Followers

Tuesday, April 26, 2011

பிரிவு தேவையா!

நண்பர்களே..........


நேற்றோடு இந்த வருடத்தில் நான் கேட்கும் மூன்றாவது விவாகரத்து விஷயம்.....என் நண்பர்களின் வாழ்கையில்!.....

நான் மன அமைதியை இழக்க காரணமானது இந்த விஷயம்............

மஞ்சு, அரவிந்த், லாவண்யா...........இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்றால்.......அது நான் இவர்கள் மூவருக்கும் நண்பன் அவ்வளவே.........படிப்பில் பண விஷயத்தில் எனக்கும் இவர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசமுண்டு.......ஏனெனில் இவர்கள் அனைவருக்கும் தகப்பன் வழி பணமுண்டு.........

ஆங் விஷயத்துக்கு வருகிறேன்......நேற்று மஞ்சு அனுப்பிய மெயில் என்னால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை..........4 வயது பெண் குழந்தையுடன் தனியே நிற்கும் அவள்........கணவன் பெண் பித்தனாகி போனதால்.......இன்று கோர்ட்டு படி ஏறி இருக்கிறாள் விவாகரத்து கேட்டு......அவனிடம் கொஞ்சம் கூட அந்த குற்ற உணர்வு இல்லை என்று என் மனைவி கூறினாள்.........


அடப்பாவிகளா....அழகு என்பது அழியக்கூடியது என்பதால் தானே இயற்கை நீ வாழும் வரை உலக அழகை ரசித்துக்கொண்டு இரு என்று பல விஷயங்களை படைத்திருக்கிறது.......ரசிப்பதோடு நிற்காமல் அனுபவிக்க ஆசை கொள்வதாலேயே பல குடும்பங்கள் விவாகரத்து கேட்டு பிரிகின்றன.......பிரிவு ஒரு தொடக்கமே முடிவல்ல..........மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க இது என்ன விளையாட்டா........

அவள் கண்ணீர் மல்க பேசியதை என்னாலும் என் மனைவியாலும் ஜீரணித்து கொள்ள இயலவில்லை......

டேய் இனிமே அவரு கிட்ட பேசி பயனில்ல(அப்போதும் அந்த நாதாரிக்கு மரியாதை கொடுக்கிறாள் இவள்!)..........உன்னால எனக்கு உதவ முடியும்னா சொல்லு............என்றாள்...

என்ன இப்படி சொல்லிட்டே.........என்ன பண்ணனும் சொல்லு.......என்றேன்........

எனக்கு நல்ல வேல வாங்கி கொடு என்றாள்....

உனக்கு நல்ல வசதி அப்புறம் என்ன......என்றேன்

இப்போ அப்படியில்ல வீடு மட்டும்தான் இருக்கு........அப்பா கிட்ட இருந்து எல்லா பணத்தையும் என்னோட வாழ்கைய காட்டியே அந்த மனுஷன் வாங்கிட்டாரு.........என்றாள்.....

......(சமீபத்தில் அவளுடைய தந்தையும் இறந்து விட்டார்.....ஏற்கனவே தாய் இல்லாதவள் அவள்!)

சரி ஆனா..........நான் நாட்ட விட்டு வந்து 4 வருஷம் ஆகுது.......நண்பர்கள் கிட்ட கேட்டு பாக்குறேன் என்றேன்............

பரவாயில்ல நீங்க இருக்க நாட்டுலே வாங்கி கொடு என்றாள்......

என் மனைவியும் அதை ஆமோதித்ததால்..."வேலை என் பொறுப்பு" என்றேன்......

அரவிந்த் மற்றும் லாவண்யா இருவருக்கும் இதே போல பிரச்சனைகள் காரணமாக தங்கள் துணைகளை பிரிந்துள்ளனர்.......

என்ன உலகமடா இது.......அந்த அளவுக்கு வாழ்கையில் தோல்வியா.........

சந்தோசம் என்பதே வீட்டில் நடக்கும் ஊடலிலே தான் இருக்கிறது என்பதை ஏன் மறக்கின்றனர்.........

