Followers

Thursday, November 11, 2010

வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்..............

இந்த நாட்டுல பேசுறதுக்கு கூட யாரும் தயாரா இல்லப்பா. எல்லாரும் துட்டு, துட்டு என்றே சொல்லிட்டு இருக்காங்க. ஆணும் பெண்ணும் தீயா வேலசெய்ரானுங்கப்பா. சம்பாதிக்கறது சந்தோசமா வாழறதுக்கு மட்டும் தான்னு இவங்கள பாத்தா தெரிஞ்சிக்கலாம்
சரி வாங்க விஷயத்துக்கு போவோம்(நீங்க வரிங்களோ இல்லையோ நான் தீயா போயிட்டு இருப்பேன்

மிருகத்துக்கும் மனுசனுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் உடை மட்டுமே
(
பார்வையில்)

என்ன மிருகம், சேமிப்பு என்ற போர்வையில் நாலு தலமுறைக்கு சேர்த்து வைக்க நினைக்கிறது இல்ல. மனுஷன் அப்படி கிடையாது, முடிஞ்சவரைக்கும் தனக்கும் தன்னுடைய எதிர்கால சந்ததிகளுக்கும் சேமிச்சி வச்சிட்டு போறான்

நான் பார்த்தவரைக்கும் நம்ம இந்தியருங்க மட்டும் தான் குடும்பம் பத்தி ரொம்ப கவல படறோம். மேலை நாட்டவரும் மற்றும் பல ஆசிய நாட்டு மக்களும் இந்த விஷயத்துக்காக ரொம்ப சிரத்தை எடுத்துக்கறது இல்ல


நம்மூர்ல தான் 50 வருசமா உழைச்சி அந்த செல்வத்த தன் புள்ளைங்களுக்கு கொடுத்துபுட்டு பெரியவங்க வீடு வாசல் இல்லாம தெருவிலேயோ, இல்ல எதாவது முதியோர் காப்பகதுலையோ  கெடக்கறாங்க. ஏன் இந்த கஷ்டம் நமக்கு. தன் புள்ளைங்க வாழ்கைய நெனச்சுக்கிட்டு பல பேரு எந்த வித சந்தோசத்தையும் அனுபவிக்காம, காச சேர்த்து அதுங்க படிப்பு, எதிர்காலம் இத மட்டுமே தங்களோட வாழ்கையின் லட்சியமா வெச்சி வாழறவங்க நம்ம மக்கள் தான்

இது மாறனும் ஒரு பக்கம் அநியாயத்துக்கு குடும்பத்த பத்தி கவலப்படாத மக்கள், இன்னொரு பக்கம் குடும்பம்கர கோயில மட்டுமே நினைச்சிகிட்டு சோறு தண்ணி இல்லாம நாளும் தன்ன வருத்திக்கிற மக்கள்.
  
என்னதான் பையனுக்கும், பொண்ணுக்கும் செஞ்சி வச்சாலும் நமக்கு என்னோமோ நல்ல கதி இல்ல.  முடிஞ்சவரைக்கும் நமக்கு கிடச்ச இந்த மனுச பய வாழ்கைய சந்தோசமா அனுபவிக்கனும்

“பேக்கட்டுல பத்து காசு இல்லேனா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க


இந்த சிங்கம் வாழ்கை, சிங்கம் வாழ்கைன்னு சொல்வாங்க. அதாங்க நீங்க கேள்விப்பட்டு இருப்பீங்க


சிங்கம் ஒரே இடத்துல இருக்கும் அதோட துணை தான் உணவுக்காக அலைஞ்சி எடுத்துட்டு வந்து அதுக்கிட்ட  வச்சிட்டு வைட் பண்ணும். ராசா சாப்பிட்டு முடிச்சப்புறம் தான் துணை சாப்பிடும்.

நம்ம கதைய பாருங்க. என்ன தான் நாம சம்பாரிச்சாலும் கடைசில நமக்கு கிடைக்குறது என்ன

“கடைசில நாமெல்லாம் வால்மீகிதான்

என்ன தான் நம்ம குடும்பத்துக்கு செஞ்சாலும் கடைசில சொல்லுவாங்க பாரு ஒரு வார்த்த, அந்த வார்தைகாகதான் நாம பாடுபடறோம்.

அதுதான் "கடமை"

என்னோட தாழ்மையான கருத்து என்னன்னா - கடமைய ஆற்றுங்க ஆனா உங்க கடமையே உங்கள எதிர்காலத்துல காப்பாத்தும் அப்படிங்கற நினைப்ப தூரம் போட்டுட்டு உங்களுக்காகவும் கொஞ்சம் சேமிச்சி வச்சிக்கோங்க.

எதிர்காலத்துல பையனும், பொண்ணும் உங்களுக்கு டாட்டா காட்டிட்டு போனப்புறம் அத வச்சி சந்தோசமா வாழ பழகிக்கங்க

ஏன்னா நீங்களும் உங்கள நம்பி வர்ற உங்க மனைவியும்(நல்லா கவனிங்க உங்கள நம்பி) மட்டுமே நிஜம். மத்ததெல்லாம் "passing clouds". 

குழந்தைங்க மேல அன்பு வைங்க ஆனா அவங்கதான் நம்ம எதிர்காலம் அப்படிங்கற எண்ணம் வைக்காதீங்க

நம்மளோட கனவுகள அவங்க மேல திணிக்காம அவங்கள அவங்க சொந்த கனவுகளோட வாழ விடுங்க

கனவு மெய்பட வேண்டும்

"வாழ்க்கையே கொஞ்ச காலம் தான் அதுல இந்த வாலிபம் கொஞ்ச நேரம் தான்"






மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

6 comments:

♔ம.தி.சுதா♔ said...

/////நம்மூர்ல தான் 50 வருசமா உழைச்சி அந்த செல்வத்த தன் புள்ளைங்களுக்கு கொடுத்துபுட்டு பெரியவங்க வீடு வாசல் இல்லாம தெருவிலேயோ, இல்ல எதாவது முதியோர் காப்பகதுலையோ கெடக்கறாங்க. /////
யதார்த்தமான கருத்தக்கள் வாழ்த்தக்கள் சகோதரம்...

♔ம.தி.சுதா♔ said...

சகோதரம் லேபிள்கள் பகுதியில் லேபிளை இடுங்கள்... உதாரணத்திற்கு இதற்கு சமூகம் என்று அடிக்கலாம்.

♔ம.தி.சுதா♔ said...

அத்துடன் கருத்தாளர்கள் பட்டியலில் உள்ள html ல் your name என்றிருக்குமிடத்தில் உங்களது புறோவைல் பெயரை இட்டால் அதில் உங்கள் பெயர் வராது...

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

///////////குழந்தைங்க மேல அன்பு வைங்க ஆனா அவங்கதான் நம்ம எதிர்காலம் அப்படிங்கற எண்ணம் வைக்காதீங்க.
//////////////


சிந்திக்க வைக்கும் உண்மை . அருமையானப் பதிவு வாழ்வின் உண்மைகள் பல வார்த்தைகளில் . வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

sathish777 said...

ஆமா ரொம்ப பேரு...குழந்தைங்க வளர்ந்து சம்பாதிச்சு காப்பாதுவாங்கன்னு தான் வளர்க்கிறாங்க..நல்ல பதிவு ஓட்டு போட்டாச்சு

Philosophy Prabhakaran said...

ஆணி கொஞ்சம் அதிகமாக இருந்ததால் உடனே படிக்கமுடியவில்லை... இப்போ படிச்சிட்டேன்...