Followers

Friday, August 12, 2011

கல்யாணமாம் கல்யாணம் - (பல்ப் - Live Fight!)

வணக்கம் நண்பர்களே...


கொஞ்ச நாளா யாரோட விஷயத்துலயும் தலையிடாம ஒதுங்கி இருந்தேன்.. பொழுது போகல(ஹிஹி!).....அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்...வீட்ல மனைவிக்கிட்ட என்ன தான் ட்ரை பண்ணாலும் சண்ட வரமாட்டேங்குது(உசாரா இருக்காங்க!)....வாழ்கைன்னா இப்படியா வெறுமனே இருக்கறது.....எப்பவும் ஒரு பிரச்னையோட இருக்க வேணாம்(!)....இப்படி நெனசிகிட்டே இருக்கும் போது ஒரு போன் வந்துது....

என்ன எப்படி இருக்கீங்க...

நல்லா இருக்கேன் நீங்க.....

நல்லா இருக்கோம்...பொண்ணுக்கு சம்பந்தம் முடியராப்போல இருக்கு...நல்ல இடம் போல தெரியுது..வர்ற செப்டம்பர் மாசம் கல்யாணம் வச்சிக்கலாம்னு சொல்றாங்க....

நல்லதுங்க...பொண்ணுக்கு எல்லாம் ஓகே தானே...


ஆமாங்க...அவளோட சம்மதத்தோடதான் கன்பாம் பண்ணோம்....மாப்ள இப்போ ட்ரைனிங்ல இருக்காரு...சீக்கிரத்துல கன்பாம் ஆயிடுமாம்....பெரிய குடும்பம்...சென்னைல வேலை...ரொம்ப அமைதியா தெரியிராறு(!)...கல்யாணம் முடிஞ்சதும் தனி குடுத்துனம் வச்சி கொடுத்துடறேன்னு சொல்லிட்டாங்க(!)...கல்யாணமும் அவங்களே பாத்துக்கறேன்னு சொல்லிட்டாங்க...நகை விஷயத்துக்கும் நம்மளாலே எவ்ளோ முடியுமோ போட சொல்லிட்டாங்க....

நல்ல விஷயம் தானே ரொம்ப சந்தோசம்....இந்த காலத்துல இப்படி ஒரு மாப்ள கிடைக்கறது கஷ்டம் முடிச்சிடுங்க....


எனக்கு ஒரு சின்ன சங்கடம்....

என்னது சொல்லுங்க....

இம்புட்டு விஷயத்திலும் வேகம் காட்டுறத பாத்தா(!)...ஏதாவது மாப்ளைக்கு பிரச்சன இருக்குமோன்னு நெனைக்கிறேன்...இத வீட்ல பேசல....என்ன பண்ணலாம் சொல்லுங்க...

ஓ...யார் மூலமா இந்த சம்பந்தம் வந்தது.....

நம்ம ஜோசியர் மூலமாத்தான்...அவரு கிட்டயும் கேட்டு பாத்துட்டேன்... அவரு ஒன்னும் பிரச்சன இல்லன்னு அழுத்தமா சொல்லுறாரு....

உங்களுக்கு தெரியாததா...பெரியவங்க எப்படி விசாரிப்பீங்களோ அப்படியே விசாரிச்சி முடிச்சிடுங்க(!) என்றேன்....

விசாரிச்சேன்....பையன் நல்லவன்னும் பதில் கெடைக்கல, கெட்டவன்னும் பதில் கெடைக்கல...நீங்க முடிஞ்சா விசாரிச்சி பாருங்க...

நானும்...நம்ம பய புள்ளைங்களுக்கு(!) போன போட்டு விசாரிச்சா....நண்பனோட சொந்தக்காரப்பைய தான் மாப்ளயாம்(!)...பல விஷயங்கள் அவன் கிட்ட இருந்து தெரிஞ்சிகிட்டு(!)...சொந்தக்காரருக்கு அடிச்சேன் போன்(!)....

நான் விசாரிச்சதுல மாப்ள நல்லவருன்னு தானுங்க பதில் வந்தது என்றேன்...

உடனே அந்த திருமண பெண் தொலைபேசியை அவள் அப்பாவிடமிருந்து பிடுங்கி...நான் தான் கெளரி பேசிறேன்...என்றாள்...
சொல்லும்மா என்றேன்...

