்டுறே..........

மானி: ஏன்யா அந்த ஆளு போய் மேடத்தோட பையன பாத்து அங்க சேர்றதுக்கு துடிச்சாரே...........அப்பெல்லாம் மீனவகள என்ன தங்கத்தட்டுலையா தாங்குனாங்க........இப்போ தனக்கு ஆளரவங்க ஆப்பு அடிக்கிறாங்கன்ன உடனே மீனவங்க நெனப்பு வந்துரிச்சா..........அது என்னமோ தெரியல அவன் அவன் இந்த மக்களை என்னன்னு நெனச்சிட்டு இருக்கானுங்கன்னே தெரியல............

குவா: சரி டென்சன விடு சினிமா நியுஸ சொல்லு.....

1.சரக்கு: ஸ்டார் நடிகரும், இயந்திர மனிதன் டைரக்டரும் வெளி நாட்டுல இருக்காங்க.

   நெசம்: ஆமாங்கோ அடுத்த படத்த பத்தி விலாவரியா பேச போயிகிறாங்க ஹி ஹி!!!

2. சரக்கு: SPA திறந்தாங்க நடிகை.

    நெசம் : ஆமாங்க நம்ம ஸ்ரே நடிக மும்பயில ஒரு SPA தெறந்து இருக்காங்க.........அதுல
                   கவனிக்க வேண்டிய விஷயம் என்னனா அவங்க சொந்த துட்ட போட்டு திறந்து, அதுல மாற்று திறனாளிங்களுக்கு தான் வேலை போட்டு கொடுத்து இருக்காங்களாம்.

3. சரக்கு: INCEPTION ஹாலிவுட்டு படத்துக்கு விருது.

    நெசம்: ஆமாங்கோ கிறிஸ்டோபர் நோலன் எடுத்த INCEPTION படத்துக்கு சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருது கிடைச்சிருக்கு.

ஆரோக்கியசாமி சொல்லும் உடல் நலம்:

தினமும் ஒரு தேக்கரண்டி வல்லாரைக்கீரயோட பொடியும் அதே அளவு நல்லெண்ணையும் சேர்த்து சாப்பிட்டு வந்தா நல்ல ஞாப சக்தியும் அசகாய உடல் நலத்துடனும் இருப்பீங்க. நீங்க இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும் நல்லா இருப்பீங்க.

செய்தி: ஊழல் விவகாரத்துல மாநில முதல்வரையும் குற்றவாளியா சேர்க்க வேண்டி சாமி மனு.

இந்தவார பன்ச்: சாணக்கியனுக்கும் அடி சறுக்கும்

முத வெட்டு(இந்திய ஜொள்ளு!):


ரெண்டாவது வெட்டு(வியத்நாமிய ஜொள்ளு!):இந்த வார தத்துவம்:

கொசுறு: காதலர் தினத்துல தனியா இருக்கேன் அதனாலே இந்த 7 டிகிரி குளிர்ல கொஞ்சம் சைட்டடிசிட்டு வரேன் ஹி ஹி! அப்போ நீங்க!!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

38 comments:

Philosophy Prabhakaran said...

ஸ்ரேயா திறந்தாங்களா திறந்து வச்சாங்களா... i mean who is the owner...?

Philosophy Prabhakaran said...

அடப்பாவிகளா நம்மூர் முருகதாஸ் அவரே சொந்தமா சிந்திச்சு எடுத்த கதையை சுட்டு விருது வாங்கிட்டாங்களா... அநியாயம்...

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranநீங்க எந்த படத்த சொல்றீங்கோ!?

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranநீங்க என்ன mean என்று எனக்கு தெரியுது ஹி ஹி!

அவங்களோட சொந்தக்காசுல கடை வச்சி உதவி பண்ணி கிராங்கோ ஸ்ரே ப்ராமிஸ்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இந்தவார பஞ்ச் சூப்பர்! எல்லா விஷயங்களையும் கோர்வையாய்க சீராக எழுதியுள்ளீர்கள்: நல்லது!!

மாணவன் said...

மானிட்டர் செம கிக்கு பாஸ்.. சூப்பர்

வைகை said...

இன்னாபா இப்படி சொல்லிட்டே...........இந்த சாமிய போய் அவரு பொண்ணு மூணு முறை சந்திச்சி வேணாம் விட்றுன்னு கெஞ்சி பாத்துச்சி///////

இது எப்ப நடந்துச்சு? கால்லதானே விழுந்தாங்க?

