வணக்கம் நண்பர்களே....
இந்த "நாங்கல்லாம் அந்த காலத்துல" இந்த வார்த்தைய கேட்டாலே பலருக்கு கசக்கும்(நான் உற்பட ஹிஹி!)...இருந்தாலும் அப்படி என்ன இருக்கு அவங்க சொல்ல வர்ரதுலன்னு காது கொடுத்து கேட்டால் பல விஷயங்கள் துலங்கும்.....
இந்த உரையாடல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் நல்லது....
ஹலோ வணக்கம்.....
வணக்கம் ராசா எப்படி இருக்கீங்க...
நான் நல்லா இருக்கேன் அத்தமாமா(!) நீங்க எப்படி இருக்கீங்க......
நல்லா இருக்கேன்யா மாப்ள....எப்படி இருக்கு அந்த ஊரு மழை வெள்ளம் எல்லாம்....இங்க டீவில சொன்னாங்க.....வெள்ளம் வியட்னாம்லன்னு...
ஆமாங்க....ஆனா நாங்க இருக்குறது வடக்குல.....தெற்க்குலதான் வெள்ளம்....
பாத்துய்யா....குடும்பத்தோட இருக்க(!)....பாத்து பாதுகாப்பான இடத்துல இருந்துக்க.....சரி குழந்தை, மருமவபொண்ணு எப்படி இருக்காங்க...
எல்லோரும் நல்லா இருக்காங்க....ரெண்டு பேரும் வெளிய போயிருக்காங்க...இந்த முறை எப்படி இருக்கு விவசாயம்.....
எங்க....முன்ன மாதிரி நடவுக்கும் மத்த வேலைங்களுக்கும் கழனிக்கு போக முடியல.....வயசு 87 ஆச்சி(!)....எல்லா வேலையும் ரவி(அவருடைய பேரர்!) தான் பாத்துக்கறான்....அந்தக்காலத்துல நாங்கல்லாம் இம்புட்டு நேரமா தூங்குனோம்(!)...இப்போ இருக்க பசங்க 7 மணிக்கு தான் எழுந்துக்குதுங்க....நான் காலையில நாலு மணிக்கு எழுந்து நீச்ச தண்ணிய(!) குடிச்சி புட்டு கெளம்பி போன காலம் எல்லாம் திரும்பி வருமாய்யா...சரி விடு அந்தக்காலத்த(!)....உங்களுக்கு எல்லாம் இப்படி பேசுனா புடிக்காதே...
என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க...எனக்கு நீங்கன்னா ரொம்ப புடிக்கும்....நீங்க தானே எனக்கு நம்ம சல்லி(!) கெணத்துல முதுகுல கட்டைய கட்டி நீச்சல் கத்து கொடுத்தவுக...இன்னும் அந்த பச்சை நிலங்களை நான் மறக்கல...அதுவும் இல்லாம அந்த கூழ் இன்னைக்கு நெனச்சாலும் தொண்டைக்குழிக்குள்ள சுகமா இறங்குனது நெனப்பு வருது....ஏர் புடிக்க கத்துகிட்டதே உங்க கிட்ட தானே மாமா...இன்னைக்கு வரை நான் அந்த விடியற் காலையில் எழுந்துக்கரத்தை தவறாமல் கடைபிடித்து வரேனுங்க...
அப்படியா சந்தோசம்யா...நீயாவது பழசை ஞாபகம் வச்சி இருக்கியே....நான் என் கடைசி புள்ளயோட வீட்டுக்கு போன வாரம் போயிருந்தேன்யா...அந்த வீட்டுல இருக்க பசங்க கொஞ்சம் கூட சுறுசுறுப்பு இல்லைய்யா....என்னமோ பன்ன(!) தின்னு புட்டு தினமும் வெளிய போயிட்டு வருதுங்க...சோத்த கேவலமா பாக்குதுங்க...அதுவும் இல்லாம அதுங்கல்ல ஒன்னு தினமும் சோத்த எட்டி உதச்சி வீடு பூரா கொட்டிட்டு போகுது....இதுக்கும் அந்தப்புள்ள காலேஜு படிக்குது.....என்னென்னமோ தின்னுதுங்க சோத்த தவிர....
விடுங்க மாமா இப்போ குழந்தைங்களுக்கு வித விதமான உணவுகள் தான் பிடிக்கும்...அது தவறு இல்லையே...
என்னய்யா சொல்ற...உடம்புல பலமே இல்ல எப்ப பாரு மாத்திரைய விழுங்குதுங்க.....ஆனா ஊனா தலைவலிங்குதுங்க...எப்ப பாரு அந்த பொட்டிய பாத்துட்டு இருக்குதுங்க....கண்ணு என்னதுக்காகறது....
டிவிய சொல்றீங்களா....இப்போ அது இல்லாம பொழுது போகாது மாமா...
என்னய்யா சொல்ற...உடம்புல பலமே இல்ல எப்ப பாரு மாத்திரைய விழுங்குதுங்க.....ஆனா ஊனா தலைவலிங்குதுங்க...எப்ப பாரு அந்த பொட்டிய பாத்துட்டு இருக்குதுங்க....கண்ணு என்னதுக்காகறது....
டிவிய சொல்றீங்களா....இப்போ அது இல்லாம பொழுது போகாது மாமா...
