வணக்கம் நண்பர்களே....
உங்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை முதலில் தெளிவு படுத்திக்கொள்கிறேன்....நான் எந்த பக்கமும் சாராத ஒரு சாதாரண இந்தியன் அவ்வளவே....(!)
இந்த பதிவுலகத்தில் எத்தனையோ பதிவர்கள் இருந்தாலும்....அவர்களை அணிபடுத்துதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது......
அதில் முக்கியமாக....கதை, கவிதை, உணர்ச்சி மயமான விஷயங்களை பதிதல், மேம்போக்கான விஷயங்களை பதிதல் இன்னும் பல வகை உண்டு......
நான் சொல்லவருவது............ஒரு விஷயத்தை பற்றிய சரியான புரிதல் எல்லோருக்கும் வரவேண்டும் என்பதில்லை....எதிர் மாறாக வரும் கருத்துக்களே(!) ஆக்கமான சிந்தனைக்கு அடிகோலும் என்பது என் தாழ்மையான கருத்து....
இங்கு மத அடிப்படையில் பதிவுகளை இடுபவர்கள் குறைந்து வருவதாக கருதுகிறேன்(!)....சொல்லவந்த விஷயத்தை தெளிவாக்குகிறேன்.....
அன்னா ஹசாரே மற்றும் அவரின் போராட்டம் - இந்த விஷயத்தை ஒரு சராசரி இந்தியனாக என் பார்வையில் அன்னா ஹசாரே ஒழிக!(ஊழல் வாழ்க!) பதிந்திருந்தேன்....
இதில் சிலருக்கு மனம் வருந்தி இருந்தால்(!) அதில் மறைந்து இருப்பதாக நினைக்கும் விஷயங்களை தெளிவு படுத்தி மக்களுக்கு(பதிவர்களுக்கு!) சரியான படி விளக்க வேண்டுமே தவிர....அதை விடுத்து அவரோட க்ரூப்பு இவரு என்பது போல சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.......
இது ஒரு தனி மனிதனின் போராட்டம் அல்ல என்று(!) இந்தியா விரும்பி பின் செல்வது தவறானதா என்பதை சரியான புரிதலுடன்(!)...... முடிந்தால் உங்களின் கருத்துக்கள் வழியாக எடுத்து சொல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....
இப்படிக்கு நொந்த விக்கி.....(க்ரூப் அல்ல!)

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
36 comments:
ஏன்? நீ ஒரு குரூப் சேர்க்கப்போறியா?
ரைட்டு. சொல்றது சரி தான்
நான் மேத்ஸ் குருப் ...
மாப்ள..
அன்னா ஹசாரே மீடியா உருவாக்கிய பிம்பம்.ஆனால் இன்றைய சூழலில் இப்படி ஒரு பிம்பம் தேவை.
யார் செய்ய போகிறார்கள், எல்லாம் தலைவிதி என்று நினைத்து கொண்டிருந்த வேலையில் அண்ணா களம் இறங்கி இருக்கிறார், அவருக்கு சப்போர்ட் செய்வதே நமக்கிருக்கும் ஒரே வழி, தேவையில்லாமல் இதிலும் புரட்சி செய்பவர்களை விட்டுவிடுங்கள் மாம்ஸ்
GO YOUR WAY
அன்பு நண்பர்களே உதவி தேவை
http://speedsays.blogspot.com/2011/08/blog-post.html
///நான் சொல்லவருவது............ஒரு விஷயத்தை பற்றிய சரியான புரிதல் எல்லோருக்கும் வரவேண்டும் என்பதில்லை....எதிர் மாறாக வரும் கருத்துக்களே(!) ஆக்கமான சிந்தனைக்கு அடிகோலும் என்பது என் தாழ்மையான கருத்து..../// உண்மை தான் நண்பா, மாற்றுக்கருத்துக்களும் வரவேற்க பட வேண்டியது தான். ஆனால் சிலர் மாற்று கருத்து என்ற போர்வையில் ..... ,அவை தவிர்க்க பட வேண்டியவையே.
