Followers

Thursday, June 16, 2011

பயம் என்னை விட்டு....(பெண் பார்வையில் - இறுதி பகுதி)

வணக்கம் உறவுகளே.........


http://vikkiulagam.blogspot.com/2011/06/blog-post_07.html முதல் பகுதி 


கிட்ட தட்ட அரைமணி கழிந்திருக்கும், குழந்தை தூங்கி விட்டான். நான் தூங்க முடியாமல் விழித்து கொண்டு இருந்தேன்......திடீரென்று ஒரு பெண் என்னிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள்.அப்போது தான் கவனித்தேன் அவள் ஒரு தள்ளு வண்டியில் பல உணவுப்பொருள்களை கொண்டு வந்து இருக்கிறாள் என்று!

ஒவ்வொருவரும் ஒரு பானத்தை வாங்கி கொண்டு இருந்தனர் அவள் ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் வைத்து கொடுத்துக்கொண்டு வந்தாள். நான் அவள் முகம் பார்த்தேன், உடனே ஒரு சிறு கண்ணாடி தம்ளரில் ஆரஞ்சு சாறு கொடுத்து விட்டு மெல்லிய புன்னகையை சிந்திவிட்டு சென்றாள் அந்த சகோதரி.

அப்போது தான் புரிந்தது நமக்கு என்ன கொடுக்கவேண்டும் என்பதை முகம் பார்த்தே அறிந்து கொள்ளும் தன்மை அவர்களிடம் இருப்பது. அதன் பிறகு வந்த உணவில் கேட்டு வாங்கி கொண்டேன் அசைவமற்ற உணவை. என்னவர் இருந்தால் முதலில் அசைவம் தான் என்பார்.

சிறுக சிறுக நேரம் கழிந்தது.எப்போது அயர்ந்தேன் என்று நினைவில்லை. சிறிய சத்தம் கேட்டு விழித்துக்கொண்டேன்..மலேசியா வந்து சேர்ந்து விட்டதாக அறிவித்தார்கள்.


குழந்தையை தூக்கிக்கொண்டு அந்த இரு ட்ராலி பேகுகளை இழுத்து செல்ல அதிக சிரமமாக இருந்தது..ஒரு சகோதரர் உதவினார்...அவரும் தமிழராம்....மலேசியாவில் வாழ்ந்து வருவதாக கூறிக்கொண்டே என் ஒரு ட்ராலியை இழுத்து கொண்டு வந்து விட்டார்....அந்த இடத்தை காட்டி....சகோ அங்கே செல்லுங்கள்..இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது....ஹனோய் போகும் விமானம் பற்றிய அறிவிப்பு வரும் என்று சொல்லி விட்டு சென்றார் அந்த சகோதரர்.


முன்பு என்னவர் கூறி இருந்தார் "Mothers Care" என்ற ஒன்றை டிக்கட்டில் இணைத்து இருப்பதாகவும்...அதன் காரணமாக, நான் தரை இறங்கியதும்..மலேசிய விமான நிலையத்தில் எனக்கு அந்த விமான தள நபர் ஒருவர் உதவுவார் என குறிப்பிட்டு இருந்தார்...நானும் என் பெயர் கொண்ட அந்த பலகையை யாராவது பிடித்து உள்ளனரா என்று பார்த்து சலித்து விட்டேன்.


கிட்ட தட்ட 5 மணி நேரம் கழித்தே அடுத்த விமானம் வந்தது....நல்ல வேலை சரியாக அந்த வாயிலை அடைந்து விட்டேன்...அந்த விமான நிலையத்தின் உள்ளுக்குள்ளே செல்லும்...சிறிய வகை ட்ரைன்களும் உண்டு...எப்படியோ அந்த 5 மணி நேரத்தை பல்லைக்கடித்து கொண்டு கடந்து விட்டேன்...


