Followers

Saturday, August 27, 2011

அம்மா இந்த கடுதாசி உங்களுக்குத்தான்!

வணக்கம் மாண்பு மிகு அம்மா.......

இதுவரை உங்களுக்கு பலர் மனு எழுதி இருப்பார்கள்...தங்கள் குறைகளை நிவர்த்திக்க வேண்டி கேட்டுக்கொண்டு இருப்பார்கள்...இந்தக்கடிதம் அந்த வகையை சார்ந்தது அல்ல....

இது எம் மக்கள் மூன்று பேருக்கு தூக்கில் இருந்து பிழைக்க வைக்க தங்களின் அனுமதி வேண்டி நிற்கும் பல லட்சம் மக்களில் ஒருவனால் எழுதப்படும் ஓர் கண்ணீர் கடிதம்....

இதுவரை தமிழ் மக்களை தன் குடும்பமாக எண்ணி வாழ்வதாக தாங்கள் கூறி இருப்பது இந்த தருணத்தில் நினைவு வருகிறது...எத்தனை இடர் வந்த போதும் எம் நலன் பார்க்காத தாத்தாவை நீக்கி உங்களை நாங்கள் கொண்டுவந்ததற்கு காரணம்...அவருக்கு தமிழ் குடும்பங்களை விட தம் குடும்பம் பெரிது என்பது எங்களுக்கு நாள் கழித்து தெரிந்ததால் தான்.....

இப்போது நீங்கள் நினைத்து பார்க்காத வண்ணம் தங்களை முழு பலத்துடன் ஆட்சி அமைக்க செய்தது...தங்களிடம் ஒரு நேரடித்தன்மை இருக்கிறது என்று நம்பியே....அதனை தாங்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள்...

எம் சகோதர சகோதரிகள் துடிதுடித்து சாகும் போதும், எங்களால் எதுவும் செய்ய முடியாமல் தவித்த போதும் அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் தன் குடும்பத்துக்காக டெல்லி ஓடியவர்களை விட நீங்கள் எவ்வளவோ மேல் என்று நினைக்க நாங்கள் தவற வில்லை....


இப்போதைய நிலையில் இம்மூவரின் கடைசி நம்பிக்கை நீங்கள் ஒருவரே.....இதை புரிந்து செவி மடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டு மக்களில் ஒருவனின் கடுதாசி...மதிப்பு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்!

நன்றி...

ஜெய் ஹிந்த்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

26 comments:

உலக சினிமா ரசிகன் said...

உங்கள் கோரிக்கை கரத்தில் என்னுடைய கரங்களையும் இணைத்து கொள்ளுங்கள் நண்பா...

கக்கு - மாணிக்கம் said...

எல்லாம் சரிதான். முனா. கானாவை. "தமிழ் தாத்தா " என்று குறிபிடுவதை தவிர்த்திருக்கலாம்.தன் சுகம்,தன் குடும்பம் பாராது ஊர் ஊராக மாட்டு வண்டியில் சென்று பழந்தமிழ் ஓலை சுவடிகளை சேகரித்து அவைகளை அச்சில் ஏற்றி தமிழை வாழ வைத்த அந்த நிஜமான "தமிழ் தாத்தா " உ .வே. சாமிநாதய்யர் இன்று சிலையாக சென்னை பல்கலை கழக வளாகத்தில் நின்று கொண்டிருக்கிறார். அவரை அன்றி வேறு ஒருவரும் தமிழுக்கு நன்மை செய்தவர் எவரும் இல்லை. முனா.கானா . ஒரு நாலாந்தர அரசியல் பிழைப்பவர் மட்டுமே விக்கி.

NAAI-NAKKS said...

உங்கள் கோரிக்கை கரத்தில் என்னுடைய கரங்களையும் இணைத்து கொள்ளுங்கள் நண்பா.....

எதாவது செய்யுங்கள்

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

வருகைக்கு நன்றி தலைவரே....மாத்திட்டேன் தங்களின் விருப்பத்துக்கிணங்க...நன்றி!

விக்கியுலகம் said...

@உலக சினிமா ரசிகன்

வருகைக்கு நன்றி நண்பா!

விக்கியுலகம் said...

@NAAI-NAKKS

வருகைக்கு நன்றி நண்பரே!

செங்கோவி said...

நன்றி விக்கி!

மகேந்திரன் said...

தாயுள்ளம் கொண்டு செவிமடுக்கவேண்டும்.
உயிரின் மதிப்பினை
விலையற்றதாகி விடாதீர்கள்.

