Followers

Tuesday, February 8, 2011

ஓ போடு ஓ போடு(!?)- vote முடியும் போடு!

- இப்படிக்கு உயிரோட இருக்கும் மனுஷன் சொல்லிகொள்றது.


எவ்வளவோ பாத்த நீங்க இத எப்பவோ படிச்சு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு முறை முயற்சி செஞ்சி பாப்போமே.



இது வரைக்கும்......அதாவது 1961 -வது ஆண்டுல இருந்து இந்த 49 O பிரிவு நம்ம தேர்தல் ஆணைய நடைமுறைல இருக்குன்னு சொல்றாங்க. ஆனா, போன தேர்தல்ல தான் நமக்கு இது தெரியவந்தது எனலாம். அதுவும் ஒரு ஜோக்கர் அரசியல்வாதி(!), நடந்த ஒரு இடைத்தேர்தல்ல இந்தப்பிரிவுல ஓட்டுப்போட சொல்லி அதிகபட்ச ஓட்டு வாங்குனாரு(ஹி ஹி!!).

நான் சொல்ல வர்ற விஷயம் இதுதானுங்க. இதுவரை பல பேர பார்த்துட்டோம் மற்றும் தொடர்ந்து ஏமாந்துக்கிட்டே இருக்கோம். கடந்த முறை ஒரு பொது இயக்கம் தோன்றி துண்டு பிரசுரமா இந்த விஷயத்த பல நகர மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தாங்க. ஆனா வெற்றியடைய முடியல(தோத்துட்டோம்!).


காரணம் என்னனா இன்னும் இது ஓட்டளிக்கிற பெட்டில பொத்தானா வரல..........பாருங்க எப்படியெல்லாம் நம்மள கும்முராங்கன்னு. இன்னொரு விஷயம் தேர்தல் நடக்கும்போது அந்த வாக்கு சாவடில நீங்க யாருக்கும் ஓட்டளிக்க விரும்பல என்று சொல்லி அங்க இருக்க கொய்யா மன்னிக்கவும் அய்யா கிட்ட சொன்னீங்கன்னா உங்களுக்கு ஒரு படிவம் கொடுக்கப்படுமாம். அந்தப்படிவத்துல எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட எனக்கு புடிக்கலன்னு சொல்லி எழுதிக்கொடுத்துடலாம்னு நம்ம தேர்தல் ஆணையம் சொல்லுது.

இந்த விஷயத்த கூர்ந்து கவனிச்சா நெறைய உள்குத்துகள் நமக்கு புலப்படுது அவைகள்:

1. இந்த மாதிரி படிவத்த கேட்ட உடனே அந்த அய்யா பாக்கற பார்வை (நொந்த மற்றும் சொந்த அனுபவம்!) இருடி இங்க இருந்து வெளிய போன உடனே தெலுங்கு படத்துல வர்ற மாதிரி நாலு நல்லவங்கள வச்சி ஏய்....ஏய்....ஏய்....அப்படின்னு சொல்லிட்டு சொய் சொய்ந்னு கத்தி பாசிடுவாங்கலோங்கர பயம் வர்றது சகஜம்.

2. துட்ட வாங்கிட்டு இந்த மாதிரி போட இயலாது.(ஏன்னா அங்க உக்காந்து இருக்க சாவடி(பூத்) ஏஜென்டுங்க நாளைக்கு நம்ம வீட்டுல வர்ற தண்ணி connection, current connection மற்றும் எப்படியெல்லாம் நம்மள தண்டிக்க முடியுமோ அத சரிவர செய்வாங்க.

etc............etc.........

பல விஷயங்கள்ல நாம ரொம்ப வெளிப்படையா நடந்துக்க முடியாது. எனவே மக்களே நமக்கு பிடிக்காத யாருக்கும் நாம ஓட்டு போடணுமா வேணாமா என்பதையும், அதே நேரத்துல பணநாயக அய்யோ அய்யோ ஜனநாயக கடமைல இருந்து நாம(!) தவறாம ஓட்டு போடணும்னா, முதல்ல அந்த பொத்தான் அந்த ஓட்டு இயந்தரத்துல வைக்கப்படனும்.


