Followers

Monday, April 18, 2011

சென்னை என்னை போடா வெண்ணை என்றது! -1

வணக்கம் நண்பர்களே............



என்னுடைய அனுபவங்களை பதிய வைக்கிறேன்........உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பதிலுரை இடவும்.......(உனக்கு எப்பவுமே தமாசு தக்காளி ஹிஹி!)

காலம்: கலி காலம்....


8 வது வகுப்பிலிருந்தே எதோ ஒரு வேலை செய்து என் சொந்த செலவுகளுக்கு வைத்து கொள்வது வழக்கமாகியது(தந்தை வேண்டாம் என்றாலும்!).......அப்போ காட்டன் துணிகளுக்கு அயர்ன் போடும் வேலை ரொம்ப அதிகமா நடந்துட்டு இருந்துது........அம்மாவுக்கு தெரிஞ்சவங்க என்னைப்பார்த்து....ஏய்யா கண்ணு லீவு விட்டா வாய்யா கொஞ்சம் துட்டு கெடைக்கும் என்றார்கள்..........(ஊரில் இருந்த மரியாதைக்கும் நாங்க சென்னையில் வாழ்ந்த இந்த வாழ்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம்!)

நானும் வீட்டில் சொல்லிவிட்டு செல்வேன்.........வாரத்தில் மூன்று முறை அந்த வேலைக்கு சென்று வந்தேன்.........ஒரு துணிக்கு 50 பைசா தருவார்கள்......அதுவும் அந்த துணியில் ஒரு வித சாய வாடை அடிக்கும்......முதலில் சந்தோஷமாக வேலைக்கு வந்த பலர் அதிகமாக ஜலதோஷம் கண்டு நின்று விட்டார்கள்..........

அதிலும் நான் ஜெயித்ததாக நினைத்து கொண்டேன்(ஒரு குழந்தைக்கு தாய் தந்தை கொடுக்கும் சிறந்த சொத்து ஆரோக்கியமான உடல் மட்டுமே!).........அப்பா அடிக்கடி சொல்வார்.......தம்பி என்னால உனக்கு பல விஷயங்கள் வாங்கி கொடுக்க முடியல.....இருந்தாலும் நீயே இந்த வயசுல போயி சம்பாதிக்கறது கஷ்டமா இருக்கு....அந்த துட்டு உன்னோட உழைப்பு......அத நெனச்சிக்கிட்டு படிப்ப விட்டுடாதே என்பார்........அதே நேரம் உடம்பு முடியாம படுத்துடப்போறே ....பாத்துக்க சுவரு இருந்தாத்தான் சித்திரம் வரைய முடியும்....உடல் ரொம்ப முக்கியம் என்பார்......(இப்போ குடலு முக்கியம்!)

அந்த நேரத்தில்........வீட்டுக்கும், எங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் நான் ரொம்ப நல்ல பிள்ளையாக தெரிந்தேன்.....காரணம் நம்ம ரோலு அப்போ நல்லா இருந்துது(இப்போ டவுட்டு!) தெய்வ பக்தி என்பது..என்தாயால் எனக்கு புகட்டப்பட்டது(திணிக்கப்பட்டதோ!)......தினமும் காலையில் 5 மணிக்கு கிரவுண்டில் இருப்பேன்.......கிட்டத்தட்ட 8 கிமீ ஓட்டம் பிறகு குளியல்.....வேட்டியை(இன்று வரை கைலி பிடிக்காது!) கட்டிக்கொண்டு கோயிலுக்கு சென்று வருவேன்....


பல நண்பர்களின் ஏச்சுக்கு ஆளான சமயம் அது....பாருடா அந்த புள்ளைய......காலையில எழுந்து என்னமா நடந்துக்குது.........நீயும் இருக்கியே என்று பல நண்பர்களை நொறுக்கிதள்ளும் அப்பாக்கள்(ஹிஹி!)......அதைக்காணும் போது ஒரு வித இறுமாப்பு.....மாலையில் கிடைத்த வேலைகளை செய்வேன்.....என் தாய்க்கு உடலில் 6 அறுவை சிகிச்சைகள் என்பதால்.........அவர்களால் துணி தோய்ப்பது......வீட்டு சாமன்களை கழுவி எடுப்பது என்பது கடுமையான போராட்டம்.......


