Followers

Wednesday, April 27, 2011

தனித்திரு ஆனா!.....பழிக்காதே!

வணக்கம் நண்பர்களே,


வெளி நாடுகளில் குடும்பத்துக்காக தன்னை எரித்து உழைத்துக்கொண்டு இருக்கும் உள்ளங்களில் அடிக்கடி தோன்றும் விஷயம் "என்னா இருந்தாலும் சொந்த ஊருல இருக்காப்போல வருமா" - எனும் ஏக்கம் வந்து செல்லும். அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பல பேருக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். வீடு மனைவி மக்களைப்பிரிந்து வெளி நாடுகளில் வேலை நிமித்தமாக ஓடிக்கொண்டு இருக்கும் நெஞ்சங்கள் சுமந்து கொண்டிருக்கும் வலிகள் ஏராளம். சரி விஷயம் என்னான்னு கேக்குறீங்களா சொல்றேன் .............


பொதுவா நான் இதுவரை மத உணர்வுகளை பற்றி பதிவிட்டதில்லை. ஆனால் அதே சமயம் யாராவது அது சம்பந்தமாக பதிவிட்டால் படிக்க தவறுவதில்லை. எனக்கு என்னா தோணுதுன்னா............இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள் சார்ந்து இருக்கும் மதத்தை தாக்குவதை பெருமையாக கருதுகிறார்களோ என்று தோன்றியதின் விளைவே இந்தப்பதிவு.


ஆத்திகம், நாத்திகம் - இந்த விஷயத்துக்கு என் கருத்து - எனக்கு சாமி கும்புட தோணுது கும்புடறேன், உனக்கு புடிக்கல கும்பிடாத அவ்ளோதான். இந்த பெரும் விஷயங்களில் நான் கொண்ட கருத்து. அதை விடுத்து எப்போதுமே என்னமோ சாமி கும்பிடறவன் எல்லாம் முட்டாள் மாதிரி சித்தரிப்பது எதற்க்கு என்று புரியவில்லை.

மனிதனுக்கு ஒருவித பயம் ஏதாவது ஒரு விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதாலோ அல்லது நமக்கு ஒளி, ஒலி, தண்ணீர், காற்று எனும் விஷயங்களை தரும் இயற்க்கையை வணங்குவது தவறில்லை என்பதாலோ கூட கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கலாம்(ஒரு சிந்தனை தான்!).

யாராவது நமக்கு ஒரு சிறு உதவி செய்தாலே அவருக்கு நன்றி சொல்லும் மரபு நம்மிடம் உண்டு. எவ்ளோ பெரிய உதவிகளை செய்து வரும் இயற்கையை அவரவர்க்கு பிடிக்கும் வழியில் வழி படுகிறோம். ஆனால் அதனையே தொழிலாக கொள்பவர் சிலர்(இது தனிப்பாதை!).


சமத்துவம் என்பது அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் இருத்தலே என்பது எனது தாழ்மையான கருத்து. அதை விடுத்து நம்மை நாமே தாக்கிக்கொள்வதில் என்னா பெருமை(!?). தயவு செய்து முடிந்தவரை கருத்துகளை கூறும்போது அறிவுரை சொல்வது போல் அல்லாமல் எனக்கு இப்படி தோன்றுகிறது என்பது போல் கூறுவது நல்லது என்று நினைக்கிறேன்.


கடவுள் மறுப்பு கொள்கை உடையோர் கூட இப்படி கருத்துகள் கூறுவதில்லை. மாறாக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த அறிவாளிகள் மட்டுமே தான் தோன்றித்தனமாக எதிரிகளைப்போல் மோதிக்கொள்கின்றனர். வேண்டாமே, அமைதியாய் இருப்பதே பெரிய வலிமை என்று யாரோ சொன்னார்கள். தயவு செய்து இனி பதிவிடும்போது(மத விஷயங்கள்!) என் கருத்தையும் நண்பர்கள் கொஞ்சம் பரிசீலனை செய்தல் நன்று என்பது என் தாழ்மையான வேண்டுதல்.

ஏனெனில் காலம் கடந்து வயது அதிகமாகும் போது வெளியில் சொல்ல முடியாமல் நித்தம் கடவுளை திருட்டுத்தனமாக வழி படும் நல்லவர்கள் இப்பூமியில் பெரிய பதவிகளில் உள்ளதையும் நினைவில் கொள்வீர்களாக!

