Followers

Thursday, April 7, 2011

வாழ்கை தகர்ந்த மனுஷன்!

வணக்கம் நண்பர்களே..............பிறக்கும் போதும் அழுகின்றான்..............ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே.............


இந்த ஊருல பணி நேரம் காலையில் 8 மணியில் இருந்து.............5.30 மணி வரை மட்டுமே........இதில் உணவு இடைவெளி 11.30 இலிருந்து 1 மணி வரை...........மக்கள் சந்தோசத்தை மட்டுமே நினச்சி வாழுறாங்க.........அதுவும் மாலை வேலைநேரம் கழித்து கூடுதல் நேரம் வேல செய்ய சொன்னால் செய்ய மாட்டார்கள்.......(துட்டு அதிகமா குடுத்தாலும்!)


இதன் காரணமாக வெளிநாட்டு கம்பெனிகள் தங்களுக்கு தேவையான மேலதிகாரிகளை தங்கள் சொந்த நாட்டில் இருந்து கொண்டு வருகிறார்கள்...........மற்ற வேலைகளுக்கு மட்டும் உள்ளூர் பணியாளர்களை நியமிக்கிறார்கள்..........அந்த உள்ளூர் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரம் வரையே வேலை செய்வார்கள்..........


ஆங்!...சொல்ல வந்த விஷயத்துக்கு வர்றேன்.................இங்க சில தொழிட்சாலைகளும், நிறுவனங்களும் இந்திய உழைப்பாளர்களை வேலைக்கு கொண்டு வந்து நேரம் கடந்த உழைப்பை உறிஞ்சி வருகிறார்கள்..........அந்த உழைப்பாளர்கள் அதிக பட்சம் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் குவாரியில் பணிபுரியவும் தொழிலாளர்களை அழைத்து வருகிறார்கள் (அதிலும் டிப்ளமோ கிழே படித்தவர்களுக்கு......அதாவது 10 வரை படித்து இருந்தால் அவர்களுக்கு Work Permit கிடைக்காது!)

இதில் முதல் வகையறாவை சேர்ந்தவர்கள் சிலர் என் நண்பர்கள்............அதில் ஒரு நண்பருக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது(சென்னையில்!)..........அவருடைய மனைவி சகிதம் அவர் இங்கு வந்து சேர்ந்தார்........அவருடைய பணியிடம் நகரிலிருந்து 80 கிமீ தூரம்............

மற்றவர்கள் தினமும் நகரத்திலிருந்து அந்த இடத்துக்கு சென்று வந்து கொண்டு இருந்தனர்............இவர் மட்டும் அந்த நிறுவனத்துக்கு அருகிலேயே தனி வீடு எடுத்துவிட்டார்..........தினமும் காலையில் சென்று விட்டு இரவு கிட்ட தட்ட 10 மணி வாக்கில் வீடு திரும்புவார்..........இதற்க்கு இடைப்பட்ட நேரத்தில் அந்த இடம் மிக அமைதியாக இருக்கும்...........நல்ல விஷயம் என்ன வென்றால் இங்கு சட்டம் கடுமையானதால்.......திருடர் பயம் இல்லை..........


இவ்வாறு ஒரு நாள் வேலையிலிருந்து(பைக்கில்) வந்து கொண்டு இருந்தார்......அந்தப்பக்கம் வந்த பெரிய லாரி அவரை இடித்து தூக்கி வீசிவிட்டு ........நிறுத்தாமல் சென்று விட்டது..........எப்படியோ தகவல் அறியப்பட்டு ஆம்புலன்ஸ் வந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை கொண்டு போய் இங்குள்ள பெரிய ஆஸ்பத்திரியில் (பிரெஞ்சு) சேர்த்தனர்...........

தகவல் அறிந்து வந்த காவல் துறை விசாரித்தது........அப்போது யாருமே அவருக்கு துணையாக அங்கு வரவில்லை அவருடைய நிறுவனத்தை சேர்ந்தவர்கள்(தகவல் அறிந்தும்!)............ரொம்ப நேரம் கழித்து......நிறுவனத்தின் பொறுப்புனர் ஒருவர் வந்து பல விஷயங்களை பார்த்து கொண்டார்......