ஹனோய் போகும் விமானத்தில் உட்காந்து சிறிது ஆசுவாசப்பட்டுக்கொண்டேன்....நானும் தைரியமான பெண்ணாக உருமாறிக்கொண்டு இருக்கிறேன்...நான் பெரிய பெண்ணாக ஆன போது என்னை தெரு முனையில் இருக்கும் கடைக்கே செல்ல அனுமதிக்காதவர்கள்....என் கணவரின் மேல் கொண்ட மரியாதையால்(!)...தனியே விமானத்தில் செல்ல அனுமதித்துள்ளார்கள் எனும் போது எனக்கு பெருமையாக இருந்தது....சற்று அந்த நிமிடங்களை ஞாபப்படுத்திக்கொள்கிறேன்.....

தொலைபேசி உரையாடல்:

மாப்ள...நீங்க நினைகிறா மாதிரி வித்யா தைரியசாலி இல்லங்க...அவளால தனியா பயணிக்க முடியாது...அதுவும் குழந்தைய வச்சி கிட்டு விமானப்பயணம் வேண்டாம்ங்க....வேணும்னா நீங்க வரும்போது கூட்டிட்டு போங்க....

நீங்க இப்படி சொல்லி சொல்லி தான் அவளோட தைரியத்த வெளிய காட்டிக்க முடியாம செய்ஞ்சி கிட்டு இருக்கீங்க...தயவு செய்ஞ்சி அனுப்பி வைங்க...அவ உண்மையில ரொம்ப தைரியசாலி...

எதை சொல்லுவதாக இருந்தாலும் நேரடியாக சொல்லிட்டு போய் விடுவதால்...எங்கள் குடும்பத்தில் என் கணவருக்கு அதிக மரியாதை உண்டு...

இப்போது....

விமானம் தரையை தொட்டுக்கொண்டு இருந்தது....


ஹனாய் விமான நிலையத்தில் அனுமதி விஷயங்கள் முடித்து வெளி வந்து விட்டேன் குழந்தையுடன்....அவரை கண்ட போது கண்களில் எனக்கு கண்ணீர் வந்து விட்டது....எவ்வளவு தூரம் தனியாக பயணித்து வந்து இருக்கிறேன்....உண்மையில் நான் என் உண்மையான தைரியத்தை பெற்றுவிட்டேன்...பயம் என்னை விட்டு ஒழிந்து விட்டது...நன்றி...!

இன்னும் கொஞ்சம்: என்னை பொறுத்த வரை இந்த பயணம் என் வாழ்வில் மறக்க முடியாத பயணம்....இதன் மூலம் நான் பயம் விடுத்து தனியாக எங்கும் செல்லும் மனப்பக்குவம் கிடைக்கப்பெற்றேன்(இதன் பிறகு 4 முறை சென்று வந்து விட்டேன் தனியாக குழந்தையுடன்!)...இன்னொரு பதிவுடன் தங்களை சந்திக்கிறேன்...பொறுமையாக இப்பதிவை படித்ததற்கு நன்றி!...படங்கள் எங்கள் மகனின் அனுமதியோடு இடப்பட்டுள்ளது..நன்றி!

வித்யா குமார்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

17 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் சகோ!

நிரூபன் said...

ஒவ்வோர் மனிதனது வெற்றிக்குப் பின்னும் ஒவ்வோருவர் ஏதோ ஒரு வகையில் நிச்சயமாய் இருப்பார்கள் என்பது போல உங்களின் இனிய விமானப் பயணத்தின் பின்னே,
உங்களைது அகத் தடையான
பயத்தினைக் களைந்து நல்லதொரு நம்பிக்கை மிகுந்த பிரயாணத்தை நீங்கள் மேற்கொள்ள நம்ம சகோ(விக்கி) உதவியிருக்கிறார் என்பதில் சந்தோசம்,

உங்களது பயண அனுபத்தோடு கலந்த பயம் பற்றிய பகிர்விற்கு நன்றி சகோ.

தமிழ்வாசி - Prakash said...