படிப்பும், பணமும் ஏன் இப்படி போட்டி போட்டுக்கொண்டு ஈகோ எனும் ஒண்ணுமில்லாத குமிழியை பெரிதாக்கி பல குடும்பங்களை பிரிக்கிறது......முடியல முடியல........

சில விஷயங்களை தட்டி மாற்ற வேண்டும்.........

சில விஷயங்களை வெட்டி மாற்ற வேண்டும்......

மன விஷயங்களை கட்டி(!) மாற்ற வேண்டும் என்ற சாதாரண ஆறுதல் கூட மறந்து போய் விட்டதா நமக்கு........


இதில் ஆணும் பெண்ணும் இரு பக்கமும் இந்த ஈகோ வினால் நசுக்கப்படுகிறார்கள்............இழப்பது எளிது......அடைவது கடினம்.........அதுவும் அன்பு உலகத்தில் எளிதில் கிடைக்காத விஷயம்..........அதை நம்முடன் எப்போதும் வைத்து இருப்பதே வாழ்வின் வெற்றி.....இதில் என்ன......"நான்" என்ற கொடூர புத்தி..........

கொசுறு: வீட்டில் அன்பான வாத்தைகளால்(!) சொன்னதால், என்னுடைய சென்னை என்னை போடா வெண்ணை என்ற தொடர் நிறுத்தப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்(அம்மா அய்யோ!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

37 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>வீட்டில் அன்பான வாத்தைகளால்(!) சொன்னதால், என்னுடைய சென்னை என்னை போடா வெண்ணை என்ற தொடர் நிறுத்தப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்(அம்மா அய்யோ!)

தக்காளிக்கு செம மாத்து போல சம்சாரம் கிட்ட ஏஹே ஹேஹேஹ்

சி.பி.செந்தில்குமார் said...

என்ன? இன்னைக்கு பதிவு டீசண்ட்டா இருக்கு?

பாலா said...

ஈகோவை விட்டோழிப்பதே இதன் சரியான தீர்வு. கரெக்டா சொன்னீங்க...

செங்கோவி said...

கண் போன போக்கிலே மனதை அலையவிட்டால் கஷ்டம் தான்..வெண்ணை தொடரு அவ்வளவு தானா..அதுசரி, தங்கமணி சொன்னா மீற முடியுமா..

Carfire said...

//////வீட்டில் அன்பான வாத்தைகளால்(!) சொன்னதால், என்னுடைய சென்னை என்னை போடா வெண்ணை என்ற தொடர் நிறுத்தப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்/////

தல நல்லது செய்யும் போது சமுதாயத்துல எதிர்ப்பு அதிகமா தான் இருக்கும் இருந்தாலும் நம்ம எடுத்த காரியத்தை பாதியில நிறுத்தக்கூடாது...
இப்போ நீங்க அடி வாங்குற மேட்டர கூட தனிய ஒரு பதிவ போடலாம் பாருங்க.....

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...
என்ன? இன்னைக்கு பதிவு டீசண்ட்டா இருக்கு?"

>>>>>

நான் எப்பவும் அப்படித்தான் உன்னால தான் அந்நியனா மாறினேன் சில நாள்கள் ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...

>வீட்டில் அன்பான வாத்தைகளால்(!) சொன்னதால், என்னுடைய சென்னை என்னை போடா வெண்ணை என்ற தொடர் நிறுத்தப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்(அம்மா அய்யோ!)

தக்காளிக்கு செம மாத்து போல சம்சாரம் கிட்ட ஏஹே ஹேஹேஹ்"

>>>>>>>>>>>

திரு சிபி உங்களுக்கு ஏன் இப்படி ஒரு ஆனந்தம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@பாலா

"பாலா said...

ஈகோவை விட்டோழிப்பதே இதன் சரியான தீர்வு. கரெக்டா சொன்னீங்க..."

>>>>>>>>>

உண்மை அதுதானுங்களே நண்பா!

விக்கியுலகம் said...

@செங்கோவி

"செங்கோவி said...

கண் போன போக்கிலே மனதை அலையவிட்டால் கஷ்டம் தான்..வெண்ணை தொடரு அவ்வளவு தானா..அதுசரி, தங்கமணி சொன்னா மீற முடியுமா.."

