Followers

Thursday, February 3, 2011

நடி(act) ஆனா வாழ்கைல நடிக்காதே(!?)

வணக்கமுங்க நான் இங்க அலசப்போற விஷயம் பல பேருக்கு சங்கடம் கொடுத்தா அதுக்கு அவங்க மனசாட்சி பொறுப்பு மற்றும் நான் இல்லீங்கோ.........ஹி ஹி!!




நடிப்பு - இது ஒரு மிகப்பெரிய தொழிலாக இன்று வளைந்து சாரி வளர்ந்து நிற்கிறது.........இந்த நடிப்பு எனும் விஷயம் சின்ன குழந்தை வயதிலிருந்து நம்முடன் ஒன்றி இருக்கும் விஷயம் அதனால் தானோ என்னவோ யாராவது அது போல செய்யும்போது மனமுவந்து அவருடன் நாம் பின்னிபினைகிறோம்.

இந்த விஷயம் ஆரம்பித்தபோது பலருக்கு இந்த தொழில் புரிபவர்கள் கூத்தாடிகளாகவே தெரிந்தனர். அவர்களை தங்களின் மன சந்தோஷத்துக்கான ஒரு வித கோமாளிகளாகவே பார்த்த சமுதாயம் நம்முடையது. அப்பேற்பட்ட சமுதாயத்தில் சம காலத்தில் வாழ்ந்த இருவர் மட்டுமே மாற்றி அமைத்தனர்(யாரும் சண்டைக்கு வராதிங்க ஹி ஹி என் வழி வித்தியாசமான வழி!!).

ஒன்று எம் ஜி ஆர் மற்றொன்று எம் ஆர் ராதா- இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் சிவாஜி அவர்கள். அவரைப்பற்றி இறுதியில் சொல்கிறேன். முதலில் வந்த சில சூப்பர் ஸ்டார்ருகளால் தொடர்ந்து அதனை காப்பற்றிக்கொள்ள முடியவில்லை என்றே கூறவேண்டும்.


இந்த இருவர் சம காலத்தில் வாழ்ந்த உழைப்பாளிகள். ஒரு கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றும் அவனுக்கு ஆயா(!) சாரி ஆய கலைகளில் பல தெரிந்து இருக்க வேண்டும் என்பதை நிரூபித்தவர் எம்ஜிஆர் அவர்கள்.

அதே போல வில்லன் என்பவனுக்கு எப்பேர்பட்ட கதானாயகனய்யும் சமாளிக்கக்கூடிய விடயம் இருக்க வேண்டும் என்பதை நிரூபித்தவர் எம் ஆர் ராதா அவர்கள்.

ஆனால் வெறும் கூத்தாடிகள் என்ற விஷயத்திலிருந்து அதை தகர்த்து அரசியல் எனும் விஷயத்தில் கால் பதித்து முதலில் வென்று காட்டியவர் ஆந்திர சூப்பர் ஸ்டார் என் டி ஆர் அவர்கள்.

இதன் தொடர்ச்சி மற்றும் அரசியல் சாணக்கியனின் சூழ்ச்சி காரணமாக சும்மா இருந்த மனுசனை சீண்டி பெரிய அரசியல் தலைவனாக மாற்ற வைத்தது ஒரு கலைஞன். விடுங்க.....அவர தினமும் நெறைய பேரு வறுக்குறாங்க(இங்கேயும் அரசியலா மவனே பிச்சுபுடுவேன் ஹி ஹி என்னை நானே!!).

இந்த சாதாரண கூத்தாடி சாரிப்பா.....மக்களை மகிழ்வித்தவர்களை, மிகப்பெரிய பொறுப்பான பதவியில் அமர வைத்து அழகுப்பார்த்த இரண்டு சனங்கள் நம் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்கள். அதிலும் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வீட்டுல உல கொதிக்குதோ இல்லையோ தலைவன் சொல்லிட்டானேன்னு பட்டினி கிடந்த காலம் உண்டுங்க. என்ன பண்றது இங்க தலைவன நம்புற தொண்டர்கள் நெறைய ஆனா தொண்டன நம்புற தலைவன் கிடையாது(இது விதி அல்ல நம்ம மக்களோட மழுங்கின மதி!)

அதிலும் எம் ஆர் ராதா என்பவர் எதிலும் துணிந்து கருத்தை சொன்னதை வைத்து அவரை ஏதோ உண்மையான வில்லன் கணக்கா சித்தரிச்சதும் இந்த பாரில்(bar இல் அல்ல ஹி ஹி!!) தான்.


மனுஷன் அந்த நிலைமையிலும் சிரிச்சுக்கிட்டே போயி சேர்ந்தார்...........ஆங் ஓவரா ஏறிப்போசோ.....ஆங் சொல்லவந்தத விட்டுட்டேன் பாருங்க............இப்பேற்பட்ட கஷ்ட்டமான தொழிலில்(!) இருந்து வந்தவர்களை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்ற குற்றத்துக்காகவே இன்று வரும் கை கால் ஆட்டிகள் எல்லாம் தன்னை முதல்வராக கருதும் துர்பாக்கியம் நம் தமிழ் நாட்டில் நிகழ்ந்து கொண்டு உள்ளது............