மாய உலகம் said...

மாம்ஸ் தங்களது லிங்கையும் எனது பதிவில் இணைத்துள்ளேன்

இராஜராஜேஸ்வரி said...

ஜெய் ஹிந்த்!

FOOD said...

ரைட்டு.

கந்தசாமி. said...

அவர்களுக்கு எதுவும் நடவாது என்று இன்றுவரை நம்பிக்கொண்டு உள்ளேன் ..

ஹைதர் அலி said...

//இப்போதைய நிலையில் இம்மூவரின் கடைசி நம்பிக்கை நீங்கள் ஒருவரே.....இதை புரிந்து செவி மடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டு மக்களில் ஒருவனின் கடுதாசி...மதிப்பு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்!//

நண்பரே உங்களின் நம்பிக்கை வீன் போகமால் இருக்கட்டும்.

நாம் சகோதரர்களை காப்போம் அந்த தாயின் கண்ணீரை துடைப்போம்.

தமிழ்வாசி - Prakash said...

அந்த தாயின் கனவு நனவாக வேண்டும்.. எல்லோர் விருப்பமும் அதுவே.

தனிமரம் said...

Nallathu saivar Amma nampuvom!

சக்தி said...

என்னுடைய கரங்களையும்

அந்நியன் 2 said...

கண்ணீர் கடிதமும் அந்த தாயின் கதறலும் மனதை ரதமாக்கின்றது.

தற்போது உள்ள சூழ் நிலையில் ஒட்டு மொத்த தமிழகமும் ஒன்று திரண்டு ஜாதி மதம் பேதமின்றி குரல் கொடுத்தால் இத்தண்டனையைப் பற்றி பரிசிலிக்கும் உரிமம் ஜனாதிபதிக்கே உள்ளது.

ஆகையால் முதல்வரோ அல்லது மற்ற நபரோ எதுவும் செய்துவிட முடியாது என்பது எனது கருத்து இதில் முதல்வரும் நம்மோடு நின்று குரல் கொடுப்பாறேன்றால் ஒட்டு மொத்தம் இந்தியாவும் திரும்பி பார்க்கும்.

அப்படி திரும்பி பார்ப்பதற்கு ஒட்டு மொத்தம் தமிழகமும் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் அலுவலகங்கள் போக்கு வரத்துக்கள் மற்றும் இன்னும் என்னவென்ன கண்ணுக்கு தெறிகிறதோ அத்தனையையும் அடையாளத்திற்க்காக ஸ்த்தம்பிக்க வைக்கனும் ஒரு அரை மணி நேரம் போதும்.

அதற்க்காக பொது மக்கள்களுக்கு இடையூரு செய்து விடகூடாது மற்றொருபுறம்,பிரதமர், ஜனாதிபதி மற்றும் சோனியாவுக்கும் தபால்களை அனுப்பி,தம்முடைய எதிர்ப்பை காட்டனும் இத்தனையும் மீறி அவர்கள் தண்டிப்பார்கள் என்றால்.....

இறைவன்தான் காப்பாற்றனும்.

நீதிக்கு குரல் கொடுப்போம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நன்றி விக்கி .

payapulla said...

அடடே! ராகுலும் பிரியங்காவும் தன் தந்தை கொல்லப்பட்ட போது எவ்வளவு துயரப்பட்டு இருப்பார்கள்? அட போடா வெண்ண. அவன் நோர்த் இந்தியன் டா...இவங்க யாரு? தமிழன். நமக்கு தனி நீதி அல்லவா?

புலவர் சா இராமாநுசம் said...

முதற்கண் வலை வந்து கருத்துரை
வழங்கியதற்கு நன்றி!
முதல்வரால் இம் மூவர்
உயிர் காக்கப் படுமானால், இதுவரை அம்மா என்று சொன்னதற்கு அவர் பொருத்தமானவரார்
உங்கள் பதிவும் எதிர் பார்ப்பும்
நன்றே!
புலவர் சா இராமாநுசம்

Prakash said...

ஜெயா இவர்கள் இப்படி சொல்வதை கேட்பாரா....

பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்: வழக்கறிஞர் புகழேந்தி

குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகும் கூட, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

அதன்படி முதல்வர் ஜெயலலிதா தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60329

அல்லது இவர்கள் இவர்கள் சொல்வதை கேட்பாரா....

தூக்கில் போட ராம. கோபாலன் ஆதரவு..

அப்போது அவர்,ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனைக்கு தயாராகியுள்ளனர்.
அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60310

Prakash said...