>>>>>>>

மாப்ள வீடுன்னா அப்படித்தான் சமாளிப்போம் ஹிஹி...சீக்கிரத்துல தொடர் வரும்!

விக்கியுலகம் said...

@Carfire

"தல நல்லது செய்யும் போது சமுதாயத்துல எதிர்ப்பு அதிகமா தான் இருக்கும் இருந்தாலும் நம்ம எடுத்த காரியத்தை பாதியில நிறுத்தக்கூடாது...
இப்போ நீங்க அடி வாங்குற மேட்டர கூட தனிய ஒரு பதிவ போடலாம் பாருங்க....."

>>>>>>

யோவ் மாப்ள நீயும் விளங்கிடும் ஹிஹி!

வீட்ல எலியா இருக்கறது ஒரு சந்தோசம்யா ஹிஹி!

# கவிதை வீதி # சௌந்தர் said...

தொடர் வேலை இருப்பதால் விரிவான மற்றும் நிறைய பின்னுட்டம் இடமுடியவில்லை....

# கவிதை வீதி # சௌந்தர் said...

வாழ்க்கையில் யாவரும் புரிந்து நடந்துக்கொள்ள பழகிவிட்டால் பிரிவு என்றுமே வராது....

நல்ல பதிவு..

sathish777 said...

ஊ டல் இருந்தால்தான் கூடல் சுகமாக இருக்கும்

sathish777 said...

வீட்டில் அன்பான வாத்தைகளால்(!) சொன்னதால், என்னுடைய சென்னை என்னை போடா வெண்ணை //ரொம்ப துப்பிட்டாங்கலான்னே...ஹிஹி

ரேவா said...

இன்று சர்வ சாதரணமாய் நடக்கும் பிரிவின் விசயங்களை வலியோடு சொல்லி உள்ளீர்கள் சகோ...கணவன் மனைவிக்கும் இருக்கும் ஈகோ விசயங்களை விட்டொழிந்தால் இது போன்ற விஷயங்கள் நடக்காது....ஆனாலும் இவர்கள் பிரிவால் வாடுவது என்னமோ, ஒன்றும் அறியா பிஞ்சுகள் தான்..

விக்கியுலகம் said...

"# கவிதை வீதி # சௌந்தர் said...

தொடர் வேலை இருப்பதால் விரிவான மற்றும் நிறைய பின்னுட்டம் இடமுடியவில்லை...."

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள....கடமை முக்கியம் நன்றி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"ஆர்.கே.சதீஷ்குமார் said...

வீட்டில் அன்பான வாத்தைகளால்(!) சொன்னதால், என்னுடைய சென்னை என்னை போடா வெண்ணை //ரொம்ப துப்பிட்டாங்கலான்னே...ஹிஹி"

>>>>>>>>>>>.

வருகைக்கு நன்றி ஏன்யா இப்படி போட்டு உடைக்கிரீறு ஹிஹி!

விக்கியுலகம் said...

@ரேவா

"ரேவா said...

இன்று சர்வ சாதரணமாய் நடக்கும் பிரிவின் விசயங்களை வலியோடு சொல்லி உள்ளீர்கள் சகோ...கணவன் மனைவிக்கும் இருக்கும் ஈகோ விசயங்களை விட்டொழிந்தால் இது போன்ற விஷயங்கள் நடக்காது....ஆனாலும் இவர்கள் பிரிவால் வாடுவது என்னமோ, ஒன்றும் அறியா பிஞ்சுகள் தான்"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ....நீங்கள் சொல்வதுதான் நிதர்சனமும்கூட!

FOOD said...

நல்ல பகிர்வு. நாலு பேரை யோசிக்க செய்யும்.

FOOD said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.உறவுகள் உரிய வழியில் பயணப்படவில்லை.

MANO நாஞ்சில் மனோ said...

//என்ன? இன்னைக்கு பதிவு டீசண்ட்டா இருக்கு?
//

உருப்புடுவியா.....

MANO நாஞ்சில் மனோ said...