எனக்கு விஷயம் தெரிந்த உடன் அங்கு சென்றேன்....ஏன் அவர் நண்பர்கள் வரவில்லை என்று விசாரித்த பொழுது..........இங்கு இவர்களுக்கு கொடுக்கப்பட்டது 6 மாத வியாபாரம் சம்பந்தப்பட்ட விசா எனவும்............அது முடிந்தும், பல வருடங்களாக அதனை நீட்டித்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.............அரசு ஆணைப்படி........இது தவறு எனவும் மேல் முடிவு எடுக்கப்படபோவதாகவும் தெரிவித்தனர்............


அந்தப்பெண்(அடிபட்டவரின் மனைவி!) கலங்கி நின்று கொண்டு இருந்தார்.......அவருக்கு ஆறுதல் சொல்லினோம்.....அந்த நண்பருக்கு ஒரு கண் பார்வை முழுவதுமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.......பல இடங்களில் ஆபரேஷன் செய்து இருக்கிறார்கள்.......எல்லா மருத்துவ செலவுகளை நிறுவனம் ஏற்று கொண்ட போதும்..........இந்த நிலைக்கு யார் காரணம்?........அடிமைகள் போல நேரம் நில்லாமல் வேலை வாங்கிய நிறுவனமா.......இந்த நிறுவனத்தை நம்பி இங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நம்மவர்களா!

கொசுறு: இந்தியர்களை ஏன் வெளி நாடுகளில் வேலைக்கு எடுக்கிறார்கள் என்பது தெளிவாக புரிந்து கொண்டேன்.....கடின உழைப்பை உறிஞ்சும் நிறுவனகள் அவர்களை அடிமைகளாக்கி வைத்துள்ளது........கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

27 comments:

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகின் உத்தம பத்தினன் வாழ்க... ( இந்த மாதிரி கமெண்ட் போடுன்னு அவர் தான் மிரட்னாரு.. ஹி ஹி )

சி.பி.செந்தில்குமார் said...

இந்தையர்களுக்கு எங்கே போனாலும் அடி விழுதே.. இது சாபக்கேடா?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

வாயா வெங்காயம் ஹிஹி!

வைகை said...

இதற்க்கு விளக்கம் சொல்லி ஒரு பதிவே போடலாம்.. அவ்வளவு உள்ளது.. இதில் இரண்டு பக்கமும் சாதக பாதகம் உள்ளது.. எனக்கு வெகுநாட்களாக இதைப்பற்றி எழுதனும்னு ஆசை.. பத்தவச்சிட்டியே பரட்ட..

சிங்கக்குட்டி said...

இதை சற்று கூர்ந்து கவனித்தால் தவறு நம் மக்கள் பக்கம் தான், சட்ட விதிகளுக்கு புறம்பாக வேலை செய்வது என்பது நம் மக்களின் வெளிநாட்டு மோகத்தையே கட்டுகிறது.

ஹேமா said...

எனக்குத் தெரிந்த மட்டில் இந்தியர்கள் என்றில்லை.பொதுவாக ஆசியர்களின் அதுவும் படித்த சான்றிதழ்கள் ஏதுமில்லாதவர்களின் நிலை வெளிநாடுகளில் கொஞ்சம் இப்படித்தான்.அடிப்படைச் சம்பளத்தோடு சமாளித்துவிடுவார்கள்.
அதுவும் மனிதாபிமானம், சட்டத்துக்குப் பயப்படாத நாடுகளில் இது அதிகமாகவே !

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் இங்கே என்னலேய் நடக்குது....

MANO நாஞ்சில் மனோ said...

// இந்தியர்களை ஏன் வெளி நாடுகளில் வேலைக்கு எடுக்கிறார்கள் என்பது தெளிவாக புரிந்து கொண்டேன்.....கடின உழைப்பை உறிஞ்சும் நிறுவனகள் அவர்களை அடிமைகளாக்கி வைத்துள்ளது........கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது//

பஹ்ரைனிலும் இந்த அநியாயம்தான் நடக்கிறது. குடும்பத்தை நினைத்து சகித்து கொள்கிறோம்....

செங்கோவி said...

பல இடங்களில் இத்தகைய நிலை தான் விக்கி. ஆரம்பத்தில் விசிட் விசாவில் அழைத்துச்ச் என்றாலும், வொர்க் பெர்மிட் விசாவாக மாற்ற வேண்டும். இல்லையெனில் அந்த வேலையைத் தொடர்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்த விசாவுடன் எப்படி ஃபேமிலியைக் கூட்டி வந்தார்?