விக்கியுலகம் said...

@மாணவன்நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@மாத்தி யோசிநன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@வைகைரத்தத்தின் நிறமோ சிவப்பு, பாலின் நிறமோ வெளுப்பு, கடல் நீர் என்றைக்கும் கரிக்கும்,சர்க்கரை என்றைக்கும் இனிக்கும், இதுதான் ஆண்டவனின் படைப்பு

>>>

நாங்க என்ன அடுத்த வீட்டுகாரன் படசான்னா சொன்னோம். இந்த மாதிரி எழுதிபுட்டு இது வேற கவிஞ்சின்னு சொல்லிட்டு திரியுது......அய்யோ அய்யோ!!

வெறும்பய said...

நல்ல மப்பு..

விக்கியுலகம் said...

@வெறும்பயஅதே அதே!!

ஷர்புதீன் said...

:-)
entry

விக்கியுலகம் said...

@ஷர்புதீன்நன்றி நண்பரே

மைந்தன் சிவா said...

வெறும்பய கருத்து தான் என்னோடதும்..ஹிஹி

சங்கவி said...

:))

Speed Master said...

தத்துவம் அருமை

விக்கியுலகம் said...

@சங்கவி


நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@Speed Masterநன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"வெறும்பய கருத்து தான் என்னோடதும்..ஹிஹி"

>>>

பதிலும்

அதே அதே!

நா.மணிவண்ணன் said...

மானிங்க மானிங்க அந்த ஊரு பொண்ணுங்களும் ரெட்ட சடை போடுவாங்களா ஹி ஹி சூப்பர் கீதுபா

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

ஆமாம்பா........வருகைக்கு நன்றி பா

ரஹீம் கஸாலி said...

வந்தாச்சு...படிச்சாச்சு...ரசிச்சாச்சு....வாக்களிச்சாச்சு....கிளம்பியாச்சு

sathish777 said...

அருமையான தொகுப்பு கலக்குங்க

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலிநன்றி நன்றி நன்றிங்கோ

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

நடை பயணம் முடிந்து வருகைக்கு நன்றிங்கோ

# கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்திரிங்க பாஸ்..
கலக்குங்க..

# கவிதை வீதி # சௌந்தர் said...

குறை எதுக்கு தமிழ்மணத்தில் 7-வது ஓட்டை போட்டாச்சி.. போட்டச்சி..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
இனி தினமும் வருவேன்.
ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

விக்கியுலகம் said...

@sakthistudycentre-கருன்நன்றி நன்றி நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

இந்தியா?வியட்நாம்? எது டாப்?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்


நீங்க கேக்குறது எந்த விஷயத்துல...?

வாழ்கை முறையிலா?

இல்ல சுதந்திர மனப்பான்மயிலேயா?

அதைபபொருத்தே பதிலுங்கோ!

அஞ்சா சிங்கம் said...

இந்த வார தத்துவ சூப்பர் எங்க தீ பிடிச்சதுக்கு எத கொண்டு தண்ணில விடுது பாரு

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"இந்த வார தத்துவ சூப்பர் எங்க தீ பிடிச்சதுக்கு எத கொண்டு தண்ணில விடுது பாரு"

>>>

என்ன சிங்கம் அது நம்மள மாதிரி அப்பாவி வோட்டு போடுறவங்க தான் ஹி ஹி!!

ஜீ... said...

kalakkal boss! :-)

விக்கியுலகம் said...

@ஜீ...நன்றி நண்பரே

கும்மாச்சி said...

கடைக்கு வந்துட்டேன் பாஸ், இனி சரக்கு இங்கே தான் வாங்குவேன், ஆனா காசு கேட்கக்கூடாது ஆமாம் சொல்லிப்புட்டேன். ஹி.ஹி.

விக்கியுலகம் said...

@கும்மாச்சி

"கடைக்கு வந்துட்டேன் பாஸ், இனி சரக்கு இங்கே தான் வாங்குவேன், ஆனா காசு கேட்கக்கூடாது ஆமாம் சொல்லிப்புட்டேன். ஹி.ஹி"

>>>>>

நன்றி நண்பரே

புது சரக்க பாக்கவேயில்ல!!