Followers

Friday, February 11, 2011

பட்டி - (என்றால் அன்பு, நன்றி என்றல்லவா அர்த்தம்!?)

கடுகு சிறுத்தாலும்(நம்ம விஷயத்துல பெருத்தாலும்!) காரம் குறயாதுங்கறது எவ்வளவு உண்மை.


போன வாரத்தில் ஒரு நாள்...........



இந்தியாவிலிருந்து வியாபார விஷயமாக வந்து இறங்கினர் இருவர்.

நேரடி ஒலிபரப்பு(ஒருவாரம் கழிச்சி ஹி ஹி!).......(தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது!)

வணக்கம் சார்..........நீங்க தானே......*******

ஆமாம்..........

ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டலுக்கு காரில் பயணம்........

குமார் நீங்க எவ்வளவு நாளா இங்க இருக்கீங்க.............

நான் மூணு வருசமா சார்........

உங்களுக்கு இந்தியால எந்த ஊர்?

எனக்கு தமிழ்நாடு.........சென்னைங்க............

பட்டி............


ஒரு கணம் நான் கேட்காதது போல இருந்தேன்...........பின்பு...........என்னமோ சொன்னீங்க.......

ஆங்.......ஒண்ணுமில்ல.........

(ஏன்டா சூடான் பாஷைல பேசுனாலே கண்டு பிடிக்கிற நாங்க நீ சொன்ன "நாயி" என்ற மலையாள வார்த்தை புரியாதா.............இருக்குடி உனக்கு......)

ஹோட்டலில்..........

ஏம்பா இங்க இந்திய உணவு கிடைக்குமா.............

இருக்குங்க.......நாலு சின்ன ஹோட்டல்கள்...........

சரி எங்கள அங்கே கூட்டி போ.......

சார் அதுக்கு முன்னாடி க்ளைண்ட மீட் பண்ணிட்டீங்கன்னா நல்லது..........

ஓகே........

மீட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போது.............

அவர்கள் இருவர் பேசிய விஷயம் எனக்கு கேட்டது - இந்த நாட்டுல இங்க்ளிஷே இல்ல இந்த பட்டி(நாயி!?) எப்படி இங்க மூணு வருசமா வாழ்கையே ஓட்டிட்டு இருக்கு......

ஒரு தரம்..............ரெண்டாம் தரம்.............(counting ஸ்டார்ட்.....)

வியட்நாமிய வியாபாரி அந்த டீலுக்கு ஒத்து வருவதாக இல்லை..........



அப்போது நான் குறிக்கிட்டு சில வார்த்தைகள் அவரின் மொழியில் கூறி அவரை சமாதானப்படுத்தினேன்.,,,,

அதற்க்கு பட்டி நல்லா தான் பண்றான் -  அப்படின்னு நிலால டீ விக்க போனவன் மாதிரி அவன் சொல்ல..........நானும் அமைதியாக இருந்தேன்...........(சென்னைல மாருதில போயிட்டு இருந்தவன, இங்க கொண்டு வந்து BMW கார்ல போக வச்சுக்கிட்டு இருக்கும் முதலாளிக்காக!)

முடிவுல............டீல் ஒத்து வரல..............

************பட்டி மவனே இதுக்கு தான் எங்கள இந்தியால இருந்து வரசொன்னியான்னு சொன்னாரு அந்த **யாளி! (- வர சொன்னது போன வாரம் வந்தது வியட்நாமிய விடுமுறை நாள்ல. இதுல நான் என்னமோ இவங்கள இப்போ வர சொன்னாமாதிரி!!)

எனக்கு என்னையும் அறியாம ஆத்திரம் பொத்துக்கிட்டு வந்துடுச்சி...........இருந்தாலும் பொறுத்துக்கொண்டு..........நானும் என்னால் முடிந்தவரை அந்த வியட்நாமியரிடம் பல விஷயங்களை புரிய வைத்தேன்.............