நீங்க சரியாத்தான் விசாரிசீங்களா என்றாள்(!)....உண்மைய சொல்லுங்க...எனக்கு வரும் கணவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது... என்றாள்...

நானும்....கேட்டுக்கொண்டு இருந்தேன்...

நான் என் நண்பி மூலமா ஒரு தனியார் ஏஜென்சி மூலமா விசாரிச்சதுல...அவருக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கு....ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிச்சி இருக்காரு...இதெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லையா...இல்ல நீங்க மறசிட்டீங்களா என்றாள்...

இல்லம்மா....நீ இந்த அளவுக்கு விசாரிச்சதுக்கு சந்தோசம்...அந்தப்பையன் நல்லவன்னு தான் எனக்கு நியூஸ் கெடச்சது(!)....தவறு இருந்தால் மன்னிக்கவும் என்றேன்....

இந்த விஷயத்துடன் பேச்சு நின்று இருந்தால் பிரச்னை இல்லையே....(ஹிஹி!)...

எல்லோரும் உங்க மனைவி போல இருக்க மாட்டாங்க...எல்லாத்தையும் பொறுத்து போவதற்கு...நாங்கல்லாம் படிச்சவங்க...நாலு விஷயமும் அறிந்து தான் செய்வோம் என்றாள்.....

ஏம்மா இதுல என் மனைவி எங்கே வந்தாள் என்றேன்...

பொதுவா சொன்னேன் என்றாள்...

நல்லா சொன்ன போ....நீ இப்போ வேணாம்னு சொல்ற மாப்ள எத்தனாவது தெரியுமா...31 வது....இந்தக்காலத்துல நீங்க எதிர்ப்பாக்குற அளவுக்கு சம்பளத்துடன்(50,000 லிருந்து!) இருக்க பசங்க கிட்ட ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கலாம்...அதுக்காக அவங்க முழுசும் கெட்டவங்க இல்ல என்றேன்...

உங்கள சொல்லி என்ன பிரோஜனம்...எல்லாம் எங்க அப்பாவ சொல்லணும் உங்கள போய் கேட்டாரு பாருங்க என்றாள்...

அதன் பிறகு....என் மனைவி அந்த போனை எடுத்து விட்ட டோஸில்(!) பெரிய கலவரமே நடந்து முடிந்தது(ஹிஹி!)...என் மனைவி கோபத்துடன் பேசி நான் பார்த்தது அப்போது தான் முதல் முறை!(7 வருடத்தில்!)


இதில் சொல்ல வரும் கருத்து என்னவென்றால்....இந்த காலத்து பொண்ணுங்க நல்லா படிச்சிடுறாங்க...நல்ல விஷயம்....பசங்களும் நல்ல வேலையில கஷ்டப்பட்டு வாழுறாங்க....என்ன இருந்தாலும் பெண்களுக்கு கெட்ட பழக்கங்கள் வர வாய்ப்பில்லை(!)...அதே நேரம் ஆண்களுக்கு பல வித கெட்ட பழக்கங்கள் தொற்றி கொள்கின்றன...திருமணத்துக்கு பிறகு திருந்தும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...

கொசுறு: இதற்க்கு மேல் என் கருத்தை சொல்லிசென்றால் அது ஆணாதிக்கமாகி விடும்....உங்க பார்வைக்கு விட்டு விடுகிறேன்...நீங்களே சொல்லுங்க உங்க பார்வையில் உங்க கருத்துக்களை!..
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

31 comments:

Shiva sky said...

உங்கள் வாதம் தவறு.....பெண்களுக்கும் நிறைய கெட்ட பழக்கம் உண்டு/....

தமிழ்வாசி - Prakash said...

tamilmanam conected.

ஸாதிகா said...

//எல்லோரும் உங்க மனைவி போல இருக்க மாட்டாங்க...எல்லாத்தையும் பொறுத்து போவதற்கு...நாங்கல்லாம் படிச்சவங்க...நாலு விஷயமும் அறிந்து தான் செய்வோம் என்றாள்.....
// இது ரொம்ப ஓவர்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த விளையாட்டக்கு நான் வரல...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள இப்ப எல்லாம் ஒரு மார்கமாதான் பதிவு போடுது,,

koodal bala said...

\\\\எல்லோரும் உங்க மனைவி போல இருக்க மாட்டாங்க...எல்லாத்தையும் பொறுத்து போவதற்கு...\\\ அவங்களுக்கு எப்படி மாம்ஸ் தெரிஞ்சது ?