பல குடும்பங்கள் இருந்த காம்பவுண்ட்டில் பல பெண் நண்பிகளுக்கு இடையே நான் இந்த வேலைகளை செய்வேன்....பலர் கிண்டலடிப்பார்கள்...இவன் பொண்ணா பொறக்க வேண்டியவன் என்று......என்னை பொறுத்தவரை அந்த பேச்சுக்கள் என்னை இன்னும் உற்சாகப்படுத்தவே செய்தன.....காரணம் என்தாய், தந்தை இருவரும் பாவம், அவ்ளோ நல்லவங்க மற்றும் வீட்டில் நடக்கும் கஷ்டத்தை வெளியில் காட்டிக்கொள்ளாத சாமர்த்தியமான வாழ்கையை எண்ணி வியந்ததால்....

தினமும் ஓடும் மைதானத்துக்கு பக்கத்தில் ஒரு வீடு உண்டு......வாத்தியார் என்று பலரால் அன்போடு அழைக்கப்பட்ட ஒருவர் வாழ்ந்து வந்தார்.....யாருடனும் பேச மாட்டார்....(அவர் மனைவி மற்றும் குழந்தை ஒரு விபத்தில் இறந்ததனால்!).......ஒரு நாள் என்னை அழைத்து.....தம்பி எனக்கு ஒரு உதவி செய்வியா என்றார்.....?


தொடரும்......

கொசுறு : வாழ்கையில் எல்லாம் சந்தோஷமே....வாழும்வரைக்கும்!....கடைசி போட்டோக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லீங்க(தப்பிச்சிட்டேன் ஹிஹி!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

52 comments:

நிரூபன் said...

I don't have tamil font. I'm on my mobile. Sorry.

நிரூபன் said...

I like it sako. Well said sako, we can't forget our past memories. I can imagine about your very tuff childhood.

விக்கியுலகம் said...

@நிரூபன்

"I don't have tamil font. I'm on my mobile. Sorry."

>>>>>>>

thank you for visit my blog.

no probs sago

நிரூபன் said...

Tomato funny ..... Ha...ha

நிரூபன் said...

Tomato funny ..... Ha...ha

நிரூபன் said...

Sako, I fully read this post, can I get some thing for my break fast?

நிரூபன் said...

Can I please have some bread for my breakfast?

நிரூபன் said...

Why you didn't submit to Tamilmanam$ Tamil 10?

விக்கியுலகம் said...

@நிரூபன்

முடிஞ்சா கனெக்ட் பண்ணுங்கோ சாமி ஹிஹி!

நிரூபன் said...

So which one you can give to me for my breakfast? Tea?

நிரூபன் said...

Tea or coffee?

நிரூபன் said...

Ok, I will try.

நிரூபன் said...

Tea?

நிரூபன் said...

Puttu? Or piddu?

நிரூபன் said...

Bread?

நிரூபன் said...

Coffee?

நிரூபன் said...

String copper?

நிரூபன் said...

Parotta

நிரூபன் said...

I connected in tamilsmile.

சி.பி.செந்தில்குமார் said...

இங்கே என்ன நடக்குது?

சி.பி.செந்தில்குமார் said...

a>>..கடைசி போட்டோக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லீங்க(தப்பிச்சிட்டேன் ஹிஹி!)

என்னமோ தக்காளி பதிவை மட்டும் சம்பந்தமா போடற மாதிரி.. ஆள் கெட்டவன்.. ஆனா போடர பதிவெல்லாம் நல்லவன் போலவே காட்டிக்கறான்.. அது எப்படி?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"இங்கே என்ன நடக்குது?"

>>>>>>

எங்க நடக்குது ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"என்னமோ தக்காளி பதிவை மட்டும் சம்பந்தமா போடற மாதிரி.. ஆள் கெட்டவன்.. ஆனா போடர பதிவெல்லாம் நல்லவன் போலவே காட்டிக்கறான்.. அது எப்படி?"

