Followers

Monday, April 4, 2011

லூசாப்பா நீ(!?)

வணக்கம் நண்பர்களே...........இரண்டு நாட்களாக ஒரு பெரிய அதிர்ச்சியில் இருந்ததால் இந்த தனி உலகத்துக்கு வர இயலவில்லை...................


கனவு காணும் வாழ்கை யாவும் கரைந்து போகும் கோலங்கள்................

நடந்து கொண்டு இருக்கும் செப்படி வித்தைக்காரர்களின் வித்தைகளை ரசிப்பத்தர்க்கு மக்களுக்கு முடிகிறாதா என்பதை சரியாக ஊகிக்க முடியவில்லை.........

நேற்று நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.............அவர் சொல்லிய விஷயங்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை.................அந்த சம்பாழனைகள் உங்களுக்காக...............

சொல்லுப்பா எப்படி இருக்க...........

ம் இருக்கோம்.........

ஏன் அவ்ளோ சலிப்பு..........


பின்ன என்னடா.........இந்த நாதாரிங்க துட்டு தரும் அத வச்சி பல விஷயங்க முடிக்கலாம்னு நெனச்சிருந்தா...........திடீர்ன்னு எல்லாத்தையும் தடை பண்ணிப்புட்டாங்க..........மக்களுக்கு இப்போ அரசியல்வதிகள விட அதிகாரிகள் மேல தான் கோவம் அதிகமா இருக்குடா................

அடப்பாவி இலவசம் விஷம்டா.............


ஏன் பேச மாட்டே........இங்க வா வந்து வேல செய்யி............எங்க ஊருல பல பேரு விவசாய நிலங்கள வித்துகிட்டு இருக்காங்க..........டிவி பாக்கறதில்லையா.......அதுல பாரு 1 லட்சத்துக்கு இடம் விக்கறத போடுறானே அதெல்லாம் என்ன நிலம் தெரியுமா!.......... எல்லாம் உழுவுற நிலம்...........எங்கேயோ உக்காந்து கிட்டு சொல்ற நாதாரி நீ இங்க வந்து இறங்கி செய்ஞ்சி காட்டு............

நீ சொல்றது சரிதான்..........நான் கண்டிப்பா சீகிரதுல வரத்தான் போறேன்...அதக்கு முன்னாடி சில கடமைகள முடிக்க வேண்டி இருக்கு...........


கிழிச்சே.......எங்களுக்கு எல்லாம் கடமை இல்லையா........முதல்ல உன்ன திருத்திக்கடா...........

திருத்திக்கிறேன்.........அதுக்காக நீ துட்டு வாங்கிட்டு தான் ஓட்டு போடுவேங்குறது நியாயம் இல்ல............

இன்னாது நியாயம், தர்மமமா டேய் நீ எந்த உலகத்துல இருக்க...........மூணு வருசத்துக்கு முந்தய நிலவரம் கூட இப்ப இங்க கிடையாது........பயபுள்ளைங்க கொஞ்சம் அசந்தா போட்டு தள்ளிடுதுங்க............இன்னும் கொஞ்ச நாள்ல நம்மூர்ல விவசாயிங்கள டெலஸ்கோப் வச்சி தான் தேடனும்............

ஏன் அப்படி சொல்றே...........உழைக்கரவங்க உழசிட்டு தான் இருக்காங்க...........

பொதுவா பேசாத...........போதும் உழச்சதுன்னு நெறைய பேரு முடிவு பண்ணிட்டாங்க...........விளைச்சலுக்கு ஏத்த காசு கெடைக்கறதில்ல..........எப்ப பாரு நாங்க மட்டும் ஏருல பூட்டுன மாடு கணக்கா வேல செய்யணும்.........நீங்க மினுக்கிட்டு திரிவீங்க...........சந்தோசம் என்ற வார்த்த எங்க கிட்ட இருந்து போயி ரொம்ப நாளாச்சி........

என்ன தான் சொல்லவரே............


நேரத்துக்கு கரண்டு கிடையாது...........சரியான ரோடு கிடையாது............குடிக்க தண்ணிக்கி இன்னும் சரியான முடிவு தெரியல.......இதுக்கு மேல நாங்க இப்படியே வாழணும்னு சொல்ல எவனுக்கும் அதிகாரமில்ல..............அதான் நானும் கழனிய வித்துட்டு மத்தவங்க மாதிரி வீட்ட கட்டி புட்டு வேல தேடி வெளியூரு போகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.............

அதுவந்து..................(இணைப்பு துண்டிக்கப்பட்டது)

அந்த நண்பன் கலங்கி சொல்லிய வார்த்தைகள் உண்மையின் பிரதிபலிப்புகளே.........

கொசுறு: மாற்று கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது.............அந்த தலைப்பு என்னப்பாத்து கேட்டதுங்கோ ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

39 comments:

சி.பி.செந்தில்குமார் said...

