Followers

Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, March 22, 2011

மைதிலி அவன காதலி(!?)


ரொம்ப நாளா எழுதனும்னு இருந்தது இன்னைக்கு தான் முழுசா முடிஞ்சது. மேலும் இது காதை(கதை அல்ல) என்பதால், கொஞ்சம் யோசிச்சி எழுதணும் அதாவது அப்போ நடந்ததை மறக்காமல் குறிப்பிடவேண்டும் என்பதால். சரி தோன்றத செஞ்சிடனும் ஆராஞ்சிக்கிட்டே இருந்தா அது குழப்பமான மனநிலையே தரும்.



ஆரம்பம் - சென்னை TTK சாலை computer சென்டரில்............

சும்மா சொல்லக்கூடாது இந்த காதல் படுத்தும் பாட்ட முடியல! முடியல! என்று சொல்லிக்கொண்டே வந்தான் மணி.

என்னங்க சீனியர் இவ்ளோ சலிச்சிகிறீங்க என்றான் குமார்.

பின்ன என்ன இப்படி பைத்தியமா அலையறாங்களே! - என்றார் மணி.

வாங்க மைதிலி எப்படி இருக்கீங்க ............

நான் நல்லா இருக்கேன் நீங்க குமார் ?.................

நல்லா இருக்கங்க .............அப்புறம் இந்த computer class சுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ங்க........ என்ன பண்றது என் அக்கா தொல்ல தாங்க முடியாம தான் இதுல சேர்ந்திருக்கேன்.

உங்கள மாதிரி சீனியர்ஸ் கொஞ்சம் ஹெல்ப் செஞ்சாத்தான் என்னை மாதிரி தமிழ் மீடியம்ல படிச்சு வர்ற பசங்க கொஞ்சமாவது தேற முடியும் என்றான் குமார்.

அட விடுப்பா, முதல்ல இந்த சீனியர் அப்படின்னு கூபுடரத நிறுத்து நான் என்ன உனக்கு அக்கா மாதிரியா இருக்கேன்! - என்றாள் மைதிலி

அப்படியில்லங்க நீங்க இங்க கிட்டத்தட்ட 2 வருஷ கோர்ஸ் படிச்சிட்டு இருக்கீங்க ......... நான் இப்போதான் சேர்ந்து இருக்கேன்... அதான்.............

விடு எதையுமே விருப்பத்தோட கத்துகிட்டாதான் புரியும் இல்லன்ன பணம் தான் வேஸ்டு - என்றாள் மைதிலி

சரிங்க .... என்று ஆமாம்சாமி போட்டு சென்றான் குமார்.

சில மாதங்கள் கழித்து............

எனன மைதிலி..... ரொம்ப நாளாச்சி உங்கள பாத்து....சார் கூட உங்க ப்ராஜெக்டு விஷயமா கேட்டுக்கிட்டு இருந்தாரு........ என்றான் குமார்.

உடனே அவள் கண்ணில் இருந்து கண்ணீர்(whole சேலா வச்சு இருப்பாங்களோ!) எட்டிப்பார்த்தது.

குமார் ......... தயவுசெஞ்சி என் கூட கொஞ்சம் டிரைவ் இன் வரை வர முடியுமா -  என்றாள்.

இதுக்கு எதுக்குங்க பெரியவார்த்த எல்லாம் சொல்றீங்க வாடான்னா வரப்போறேன்(பொண்ணுங்க செலவு பண்றதே பெரிய விஷயம் ஹி ஹி!).....

இன்னைக்கு நம்ம instructor கூட லீவு, வேற என்னா பொழப்பு...... மழை வேற இல்லையா ...........என்றான் குமார் வெகுளியாக...........

ஜெமினி அருகே உள்ள drive in

என்னங்க கூப்பிட்டு வந்து எதுவுமே சொல்ல மாட்டேங்கிறீங்க ................

உனக்கு என்ன வேணும் ஆர்டர் பண்ணு........

மைதிலி இது self service பகுதிங்க(சுறு சுறுபானவங்களுக்கு மட்டும்!!) ........அந்தப்பக்கம் உக்காருவோம் வாங்க..........

எனக்கு ஒரு மசால் தோச..........ஒரு ஊத்தப்பம்.........அப்புறம்.......

ஏன்டா.........எவ்ளோ சீரியசான விஷயத்த பத்தி பேச வந்தா......சாப்பாட்டு ராமன் கணக்கா ஆர்டர் கொடுத்துட்டு இருக்க.........