கொசுறு: இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே. 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

36 comments:

sathish777 said...

புது வீடு கட்டலாமா..மாமா அடிக்கடி பதிவு போடலாமா

sathish777 said...

தமிழ்மணத்துல இணைச்சுட்டேன்

சசிகுமார் said...

super

ரம்மி said...

நாத்திகம் இந்திய மதத்தின் ஒரு அங்கமே! ஏனெனில் ஆத்திகவாதியை விட, நாத்திகவாதியே மதத்தைப் பற்றி அதிகம் அறிய ஆசைப்படுகிறான்!

ரத்தம் சூடாக இருக்கும் போது, மதம் மட்டுமல்ல எதையும் மதிக்காத போக்கு! - இதற்கு விதி வில்க்கு மிகச் சிலரே!

அங்கங்கள் தளர ஆரம்பிக்கும் போது, அகங்காரங்களும் விலகி, சிவமே அன்பாகி விடுகிறது!

விக்கியுலகம் said...

@சசிகுமார்

thanks nanbaa

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"தமிழ்மணத்துல இணைச்சுட்டேன்"

>>>>

வருகைக்கும் இணைத்ததுக்கும் நன்றி நண்பரே...
.........................

புது வீடு கட்டலாமா..மாமா அடிக்கடி பதிவு போடலாமா!

>>>>>>>>>

உங்கள விடவா ஹிஹி

பட்டாபட்டி.... said...

இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.
//


ஓ.கே..


கடவுள் சாய்பாபா வாழக... வளர்ர்ர்ர்ர்ர்ர்க..

விக்கியுலகம் said...

@ரம்மி

"ரம்மி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நாத்திகம் இந்திய மதத்தின் ஒரு அங்கமே! ஏனெனில் ஆத்திகவாதியை விட, நாத்திகவாதியே மதத்தைப் பற்றி அதிகம் அறிய ஆசைப்படுகிறான்!

ரத்தம் சூடாக இருக்கும் போது, மதம் மட்டுமல்ல எதையும் மதிக்காத போக்கு! - இதற்கு விதி வில்க்கு மிகச் சிலரே!

அங்கங்கள் தளர ஆரம்பிக்கும் போது, அகங்காரங்களும் விலகி, சிவமே அன்பாகி விடுகிறது!"

>>>>>>>>

உங்க கருத்துக்கள் உண்மையின் பிரதிபிம்பங்களே நன்றி நண்பா!

விக்கியுலகம் said...

@பட்டாபட்டி....

"பட்டாபட்டி.... said...

இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.
//


ஓ.கே..


கடவுள் சாய்பாபா வாழக... வளர்ர்ர்ர்ர்ர்ர்க.."

>>>>

நடத்துய்யா விளங்கிடும் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//தயவு செய்து முடிந்தவரை கருத்துகளை கூறும்போது அறிவுரை சொல்வது போல் அல்லாமல் எனக்கு இப்படி தோன்றுகிறது என்பது போல் கூறுவது நல்லது என்று நினைக்கிறேன்.//


சரிதான்....

கந்தசாமி. said...

////மனிதனுக்கு ஒருவித பயம் ஏதாவது ஒரு விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதாலோ அல்லது நமக்கு ஒளி, ஒலி, தண்ணீர், காற்று எனும் விஷயங்களை தரும் இயற்க்கையை வணங்குவது தவறில்லை என்பதாலோ கூட கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கலாம்(ஒரு சிந்தனை தான்!).

/// இந்த விடயத்தில் நானும் உடன் படுகிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

//சமத்துவம் என்பது அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் இருத்தலே என்பது எனது தாழ்மையான கருத்து. //


என் கருத்தும் அதேதான்....

MANO நாஞ்சில் மனோ said...

//ஏனெனில் காலம் கடந்து வயது அதிகமாகும் போது வெளியில் சொல்ல முடியாமல் நித்தம் கடவுளை திருட்டுத்தனமாக வழி படும் நல்லவர்கள் இப்பூமியில் பெரிய பதவிகளில் உள்ளதையும் நினைவில் கொள்வீர்களாக!//

அட கொக்காமக்கா அங்க சுத்தி இங்கே சுத்தி அய்யா அடிமடியிலேயே கையை வச்சிட்டியே......