அஞ்சா சிங்கம் said...

கே.ஆர்.பி.செந்தில் எழுதிய பணம் புத்தகத்தை படித்து பாருங்கள் விடை கிடைக்கும் .எல்லா நாட்டிலேயும் இந்த கொடுமைதான்

பாட்டு ரசிகன் said...

//////
நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////

விவரம் அறிய..

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post.html

பாட்டு ரசிகன் said...

படிக்கும் போதே மனம் பதைக்கிறது..

விக்கியுலகம் said...

@சிங்கக்குட்டி

உள்ளூருல அவனுக்கு நல்ல துட்டு கெடச்சா அவன் ஏன்யா இப்படி வரப்போறான்

விக்கியுலகம் said...

@வைகை
பதிவ போடுய்யா மாப்ள....இதோட இன்னொரு பாகம் போடுறேன் இன்னும் கொடும அது!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

குடும்பம் நமக்கு தூணா சுமையா சொல்லுங்க மாம்

விக்கியுலகம் said...

@ஹேமா

எங்கே போனாலும் அந்த நாட்டு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பலப்படுத்துவதில் நம்மவர் முன்னணியில் உள்ளார்

விக்கியுலகம் said...

@செங்கோவி

இந்த இடத்துல கவனிக்கப்படவேண்டிய விஷயம்.........
அவங்களுக்கு வொர்க் பர்மிட் அளிக்கப்படாது என்று தெரிந்து கொண்டும் அவர் கடந்த 5 வருடங்களாக வேலை பார்த்திருக்கிறார்........
அதே மாதிரி விசாவில் மனைவியையும் அழைத்து வந்து இருக்கிறார்!

விக்கியுலகம் said...

@பாட்டு ரசிகன்

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

செய்திக்கு நன்றி சிங்கம்

இரவு வானம் said...

என்ன செய்வது வறுமையினால் எப்படியாவது பிழைக்கலாம், வெளிநாடு சென்றால் அதிகம் சம்பாதிக்கலாம் என நினைத்து இவ்வாறு மாட்டிக்கொள்கிறார்கள்

Jana said...

;-))

Chitra said...

இந்த நிலைக்கு யார் காரணம்?........அடிமைகள் போல நேரம் நில்லாமல் வேலை வாங்கிய நிறுவனமா.......இந்த நிறுவனத்தை நம்பி இங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நம்மவர்களா!


.......என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

sathish777 said...

படங்களை லார்ஜ் சைஸ் செய்து வெளியிடுங்கள் நன்றாக இருக்கும்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

nice post.,

ஜீவன்சிவம் said...

உண்மைதான். இதில் விஷயம் தெரியாமல் புரோக்கர்களால் ஏமாறுபவர்களும் உண்டு. ஆனால் வருங்காலத்தில் இந்தியாவை நோக்கி வெள்ளையர்கள் வேலைக்காக படையெடுப்பார்கள். இது நிச்சயம்

நிரூபன் said...

வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காக எத்தகைய கல்வியறிவு உள்ளவர்களை எடுக்கிறார்கள், ஏன் நம் நாட்டவர்களைத் தெரிவு செய்கிறார்கள் என்பதனைப் பற்றிய ஒரு அருமையான அலசலை வெளியிட்டுள்ளீர்கள்.

நான் கொஞ்சம் லேட்..

உங்கடை செம ஸ்பீட் பதிவுகளுக்கு வர கொஞ்சம் தாமதமாகும்.
மன்னிக்கவும்.

நிரூபன் said...

இந்திய நாட்டு மக்களை மேற்குலகும், வெளி நாட்டவர்களும் ஏமாற்றும் விதத்தை நன்றாக அலசியுள்ளீர்கள். இதே நிலமை தான் இலங்கையர்களுக்கும்.
அத்தோடு வேலைக்கு எடுக்கும் போதே அக்ரிமெண்ட் போட்டு, அந்த உறுதிப் பத்திரத்தை வைத்தே, குறைந்த சம்பளம் கொடுத்து, பிழைப்பு நடத்தும் நிறுவனங்கள் பற்றியும் அறிந்துள்ளேன்.
இது ஒரு விழிப்புணர்வு பதிவு, தமிழக சஞ்சிகைகள் வாயிலாக மக்களிடம் நிச்சயமாய் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய விடயம் இது.