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

இப்பயே இப்பிடி எல்லாம் கேள்வி கேக்குதே அந்த பொண்ணு கல்யாணத்துக்கு அப்பறம் என்னனென்ன கேக்குமோ

பையனை உசாரா இருக்க சொல்லணும்... ஹி ஹி ஹி

N.Manivannan said...

ஆகா கெட்டபழக்கம் இருந்த கல்யாணம் நடக்காதா? ஐயையோ இது தெரியாம நான் கொஞ்சம் கெட்ட பழக்கத்த பழகி வச்சிருக்கேனே

vidivelli said...

.அதே நேரம் ஆண்களுக்கு பல வித கெட்ட பழக்கங்கள் தொற்றி கொள்கின்றன...திருமணத்துக்கு பிறகு திருந்தும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...

ohhhhhhhhhhh

vidivelli said...

..நீ இப்போ வேணாம்னு சொல்ற மாப்ள எத்தனாவது தெரியுமா...31 வது....இந்தக்காலத்துல நீங்க எதிர்ப்பாக்குற அளவுக்கு சம்பளத்துடன்(50,000 லிருந்து!) இருக்க பசங்க கிட்ட ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கலாம்...அதுக்காக அவங்க முழுசும் கெட்டவங்க இல்ல என்றேன்...



உண்மையாகவே இந்தக்காலத்தில் மது,புகைத்தல் பழக்கங்கள் இல்லாத ஆண்களை தேடிபிடிக்கிறதே கடினம்...அதைவிட...!!!

ஷீ-நிசி said...

என்னைப்பொருத்தவரைக்கும் தனக்கு வரப்போற கணவன் இப்படி இருக்கனும்னு எதிரிபார்க்கறது தப்பில்லைன்னு நினைக்கிறேன்... அது உரிமையும் கூட...

விருப்பம் போல வரன் அமைய வாழ்த்துக்கள்

மதுரன் said...

//இந்த காலத்து பொண்ணுங்க நல்லா படிச்சிடுறாங்க...நல்ல விஷயம்....பசங்களும் நல்ல வேலையில கஷ்டப்பட்டு வாழுறாங்க....என்ன இருந்தாலும் பெண்களுக்கு கெட்ட பழக்கங்கள் வர வாய்ப்பில்லை//

ஹி ஹி எங்க இருக்கிரீங்க பாஸ்,,, பொண்ணுங்கள இன்னுமா நம்பிட்டு இருக்கிறீங்க,,,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெரும்பாலான படித்த பெண்கள் நிகழ்கால யதார்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள், படித்து வேலை செய்கிறோம் என்பதையே மிகப் பெரிய சாதனையாக தலையில் ஏற்றிக் கொள்கிறார்கள். படிக்கும் போதே கூடப்படிக்கும் பசங்களை பற்றி தெரிந்து கொண்டிருப்பார்கள் தானே? அல்லது வேலை செய்யும் போதாவது அலுவலகத்தில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்திருக்காதா? நான் படிக்கும் போது எங்கள் வகுப்பில் குடிப்பழக்கம் இல்லாத பையன் யாருமே இல்லை. (இது ஒரு உதாரணத்திற்குத்தான்). பெண்கள் தங்களைச் சுற்றி இருக்கும் உலகை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!

திருமண வாழ்வின் அட்ஜஸ்ட்மெண்ட்டுகள், விட்டுக்கொடுத்தல்களுக்கு மனதளவில் அவர்கள் இன்னும் தயாராகவில்லை என்றே தோன்றுகிறது. சினிமாவில் வருவது போல் ஒரு கனவுலக ரொமாண்டிக் வாழ்க்கையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள், இலவுகாத்த கிளிகள்... பாவம்... வேறு என்ன சொல்வது?

ஜீ... said...

//நல்லா சொன்ன போ....நீ இப்போ வேணாம்னு சொல்ற மாப்ள எத்தனாவது தெரியுமா...31 வது....//
வெளங்கிரும்!
பெண்கள் என்னவோ அசட்டுத்தனம் பண்ணிட்டு போகட்டும்!
ஆனா நம்ம மாம்ஸ திட்டினதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு!

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி ரொம்ப சீரியஸா கமெண்ட் போட்டிருக்காரு? தனி மெயில்ல அப்படி போடச்சொன்னியா/

சி.பி.செந்தில்குமார் said...