(யக்கோவ் இப்போ கெடசாத்தான் உண்டு அப்புறம் நீங்க ஏதாவது சோக கதய சொல்லிட்டு காபி கூட குடிக்க விடாம........பில்லு கொடுக்காமா எழுந்து போயிடுவீங்க.......எத்தன சினிமா பாத்துகிறோம்....!!)


சொல்லுங்க..........

உனக்கு தெரியுமா நான் suicide  attempt பண்ணிட்டேன் அதான் 20 நாளா கிளாஸ் பக்கமா வர முடியல ............


என்னாது ..........என்னசொல்றீங்க.............(ஏதோ கிளாஸ் அட்டென்ட் பண்ணா மாதிரி சொல்றா!)

ஆமாம் ..........நேத்து தான் கொஞ்சம் உடம்பு சரியாச்சி.................

என்னங்க சொல்றீங்க ஒன்னும் புரியல..........கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க...........

மணி இருக்கானுள்ள ...........

அவருக்கு என்னங்க..........

அவனுக்கு ஒன்னும் இல்ல .........நான் அவன தான் லவ் பண்ணேன்..........

அதனால என்னங்க..........


அவன் என்னை லவ் பண்றதா சொல்லி 6 மாசம் ஆச்சி.........இப்போ வந்து "முடியாது எங்க மாமா பொண்ணத்தான் கட்டிக்கணும்னு வீட்டுல எங்கம்மா கட்டாயப்படுதுராங்கன்னு சொல்லிட்டு போயிட்டான்" ........

இதுக்கு போயா இந்த அளவுக்கு போனீங்க...........

உன்கிட்ட போய் சொல்றேன் பாரு.............லவ்வுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?.........

எனக்கு அதெல்லாம் தெரிஞ்சிக்கிற interest இல்லைங்க...........(எவன் கிட்ட வைட்டா பர்சு இருக்கோ அவன் தான் அந்த மாதிரி தப்பு காரியமெல்லாம் பண்ணுவான்!)


எனக்கு என்னை பத்தியே தெரிஞ்சிக்க முடியல இதுல இந்த தலவலிங்க வேறயா......

ஏன் அப்படி சொல்றே..........காதல் என்பது தெய்வீகமானது.......

(ஏன் அவன்கிட்ட நெறைய சொத்து இருக்கா! ஹி ஹி! - உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை!)

சரிங்க அது எப்படியோ போகட்டும்.........விஷயத்துக்கு வாங்க.......நான் என்ன செய்யணும்.......சொல்லுங்க...........

மணி கிட்ட பேசி என்னோட பிரச்சனைய புரியவைக்க முடியுமா......?



நான் ட்ரை பண்றேங்க....நான் ஒரு ஜூனியரு........அவரு ஏற்கனவே தான் ஒரு மேதைங்கர மெதப்போடவே சுத்தறவரு(இந்த பிட்ட பாத்துதான் இவங்க ஏமாந்து இருப்பாங்களோ ஹி ஹி!?)...........நான் போய் அவர்கிட்ட பேசினா அவரு டென்சன் ஆயிடுவாருங்க...........

நீ எல்லாம் ஒரு ஆம்பள...........

(என்னங்கடா இது இவங்க ஏதாவது பண்ணிப்புட்டு சம்பந்தமில்லதாவன போயி பஞ்சாயத்து பேச சொல்லறது இன்னா ஞாயம்..........இந்த ஆம்பிளைன்னா இன்னா ஒன்னுத்துக்கும் உதாவாம இருக்க பிரச்சனைக்கெல்லாம் ஹீரோ கணக்கா போயி பேசி கடைசீல காமடியன் கணக்கா அடிவங்குறதா!?)

ஏங்க ஏன் உங்களுக்கு இப்படி ஒரு டவுட்டு.............(நோ டபுள் மீனிங் ஹி ஹி!!)


பின்ன இப்படி பயப்படுற.............இது பயம் இல்லைங்க ஒரு வித தயக்கம்.........அதுவும் இல்லாம "நீ யாருடா" அப்படின்னு கேட்டுபுட்டாருன்னா நான் இன்னா செய்வேன் சொல்லுங்க...

உன்ன நான் என்னமோ நெனச்சேன்...........