//சந்தோசம் என்பதே வீட்டில் நடக்கும் ஊடலிலே தான் இருக்கிறது என்பதை ஏன் மறக்கின்றனர்.........//கரெக்ட்டு மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//கண் போன போக்கிலே மனதை அலையவிட்டால் கஷ்டம் தான்..வெண்ணை தொடரு அவ்வளவு தானா..அதுசரி, தங்கமணி சொன்னா மீற முடியுமா..//

என்னாது வெண்ணையா.....

MANO நாஞ்சில் மனோ said...

// சி.பி.செந்தில்குமார் said...
>வீட்டில் அன்பான வாத்தைகளால்(!) சொன்னதால், என்னுடைய சென்னை என்னை போடா வெண்ணை என்ற தொடர் நிறுத்தப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்(அம்மா அய்யோ!)

தக்காளிக்கு செம மாத்து போல சம்சாரம் கிட்ட ஏஹே ஹேஹேஹ்///


என்னய்யா எப்பவும் வடை வாங்கிட்டே இருக்கீரு, ஏதும் உள்குத்து இல்லையே...

MANO நாஞ்சில் மனோ said...

//தொடர் வேலை இருப்பதால் விரிவான மற்றும் நிறைய பின்னுட்டம் இடமுடியவில்லை....//

பாட்டுரசிகன் உங்களை தேடிட்டு இருக்கார்....

MANO நாஞ்சில் மனோ said...

//சந்தோசம் என்பதே வீட்டில் நடக்கும் ஊடலிலே தான் இருக்கிறது என்பதை ஏன் மறக்கின்றனர்.........//

கரெக்ட்டு மக்கா....

ராஜி said...

இதில் ஆணும் பெண்ணும் இரு பக்கமும் இந்த ஈகோ வினால் நசுக்கப்படுகிறார்கள்............இழப்பது எளிது......அடைவது கடினம்.........அதுவும் அன்பு உலகத்தில் எளிதில் கிடைக்காத விஷயம்..........அதை நம்முடன் எப்போதும் வைத்து இருப்பதே வாழ்வின் வெற்றி.....இதில் என்ன......"நான்" என்ற கொடூர புத்தி.......

>>
சரியான வரிகள. நல்லதொரு பகிர்வு. காயமுற்ற உங்கள் தோழியின் மனது விரைவில் தேறிவர ஆண்டவனை பிரார்த்திறேன்.

விக்கியுலகம் said...

@FOOD

"FOOD said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.உறவுகள் உரிய வழியில் பயணப்படவில்லை."

"FOOD said...

நல்ல பகிர்வு. நாலு பேரை யோசிக்க செய்யும்"

>>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பரே...என்னமோ தோணிச்சி உளறிட்டேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

வாய்யா மனோ......உங்க கருத்துகளுக்கு நன்றி மக்கா!

விக்கியுலகம் said...

@ராஜி

வருகைக்கு நன்றி சகோ....உங்க கருத்துகளுக்கும் நன்றி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வணக்கம் மாப்ள...

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வாங்க மாப்ள வாங்க!

ரஹீம் கஸாலி said...

சரியான புரிந்துணர்வு இல்லாததே விவாகரத்திற்கு காரணம்

தமிழ்வாசி - Prakash said...

மாமு பதிவு நல்லாயிருக்கு. ஆனா விஷயம் மனம் புரிதலை பற்றியது. இந்த காலத்தில் விவகாரத்து ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளாததாலேயே செய்யப்படுகிறது. விவகாரத்து வராமல் இருக்க யார் புரிந்து கொள்ள வேண்டும்?

டக்கால்டி said...

Present Sir...Padichuttu varen

டக்கால்டி said...

Naveena Judge annan vikki vaazhga...

Speed Master said...

//கொசுறு: வீட்டில் அன்பான வாத்தைகளால்(!) சொன்னதால், என்னுடைய சென்னை என்னை போடா வெண்ணை என்ற தொடர் நிறுத்தப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்(அம்மா அய்யோ!)

அடி பலமே

பிளாக் சுத்தமா இருக்கு ரத்த கறைய துடச்சீங்களா