>>>>>>

நான் எப்ப சொன்னேன் ..........ஹிஹி!

நிரூபன் said...

Sibi, I don't even know yet, what's going on here?

கக்கு - மாணிக்கம் said...

ரொம்ப ரொம்ப நல்ல புள்ளதான்.

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

அது அறியாத வயசுங்கோ! இப்ப இது புரியாத வயசுங்கோ தலைவரே!

பொ.முருகன் said...

பதிவுல காணப்படும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை தானே

பொ.முருகன் said...

பதிவுல காணப்படும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை தானே.

விக்கியுலகம் said...

@பொ.முருகன்

யோவ் மாப்ள கதையல்ல நிஜம்!

விக்கியுலகம் said...

@பொ.முருகன்

யோவ் மாப்ள கதையல்ல நிஜம்!

பொ.முருகன் said...

@விக்கி உலகம்


ரஜினி பட ஓபனிங் மாதிரியே இருந்திச்சா அதான் டவுட்டு.

செங்கோவி said...

ஆஹா..எல்லாரும் சொந்தக்கதையை எடுத்து வுடறாங்களே...

# கவிதை வீதி # சௌந்தர் said...

ம்.. நடத்துங்க..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு உண்மையான பதிவு.. வாழ்த்துக்கள்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணம் 7வது ஓட்டு..

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வாங்க மாப்ள!.....
வாழ்த்துக்களுக்கு நன்றி!

பதிவுலகில் பாபு said...

நீங்க ரொம்ப நல்லவருங்க.. :-)

Chitra said...

நல்லா எழுதி இருக்கீங்க.... தொடருங்க....

! சிவகுமார் ! said...

கடைசி படத்துக்கும் சென்னைக்கும் என்ன சம்மந்தம்.

! சிவகுமார் ! said...

அம்மா உடல்நிலை இப்போது எப்படி உள்ளது.

விக்கியுலகம் said...

@Chitra

வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@பதிவுலகில் பாபு

நண்பா அது இறந்த காலம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

"அம்மா உடல்நிலை இப்போது எப்படி உள்ளது"

>>>>>>

உங்க விசாரிப்புக்கு நன்று நண்பா.......
எப்பவும்போல வேதனைகளோட போராடிக்கொண்டு இருக்கும் தாயவள்!
.........................

கடைசி படத்துக்கும் சென்னைக்கும் என்ன சம்மந்தம்.

>>>>>>>>

கொசுரைப்பார்க்கவும்!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்னாச்சுலேய் எல்லா பயபுள்ளைங்களும் கருனாநிதி மாதிரி சுய சரிதை எழுத ஆரம்பிச்சிட்டீங்க....

ஜீ... said...

அவ்ளோ நல்லவரா மாம்ஸ் நீங்க? அப்புறம் எப்பிடி.....

ஜீ... said...

//செங்கோவி said...
ஆஹா..எல்லாரும் சொந்தக்கதையை எடுத்து வுடறாங்களே...//

நீங்களும் ஆரம்பிச்சிடீங்களேண்ணே...ம்ம்ம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு, ஏன்யா இப்படி தொடரும் போட்டுட்டே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கடைசி போட்டோக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லீங்க(தப்பிச்சிட்டேன் ஹிஹி!)////////

சம்பந்தம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன? படத்த போட்டா சரி.......! (நாங்களும் தப்பிச்சிட்டோம்ல?)

விக்கியுலகம் said...

@ஜீ...

மாப்ள அது அறியாத வயசு ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

தாங்கள் எழுதாததா ஹிஹி!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கடைசி போட்டோக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லீங்க(தப்பிச்சிட்டேன் ஹிஹி!)////////

சம்பந்தம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன? படத்த போட்டா சரி.......! (நாங்களும் தப்பிச்சிட்டோம்ல?)"

>>>>>>>>

யோவ் நீ பெரியாளுய்யா ஹிஹி!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு, ஏன்யா இப்படி தொடரும் போட்டுட்டே?"

>>>>>>>>>>>>

மாப்ள கொஞ்சம் பதிவு பெருசா இருந்தா தெறிச்சி ஓடுறாங்க ஹிஹி!