வந்தவங்க ரெண்டு பேரும் வெளிய போயி தம் அடிச்சிட்டு வந்தாங்க..............

டீல் முடிவுக்கு வந்தது..............

திரும்பி வந்த அவங்க..........இந்திய ஹோட்டலுக்கு போலாமான்னு கேட்டாங்க..........

அந்த ஹோட்டலில் உட்கார்ந்து இருக்கும் போது...............நான் நிதானமா அவங்களிடம் பேசினேன்.......

சார்........இப்போ உங்களுக்கு டீல் முடிஞ்ச சந்தோசத்துல இருக்கீங்க...........இப்போ உங்க கிட்ட சில விஷயங்க சொல்லனும்னு நான் சொல்ல............

சொல்லுங்க குமார்ன்னு அவங்க வழிய..............

முதல் விஷயம் நான் இங்க assistant கிடையாது...........என் இரு உதவியாளர்களும் லீவுல போயிட்டாங்க..........ஏன்னா அவங்க புதுவருஷ கொண்டாட்டத்துக்காக..............ரெண்டாவது நான் உங்கள வந்து அழச்சிட்டு வர வேண்டிய அவசியம் இல்ல...........மற்றும் உங்க தகுதிக்கு கீழ போன உங்க பேச்சை நான் நெறயமுறை கவனிச்சேன்.........உங்க நல்ல நேரம் எனக்கு கோவம் வரல..........

ஒருவர் இடைமறித்து: வந்திருந்தா...............என்னா பண்ணி இருப்பீங்க.........

இந்நேரம் டாப்ப கழட்டி இருப்பேன்(black belt வாங்கி என்னா கிழிச்சேன்னு எங்கப்பாரு இனி கேக்க மாட்டாரு ஹி ஹி!).............

சாரி............

முதல்ல பெரியமனுசனுங்களா நடந்துக்கங்க..............அப்புறம் business பேசலாம்..........

அடுத்த நிமிஷம் அவங்க தவற உணர்ந்துட்டாங்க(உணர்ந்தா மாதிரி நடிசாங்கலான்னு தெரியல!)..............ஆனா காலம் கடந்துடுச்சி...........அடிச்சா காயம் ஆறிடும்...............ஆனா வார்த்த வார்த்த வார்த்த முக்கியம்................

இப்போ கூட நான் சொல்லி இருக்க மாட்டேன்..........ஆனா நீங்க மறுபடியும் அந்த வார்த்தைய சொல்லி அப்புறம் நான் ஏதாவது செய்யப்போக...............அதான் சொல்லிட்டேன்............என்னோட வேலை டீல் பேசறது மட்டும் தான்.............உங்களுக்கு கதவு திறந்து விடறது இல்ல..........

உடனே அவரு(பட்டி எனும் அமுத வார்த்தையை சொல்லியவர்!) எங்கிட்ட மன்னிப்பு கேட்டாரு......


ஒரு வழியா விஷயம் முடிவுக்கு வந்தது...........இதுக்கு நடுவுல ஏன் இந்த களேபரமுன்னு translate செய்யும் பெண் உதவியாள் வியட்நாமிய மொழியில் அந்த வியாபாரிக்கு விளக்கியவுடன் அவரு சிரிச்ச சிரிப்பு இருக்கே............ஏன்யா சிர்க்கிறேன்னு கேட்டா........என்னா குமார் நம்ம ஊர்ல ஸ்பெஷல் உணவே நாய்தான்......பேசாம ரெண்டு பேரையும் இங்கயே சமச்சிடுவோமா............அப்படின்னார்

கொசுறு: "இன்னா செய்தாரை ஒருத்தல் ................" அதாங்க அவங்கள இந்திய உணவகத்துக்கு கூட்டி போயி சாப்பிடவச்சது தான்......ஏன் இத்தன நாளு பொறுத்து இந்தப்பதிவ போட்டேன்னா, இன்னிக்கிதான் ஒப்பந்தம் வெற்றின்னு நகல் எனக்கு வந்து சேர்ந்தது(கடமை முக்கியமில்லையா!! எப்படியெல்லாம் பொறுமய சோதிக்கிரானுங்க!). சொல்லுங்க வேற என்னா செய்து இருக்கலாம்?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

27 comments:

சங்கவி said...