//அதை விடுத்து அவரோட க்ரூப்பு இவரு என்பது போல சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்......//
இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு? அண்ணா விஷயத்தில் நான் உங்களோடு முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கிறேன். ஆனால், அதற்காக நீங்க எனக்கு எதிர்க்கட்சி ஆயிருவீங்களா? :-)
நாம் மாறுபட்ட கருத்துக்களுடனும் ஜனநாயகத்தில் சிரித்து வாழ முடியும்.
I respect your view points and appreciate this post too! thanks.
அன்னா ஹசாரே குருப் ...
அது ஒரு போலிசு க்ரூப்பு போல விடுங்க!
அப்புறம் இதை படிங்க...
http://tamilpaatu.blogspot.com/2011/08/blog-post.html
இப்படி குருப் என்ற போர்வையில் நாம் எல்லோரும் பிரிந்துக்கிடக்கிறோம்...
ஒண்றாக இருப்போம் நாமும் அசாரே தான்....
ரொம்ப நொந்த மாதிரி தெரியுதே!!
இதுக்கெல்லாம் கலங்காதீங்க விக்கி இந்த உலகமே இப்பிடித்தான்..
என்ன கொடுமை விக்கி சார் இது????? ஒரு பதிவு எழுதிட்டு அதுக்கு விளக்க பதிவெல்லாம் எழுத வச்சுட்டாங்களே??????
இவுங்க எப்பவுமே இப்படி தான் பாஸ்
நான் Be positve:)
ஆமா அது யாருய்யா உன்னைய இப்படி பண்ணது?
கலங்காதே நண்பா...... மாற்றுக்கருத்து இருந்தால் தான் சிந்தித்து தெளிய முடியும்..... மேம்பட்ட கருத்துக்கள் உருவாகும்...........!
Keep it up...60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தலைவர் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்...
அவரோடு வாயை மூடிக்கொண்டு இணைவது தான் ஒவ்வொரு இந்தியனுக்கும் நல்லது...இந்தியாவுக்கும் நல்லது...
அவரைப்போல் ஒரு தலைவர் வர இன்னும் ஒரு நூற்றாண்டு காத்திருக்கப்போகிறீர்களா?
அவருக்கு ரெண்டு பொண்டாட்டி...அவர் கோடு போட்ட அன்டர்வேர் போடுபவர்...அவர் மது அருந்துவார்...அவர் பேருந்தில் கல்லடித்தார் ... என்றெல்லாம் சொல்லி ஓடத்தொடங்கியிருக்கும் புரட்சி புகைவண்டியை தடம் புரள வைக்காதீர்கள்...
தங்கள் மீது அமைதி நிலவட்டுமாக சகோ.விக்கி..!
அண்ணா ஹசாறேவை "ஒழிக" என்று தலைப்பே வைத்து அதிரடி பதிவு பதிவு போட்ட ஒரே பதிவர் பதிவுலகில் நீங்களாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
உங்களின்... அந்த "ஒழிக" பதிவில்தான் உங்களை சகோ.கரிகாலன்...
"உங்க தலைப்பை தமிழ் மணத்தில பார்த்திட்டு நீங்க சேட்டைக்காரன் குரூப்போட சேர்ந்திட்டீங்களோன்னு நினைச்சி உள்ளே வந்தேன்.
நல்ல வேளை அப்படியெல்லாம் இல்லை".... என்று ஜாலியாக சொன்னார்..!
பதிலுக்கு நான் அவரை நீங்க "விக்கி குரூப்பா" என்றேன் ஜாலியாக..!
இதே எல்லாமா சீரியஸாக எடுத்துக்கொள்வது சகோ.விக்கி..!
டேக் இட் ஈசி.... பி ஹேப்பிஈஈஈஈஈ....
இன்னொன்றையும் சொல்கிறேன்....
ஒருவேளை அண்ணா ஹசாரே தன் ஜன் லோக்பாளில்...