சிவாஜி சார இதுல சேர்க்க முடியாது காரணம் அவரு கடைசி வரைக்கும் நடிகராவே(நடுவுல ஆச நிறவேராம போச்சி அது தணிக்கத!!) தன்னை நிறுத்திட்டு போயிட்டாரு.

இது தொடரனுமா வேணாமா................

கொசுறு: நான் சொல்றது என்னோட சரக்க இல்லங்க இந்த தொடர.....ஹி ஹி!!(நமக்கும் தொடருக்கும் ராசியே இல்லப்பா ஏதாவது ஆரம்பிச்சா நடுவுல எவனையாவது உள்ள தூக்கி போட்டுடரானுங்க அந்த விஷயம் அமுங்கரதுக்கே ரெண்டு வாரம் ஆகுது. அய்யோ அய்யோ நாமளும் ஏதாவது நச்சுனு எழுதலான்னு புல்லோட(!?) சாரி சிந்தனயோட யோசிச்சாலும் நடக்கவிடமாடேங்குறாங்க இந்த அரசியல் களவாணி பசங்க ஹி ஹி!!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

25 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஹைய்யா வடையும் எனக்கே......

MANO நாஞ்சில் மனோ said...

எத்தனையாவது ரவுண்டுல மட்டையா மல்லாந்தீங்கன்னு சொல்லவே இல்ல....

sathish777 said...

sema mappaa

sathish777 said...

sema mappaa

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோநாம மட்டயாவறதே இல்லைங்க மட்டயாக்கிதான் பழக்கமுங்க ஹி ஹி!!

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ எத்தனை பேரை மட்டையாக்குநீங்க....

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்என்ன இப்படி கேட்டு புட்டீங்க ஒரு புல்லு போச்சு ஆனா நாதாரிங்க மூணு இருக்கு மலேசியா மற்றும் சீனாக்காரனோட நானும் ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோரெண்டு காலி இப்போதைக்கு, இன்னும் ஒரு களவாணி இன்னொரு புல்லோடு வந்துட்டு இருக்கு கட்சில நான் ஒரு பெக்குதான் ஹி ஹி!!

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும்,வாக்குகளும்...

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்

வைகை said...

அதிலும் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வீட்டுல உல கொதிக்குதோ இல்லையோ தலைவன் சொல்லிட்டானேன்னு பட்டினி கிடந்த காலம் உண்டுங்க////


இப்பிடியே இருந்துதான் தமிழன் பட்னியா இருக்கான் இன்னிக்கு

ரஹீம் கஸாலி said...

வோட்டு போட்டுட்டு அப்பீட்டு ஆகிக்கிறேன்

Philosophy Prabhakaran said...

எதுக்கு பதிவின் நடுநடுவே இத்தனை சாரி சொல்றீங்க... உங்க கருத்தை போல்டா சொல்ல வேண்டியது தானே...

சி.பி.செந்தில்குமார் said...

>>>>அதிலும் எம் ஆர் ராதா என்பவர் எதிலும் துணிந்து கருத்தை சொன்னதை வைத்து அவரை ஏதோ உண்மையான வில்லன் கணக்கா சித்தரிச்சதும் இந்த பாரில்(bar இல் அல்ல ஹி ஹி!!) தான்.


super

Speed Master said...

பதிவெழுது ஆனால் எழுதாதே

நா.மணிவண்ணன் said...

ஹி ஹி ஹி அண்ணே என்ன சரக்குனே

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலிநன்றி

விக்கியுலகம் said...

@வைகைஇன்னிக்கும்திருந்தாம இருக்குறவங்கள யாரும் ஒன்னும் செய்ய முடியாது

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்நன்றி அண்ணே

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranஇது ஒருவகை கலாய்ச்சல். சீனியர் உங்களுக்கே தெரியல பாருங்க ஹி ஹி!!

என்னோட பதிவுகள நல்லா பாருங்க எவனுக்கும் நான் பயந்தது கிடையாது சொல்லவந்தத போல்டா நச்சுன்னு சொல்லுறதுதான் என் ஸ்டைல்

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்ரெண்டு shivas வந்தது ஹிஹி நான் கொஞ்சம் தான் நம்ம கூட்டாளிங்க தான் மட்டயாயிட்டங்க.........பாருங்க ஒரு பெரிய சீனாக்காரன கவுத்தாச்சி ஹிஹி!!

விக்கியுலகம் said...

@Speed Masterஎழுதுவேன் ஆனா யாரையும் என் எழுத்தால கொல்லமாட்டேன் ஹிஹி!

எப்பூடி.. said...

//நடுவுல ஆச நிறவேராம போச்சி அது தணிக்கத!! //

அந்த கதையையும் ஒரு பதிவா போடுங்க

கார்த்தி said...

ஐயோ ஒரே குழப்பமா இருக்கு!!

! சிவகுமார் ! said...

>>> முதல் கார்ட்டூன் செம காமெடி!!