வணக்கம் நண்பர்களே..............
தடம் மாற தொடங்கிய தக்காளி...........
இதற்க்கு இடையில் கொஞ்ச கொஞ்சமாக கலைமகள் என்னை விட்டு விலகி சென்று கொண்டு இருந்தாள்............அதாங்க படிப்பு எனும் செல்வம் என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தது.............பள்ளி மாத ரேங்குல இருந்து என் பெயர் வெளியேறியது...........
6 வது வகுப்பில் இருக்கும் போது அம்மாவின் சொந்தக்காரர் மூலமாக வெளிநாட்டு மக்கள் கொடுக்கும் படிப்பு உதவித்தொகை எனும் விஷயம் எனக்கு கிடைத்துக்கொண்டு இருந்தது.........அதாவது அதில் ஒரு வருடம் தேர்ச்சி பெறவில்லை என்றால் உதவித்தொகை நிறுத்தப்படும்.............
முதல் வகுப்பில் இருந்தே தமிழ் வழிகல்வியில் பயில ஆரம்பித்து இருந்ததால்......என் தந்தை என்னுடைய தம்பியை தொடக்கத்திலிருந்தே ஆங்கில வழிக்கல்விக்கு சேர்த்து விட்டார்.........எனக்கு வந்த உதவித்தொகையில் இருந்தே அவருக்கு பணம் கட்ட ஆரம்பித்தார்கள்...........
அவர்களை சொல்லி குற்றமில்லை.......ஒரு பிள்ளையாவது ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை தான்...........அதுவுமில்லாமல் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அந்த உதவித்தொகை கொடுத்து வந்தார்கள்..........பிறகு இந்த தமிழ், ஆங்கில வழிப்படிப்பே எங்களை பிரித்தது.......(நானொரு முட்டாப்பய ஹிஹி!)
பத்தாவது பாஸ் ஆயிட்டா போதும்னு கும்பிடாத சாமியில்ல அம்மா(!)......அப்போ அப்பா கடவுள் சித்தம் போல நடக்கட்டும்னு சொல்லிட்டு இருந்தாரு..........அப்பத்தான் எங்க அக்கா எனும் அறிவாளி பெண் எங்கள் குடும்பத்தில் நாட்டாமை போஸ்ட் வாங்கினாள்(மாமாவின் மனைவி)..........
இன்று............
வாத்தியார்.....அவருடைய இடத்தில் நடைபெற்று வந்த கராத்தே வகுப்பு மாஸ்டர கூப்பிட்டார்............இந்த பயலுக்கும் சொல்லிக்கொடு என்றார்..........துட்டு நான் பாத்துக்கறேன் என்றார்...........நீங்க சொல்லிட்டீங்க அதுவே போதும் அய்யா என்றார் அந்த மாஸ்டர்...........அடுத்த நாள் அங்கு பயிற்சி ஆரம்பித்தேன்.........
முதல் வகுப்பிலேயே அந்த கராத்தேகாரியை கண்டேன் அங்கே...........உடல் நடுங்கியது......அவள் பெயர் சித்ரா.......ஹாக்கி சித்ரா என்றார்கள்...........அவள் என்னை பார்த்து முறைத்தாள்.......மற்ற அனைவரும் கொஞ்சம் வசதியானவர்கள்......நான் மட்டும் அந்த வகுப்புக்கேற்ற உடை அணிய இயலாதவன்.........நான் சொல்லியும் கேற்க்காமல் அந்த உடையையும் வாத்தியார் வற்புறுத்தி வாங்கி கொடுத்தார்.........அடிதடி ஆரம்பமானது(வகுப்புலங்க ஹிஹி!)
இதனிடையில் என் அக்கா(மாமி) அடிக்கடி என்னை கண்காணிக்க ஆரம்பித்தாள்......காலையில் நான் எடுக்கும் தற்க்காப்பு பயிற்ச்சியில் இருந்து என்னை தொடர ஆரம்பித்தாள்...........அந்த வாத்தியாரிடம் நேரே சென்று பேசி இருக்கிறாள்.......அவர் என்னை கூப்பிட்டு கல்வி ரொம்ப முக்கியம் என்றார் .......நானும் சரி என்று அப்போதைக்கு மண்டையாட்டினேன்......அப்போதைக்கு படித்து 10 வது பாஸ் செய்தேன்.....
11 வது ஆரம்பித்த புதிதில் ஒரு நாள் லேப் இருக்கும் இடத்தில் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தால்.......உள்ளே ஒரு மாணவியை துரத்திக்கொண்டு இருந்தான் ஒரு காமுக ஆசிரியன்....
தொடரும்................
