Followers

Monday, August 15, 2011

இந்தப்பதிவர்கள் அங்கே போனால்(!)

வணக்கம் நண்பர்களே.....


இந்தப்பதிவு சீரியஸா, காமடியான்னு நீங்களே யோசிச்சிக்கங்க(ஹிஹி!)...இதில் வரும் பதிவர்கள் யார் என்று கண்டு கொள்வது உங்கள் தனித்துவத்துக்கு நீங்களே சொல்லிக்கொள்ளும் சபாஷ்!....

வாய்யா எப்படி இருக்க......

ஹிஹி....

என்னய்யா கேக்குறதுக்கெல்லாம் ஹிஹிங்கர!......

அது ஒன்னும் இல்ல நீ கூப்பிடும்போது அந்தப்பக்கமா ஒரு பிகரு போயிட்டு இருந்துது....அதான்....

நீயெல்லாம் ஒரு அரசியல்வாதி.....விளங்கிடும்....

தம்பி...எனக்கு நீங்க மட்டும் ஓட்டு போடல...பல பிகர்களும் ஓட்டு போட்டு இருக்கு....

அடங்கொன்னியா....இந்தாளு திருந்த மட்டாருய்யா...


ஏய் மக்கா யார்ரா அது அங்கே....நாசமா போறவனே....அருவா எடுத்து மடேர்ன்னு நடு மண்டையில போட்டாத்தான் நீ திருந்துவியா......

அண்ணே...எனக்கு உதவியாளர் பெண் தான் வேணும்...பசங்க வேணாம்.....

அதானே பாத்தேன்...இந்த நாதாரிக்கு யாரு எலெக்ஷன்ல நிக்க சீட்டு கொடுத்தது....

நான் சொல்றத கேளுங்க...இப்போ நேரம் உங்க யாருக்கும் சரி இல்ல...எனக்கு மட்டும் தான் நல்லா இருக்குன்னும் நான் சொல்ல மாட்டேன்....

எலேய் உங்களுக்கு புண்ணியமா போகும்...சீக்கிரம் அந்த கவர்னர பதவி உறுதி மொழி வாங்கிட்டு விட சொல்லுங்கய்யா...

டேய் நீங்கல்லாம் MLA வா என்ன கொடும இது.....சரி எல்லாரும் முதல்ல கைய நல்லா கழுவிட்டு இங்க வாங்க....அந்த ஜொள்ளுப்பய்யன் கைல வச்சிருக்க ஐஸ்கிரீம தூக்கி வீசிட்டு வர சொல்லுங்க...அப்ப தான் பதவி கொடுப்பேன்....

நான் இங்க பதவிக்காக வரல...என் சகோதரர்களுக்காக தான் வந்து இருக்கேன்....


இங்க எவனாவது படம், பிகர்னு பேசுனீங்க....அவ்ளோதான் எல்லார் தலையிலையும் தீ வச்சிடுவேன்....

என்னாங்கடா இது...ஆரம்பமே தீயா...சரி இதத்தான் தீயா வேல செய்யனும்னு சொன்னாங்களா....

நான் என்ன சொல்ல வரேன்னா...இந்த மல்லிக்கு அந்த கள்ளிக்கும் சம்பந்தமில்லை...இது தெரியாம என்னையும் இப்படி அரசியல்வாதியாக்கிட்டாங்க....

டேய் பசங்களா....நான் நாத்தி ச்சே வாத்தி வந்து இருக்கேன்...எனக்கு நேரம் குறைச்சலாத்தான் இருக்கு...பல ஊர்களுக்கு போகணும்...சீக்கிரம் முடிச்சி அனுப்புங்க....

எல்லாருக்கும் வணக்கம்....நீங்கல்லாம் என்னை பத்தி என்ன நெனைக்கிறீங்க அப்படிங்கறத விட நான் உங்கள பத்தி என்ன நினைக்கிறேங்கரத சொன்னா பெரிய விஷயம்மக்கிடுவீங்க....ஹிஹி...புரியலியா...இதான் நம்ம ஸ்டைலே...


ஏய்....இருங்கய்யா....இங்க பாருங்க...இவங்க எல்லாம் என்னை பாத்துதான் இவங்க சட்டய அழகாக்கிகிட்டாங்க....எனவே எனக்கு தான் முதல்ல பதவி ஏத்துக்க தோணுது...இருந்தாலும்...யார் வேணும்னாலும் ஏத்துக்கலாம்...ஹிஹி

இங்க யாராவது ஒழுங்கான ஆளுங்க இருக்காங்களா....@#$#@...இது ஒரு பொழப்பா...ஹேய்!.....

தொடரும்............அரசியல் 

கொசுறு: இப்படிக்கு என்ன நடந்தாலும் கும்மி அடிப்போர் கூட்டம்....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

30 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

சிபியும் மனோவும் பதிவில் மனம்வீசுவதாக எனக்கு தெரிகிறது...

ஆனால் விளங்கிடும்...

மைந்தன் சிவா said...

சி பியும் மனோவுமா??ஹிஹி இருக்காது :)

# கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி...

மைந்தன் சிவா said...

ஏன் இந்த வெறி??

! சிவகுமார் ! said...

//அண்ணே...எனக்கு உதவியாளர் பெண் தான் வேணும்//

அதை உதவியாளரிடமே கேட்கலாமே. பெண் தராமலா போய் விடுவார் ? (சிறப்பு நாய்க்கடி)

கும்மாச்சி said...