என்னன்னு நெனச்சீங்க யாரு இன்னா சொன்னாலும் போய் அடிவாங்கிட்டு வர்ற செந்திலுன்னா(அப்போ வடிவேலு பீல்டுல இல்லைங்க!!)

அப்போ நான் உனக்கு பிரெண்டு இல்லையா.........

நீங்க எனக்கு பிரெண்டு அப்டிங்கரதுனால தான் இவ்ளோ தூரம் உங்கள நம்பி வந்துருக்கேன்.....(ஹி ஹி!!)

சரி என்ன பண்றது சொல்லு...........

நீங்க இவ்ளோ கஷ்டப்படரதால நான் போய் அவருகிட்ட பேசுறேன்......ஆனா என்னால உறுதியா சொல்ல முடியாது அவரு ஒத்துப்பாருங்கரத...................

உன்மேல எனக்கு நம்பிக்க இருக்கு குமார்...............(யாரு பெத்த புள்ளையோ நம்மகிட்ட மாட்டிகிச்சி!)

சரிங்க...........நாளைக்கு பேசிட்டு சொல்றேன்...........

இல்ல இன்னிக்கே பேசு............இப்போ அவன் அங்க தான் இருக்கான்...........

(என்ன ஒரு மரியாத..........மவனே அவன் மாட்டுனா ஆயுசுக்கும் செத்தான்.......!!!)

சரிங்க வாங்க போவோம்.................பில்லு வந்துடுச்சி கொஞ்சம் கொடுத்துடுங்கோ..........ஹி ஹி

சரி(இருடா உனக்கு இருக்கு........)


மறுபடியும் சென்டருக்கு திரும்பினோம்...............அங்கே................

கொசுறு 1 : அமைதிக்கு பெயர் தான் மைதிலி...............அந்த அலையினில் ஏதடி சாந்தி...........

கொசுறு 2: உண்மைக்கதை - நாம எப்போவுமே பொய் சொல்லத்தெரியாத முட்டாப்பயலாச்சே இந்த உலகம் எப்படித்தான் நான் சொல்றத நம்பப்போகுதோ தெரியலையே!!!


தொடரும்.........

Post Comment

Thursday, March 10, 2011

ஓ பதிவர்களே பதிவர்களே நீங்கள்!

ஓ பதிவர்களே பதிவர்களே நீங்கள் என்னை கரண்ட்டு கம்பியில் தூக்கி போட்டாலும் கலாய்ப்பதை நிறுத்தமாட்டேன்...........நீங்கள் என் எழுத்துக்களை பார்த்து சிரித்து கொள்ளலாம்...........சிணுங்க விடமாட்டேன் ஹிஹி!.......இன்னிக்கி மட்டும் கொஞ்சம் டென்சன் ஆவிங்கன்னு நெனைக்கிறேன் ஹி ஹி!..................


"சிவா, பாரு கொஞ்சம் மோரு!"


இது ஒரு குடும்பத்துல நடக்குற பிணக்கு பற்றியது ஹி ஹி!

அப்பா: என்ன சிவா கெளம்பலையா...........

சிவா: கெளம்பிட்டு தான் இருக்கேன்...............ஏன் எனக்கு ஒரு பைக்கு வாங்கி கொடுக்க மாட்டேங்குறீங்க...............

அப்பா: இப்போ தானே காலேஜு போயி இருக்க சீக்கிரத்துல வாங்கிடுவோம்............

சிவா: அவளுக்கு மட்டும் ஏன் வண்டி வாங்கி கொடுத்தீங்க.......

அப்பா: அவள் வேலைக்கு போறாடா.............அதுவும் இல்லாமா பஸ்சுல கஷ்டப்படக்கூடாதுன்னுதான்!


சிவா: எல்லாத்துலயும் அவளுக்கு முதலிடம்.........

பாரு: இப்போ என்னை ஏன் சண்டைக்கு இழுக்கறே.............உனக்கு வேணும்னா நீ வேலைக்கு போயி வண்டி வாங்கிக்க....................

சிவா: எங்க பாரு இவங்க தொல்ல தாங்க முடியல பஸ்சுல தனி சீட்டு..............எல்லா இடத்துலயும் இவங்களுக்கு மட்டும் அதிக இடம் கொடுத்து தலையில தூக்கி வச்சி இருக்கீங்க.................

அப்பா: இப்போ ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற.............ஒரு வண்டி பிரசின அவ்ளோ தானே..................

