வணக்கம் நண்பர்களே........
கிருஷ்ணமூர்த்திங்கற இளைஞ்சன் இலங்கைல நடந்த நடந்துக்கிட்டு இருக்குற கொடுமையால் மனத்தால் பாதிக்கப்பட்டு உயிர் துறந்து இருக்கான்........இதுக்கு யாரு காரணம்..........நன்கு படித்து பொறி இயல் எனும் விஷயத்துல வேல பாத்துக்கொண்டு இருந்தவனால தன்ன கட்டுப்படுத்திக்க முடியல எனும் போது துயரம் நெஞ்சை அடைத்தது..............
இதுக்கு யாரு காரணம்..........ஒரு உயிரை தன்னுள் சுமந்து பெற்றெடுக்க அந்த தாய் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா.......அந்த குழந்தைக்கு எந்த வித குறைபாடும் இல்லாம பெத்தெடுக்க எத்தன கோயிலு சாமிய வேண்டி இருப்பா..........அந்த குழந்த பிறந்து அம்மான்னு கூப்பிடுற வரைக்கும் தன் உயிரையே கையில புடிச்சி வச்சிட்டு வாழ்ந்து இருப்பா.....அந்த புள்ள நல்லா படிக்க அந்த தகப்பன் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பான்..........
இவ்ளோ விஷயத்த தாண்டி தற்கொலை செய்ய தூண்டிய தலை வலிகளே உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சின்னு ஒன்னு இல்லையா.........மேடை அலங்காரம் என்ற விஷயத்துக்காக நீங்க பேசுற உணர்ச்சி வசப்பட்ட பேச்சி மக்களுக்கு தங்கள் இயலாமைய வெளிச்சம் போட்டு காட்டுது..........
"இழப்பதற்க்கு உயிரைத்தவிர ஒன்றுமில்லை" என்று நினைத்த சகோதரன் தன் தாய், தந்தை, கஷ்டப்படும் குடும்பம் யாவற்றையும் மறந்து...........இனம் எனும் விஷயத்துக்காக தன்னையே மாய்த்துக்கொண்டானே........அவனை தூண்டிய தலைவலிகளே இதை உணர்வீர்களா........
10 சீட்டு கம்மியா கொடுத்துட்டாங்கன்னு ஒப்பாரி வைத்த மா மனிதரே நீர் உணர்வீரா........உணர்ச்சி வசப்பட்டு நீ அழுதபோது தானும் அவ்வாறே அழுத ஒரு சகோதரன் இன்று எரிந்து போனானே......நீங்கள் உணர்சிகள காசாக்கும் வியாபாரிகள் என்பதையரியாத குழந்தை ஒன்று தீயில் கருகியதே......அந்த தாய் மனம் என்ன பாடு பட்டுக்கொண்டு இருக்கும்............
உணர்வீர் செயல் படுவீர்.........உணர்ச்சி வசப்பட்டு உயிர்களை மாய்க்கும் தலைவர்கள் எனும் தலைவலிகளை தூக்கி உடப்பில் போடுவீர் என் மக்களே...........
கொசுறு: நானும் உணர்ச்சிக்கி அடிமையாகிவிட்டேனே நண்பர்களே இது கும்மி பதிவல்ல...........மன்னிப்பீராக........மறந்துவிடாதீர் போலிகளை!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
23 comments:
அப்பா இன்னிக்கு டிபன் வியட்நாம்ல...
சாம்பார்
சட்னி
பொங்கல்
வடை
அப்பாவி மக்கள் மனதை மாற்றி, அவர்களத் தீக் குளிக்கச் செய்வதை விட வைகோ தீக்குளிக்கலாம் தானே?
தங்களின் நலன்களுக்காக பிறரைப் பலிக்கடாக்களுக்கும் இந்த அரசியல்வாதிகளின் இழிவான செயல் தான் இது, இவர்கள் திருந்தவே மாட்டார்களே?
உண்மையிலே வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்...
தலைவரின் உரைகள் புரட்சிக்கு தூண்ட வேண்டுமே தவிர இது போதுன்ற செயல்களை செய்ய தூண்டக்கூடாது...
கிருஷ்ணமூர்த்திக்கு என் அனுதாபங்கள்..
சகோதரர்களே, இவ்வளவு காலமும் உயிரகளை இழந்தது போதும், எமக்கான உங்கள் அன்பிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஆனால் ஈழத்திற்கான ஆதரவு எனும் பெயரில் தங்களையும், தங்கள் பிள்ளைகளையும் வாழ வைக்கத் துடியாய் துடிக்கும் இந்த அரசியல்வாதிகளைப் பற்றி எல்லோரும் உணர வேண்டும். இனிமேல் இத்தகைய செயல்கள் இடம்பெறா வண்ணம் விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
என்னத்த சொல்லறது.
பாட்டு ரசிகன் said...
உண்மையிலே வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்...
தலைவரின் உரைகள் புரட்சிக்கு தூண்ட வேண்டுமே தவிர இது போதுன்ற செயல்களை செய்ய தூண்டக்கூடாது...
கிருஷ்ணமூர்த்திக்கு என் அனுதாபங்கள்..
...... என்னுடைய அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கும்மி பதிவல்ல என்ற பின்னும் கும்மியா?சாரி நண்பர்களே, நண்பரின் உணர்ச்சிகளை புரிய முயற்ச்சிப்போம்.
கிருஷ்ண மூர்த்திக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
யோவ், பாட்டு ரசிகா...உனக்கு வடை, பொங்கல் போட இந்த பதிவு தான் கெடச்சுச்சா... சீரியஸ் பதிவுலயும் வட, கிடன்னு போட்டுக்கிட்டு....ஜாலியா இருக்கிற இடத்துல ஜாலியா இருங்க...
உயிரே உன் விலை என்ன?
பாவம் அந்த உயிரின் விலை அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு மட்டுமே தெரியும்.
ஒரு உயிரின் மதிப்பு இவ்வளவுதானா?
இந்த விசயத்தில் இளைஞர்கள் தொடர்ந்து உயிரை மாய்த்து கொள்வது வருத்தமே.
சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
வருத்தம்
உண்மைதான் இன எழுச்சியை ஊக்குவிக்க உணர்ச்சியை தூண்டிவிடும்படி பேசும் பலர், அதன் பொருட்டு உயிரை விடும் கிருஷ்ணமூர்த்தி போன்றோர்களுக்கு என்ன புரிதல் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்ற கேள்வி எழும்புவதை தவிர்க்க இயலவில்லை நண்பா
வருத்தம் தரும் நிகழ்வு!
உண்மையில் தற்கொலை என்பது கன நிமிடத்தில் உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்படும் முடிவு....கொஞ்சம் ஆற அமர யோசித்தால் இதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை என்று தோன்றும்.
தீக்குளித்து ஒரேடியாய் போனால் வேதனை அவருக்கு இலலை.வெநது உயிர் பிழைத்தால் அவருக்கு மட்டுமா வேதனை.
முத்துக் குமாரின் பெயரை விட இனி கிருஷ்ண மூர்த்தி தான் இன வாத மேடைகளில் கதா நாயகன்!
Post a Comment