"ஊடகங்களையும் அங்கே தனியார் முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடந்துகொள்ளும் சார்புநிலையையும், செய்தியில் பாரபட்ச நிலையையும், ஊழல்களையும், பொய்ச்செய்திகளையும், இல்லாததை இருப்பது போல எழுதும்/சொல்லும்/காட்டும் மாய்மாலத்தையும், எப்போதும் செய்தியில் "ஒரு பிரபல தனியார் நிறுவனம்..." என்று உண்மையை மறைப்பதையும் இனிமேல் விடாது... ஜன்லோக்பால் கேள்விகேட்கும்" என்று மட்டும் சொல்லி இருந்தால்....
அடாடாடா
ஓர் ஊடகத்தில் கூட இவரைப்பற்றி செய்தி சொல்லி இருக்க மாட்டார்கள்...!
நமக்கு இவரை யாரென்றே இன்று தெரிந்திருக்காது சகோ.விக்கி..!
நாம யாருக்காகவும், எதுக்காகவும் மாற வேண்டாம். உங்க கருத்துல நீங்க உறுதியா இருங்க.
மாற்றுக்கருத்துக்களும் வரவேற்க பட வேண்டியது தான்
அடடா..தக்காளியை சும்மா இருக்க விடமாட்டாங்க போலிருக்கே!
அடி கொடுத்த தக்காளிக்கே இந்த கதின்னா அடி வாங்குனவன் உசுரோட இருப்பாங்கிரியா நீ? :))
பிரிவினைகள் வேண்டாமே!!
naanum B+
யாருங்க அங்க கொடி பிடிக்கறது
நீங்க அடிச்சு ஆடுங்கோ தம்பி.
மாம்ஸ், பதிவுக்கு விளக்க ஒரு பதிவா., ஹோசிமின்னின் ஆவி உங்களை பிடிக்க .....
அன்பின் தக்காளி...
நீங்கள் யாரோ ஒருத்தர் மைனஸ் ஓட்டு போட்டதற்காக வருத்தப்பட்டது, "நீங்க எந்த குரூப்..." என்றொரு பதிவர் கேட்டதற்காக கோபப்பட்டது இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நீங்கள் பதிவுலகில் எல்லோருடனும் நட்பு பாராட்ட விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்... அபத்தமான ஆசை... அந்த ஆசையே உங்கள் துன்பத்திற்கு காரணம் :)
இரண்டாவது, நீங்கள் எழுதிய பதிவு பிடிக்கவில்லை என்றால் பதிவை தாக்காமல் உங்களை தாக்கும் அறிவுஜீவிகள் பலர் பதிவுலகில் இருக்கிறார்கள்... Never mind about such idiots...
அண்ணே பாதையில விளைந்த முட்க்கள் நம் பாதையை வழி மறிக்காது அண்ணே நீங்க மாட்டுன்னு போய்க்கிடே இருங்க போலாம் ரைட்... ரைட்...
சி.பி.செந்தில்குமார்
தமிழ்வாசி - Prakash
!* வேடந்தாங்கல் - கருன் *!
உலக சினிமா ரசிகன்
நண்டு @நொரண்டு -ஈரோடு
இரவு வானம்
Speed Master
கந்தசாமி.
சேட்டைக்காரன்
மாலதி
கோகுல்
# கவிதை வீதி # சௌந்தர்
Carfire
சசிகுமார்
பன்னிக்குட்டி ராம்சாமி
ரெவெரி
~முஹம்மத் ஆஷிக்_citizen of world~
N.H.பிரசாத்
இராஜராஜேஸ்வரி
செங்கோவி
வைகை
மைந்தன் சிவா
FOOD
ஷர்புதீன்
Philosophy Prabhakaran
தினேஷ்குமார்
தங்கள் மேலான கருத்துக்களை அள்ளி கொடுத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள்....
வணக்கம் அண்ணாச்சி, இதனையெல்லாம் பெரிதுபடுத்த வேணாம்..
இதுவும் கடந்து போகும் என்று லூஸிலை வுடுங்க பாஸ்.
freeயா உடு மாம்ஸூ
Post a Comment