சண்டைக்காரண்டா நீ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி ரொம்ப சீரியஸா கமெண்ட் போட்டிருக்காரு? தனி மெயில்ல அப்படி போடச்சொன்னியா/
///////

அப்படியெல்லாம் சொல்லி பண்ற ஆளா நாம?

பாரத்... பாரதி... said...

//பசங்க கிட்ட ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கலாம்...அதுக்காக அவங்க முழுசும் கெட்டவங்க இல்ல என்றேன்...//


சரி சரி .. நீங்க சொல்ல வரும் விஷயம் புரிகிறது.

நீங்க கெட்டவரில் நல்லவர் தாங்கோ.
விக்கி நல்லவர்...விக்கி நல்லவர்...விக்கி நல்லவர்...

பாரத்... பாரதி... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said..

//நான் படிக்கும் போது எங்கள் வகுப்பில் குடிப்பழக்கம் இல்லாத பையன் யாருமே இல்லை.//

அஅஹ்ஹா... இன்னிக்கு என்ன விஷேசம். எல்லோரும் வாக்குமூலம் கொடுத்திட்டு இருக்கீங்க...

பாரத்... பாரதி... said...

அப்படினா கெட்ட பழக்கம் இல்லாத பசங்க தான், கெட்டவங்க...

Mohamed Faaique said...

ஒரு பெண் தனக்கு அமையும் கனவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தப்பே இல்லை. அதுக்காக, இது கொஞ்சம் ஓவர் பந்தா போல தெரியுது.. உதவி செய்ய போன உங்களையே கலாய்ச்சிருக்காவே!!!!

FOOD said...

சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.

செங்கோவி said...

விடு மாப்ள..இப்படியே தட்டிக்கழிச்சே 30 வயசு தாண்டியும் கல்யாணமாகாத பொண்ணை எனக்குத் தெரியும்..இப்போ எவன் கிடைச்சாலும் ஓகேன்னு இறங்கிட்டாங்க..உங்க டிஸ்கி ரொம்ப பயமுறுத்துது..அதனால இத்தோட நிறுத்திக்கறேன்..

MANO நாஞ்சில் மனோ said...

வீட்ல மனைவிக்கிட்ட என்ன தான் ட்ரை பண்ணாலும் சண்ட வரமாட்டேங்குது(உசாரா இருக்காங்க!)..//

ஹே ஹே ஹே ஹே செவில்ல அடி கிடைக்கும் என்பது எனக்குத்தானே தெரியும்....

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள சொல்லி என்ன பிரோஜனம்...எல்லாம் எங்க அப்பாவ சொல்லணும் உங்கள போய் கேட்டாரு பாருங்க என்றாள்...//

அண்ணே அண்ணா அண்ணே ஹி ஹி....

Chitra said...

I guess, it depends on the individual's expectations and dreams. படித்து வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிப்பது மட்டுமே , வாழ்க்கையின் வெற்றி என்று வளர்க்கப்படும் போது, Materialistic and unrealistic dreams தான் பலருக்கு அளவுகோல் ஆகி விடுகின்றன. :-(

மாய உலகம் said...

/\எல்லோரும் உங்க மனைவி போல இருக்க மாட்டாங்க...எல்லாத்தையும் பொறுத்து போவதற்கு..//

சிம்பாளிக்கா நீங்க ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்க்ய...ஹா ஹா

மாய உலகம் said...

திருமணத்துக்கு முன்னால எப்படி இருந்தாலும் ... திருமணத்துக்கப்பறம் எப்படி இருக்காங்கறது தான் முக்கியம்...ஆஹா இந்த டைலாக்க ஏற்கனவே சொல்லி ஆப்பு வச்சுக்கிட்டமே... எஸ்கேப்.. தம ல குத்திட்டே எஸ்கேப்

தமிழ்வாசி - Prakash said...

மாம்ஸ், உங்க மனைவி போன்ல பேசியதா சொன்னிங்களே, ஒரு வேளை உங்கள ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்னு சொன்னாங்களா? ஒரு டவுட்டு தான்

NAAI-NAKKS said...

பண்ணி--ஐ நான் தொடருகிறேன்

கரெக்ட் தான் தலிவா////

காட்டான் said...

மாப்பிள ஓட்டு போட்டுட்டேன்யா..