Followers

Tuesday, August 9, 2011

லேடீஸ் க்ளப் - ஸ்டார்ட் மியூசிக் !

வணக்கம் நண்பர்களே....


பொதுவாக அரசியல், மற்றும் பல விஷயங்களை ஆண்கள் வழியிலேயே பார்த்து வருகிறோம்...ஒரு சேஞ்சுக்கு பெண்கள் பார்வையில் பார்த்தால்...!

இடம்  - கலாய்க்கும் லேடீஸ் க்ளப் 

உஷா: என்ன ராதா எப்படி இருக்கீங்க...க்ளப் பக்கம் ஆளையே காணோம்...

ராதா: என்னத்த செய்யிறது உஷா....வீட்ல அவர் டூருக்கு போயிருக்காரு....அதான் எல்லா பொறுப்பும் என்னோடதாயிடுச்சி(!)....வேலை அதிகம்...அதனாலதான்!

உஷா: உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா....கோர்ட்டு தீர்ப்பு வந்தாச்சி...கல்வி விஷயத்துல பெரிய கொட்டு கொடுத்திருக்கு சுப்ரீம் கோர்ட்......

ராதா: அதானே நேத்தே அம்மா ஜகா வாங்கிட்டாங்க.....எப்படியோ பசங்களுக்கு படிப்பு சரியா கெடச்சா பரவாயில்ல....

உஷா: அதே நேரத்துல இந்த விஷயத்துல இந்த அளவுக்கு மக்கள் கிட்ட கெட்ட பெயர் எடுத்திருக்க வேண்டாம்...

ராதா:  என்ன பண்றது அவங்களுக்கு எப்பவுமே அது பிடிக்குமே.....நாலு நல்ல விஷயம் பண்ணா ஒரு விஷயம் இந்த மாதிரி பண்ணி ஜர்க்கடிப்பாங்க....

உஷா: என்னதான் சொல்லுங்க...படிப்பு விஷயம் அதுவும் பொது மக்களை நேரடியா தாக்குற விஷயம்...அதுவும் இல்லாம மக்களுக்கு ஏற்கனவே தனியார் மேலே இருக்க வெறுப்பை இன்னும் இந்த விஷயம் உசுப்பேத்தி விட்டு இருக்கு....இனி தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி நடந்துக்கப்போகுதுன்னு பார்ப்போம்...


ராதா:  நீ வேணா பாரு....இப்போ அப்படியே இந்த விஷயத்துல நாட்டாமை பல்டி அடிச்சி அவங்களுக்கு எதிரா திரும்ப வாய்ப்பு அதிகம்...

உஷா: ஓ...அப்படியும் நடக்குமோ...

ராதா:  ஏன் நடக்காது....நடக்கலாம்!....இன்னொன்னு கவனிச்சீங்களா...அமெரிக்கால மறுபடியும் பெரிய அளவுல பண முடை ஏற்பட்டுதாமே....

உஷா: ஆமா நானும் கேள்விப்பட்டேன்....அதனால நமக்கென்ன...அவங்க தானே அலறணும்....

ராதா:  என்ன இப்படி புரியாத ஆளா இருக்கீங்க....இந்த பொருளாதார பிரச்னை அந்த நாட்டை சார்ந்து இருக்கும் நம்ம நாட்டையும் அடிக்கும்...அதுவும் பெரிய அளவுல இருக்கும்...இந்த முறை எவ்வளவு வேலைவாய்ப்பு இழப்புன்னு தெரியல...

உஷா: வேற என்ன நடக்கும் அதனால....

ராதா:  எல்லா நாடும் தங்கள் பொருளாதார விஷயத்த உயர்த்தி காமிக்க(!) இனி தங்கம் விஷயத்துல கண்ணு வைப்பாங்க....அதனால இனி தங்கம் விலை தாறு மாறா ஏற வாய்ப்பு அதிகம்....இதனால ஏற்கனவே பிரச்சனைல இருக்க நம்ம விலைவாசியும் ஏற வாய்ப்பு இருக்கு...
உஷா: என்னங்க மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுறீங்க....

ராதா:  ஏற்கனவே நம்ம பொருளாதார மேதை இதை உணர்ந்து தான் மக்களை பற்றி கவலை படாமல் பெட்ரோல் நிறுவங்கள் தங்கள் இழப்பை ஈடு செய்ய தாங்களே விலை நிர்ணயித்து கொள்ளலாம்னு சொல்லிட்டாரே...

உஷா: இப்படி பண்றதுக்கு எதுக்கு ஒரு நிர்வாகம்...மக்களை இப்படி நசுக்கரதுக்கு பேரு தான் அறிவாளித்தனமா....

ராதா: ஏழைக்குத்தான் அடிப்படை பிரச்சனைகள் தெரியும் அப்படிங்கறதால தான் நம்ம ஆட்சி அதிகாரத்தை ஒரு தலைவர நம்பி ஐம்பது வருசமா ஒப்படைச்சோம் என்ன ஆச்சி...கிட்ட தட்ட 30,000 கோடி ரூவா வெளி நாட்டுல பதுக்கி வச்சிருக்காருன்னு சேதி வந்தது தான் மிச்சம்....