காலாவதியான தடா சட்டங்களின்படி வழங்கபட்ட தண்டனைகளை ரத்து செய்யவேண்டும். இவர்களின் மீது சுமத்த பட்டுள்ள குற்றசாட்டுகள் கடுமையனவைகள் அல்ல. அப்படியே குற்றம் என்றாலும், அவர்கள் ஏற்கனேவே சுமார் 20 ஆண்டுகள் தனிமை சிறையில் அனுபவித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்கவேண்டும். அப்படி விடுவிகமுடியவிட்டால், தூக்கு தண்டனையை மாற்றி, அரசாங்கம் விரும்பும் வரை சிறையிலாவது உயிருடன் இருக்கவிடுங்கள்...

ஆனால் நடப்பவை கவலை அளிபதாக உள்ளது, இந்த பிரச்னையை சட்டசபையில் பற்றி பேச 15 முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுப்பு. சட்டசபையில் பேசியதும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கம். இலங்கைத் தமிழர்களுக்காக திடீர் குபீர் ஆதரவு தெரிவித்தவர்கள் இப்படி திடீர் என்று மாறி சட்டசபையில் பேசக்கூட முடியாத நிலைமை.

தங்களால் முடியாத, தான் நேரடியாக செய்யமுடியாத ஒன்றிற்காக ஆவேசமாக தீர்மானம் நிறைவேறும் போது, தனது அரசு சமந்தப்பட்ட, தன்னால் நேரடியாக செய்யமுடிந்த ஒன்றை பற்றி, குறைந்தபட்சம் சட்டசபையில் பேச கூட அனுமதி இல்லை..
அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியவில்லை...

கருணாநிதியும் மற்ற அனைத்து தமிழகத்து தலைவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டனர், காங்கிரேசை தவிர. இன்னும் ஜெயா இதுகுறித்து எந்த கருதும் தெரிவிக்கவில்லை...சோனியா இந்த முறையாவது கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்பாரா ?..
அப்படி செய்தல், ஈழ துரோகத்தால் காயம்பட்டு உள்ளவர்களுக்கு , சிறிது மருந்திடுவது போல இருக்கும்...செய்வாரா ?

mraja1961 said...

என்னுடைய கரங்களையும் இணைத்து கொள்ளுங்கள்.

maharaja

*anishj* said...

தமிழர்கள் என்பதற்க்காக என்ன தவறு வேண்டும் செய்யலாம் அவர்களை மன்னித்து விட்டுவிட வேண்டும் என்பது நியாயமல்ல. அன்று கொல்லப்பட்ட 15 உயிர்களை நாம் ஏன் மறந்துவிடுகிறோம்.
ஹ்ம்ம் ஆனாலும்... இவர்கள் நிரபராதிகளென்றால் இவர்களின் விடுதலைக்காக போராடுவதில் தவறில்லை ! இவர்கள் குற்றம் செய்தவர்கள் என்றால் இரண்டு காரணத்திற்க்காக இவர்கள் விடுதலையை நான் ஆதரிக்கிறேன்.. ஒன்று இவர்கள் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்கள் அதுவே பெரிய தண்டனை. இன்னொன்று மனிதாபிமானம். என்ன தான் பெரிய தவறு செய்திருந்தாலும் ஒரு உயிர் பறிக்கப்படுகிறது என்று சொல்லும்போது மனது பதறதான் செய்கிறது...!
இந்த இரண்டு காரணங்களை தவிர, ஒரு நாட்டின் பிரதமரை கொல்ல துணைபோனவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களை(குற்றம் செய்திருந்தால்) ஆதரிப்பது சரியல்ல...

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
ஒட்டு மொத்த தமிழர்களினதும் மன உணர்வினை உங்களின் வலையில் பிரதிபலித்துள்ளீர்கள்.
இந்தக் கடிதம் நிச்சயமாக அம்மாவின் கைக்குப் போய்ச் சேர வேண்டும் என்பது தான் என் அவா.

நிரூபன் said...

வணக்கம் நண்பரே,
சமீப நாட்களாக வலைப் பதிவிற்கு வர முடியவில்லை, காரணம் டுவிட்டர் பேஸ்புக்கில் தூக்குத் தண்டனையை நிறுத்தச் சொல்லிய பிரச்சாரங்களோடு ஐக்கியமாகி விட்டேன்.
கிடைத்த குறுகிய நேரத்திலும் ஒரு சில பதிவுகளைத் தான் படிக்க முடிந்தது.

மன்னிக்கவும்,