இல்லய்யா...அது என்னமோ சொன்னாங்களே...ஆங் கம்பூட்டர் பொட்டியாமே...எதுவா இருந்தாலும் இம்புட்டு கிட்டயா கண்ணு கொட்டாம பாப்பாங்க...கண்ணு ஓஞ்சி போகாது.....நம்ம வாயி சும்மா இருக்காது பாரு...ஏதாவது சொல்லிட்டா...இந்த கெழவனுக்கு என்ன தெரியும்னு திட்டுராங்கய்யா....அதுனால இனி அங்க போறதில்லன்னு முடிவு பண்ணிட்டேன்...ஆங் என்ன சொன்னே...பொழுது போகாதா....ஏன்யா போகாது..இவிங்க துணிய இவிங்கலே தோச்சி கிட்டா பொழுது போகும்ல...இன்னிக்கு வரை என் துணிய நான்தான் தோச்சிட்டு இருக்கேன்...இப்போ இருக்க கரண்ட்டு பிரச்சனைக்கு அந்த துணி தோய்க்கிற மிசின கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வச்சா என்னய்யா....
என்னத்த விடுறது.....காலையில எழுந்து நடக்கறது கிடையாது....கேட்டா அந்த குளுகுளு ரூமுல போய் கண்ட நேரத்துல எதோ பயிற்சி செய்யிறாங்களாம்...ஏன்யா உடம்புல இருந்து வேர்வை வராம எப்படிய்யா உடம்பு நல்லா இருக்கும்....என்னமோ போங்கய்யா.....சரி இம்புட்டு நேரம் பேசுறியே உனக்கு பணம் அதிகமா ஆகுமே....
இல்லீங்க மாமா...இதுல என்ன இருக்கு...எப்போவாவது தானே பேசுறேன்...பரவாயில்ல....
சரிப்பா...நீயாவது உன் புள்ளைக்கு சுறுசுறுப்பான வாழ்கைய சொல்லிக்கொடுய்யா....
சரிங்க....
கொசுறு: இந்த வயசுல இன்னும் தன் சொந்த வேலைகளை செய்து வரும் ஒரு வயதான இளைஞ்சரின் பேச்சுக்களே இந்த பதிவுக்கு காரணம்!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
18 comments:
தனி மெயிலில் இனியும் வந்து மிரட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் ந்கொய்ய்யால
>>நல்லா இருக்கேன்யா மாப்ள....எப்படி இருக்கு அந்த ஊரு மழை வெள்ளம் எல்லாம்....இங்க டீவில சொன்னாங்க.....வெள்ளம் வியட்னாம்லன்னு...
ஆமாங்க....ஆனா நாங்க இருக்குறது வடக்குல.....தெற்க்குலதான் வெள்ளம்...
adadaa.. அடடா ஜஸ்ட் மிஸ்சா? வட போச்சே?
சி.பி.செந்தில்குமார் said...
தனி மெயிலில் இனியும் வந்து மிரட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் >>>>
நானும் ஒரு விஷயத்திற்கு சி பி கிட்ட போனிலும் பேசி மிரட்டி விட்டேன். ம்ஹும் காரியம் நடக்க மாட்டிங்குது?
புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.
இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்
- இன்றைய கிச்சி லிக்காஸ்(!)
- கல்யாணமாம் கல்யாணம் - (பல்ப் - Live Fight!)
- மல்லிகையே மல்லிகையே - வியட்நாம்(Vietnam!)
- எப்படிப்பட்ட பதிவுகள் இட வேண்டும்!
- எப்படிப்பட்ட அரசியல் வாதி வேணும் - விளம்பரம்!
சன்னலை மூடு
தமிழ்மணம் சக்சஸ்
அந்த காலமும் இந்த காலமும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
த ம 3
நாம இன்னும் 40 வருசம் கழிச்சு சொல்லுவோம்...தம்பி நாங்கல்லாம் அந்த காலத்துல
உண்மைதான் அந்த காலத்தவர்களின் வாழ்க்கை முறை எம்மை விட பன்மடங்கு மேம்பட்டதாகவே இருந்தது
அந்த டிவிட்டர் பறவையை நீக்கி விடலாமே... படிக்கும்போது குறுக்கே குறுக்கே வந்து இடைஞ்சல் பண்ணுகிறது
நல்ல பதிவு.
வியட்நாம் விவசாயி வாழ்க!!
சரிப்பா...நீயாவது உன் புள்ளைக்கு சுறுசுறுப்பான வாழ்கைய சொல்லிக்கொடுய்யா....
அவர் சொல்றது சரி தான் மாப்ள..
மழை பெய்யாமலே மண் வாசனை!
//இந்த வயசுல இன்னும் தன் சொந்த வேலைகளை செய்து வரும் ஒரு வயதான இளைஞ்சரின் பேச்சுக்களே இந்த பதிவுக்கு காரணம்!//
அவருக்கு நன்றிகளும் உங்களுக்குப் பாராட்டுக்களும்! :-)
உள்ளேன் ஐயா!!!!!!!!!
இந்த பதிவு எழுத உங்களுக்கு ஏதோவொன்று தூண்டுதலாய் இருந்து இருக்கக்கூடும் என்பதை தலைப்பை படிக்கும் போதே புரிந்து கொண்டேன் (?)
Post a Comment