வணக்கம் நண்பர்களே....
இப்போது தமிழ் சினிமாவில் காமடி விஷயத்தில் தொய்வு இருப்பதாக தோன்றுகிறது....வெடிவேலு இடியாப்ப சிக்கலில் சிக்கி வருகிறார்(!)....இதனால் அவரை கொஞ்ச நாளைக்கு படங்களில் பார்க்க இயலாது போல உள்ளது....அதனால் பல காமடியன்கள் காமடி என்ற பெயரில் ஆபாச விஷயங்களை புகுத்தி வருகிறார்கள்(!)....
இந்த நேரத்துல ஒரு நல்ல செய்தி அண்ணன் கவுண்ட பெல் உடல் நலமாகி திரும்ப வாராருன்னு வந்தது மனசுக்கு மகிழ்ச்சியை தருகிறது.....நடந்தால் அனைவருக்கும் ஒரு மாறுதலான நகைச்சுவை மீண்டும் கிடைக்கும்(!).....
எந்த ஹீரோகூட நடிச்சாலும் அந்த ஹீரோவையே கலாய்க்கும் அளவுக்கு தன் காமடியால் முன்னிலையில் இருந்தார் அண்ணே கவுண்ட பெல்....இவரோட லொள்ளு, எகத்தாளம் எல்லாம் பாத்து கவரப்படாதவங்களே இல்லன்னு சொல்லலாம்...அந்த அளவுக்கு பின்னி பெடல் எடுத்திருப்பாரு....இந்த அளவுக்கு ஹீரோக்களை கலாய்க்கும் நகைச்சுவை நடிகர் இவர் மட்டுமே....
இவர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில படுத்திருக்கும்போது இவரை அநியாயத்துக்கு பொய்யாக பல முறை கொன்ற மீடியா நண்பர்களை(!) நினைக்கும் போது வெறுப்பாக உள்ளது.....பணத்துக்காக நடித்தாலும் எந்த வித அரசியல்வாதியின் கையிலும் சிக்காமல் தன் தனி வழியில் சென்று கொண்டு இருக்கும் நம்ம கவுண்டரை அன்புடன் எதிர் நோக்கும் மாக்கானாகிய நான்!
கொசுறு: நம்மை மகிழ்வித்த மற்றும் மகிழ்விக்க வரும் கலைஞ்சனுக்காக இந்தப்பதிவு!...இந்த பதிவை பன்னிக்குட்டி அவர்களும், கொஞ்ச காலமா கானாபோயிருக்கும் டகால்ட்டி அவர்களும் தொடர்வார்கள் என்று நினைக்கிறேன்...
சொச்சம்: உங்க பதிவுகளுக்கு என்னால் கமெண்ட் போட முடியவில்லை. ஆனால் ஓட்டு மட்டும் போட முடிகிறது....நம்பிகையுடன் ஓட்டளித்தவர்களின்(பதிவில்) பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளவும்(எப்படியெல்லாம் நான் வந்ததை பதிவு பண்ண வேண்டி இருக்கு..முடியல முடியல!)

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
29 comments:
முதல் வருகை
அடங்கொன்னியா பிரகாஷ் முந்திக்கிட்டாரே
ஆஹா என் வயித்துல பீரை வார்த்தாய்....மாப்பு நீ நல்லாஇருப்பே நல்லா இருப்பேடா நண்பன்டா ......நீ நண்பன்டா ........கவுண்டர் மட்டும் வரட்டும் நான் கூழ் ஊத்தி உனக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிறேன் ....
சூப்பர் நியூஸ் மாம்ஸ்! :-)
மாம்ஸ் கவுண்டரை ரெடி பன்றின்களா?
Indli?
நீங்கள் சொல்வது போல படத்தின் ஹீரோவையே கலாய்க்கும் பழக்கம் கவுண்டமணியிடம் மட்டுமே இருந்தது.
இதனை இப்போது சந்தானம் காப்பியடிக்க ஆரம்பித்துள்ளார்.
மீண்டு வரும் கவுண்டருக்கும் பதிவைப் பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அடங்கொக்க மக்கா!
ரிடார்ன் ஆப் த கிங் ..ஹி ஹி அட்ரா அட்ரா
He is one of the best comedians in the Tamil Film Industry.