Nice... pattei...

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி. நான் பட்டா”பட்டி”

விக்கியுலகம் said...

@சங்கவிஹி ஹி

விக்கியுலகம் said...

@பட்டாபட்டி....உடுப்பு போட்டுட்டு இருக்கறத சொல்றீங்களா ஹி ஹி!!

பட்டாபட்டி.... said...

அட..வியட்நாமிலா இருக்கீங்க?..
அடுத்து பதிவர் மாநாடு உங்க ஊர்ல வெச்சுக்கலாம்..

:-)

விக்கியுலகம் said...

@பட்டாபட்டி....நீங்க சொல்லுங்க.........ஏன்னா நான் வியட்நாம்,கம்போடியா, லாவோசு.....அப்படின்னு போயிட்டு இருப்பேன்!

வைகை said...

தமிழன்..? :)))

MANO நாஞ்சில் மனோ said...

அவனுங்களை என்கிட்டே அனுப்புங்கைய்யா, நீங்க டாப்பைதான் பேத்துவீங்க நான் அந்த....யாளிங்களை பட்டின்னு சொன்ன ஸ்பாட்லேயே அவன் மூக்கு சில்லு சுனாமியா வெளியே வந்திருக்கும்....எங்கலே அவனுக என்கிட்டே அனுப்புலே அவனுகளை.......

விக்கியுலகம் said...

@வைகைதனியா!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோஅனுப்பி வைக்கிறேன் பார்சல்ல ஹி ஹி!

என்னமோ தல இப்பல்லாம் மிருகம் கும்பகர்ண தூக்கம் தூங்குதுன்னு நெனைக்கிறேன் ஹி ஹி

நா.மணிவண்ணன் said...

என்னங்க சொல்லறீங்க சும்மாவா விட்டீங்க அவிங்கள

அஞ்சா சிங்கம் said...

ஏற்காடுல நானும் என் நண்பனும் தனியாக இருக்கிறோம் என்று நினைத்து வம்பிழுத்த நாலு பட்டிகள் .

பின்னால் சரக்கடிக்கும் 18 பெரும் என் நண்பர்கள் என்று தெரிந்த உடன் அவர்கள் வந்த மாருதி ஜென் காரில் பதுங்கி கொண்டார்கள் .

காரோடு சேர்த்து கரப்பான் பூச்சியை கவிழ்த்து போட்டோ மாதிரி கவிழ்த்து போட்டுவிட்டு தான் மதியம் சாப்பிட்டோம் .

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்சிங்கம்னா சும்மாவா பின்ன

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்விட்டாச்சி.........நம்மளால பொழசானுங்கன்னு இருக்கட்டும்........நம்மள நம்பி இந்த ஊருக்கு வந்ததால மூக்கு உடன்சாங்கன்னு இருக்கக்கூடாதுங்களே அதேன்!

மாணவன் said...

ஒன்றும் சொல்வதற்கில்லை.....

சி.பி.செந்தில்குமார் said...

எங்கள் அண்ணன் பட்டா பட்டியை வம்புக்கு இழுத்ததை நான் வன்மையாக கண்டிக்கறேன்.. ( இப்படித்தான் வம்பு சண்டைக்கு அலையனும்) ஹி ஹி

Pari T Moorthy said...

///பட்டி - (என்றால் அன்பு, நன்றி என்றல்லவா அர்த்தம்!?)///
இது எந்த மொழி பாஸ்....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சூப்பரா எழுதி இருக்கீங்க பாஸ்! வெளிநாட்டு அனுபவங்கள் எப்பவுமே சூப்பர்!