தமிழர்கள் லூஸ் அல்ல என்பதை 13 அன்று நிரூபிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. உன் பதிவுகள்ல பெரும்பாலும் என்னை தாக்குவே... இப்போ டைட்டில்லயேவா? ம் ம்

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

அப்போ பேசுனவன் கர்நாடகமா.........

நான் ஏன்யா உன்ன தாக்கப்போறேன் ஹிஹி!

வைகை said...

நேரத்துக்கு கரண்டு கிடையாது...........சரியான ரோடு கிடையாது............குடிக்க தண்ணிக்கி இன்னும் சரியான முடிவு தெரியல.......//

இந்த கவலைய போக்கத்தான் ஐயா இலவச தொலைக்காட்சி கொடுதிருக்காருள்ள? அப்பறம் என்னய்யா..?

கே.ஆர்.பி.செந்தில் said...

தலைவரே உண்மையில் இதெல்லாம் இருக்கவே செய்கிறது

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள கலக்கல்..

விக்கியுலகம் said...

@வைகை

"இந்த கவலைய போக்கத்தான் ஐயா இலவச தொலைக்காட்சி கொடுதிருக்காருள்ள? அப்பறம் என்னய்யா..?"

>>>>>>>>>>
கரண்டே இல்ல அத வச்சி என்னையா பண்ணுறது!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@கே.ஆர்.பி.செந்தில்

வருகைக்கு நன்றி தலைவரே

செங்கோவி said...

சீக்கிரம் அரசியலுக்கு வாங்க விக்கி..வந்து அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்யுங்க விக்கி..

விக்கியுலகம் said...

@செங்கோவி

"சீக்கிரம் அரசியலுக்கு வாங்க விக்கி..வந்து அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்யுங்க விக்கி.."

>>>>>>>>>

கண்டிப்பா சீக்கிரமே நடக்கும் மாப்ள!

ஜீ... said...

ஆமா, இத நீங்க நேர்ல போய் உங்க நண்பருக்கு அட்வைஸ் பண்ணி இருந்தா என்ன ஆயிருக்கும்?

Chitra said...

மக்களுக்கு இப்போ அரசியல்வதிகள விட அதிகாரிகள் மேல தான் கோவம் அதிகமா இருக்குடா..............


.......இதை வாசித்து விட்டு, முதலில் மக்கள் இப்படி இருக்காங்களே என்று நினைத்தேன். ஆனால், பதிவு முழுவதும் வாசித்த பின் மனம் கனத்து போய் விட்டது. உண்மை சுடுகிறது.

விக்கியுலகம் said...

@ஜீ...

"ஆமா, இத நீங்க நேர்ல போய் உங்க நண்பருக்கு அட்வைஸ் பண்ணி இருந்தா என்ன ஆயிருக்கும்?"

>>>>>>>>>>

எனக்கும் அதே நெனப்புதான் மாப்ள!

விக்கியுலகம் said...

@Chitra

"மக்களுக்கு இப்போ அரசியல்வதிகள விட அதிகாரிகள் மேல தான் கோவம் அதிகமா இருக்குடா..............


.......இதை வாசித்து விட்டு, முதலில் மக்கள் இப்படி இருக்காங்களே என்று நினைத்தேன். ஆனால், பதிவு முழுவதும் வாசித்த பின் மனம் கனத்து போய் விட்டது. உண்மை சுடுகிறது."

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ

மக்களை திருத்திக்க சொல்ல நாம் யார் என்று என்னும்போது தலை கவிழ்கிறேன்!

ரஹீம் கஸாலி said...

நேரத்துக்கு கரண்டு கிடையாது////
அதை போக்கத்தான் வீட்டுக்கு ஒரு இன்வெர்டர் கொடுக்கறாங்களாம்....அடுத்த முறை

! சிவகுமார் ! said...

//இதுக்கு மேல நாங்க இப்படியே வாழணும்னு சொல்ல எவனுக்கும் அதிகாரமில்ல.//

இதை விட மோசமா வாழணும்னு சொல்ல அவங்களுக்கு அதிகாரம் இருக்கு மாம்ஸ்!

அஞ்சா சிங்கம் said...

விவசாயிகளை வறுமையில் வைத்திருக்கும் எந்த அரசாங்கமும் உருப்படாது .....................

# கவிதை வீதி # சௌந்தர் said...

ம் கலக்கிட்டிங்க...

இந்திய முதுகெலும்பில் காயம்பட யாரும் அனுமதிக்க கூடாது..

கக்கு - மாணிக்கம் said...

இதெல்லாம் யார் வந்தாலும் யார் போனாலும் இருக்கத்தான் செய்யும். தமிழகத்தில் நீர்வளம் இல்லை. அதை சரி செய்யம் எந்த அரசியல் நாதாரியும் தயார் இல்லை. அவர்கள் வேறு என்ன தான் செய்வார்கள்?