இத நாம எப்படி முன்னேடுதுப்போகப்போரோம்னு நெனச்சால யப்பா தலைய சுத்துது...........ஏதோ சேஷன் சாரு இருந்தாருன்னா பரவாயில்ல. இப்போ யாருப்பா அது ஓ நீயா.............இத்தாலியம்மா சுகமா ஹி ஹி!!

இதனால என்னா நன்மைன்னா, இப்போ ஒரு தேர்தல்ல இந்த வழியா வேட்பாளருக்கு deposit போக வச்சா மறுபடியும் நிக்க யோசிப்பாங்க. இது நமக்கு கிடைக்குற முத வெற்றி. அடுத்தது நல்ல வேட்பாளர சீக்கிரமே வர்ற தேர்தல்ல நாம தேர்ந்தெடுக்கலாம். இந்த மாதிரி செய்யறதுனால என்னா லாபம் தேர்தல் பணவிரயம்தானே என்று நினைக்கலாம். இப்போ வரைக்கும் அது தானே நடந்துட்டு இருக்கு. நல்லது நடக்கனும்னு நெனச்சி தேர்தல்ல நிக்கற எதாவது ஒரு வேட்பாளர காட்ட முடியுமா. இன்னைக்கு வந்த துக்கடா கட்சியெல்லாம் வேட்பாளருக்கு விண்ணப்பிக்கிறவங்க கிட்ட கேக்குற முதல் வார்த்த எவ்வளவு செலவு உங்களால பண்ண முடியும்?- இந்த நிலைமை மாறனும்னா முதல்ல அத்தன நாதரிங்களும் deposit இழக்கணும். அடுத்த தேர்தல்ல நல்ல வேட்பாளர்கள நாமே நிறுத்தி ஜெயிக்க வைப்போம்.


நாம என்னா செய்யப்போறோம்னு முடிவு பண்ணுங்க.....சீக்கிரத்துல தேர்தல் வரப்போகுது யாருக்கும் சும்மா இல்ல ஓட்டு, 49O வச்சி போடப்போறோம் வேட்டு.

கொசுறு: ஊத வேண்டியது என் கடமை. இல்லை நாங்க பொதகுழிக்கு தான் போவோம்னா யாரு யார தடுக்க முடியும். 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

20 comments:

Philosophy Prabhakaran said...

// இந்த மாதிரி படிவத்த கேட்ட உடனே அந்த அய்யா பாக்கற பார்வை (நொந்த மற்றும் சொந்த அனுபவம்!) இருடி இங்க இருந்து வெளிய போன உடனே தெலுங்கு படத்துல வர்ற மாதிரி நாலு நல்லவங்கள வச்சி ஏய்....ஏய்....ஏய்....அப்படின்னு சொல்லிட்டு சொய் சொய்ந்னு கத்தி பாசிடுவாங்கலோங்கர பயம் வர்றது சகஜம். //

இதேதான் நானும் யோசித்தேன்... பட்டன் மட்டும் வந்துடுச்சுன்னா குத்து குத்துன்னு குத்திட்டு வேண்டியது தான்...

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranகுத்துங்க எசமான் குத்துங்க. தனியா குத்தாதிங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் இந்த சேதிய சொல்லிக்குத்துங்க

விக்கியுலகம் said...

@கிணற்றுத் தவளைஉண்மையில் இந்த முறை நல்ல முறைதான் சார். ஆனா மக்களுக்கு தெளிவா அதை தெரிய வைக்க அரசாங்கத்துக்கு விருப்பமில்லை.

இந்த விஷயம் பலபேருக்கு சென்றடையவேண்டும் என்பதே என்கருத்து இதுக்கு அனுமதியே தேவையில்லைங்க!

வைகை said...

இது நமக்கு கிடைக்குற முத வெற்றி. அடுத்தது நல்ல வேட்பாளர சீக்கிரமே வர்ற தேர்தல்ல நாம தேர்ந்தெடுக்கலாம். /////////


நல்ல வேட்ப்பாளரா? எங்க...எங்க...?

Speed Master said...

நல்ல தகவல்

நா.மணிவண்ணன் said...