டக்கால்டி said...

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்...எனவே பொறுமையுடனும் அன்புடனுமே இருங்கள்...நல்லது நினைப்போம்,நல்லதே நடக்கும்...நாம் அவமானப்பட்டாலும் கூட

Speed Master said...

நேற்று ரோம்போ படம் பார்த்தேன் அது என்ன தீராத வியட்நாம் போர்

இன்னும் அந்த பிர்ச்சனை நடக்கிறதா

அதைப்ப்ற்றி அங்கு இருக்கும் நீங்கள் சில விவரங்களை பதிவிடலாமே

--> புது பதிவிற்கி ஐடியா குடுத்தாச்சு

விக்கியுலகம் said...

@மாணவன்விடுங்க பாஸ் இவனுங்க எப்பவுமே இப்படித்தான்......தன்ன மேதாவின்னு நெஞ்சுக்குற ஆளுங்க ஹி ஹி

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்பட்டா அண்ணன் சொற்படி சீக்கிரத்துல பதிவர் சந்திப்பு ஒன்னு வியத்நாமில நடக்கப்போகுது..சூப்பர் ஸ்டாருக்கும்(அதாங்க நீங்க!) அழைப்பு அனுப்புறோம் வந்துடுங்க

விக்கியுலகம் said...

@Pari T Moorthyபட்டி என்றால் நாய்ன்னு சொல்றாங்க............

நாய விட நன்றி உள்ள ஜீவன் எதுங்க ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@மாத்தி யோசிவெளி நாட்டுல வேலையில இருந்தாலே மக்கள் பல நேரங்கள்ல தன் சுமரியாதய கட்டுப்படுத்திக்க வேண்டி உள்ளதுங்க

விக்கியுலகம் said...

@டக்கால்டிஅவமானம் என்பது தமிழினத்துக்கு ஒன்னும் புதிசில்லீங்களே........ஆனா அத எப்படி எதிராளிக்கு புரியவச்சி அவன மன்னிப்பு கேக்க வைக்கிறோம் என்பதில் தான் நம்ம சுமரியாதை காப்பாத்தப்படுதுங்கிறது என்னோட தாழ்மையான கருத்துங்க

விக்கியுலகம் said...

@Speed Masterபோர் முடிஞ்சி ரொம்ப வருஷம் ஆச்சிங்க........
என்னோடமனைவி அந்த விஷயங்கல பதிவிடுறேன்னு சொன்னதால நான் அதுல இறங்கல..........சீக்கிரத்துல அவங்களோட பதிவுகள நான் இறக்குமதி பண்றேன் ஹி ஹி!!(அவங்களோட அனுமதியோடதான்!)

இன்னொரு விஷயம் இப்போ வளரும் நாடுகள்ல ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு வியத்னாம் மற்றும் சந்தோசமான மக்கள் வாழும் நாடுகள் பற்றிய விஷயத்துல 5 வது இடத்துல இருக்கு வியத்னாம்!

Speed Master said...

//
விக்கி உலகம் said...
@Speed Masterபோர் முடிஞ்சி ரொம்ப வருஷம் ஆச்சிங்க........
என்னோடமனைவி அந்த விஷயங்கல பதிவிடுறேன்னு சொன்னதால நான் அதுல இறங்கல..........சீக்கிரத்துல அவங்களோட பதிவுகள நான் இறக்குமதி பண்றேன் ஹி ஹி!!(அவங்களோட அனுமதியோடதான்!)

இன்னொரு விஷயம் இப்போ வளரும் நாடுகள்ல ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு வியத்னாம் மற்றும் சந்தோசமான மக்கள் வாழும் நாடுகள் பற்றிய விஷயத்துல 5 வது இடத்துல இருக்கு வியத்னாம்!


நன்றி சார்