ஐ ஜாலி.. தக்காளி பிளாக் ஓப்பன் ஆகலை ஹி ஹி
@சி.பி.செந்தில்குமார்
சிங்கங்களே...இப்போதைக்கு தக்காளியின் பின்னூட்டங்கள் பெரியன்னனால் அனுமதிக்கபடுகிராதாம்...ஹே ஹே ஹோ ஹோ !
Unforgetable comedy king mr. Bell
அட்ரா சக்க ...ஸ்டார்ட் மியூசிக் ....
நல்ல செய்தி
சி.பி.செந்தில்குமார்
August 4, 2011 1:20 PM
ஐ ஜாலி.. தக்காளி பிளாக் ஓப்பன் ஆகலை ஹி ஹி// உனக்கு ஏன் மாப்ள இவ்வளவு கொலைவெறி..
கவுண்டர் மீண்டும் கலக்குவாரா?
கவுண்டர் வந்து கலக்கட்டும். அதற்கு, நம்ம கவுண்டர்(ராம்சாமி)வந்து தொடர் பதிவிடட்டும்.
sorry, i missed chatting with u in my "chattalaam vanga"
நன்றி மாப்பிள நான் படங்கள் பார்பது குறைவு என்றாலும் கவுண்டரின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தையும் பார்திருக்கிறேன்.. ஒரு காலத்தில் இங்கு அவருடைய நகைச்சுவை காட்சிகள் மட்டும் தொகுத்து வீடியோவாக விடுவார்கள் அத்தனையும் இப்போது என்னிடத்தில் உள்ளது...
இன்னுமொன்றை கவனித்தீர்களா இவர் பேட்டி கொடுத்த ஒரே பத்திரிகை விகடனாகதான் இருக்கும் குடும்பத்தையும் தொழிலையு பிரித்து வைத்து நன்றாக வண்டியோட்டியவர் இப்பதிவின்மூலம் நானும் அவருக்கு ஒரு ராயல் சலூட் அடிக்கிறேன்...
கவுண்டமணி ஆல் டைம் ஃபேவரிட் காமெடியன்...
மீண்டும் வரவேண்டும்..
நீங்க சொல்றது சரிதான். கவுண்டமணி திரும்ப வந்தால் சூப்பரா இருக்கும்.. ஆனாலும் இப்ப தமிழ் சினிமா காமெடி தொய்வாக இருப்பதை எம்மால் ஒத்துகொள முடியவில்லை. சந்தானம் கலக்குகிறார்(சமீப காலமாக ஆபாசம் இல்லாமலே)..சந்தானம் கவுண்டமணியைஆரம்ப காலங்களில் காபி அடித்தாலும் இப்பொழுது தனக்கென தனி பாணி பிடித்து முதல் இடம் பிடித்து விட்டார்(சிறுத்தை, பாஸ் என்கிற பாஸ்கரன்)... கவுண்டமணி திரும்பி வந்து சந்தானமும் கவுண்டரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேணும்
இன்னிக்கு இந்த ப்ளாக்-இக்கு இவர்---
http://shilppakumar.blogspot.com/
லீவ் விட்டுவிட்டாராம்
கடுமையான சர்க்கரை நோய் அவரது முகப்பொலிவை சிதைத்து விட்டது.
இருந்தாலும் சரியான இயக்குனர் கையில் தனது ஆகச்சிறந்த நடிப்பால் நம்மை இன்றும் கவர்வார்.
கமான் கவுண்டமணி கலக்குங்க
கவுண்டர் வழியைய்தானே சந்தானம் கையில் எடுத்து வைத்து இருக்கிறார் .எனது தளம் இது மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்
மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.இது வெற்றி வாய்ப்பு வரிசை முன்னிருந்துபின்னோ பின்னிருந்து முன்னோ அல்ல.
கவுண்டர் மீண்டும் வருவது மகிழ்ச்சி
ஆமா இதுல என்ன தொடரனும், புரியலியே?
கவுண்டர் கலக்குவாரான்னு பொறுத்திருந்துதான் பார்க்கனும்... பெரும்பாலான ரீஎண்ட்ரீக்கள் அவ்வளவு தூரம் வெற்றிகரமாக இருப்பதில்லை. ஏனென்றால் அந்த ட்ரெண்ட் வெகுவாக மாறிவிட்டிருப்பதால். ஆனால் கவுண்டருக்கான மவுசு அப்படியேதான் இருக்கிறது...
Post a Comment