கொசுறு: கொட்டப்படும் உண்மைகள் படக்கதைகள் அல்ல எனவே......நம்புவது தங்கள் விருப்பம் நண்பர்களே........இனி சனியின் ருத்ர தாண்டவம்.......படங்கள் அருளிய Google.com க்கு நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
24 comments:
தக்காளி.. நீ அடிக்கடி எல்லார்ட்டயும் கோவிச்சுக்கரதா ஒரு பேச்சு இருக்கு.. ஹி ஹி
தக்காளி.. நீ சின்னப்பையனா இருக்கறப்பவும் சித்ரா கிட்ட திட்டு வாங்குனியா ? ஹய்யோ ஹய்யோ
வோட்டிட்டேன்.... ஈஸ்டர் முடிந்து வந்து மீதி கதை கேக்குறேன்.
மாப்ள உன்கிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும் போல. கராத்தே எல்லாம் காத்துட்டு இருக்கே !
கொட்டப்படும் உண்மைகள் படக்கதைகள் அல்ல எனவே... --------------- தக்காளிய நம்பாம இருப்போமா ?
என்னய்யா தமிழ்மணம் வேலை செய்ய மாட்டுது
first vote..comment later hi..hi..
என்னால நம்பவே முடியல
//முதல் வகுப்பிலேயே அந்த கராத்தேகாரியை கண்டேன் அங்கே...........உடல் நடுங்கியது//
அப்பிடியா.....
// சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. நீ அடிக்கடி எல்லார்ட்டயும் கோவிச்சுக்கரதா ஒரு பேச்சு இருக்கு.. ஹி //
நேற்று நீர் எஸ்கேப் ஆகி ஓடினது தெரியும்ய்யா.....
//.இனி சனியின் ருத்ர தாண்டவம்..//
சனி போனா தனியா போகாதே....
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள உன்கிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும் போல. கராத்தே எல்லாம் காத்துட்டு இருக்கே !///
எதுக்கும் ஒரு நாலடி தள்ளி நின்னே பேசுவோம்....
// சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. நீ சின்னப்பையனா இருக்கறப்பவும் சித்ரா கிட்ட திட்டு வாங்குனியா ? ஹய்யோ ஹய்யோ////
ஒரு இடம் பாக்கி இல்லை போல....
போன வாரம் அந்த பொண்ணோட பேரு ரம்யான்னு மெயில் அனுப்பிட்டு இப்ப பேர மாத்தியாச்சா..இப்ப புரியுது..
சுய புராணங்கள் தொடரட்டும்..
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. நீ அடிக்கடி எல்லார்ட்டயும் கோவிச்சுக்கரதா ஒரு பேச்சு இருக்கு.. ஹி ஹி"
>>>>>>>>>>>
திரு.சிபி அவர்களே........இப்ப நான் திட்டுனது உறச்சிதா ஹிஹி!
............................
சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. நீ சின்னப்பையனா இருக்கறப்பவும் சித்ரா கிட்ட திட்டு வாங்குனியா ? ஹய்யோ ஹய்யோ
>>>>>>>>>>>>>>
இப்ப அந்த பெண் உசுரோட இல்லைய்யா மக்கா!
@Chitra
" Chitra said...
வோட்டிட்டேன்.... ஈஸ்டர் முடிந்து வந்து மீதி கதை கேக்குறேன்."
>>>>>>>>>
வருகைக்கு நன்றி சகோ!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
"!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள உன்கிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும் போல. கராத்தே எல்லாம் காத்துட்டு இருக்கே!"
>>>>>>>>>>>>>>
கத்துக்கிட்டவனேல்லாம் வீரன் கெடயாது மாப்ள ஹிஹி!
@அஞ்சா சிங்கம்
" அஞ்சா சிங்கம் said...
என்னய்யா தமிழ்மணம் வேலை செய்ய மாட்டுது"
>>>>>>>
அதுவுமா சிங்கம் ஹிஹி!
@தமிழ்வாசி - Prakash
ok ok
@சசிகுமார்
"சசிகுமார் said...
என்னால நம்பவே முடியல"
>>>>>>>>>
விடுங்க மாப்ள சில முட்டாபசங்க வாழ்க இப்படித்தான் சினிமா கணக்கா இருக்கும் ஹிஹி!
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
//முதல் வகுப்பிலேயே அந்த கராத்தேகாரியை கண்டேன் அங்கே...........உடல் நடுங்கியது//
அப்பிடியா....."
>>>>
உண்மைதான் மக்கா வாங்கிய அடி அப்படி ஹிஹி!
@பாட்டு ரசிகன்
வருகைக்கு நன்றியா மாப்ள!
@! சிவகுமார் !
"! சிவகுமார் ! said...
போன வாரம் அந்த பொண்ணோட பேரு ரம்யான்னு மெயில் அனுப்பிட்டு இப்ப பேர மாத்தியாச்சா..இப்ப புரியுது.."
>>>>>>>>>>>
மாப்ள நல்லா போட்டய்யா பிட்ட ஹிஹி!
Post a Comment