படங்கள் எங்கள் மகனின் அனுமதியோடு இடப்பட்டுள்ளது..நன்றி!>>>>

விக்கி எப்போ முகம் காட்டுவார்?

தமிழ்வாசி - Prakash said...

தங்களின் விமான பயண அனுபவம் தன்னம்பிக்கை மிகுந்ததாக உள்ளது...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வாழ்க்கையில் படித்தோ, அறிந்தோ மற்றவர் சொல்லியோ வருகிற அனுபவத்தை விட நாமே அனுபவித்து கற்கிற பாடம் இருக்கிறதே அது மிகவும் ஆழமானது மற்றும் அற்புதமானது...
இந்த அனுபவக்கல்வியை ஒரு முறை பயன்று விட்டால் அது வாழ்நாள் முழுவதும் மறக்காது...

பயணங்களும் அது போலவே...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அண்ணே வணக்கம்னே..

செங்கோவி said...

ஆஹா..அருமையான பதிவு சகோதரி..நம்ம வீட்டிலும் இதே கதை தான்..சென்னை டூ டெல்லிக்கே தனியாக அனுப்ப மறுத்தார்கள்..போராடி வந்தார் என் மனைவி..இப்போது குவைத்திற்கும் தனியாகவே வந்து விட்டார். நம்மூர் பெண்கள் எல்லோரும் தைரியமானவர்களே..ஆனால் பாவம், கணவனைத் தவிர வேறு யாரிடமும் அதை வெளிப்படுத்த வாய்ப்பு தரப்படுவதில்லை..ஹி..ஹி.

செங்கோவி said...

விக்கி மாமூ, மருமவன் ஃபோட்டோ சூப்பரு..அப்புறம் உங்களை விட அக்கா நல்லா எழுதுறாங்க..பேசாம கடையை அக்காகிட்ட விட்டுட்டு, நீங்க போய் உங்க டமால்டுமீல் வேலையைப் பாருங்க.

செங்கோவி said...

விக்கி மாமூ, மருமவன் ஃபோட்டோ சூப்பரு..அப்புறம் உங்களை விட அக்கா நல்லா எழுதுறாங்க..பேசாம கடையை அக்காகிட்ட விட்டுட்டு, நீங்க போய் உங்க டமால்டுமீல் வேலையைப் பாருங்க.

சசிகுமார் said...

மாப்ள இது தான் உங்கப்பையானா சூப்பாரா இருக்கான்யா சொல்லுய்யா என் பொண்ணுக்கு பேசி முடிச்சிடுவோம் ஹி ஹி

FOOD said...

தன்னம்பிக்கை தரும் பதிவு.
விக்கி, பதிவுலகிலாவது பேசிக்கிட்டுருந்தார். அந்த சுதந்திரமும் பறிபோச்சா? த்ங்கை தொடர்ந்து எழுதினால், தாக்கு பிடிக்க முடியுமா?

vidivelli said...

nalla pathivu
nallaayirukkunka...


!!namma pakkamum kaaththirukku unkalukkaaka!!!

Speed Master said...

வந்தேன்

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் தோழரே..

தங்கள் வலைப்பூவில் இணைந்தமைக்கு மகிழ்கிறேன்..

நன்றி..
அன்பன் சிவ.சி.மா.ஜா

http://sivaayasivaa.blogspot.com

ஜீ... said...

அருமை! நல்லா எழுதுறீங்க அக்கா! மாம்ஸ் பிசியா?

சி.பி.செந்தில்குமார் said...

>>நமக்கு என்ன கொடுக்கவேண்டும் என்பதை முகம் பார்த்தே அறிந்து கொள்ளும் தன்மை அவர்களிடம் இருப்பது.

அழகிய அவதானிப்பு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மூன்று பாகங்களும் படித்தேன். தன்னம்பிக்கை தரும் பதிவுகள். வெகு அருமையான எழுத்து நடை. இன்னும் நிறைய எழுத சொல்லுய்யா மாப்ள....!