கக்கு - மாணிக்கம் said...

//தமிழர்கள் லூஸ் அல்ல என்பதை 13 அன்று நிரூபிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்//

-------சி.பி.செந்தில்குமார் said...

அது என்ன? 13 க்கு பிறகு இவர்கள் எல்லாம் மிக புத்திசாலிகள் என ஆகிவிடுவார்களா செந்தில்?


//தக்காளி.. உன் பதிவுகள்ல பெரும்பாலும் என்னை தாக்குவே... இப்போ டைட்டில்லயேவா? ம் ம்//

இனிமேல் உங்களுக்காக நானும் பதிவுகள் இடலாம் என்று இருக்கிறேன்.:)))

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !
மாப்ள உங்க கருத்துக்கு நன்றி!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

"நேரத்துக்கு கரண்டு கிடையாது////
அதை போக்கத்தான் வீட்டுக்கு ஒரு இன்வெர்டர் கொடுக்கறாங்களாம்....அடுத்த முறை'

>>>>>>>>>>>

மாப்ள அதுக்கும் பவர் போசின்னே என்ன கொடுப்பாங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
ம் கலக்கிட்டிங்க...

இந்திய முதுகெலும்பில் காயம்பட யாரும் அனுமதிக்க கூடாது.."

>>>>>>>>>>

மாப்ள உங்க கருத்துக்கு நன்றி!

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

மாப்ள உங்க கருத்துக்கு நன்றி!

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

தலைவரே வருகைக்கும் உங்க கருத்துக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

மனசு வலிக்குதுப்பா...

MANO நாஞ்சில் மனோ said...

//....அந்த தலைப்பு என்னப்பாத்து கேட்டதுங்கோ ஹிஹி!//

அந்த தலைப்பு உமக்கு அருமையாக பொருந்துகிறது என்பதை சிபி மேல சத்தியமா சொல்றேன்....

பாரத்... பாரதி... said...

ரொம்ப யோசித்தால் விரக்தி தான் மிஞ்சுகிறது என்பதால், இப்பொதெல்லாம் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை நம்ம தமிழன். இருளிலேயே வாழ பழக்கி விட்டதுதான், ஆட்சியாளர்களின் புண்ணியம்.

நா.மணிவண்ணன் said...

அண்ணே மீள் பதிவா?

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...

வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"அந்த தலைப்பு உமக்கு அருமையாக பொருந்துகிறது என்பதை சிபி மேல சத்தியமா சொல்றேன்...."

>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாம்ஸ் அப்படி இருந்திட்டா பரவயில்லையே என் செய்வேன்!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

வருகைக்கு நன்றி மாப்ள

"அண்ணே மீள் பதிவா?"

>>>>>>>>>>>

இல்ல இன்னும் சரக்கு தீரல!

Jana said...

பொதுவா பேசாத...........போதும் உழச்சதுன்னு நெறைய பேரு முடிவு பண்ணிட்டாங்க...........விளைச்சலுக்கு ஏத்த காசு கெடைக்கறதில்ல..........எப்ப பாரு நாங்க மட்டும் ஏருல பூட்டுன மாடு கணக்கா வேல செய்யணும்.........நீங்க மினுக்கிட்டு திரிவீங்க...........சந்தோசம் என்ற வார்த்த எங்க கிட்ட இருந்து போயி ரொம்ப நாளாச்சி...

தீட்சண்யமான உண்மை...

Philosophy Prabhakaran said...

என்னைப் பொறுத்தவரையில் காசு வாங்குவதில் தப்பே இல்லை... ஆனால் விசுவாசமாக இருக்கிறேன் பேர்வழி என்று யாரிடம் காசு வாங்கினோமோ அவருக்கே ஓட்டு போடுவது தான் தவறு... கொடுப்பவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மனதிற்கு பிடித்தவருக்கு ஓட்டு போடுவதே பேஸ்ட் சாய்ஸ்...

Philosophy Prabhakaran said...

அநேகமாக இந்த இடுகையில் வரும் கருத்துக்கள் உண்மையென்றாலும் உரையாடல் கற்பனை என்று நினைக்கிறேன்... சரியா...?

டக்கால்டி said...

கண்டிப்பா சீக்கிரமே நடக்கும் மாப்ள!//

If you are willing to do then i am ready to give my hands...

Speed Master said...

நிச்சயம் ஒரு விடியல் பிறக்கும்

கனவு பலித்ததே

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_05.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கசப்பான உண்மைகள், தமிழகத்தில் நீர்வளம் குறைந்துவருகிறது, இதைச் சரி செய்ய தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நீண்டகாலத் திட்டங்கள் தேவை. இப்போதுள்ளவர்கள் அனைவரும் தேர்தலை மனதில் வைத்து குறுகியகால தற்காலிக திட்டங்களையே செய்கின்றனர். இது தவறான போக்கு!