விக்கியுலகம் said...

@கந்தசாமி.

வருகைக்கு நன்றி நண்பரே!

நிரூபன் said...

"என்னா இருந்தாலும் சொந்த ஊருல இருக்காப்போல வருமா" - எனும் ஏக்கம் வந்து செல்லும். அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பல பேருக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.//

நம்ம சகோவுக்கு வீட்டு ஞாபகம் வந்திட்டுப் போல இருக்கே.

MANO நாஞ்சில் மனோ said...

//கொசுறு: இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே. //


நடத்துங்க மக்கா நடத்துங்க....

MANO நாஞ்சில் மனோ said...

ஓ.கே..


கடவுள் சாய்பாபா வாழக... வளர்ர்ர்ர்ர்ர்ர்க.."

>>>>

நடத்துய்யா விளங்கிடும் ஹிஹி!///

வெளங்கிட்டு இருக்கு.....

நிரூபன் said...

இந்தப் பதிவின் கருத்துக்கள் நியாயமானவையே, மனிதனது நம்பிக்கைகளை விட,
மனிதனுக்கு ஒரு விடயத்தைத் திணித்து,
அதனூடாகப் பணம் ஈட்டுவதிலே இந்து மதத்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தொழிற்படுகின்றன.

இதனை நானும் ஓர் இந்து எனும் வகையில் வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறேன்.

! சிவகுமார் ! said...

இயக்குனர் மணிவண்ணன் ஒரு முறை அளித்த பேட்டியில் தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றும் ஆனால் அதே நேரத்தில் இறை நம்பிக்கை உள்ளவர்களை மட்டப்படுத்தி பேசுவதை விரும்பாதவர் என்றும் சொல்லி இருந்தார். நியாயமான பேச்சு. இறைவன் இருக்கின்றான். அதை உணர்வின் மூலமே அறிய முடியும். இதில் எத்தனை நாட்கள் விடாமல் வாதம் செய்தாலும் முடிவு கிடைக்காது. நான் 100% இறைவனை நம்புகிறேன். இறைவன் பெயரால் நடக்கும் தவறுகளை கண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//ஏனெனில் காலம் கடந்து வயது அதிகமாகும் போது வெளியில் சொல்ல முடியாமல் நித்தம் கடவுளை திருட்டுத்தனமாக வழி படும் நல்லவர்கள் இப்பூமியில் பெரிய பதவிகளில் உள்ளதையும் நினைவில் கொள்வீர்களாக!//

அட கொக்காமக்கா அங்க சுத்தி இங்கே சுத்தி அய்யா அடிமடியிலேயே கையை வச்சிட்டியே......"

>>>>>>>>>

ஹிஹி சரியா சரி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"நிரூபன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

"என்னா இருந்தாலும் சொந்த ஊருல இருக்காப்போல வருமா" - எனும் ஏக்கம் வந்து செல்லும். அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பல பேருக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.//

நம்ம சகோவுக்கு வீட்டு ஞாபகம் வந்திட்டுப் போல இருக்கே."

>>>>>>>>>

உண்மைதான்யா ஹிஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"நிரூபன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்தப் பதிவின் கருத்துக்கள் நியாயமானவையே, மனிதனது நம்பிக்கைகளை விட,
மனிதனுக்கு ஒரு விடயத்தைத் திணித்து,
அதனூடாகப் பணம் ஈட்டுவதிலே இந்து மதத்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தொழிற்படுகின்றன.

இதனை நானும் ஓர் இந்து எனும் வகையில் வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறேன்"

>>>>>>>>>

தொழிலாக ஒரு க்ரூப் செயல் படுகிறது.......அவர்களை தாக்குவதாக நினைத்து பல நல்ல உள்ளங்களை காயப்படுத்துவது ஞாயமில்லை மாப்ள!