அண்ணே பிரபா சொல்லற மாதிரி எனக்கு பயம் இருக்குனே எங்க ஊருல வாங்கனு காசுக்கு ஒட்டு போடலேனா வீட்டுக்கு வந்து அடிப்பாயங்க, அதுவும் இந்த வட்டம் ஓட்டுக்கு நல்லா காசு கெடைக்கும் ,இப்பயே அழகிரி அண்ணே வேலைய ஆரம்பிச்சுட்டாரு 20 வீட்டு மேனிக்கி 250000 /- அந்த அந்த பகுதி செயலாளர் கிட்ட i d கார்டு குடுத்துட்டாங்க அந்த id காமிச்சு பணத்த வாங்கி வீடுகளுக்கு சப்பளை பண்ணிடுவாங்க

அஞ்சா சிங்கம் said...

கொசுறு: ஊத வேண்டியது என் கடமை. இல்லை நாங்க பொதகுழிக்கு தான் போவோம்னா யாரு யார தடுக்க முடியும். .........//////////////////

நல்லா சத்தமா தான் ஊதிருக்கீங்கே ..........

ஜீ... said...

//வைகை said...
இது நமக்கு கிடைக்குற முத வெற்றி. அடுத்தது நல்ல வேட்பாளர சீக்கிரமே வர்ற தேர்தல்ல நாம தேர்ந்தெடுக்கலாம். /////////
நல்ல வேட்ப்பாளரா? எங்க...எங்க...?//
:-))

விக்கியுலகம் said...

@வைகைநல்ல வேட்பாளருன்னா திடீர்னு ஆகாயத்துல இருந்து பொறந்து வர மாட்டாங்க நாம் தான் உருவாக்கணும்.

ஊருல நடக்கறத கிண்டல் பண்ண தெரிஞ்ச நமக்கு அத சரிப்பண்ண தெரியாதா!!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வீரம் என்பது அடிப்பதில்ல அஹிம்சையில் மட்டுமே மேலோங்கி இருக்கு. நாம பிரிஞ்சி இருக்குற வரைதான் பயம் என்ற ஒன்ன காட்டி இந்த மாதிரி ஆளுங்க பொழச்சிட்டு இருக்காங்க.

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்ஊதறது மட்டுமில்லங்க சரியான தருணத்த எதிர் பார்த்து கொண்டு இருக்கும் ஒரு சராசரி மனிதன்.

விக்கியுலகம் said...

@ஜீ...உடைக்கறது சுலபம் உருவாக்குரதுல தான் நம்மோட தெறம இருக்கு நண்பரே

கே.ஆர்.பி.செந்தில் said...

ஓகே.. ஓகே ...

! சிவகுமார் ! said...

//Philosophy Prabhakaran said...
இதேதான் நானும் யோசித்தேன்... பட்டன் மட்டும் வந்துடுச்சுன்னா குத்து குத்துன்னு குத்திட்டு வேண்டியது தான்.//

>>> அவரு எலெக்சன் பூத்துல யாரையாவது குத்திட போறாரு. விக்கி நீங்க கொலை கேஸ்ல உள்ள போய்ட போறீங்க. ஏன்னா கொலை செய்தவரை விட அதை தூண்டியவருக்கே தண்டனை என்று இந்தியன் பீனல் கோட்....##$$% மறந்துருச்சே..தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை..எனவே..

sathish777 said...

எது எப்படி இருந்தாலும் நிறைய சம்பளம் வாங்கிய விசுவாசி ஆசிரியர்கள் மதியம் 12 மணிக்கு மேல ஆளுக்கு 500 ஓட்டு குத்திடுவாங்க நம்மோடதையும் சேர்த்து

விக்கியுலகம் said...

@கே.ஆர்.பி.செந்தில்நன்றி

விக்கியுலகம் said...

@Speed Masterநன்றி

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்வாத்தியாரு புள்ள மக்குன்னு இதுனால தான் சொல்றாங்களோ ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !நாம செய்யறது நல்லதுன்னாலும் அத நாசூக்கா செய்யணும்.

சட்டம் பதவி படைச்சவனுக்கு மட்டும் சொந்தம் இல்ல அவனுக்கு பதவி கொடுத்த நம்மளுக்கும் சொந்தம்.

சி.பி.செந்தில்குமார் said...

righttu