சிவா: வண்டி மட்டுமில்ல நாடே இவங்க கிட்ட அடிமையா கெடக்குது....................

பாரு: அப்படி என்ன அடிமையா கெடக்குது..................

சிவா: எங்க பாத்தாலும் உங்களுக்கே சப்போர்ட்டு..............நாங்க என்ன பாவம் பண்ணோம்.....................

அப்பா: இதுல என்னப்பா இருக்கு ராஜாவா இருக்குறத விட மந்திரியா இருக்குறது தான் அறிவாளித்தனம் அது தானே நடை முறையில நடந்துட்டு இருக்கு....................

சிவா: எங்க நடந்துட்டு இருக்கு............நாடு போற போக்க பாத்திங்கல்ல......

பாரு: இதுல எங்க தப்பு எங்க இருக்கு...............

சிவா: பார்க்குறேனே பப்புல என்னமா தண்ணி அடிக்கிறாங்க..............சிகிரெட்டு புடிக்கிறாங்க.......................

அப்பா: உன் அக்கா, உன் அம்மா புடிக்கிராங்களா.................

சிவா: அதுக்காக சமுதாய அக்கறை எனக்கு இருக்கக்கூடாதா....................

பாரு: இங்க பாரு நாங்க உங்க கிட்ட இருந்து எதையும் எடுத்துக்கல.............இது ஒரு சம தர்ம சமுதாயமா இருக்கணும்னு தானே நீங்க கூவிட்டு இருக்கீங்க..................அப்புறம் என்ன புடிக்கிராங்க......அடிக்கறாங்க.................

அப்பா: எனக்கென்னமோ இது எல்லோரும் செய்யுராப்புல தெரியல.............உன் பிரெண்டு கார்த்தி குடிக்கிறான், தம் அடிக்கிறான்.................நிறுத்த சொல்றது தானே................

சிவா: அது அவன் தனிப்பட்ட விஷயம்................அத நான் எப்படி தடுக்க முடியும்..............

பாரு: இதுவும் எங்களோட தனிப்பட்ட விஷயம்............எங்களுக்கு எது இஷ்டமோ அத நாங்க செய்யிறோம் உனக்கு ஏன் இவ்ளோ டென்சனு...............

சிவா: அது எப்படி..........இப்படி செய்ஞ்சா சமுதாயம் என்ன ஆகுறது............உங்களுக்கு அதிகமா சுதந்திரம் கொடுத்தது தப்பு.................


அப்பா: சிவா சுதந்திரம் கொடுக்க அவங்க என்ன அடிமைகளா....................இது சம தர்ம சமுதாயம்................அவங்களுக்கு விழிப்புணர்வு என்ற விஷயத்த வேணும்னா நாம் செய்ய முடியும்............இப்படித்தான் இருக்கணும்னு கட்டாயப்படுத்தக்கூடாதுப்பா..........அவங்களுக்கே தெரியனும்..............

சிவா: அடப்போங்கப்பா நீங்க எப்பவும்................

அப்பா: இப்போ என்ன எடுத்துக்க எனக்கும் உங்க அம்மாவுக்கும் கல்யாணம் ஆகி 25 வருசமாகுது..........இது வரைக்கும் நாங்க சண்ட போட்டு நீங்க பாத்து இருக்கீங்களா............

சிவா: நீங்க அம்மாகிட்ட அடங்கிப்போறது போல தான் எனக்கு தெரியுது..........


அப்பா: இல்ல.............உண்மையில நான் பேசும்போது அவளும், அவ பேசும்போது நானும் காது கொடுத்து கவனிப்போம்.......இது சரி இது தப்புன்னா அத வெளிப்படையா பேசிடுவோம்..........அதனாலாதான் இதுவரை வாழ்க பிரச்சன இல்லாம போயிட்டு இருக்கு..........ஒவ்வொருத்தனும் விட்டுக்கொடுத்தா கெட்டுப்போக மாட்டோம்...............

சிவா: எனக்கு இதுல நம்பிக்க இல்ல....................


அப்பா: திருமணம் ஆகட்டும் வாழ்க புரிஞ்சிடும் ஹி ஹி!

கொசுறு: இந்தக்கதையில மோரு ஏன் வரலன்னா அது அங்கேயே இருக்கு.......இது ஒரு கதைன்னு படிச்ச உங்களுக்கு ஹி ஹி நன்றி..........

Post Comment