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

"! சிவகுமார் ! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இயக்குனர் மணிவண்ணன் ஒரு முறை அளித்த பேட்டியில் தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றும் ஆனால் அதே நேரத்தில் இறை நம்பிக்கை உள்ளவர்களை மட்டப்படுத்தி பேசுவதை விரும்பாதவர் என்றும் சொல்லி இருந்தார். நியாயமான பேச்சு. இறைவன் இருக்கின்றான். அதை உணர்வின் மூலமே அறிய முடியும். இதில் எத்தனை நாட்கள் விடாமல் வாதம் செய்தாலும் முடிவு கிடைக்காது. நான் 100% இறைவனை நம்புகிறேன். இறைவன் பெயரால் நடக்கும் தவறுகளை கண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை"

>>>>>>>>>

உங்க கருத்துக்கள் உண்மையே நன்றி மாப்ள!

அஞ்சா சிங்கம் said...

இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல...........
//////////////////////////////////
அப்படியா?

காலம் கடந்து வயது அதிகமாகும் போது வெளியில் சொல்ல முடியாமல் நித்தம் கடவுளை திருட்டுத்தனமாக வழி படும் நல்லவர்கள் இப்பூமியில் பெரிய பதவிகளில் உள்ளதையும் நினைவில் கொள்வீர்களாக!./
//////////////////////////////////

அய்யய்யோ இந்த ஆளு கலைஞ்சர் மனசை புண் படுத்திட்டாரு ...................

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.

தக்காளி கலக்கறான்

# கவிதை வீதி # சௌந்தர் said...

வலிக்காம அடிக்கறிங்க...

நாம் ரொம்ப லேட்டு...

இருந்தாலும் வந்துட்டோம்ல்ல..

ரஹீம் கஸாலி said...

ஆஹா...புது டிசைனிங் கலக்கல்

Mahan.Thamesh said...

ஏனெனில் காலம் கடந்து வயது அதிகமாகும் போது வெளியில் சொல்ல முடியாமல் நித்தம் கடவுளை திருட்டுத்தனமாக வழி படும் நல்லவர்கள் இப்பூமியில் பெரிய பதவிகளில் உள்ளதையும் நினைவில் கொள்வீர்களாக!
இதுவும் சரிதான் .
SUPER

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் ரொம்ப லேட்டு மாப்ள..

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
>>இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.

தக்காளி கலக்கறான்///


உண்மைய சொல்லுய்யா நீ பதிவை படிச்சியா.....???

நா.மணிவண்ணன் said...

///இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.///

எப்படிலாம் தப்பிக்கவேண்டியதிருக்கு............. இல்லனே

சென்னை பித்தன் said...

//சமத்துவம் என்பது அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் இருத்தலே என்பது எனது தாழ்மையான கருத்து. அதை விடுத்து நம்மை நாமே தாக்கிக்கொள்வதில் என்னா பெருமை(!?). தயவு செய்து முடிந்தவரை கருத்துகளை கூறும்போது அறிவுரை சொல்வது போல் அல்லாமல் எனக்கு இப்படி தோன்றுகிறது என்பது போல் கூறுவது நல்லது என்று நினைக்கிறேன்.//
அருமையாகச் சொன்னீர்கள்!

தமிழ்வாசி - Prakash said...

ஹே...மாம்ஸ்...வலைப்பூ சட்டை நல்லாயிருக்கு

செங்கோவி said...

ரைட்டு!

அந்நியன் 2 said...

உங்கள் மனதில் உள்ளதை சொல்லி விட்டிர்கள் வாழ்த்துக்கள்.

என் மனதில் உள்ளதையும் சொல்லி விடுகிறேன்.

நாம் எந்த மதத்தில் இருந்தாலும் முதலில் எல்லோரையும் மனிதராக மதிக்க கற்றுக் கொள்ளனும்.

எனக்கு அல்லாஹ் கடவுள்.
ரமேஷுக்கு சிவன்தான் கடவுள்.
இன்னும் சிலருக்கோ இயற்கைதான் கடவுள்.

ஆக நாம் கருத்துக்களை பிறர் மனம் நோகாதபடி பகிர்வதர்க்கு முயற்சி செய்வதுதான் ஒவ்வொரு இந்தியனின் கடமை.

திரு குரான்,இராமாயணம்,பைபிள்,எல்லாவற்றையும் ஆராயுங்கள் எது உங்கள் வாழ்விற்க்கு ஏற்றதோ அதை தேர்ந்தெடுங்கள்.

டக்கால்டி said...

அண்ணே அருமை...நான் எழுதம்னு நெனச்சது..நீங்க முந்திகிட்டீங்க...