விக்கி பதிவர்களை அடையாளம் காட்ட இன்னும் கொஞ்சம் க்ளூ கொடுத்திருக்கலாம்

தமிழ்வாசி - Prakash said...

maams, tamilmanam third voted from mobile.

செங்கோவி said...

நான் தப்பிச்சேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

டக்கால்டி said...

I Know...I Know...Hey...I Know I Know I Know I Know...

டக்கால்டி said...

tamilvaasi, c.p, nanjilaar, karun, vikki

The above great- great bloggers conversation is so nice

மாய உலகம் said...

nice

FOOD said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

பாரத்... பாரதி... said...

பல பதிவர்களை கணிக்க முடியவில்லை. க்ளு கொடுத்திருந்தால் என்னவாம்?

பாரத்... பாரதி... said...

அஹ்ஹா.. இது புது தினுசா இருக்கே..

இராஜராஜேஸ்வரி said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா என்றா இது?

பட்டாபட்டி.... said...

கலாய்ச்சி முடிஞ்சதா சார்?...

சில்லி பத்தலே..

அடிக்கிற அடில..... மூக்கிலிருந்து..முழங்கால் வரை இறங்கவேண்டாம்?..

:-))))

ஷீ-நிசி said...

கடைசியில் விடையும் சொல்லிடுங்க.... :)

சி.பி.செந்தில்குமார் said...

>>
தம்பி...எனக்கு நீங்க மட்டும் ஓட்டு போடல...பல பிகர்களும் ஓட்டு போட்டு இருக்கு....

அடங்கொன்னியா....இந்தாளு திருந்த மட்டாருய்யா...லேப்டாப் மனோ ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஏதோ இன்னைக்கு கொஞ்சம் புரியற மாதிரி பதிவு போட்டிருக்கு பய புள்ள

சசிகுமார் said...

தொடருமா எவ்ளோ பேர் மாட்டிக்க போறாங்களோ மாப்ள கிட்ட

பாலா said...

மாப்ள பாதி புரிஞ்சது, பாதி புரியல...

ஹி ஹி ... இது ஒண்ணு போதாது?

வைகை said...

தக்காளி.. நீ நடத்துயா :)

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
>>
தம்பி...எனக்கு நீங்க மட்டும் ஓட்டு போடல...பல பிகர்களும் ஓட்டு போட்டு இருக்கு....

அடங்கொன்னியா....இந்தாளு திருந்த மட்டாருய்யா...லேப்டாப் மனோ ஹி ///


பாம்பின் கால் பாம்பறியும்! :))

koodal bala said...

அணு உலைக்கெதிரான போராட்டத்தில் பிசியாக இருப்பதால் பிறகு வருகிறேன் ....

மதுரன் said...

ஐடியா புதுசா இருக்கே

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
என் இன்ரநெட்டிற்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்க.
வரும் வியாழன் தான் கனெக்சன் சரி பண்ணுவாங்களாம்.
அதான் உங்கள் வலைக்கு வர முடியலை,
மன்னிக்கவும்,

உங்களுக்கும், உங்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் என் பிந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...

இந்தப்பதிவு சீரியஸா, காமடியான்னு நீங்களே யோசிச்சிக்கங்க(ஹிஹி!)...இதில் வரும் பதிவர்கள் யார் என்று கண்டு கொள்வது உங்கள் தனித்துவத்துக்கு நீங்களே சொல்லிக்கொள்ளும் சபாஷ்!..//

இது...நிரூபன்.. அவ்..........

//
வாய்யா எப்படி இருக்க......//

இது மானிட்டர் பக்கங்களில் வரும் விக்கி அண்ணாவின் வாய்ஸ்.

//
என்னய்யா கேக்குறதுக்கெல்லாம் ஹிஹிங்கர!......//

இது நம்ம சிபி அண்ணாச்சி போடும் கமெண்ட்.

//நீயெல்லாம் ஒரு அரசியல்வாதி.....விளங்கிடும்....//

நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணர்.

//
அது ஒன்னும் இல்ல நீ கூப்பிடும்போது அந்தப்பக்கமா ஒரு பிகரு போயிட்டு இருந்துது....அதான்....//

இது நம்ம மனோ அண்ணா வாய்ஸ்.

//
தம்பி...எனக்கு நீங்க மட்டும் ஓட்டு போடல...பல பிகர்களும் ஓட்டு போட்டு இருக்கு....//

இந்த வாய்ஸ் நம்மளோட கவிதை வீதி சௌந்தர்...

//அடங்கொன்னியா....இந்தாளு திருந்த மட்டாருய்யா...//

இது நம்ம சசி... வாய்ஸ்.

//
ஏய் மக்கா யார்ரா அது அங்கே....நாசமா போறவனே....அருவா எடுத்து மடேர்ன்னு நடு மண்டையில போட்டாத்தான் நீ திருந்துவியா......//

இதுவும் நம்ம மனோ அண்ணா வாய்ஸ் தான்.

//அண்ணே...எனக்கு உதவியாளர் பெண் தான் வேணும்...பசங்க வேணாம்.....//

அவ்...சிபி அண்ணா வாய்ஸ்.

நிரூபன் said...

டேய் பசங்களா....நான் நாத்தி ச்சே வாத்தி வந்து இருக்கேன்...எனக்கு நேரம் குறைச்சலாத்தான் இருக்கு...பல ஊர்களுக்கு போகணும்...சீக்கிரம் முடிச்சி அனுப்புங்க....//

இது நம்ம வேடந்தாங்கல் வாத்தியார் கருனின் வாய்ஸ்,