உஷா: இதெல்லாம் நம்மளுக்கு எதுக்குன்னு ஒதுங்குற இந்த கால இளைஞ்சர்கள் தான் இப்படிப்பட்ட விஷயங்களுக்கு காரணம்...

ராதா:  இளைஞ்சர்களை நாம தான தடுத்து வச்சி இருக்கோம்....நம்ம பசங்களுக்கு எது சரின்னு சொல்லித்தர வேண்டிய நாம...அத விட்டுட்டு அவங்கள வெறும் பொருளா(!) இல்ல தயார் பண்ணுறோம்...

உஷா: நீங்க சொல்றது புரியல....

ராதா:  இதை படிச்சாத்தான் உனக்கு வேலைன்னு சொல்லி சொல்லியே அவங்கள ஒரு இயந்திரத்தனமான வாழ்கைல கொண்டு போய் விட்டுடறோம்...அவன் தன்னை காப்பாத்திக்க சுயநலமா மட்டும் யோசிக்க ஆரம்பிக்கறான்....அப்புறம் எப்படி நாட்ட பத்திய உணர்ச்சி வரும்...

உஷா: வேற என்ன செய்ய முடியும் நம்மால...

ராதா: நெறைய செய்ய முடியும்....முதல்ல இந்த தொழில் சார்ந்து மட்டும் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுவித்தலை மட்டுப்படுத்தனும்(!)...அவர்களுக்கு புதிய புதிய எண்ணங்கள் தோன்றும் வண்ணம் அறிவு சார் கல்வியை உருவாக்கணும்.....

உஷா: அதுக்குத்தான் அரசாங்கம் இருக்கே...

ராதா: அப்படி மாத்தி இருந்தா கடந்த காலங்களிலேயே எல்லாம் நடந்து இருக்குமே....ஏன் நடக்கல....முயற்சிப்போம் வழி கிடைக்கும்....!

உஷா: அப்புறம் என்ன புதுசா இருக்கு...


ராதா: நம்ம க்ளப்ல ஒரு விஷயம் யோசிச்சி இருக்கும்....நமக்கு தெரிஞ்ச விஷயங்களை பயன் படுத்தி ஒய்வு நேரங்களில் சிறு தொழில் போல செய்ய முயற்சி பண்றோம்....சீக்கிரத்துல அதுக்கான சரியான வழியை தேர்ந்தெடுத்து சொல்ல இருக்கும்....

உஷா: நல்ல விஷயம்தான்.....சொல்லுங்க நானும் செய்வேன்....

ராதா: சரிங்க....நேரமாச்சி மறுபடியும் சீக்கிரத்துல பாப்போம்...

கொசுறு: இனி....புதிய மாதிரியான அணுகு முறையுடன் களம் காணும் மக்களில் ஒருவனாகிய நான்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

13 comments:

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி, உனக்கு செகன்ட்ஸ்னா பிடிக்காதே?

# கவிதை வீதி # சௌந்தர் said...

சமச்சீர் தீர்ப்பு மக்களால் மிகவும் வரவேற்ப்பு பெற்றுள்ளது...

சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு சபாஷ்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வித்தியாசமான பதிவு...

இதை வாரம் ஒண்ணுன்னு தொடரலாம்....

இராஜராஜேஸ்வரி said...

புதிய மாதிரியான அணுகு முறையுடன் களம் காணும் மக்களில் ஒருவனாகிய நான்! //

வித்தியாசமான பார்வை.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள இந்த ராதா, உஷா யாரு ..
அந்த நாள் ஞாபகமா?


-- சும்மா..
அருமையான கான்செப்ட் தொடர்ந்து எழுதுங்க..

கோகுல் said...

புதிய அணுகுமுறை புதுமையான அணுகுமுறை.தொடருங்கள்.

தமிழ்வாசி - Prakash said...

அணுகுமுறையில் மாற்றமா? ரைட்டு

அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கொசுறு: இனி....புதிய மாதிரியான அணுகு முறையுடன் களம் காணும் மக்களில் ஒருவனாகிய நான்! //////

ஏண் இந்த வெளம்பரம்?

Ramani said...

புதிய அணுகுமுறை ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு
தொடர்ந்தால் மிகவும் பயன்பெறுவோம்
மகிழ்வும் கொள்வோம்
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

vidivelli said...

/நெறைய செய்ய முடியும்....முதல்ல இந்த தொழில் சார்ந்து மட்டும் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுவித்தலை மட்டுப்படுத்தனும்(!)...அவர்களுக்கு புதிய புதிய எண்ணங்கள் தோன்றும் வண்ணம் அறிவு சார் கல்வியை உருவாக்கணும்...../

நல்ல சிந்தனை..
நல்ல புரிந்துகொள்ளக்கூடிய பதிவு,,
அதன் வியூகமும் அருமை...

நாய்க்குட்டி மனசு said...

வித்தியாசமான முயற்சி பாராட்டுக்கள். அது ஏன் எல்லா பெண்களும் முகத்தை மறைத்து கொண்டு இருக்கிறார்கள் .புதுசா அரசியல் பேசுறதில வெட்கமா?

FARHAN said...

புதிய அணுகு முறையில் உள்ளநாட்டு அரசியலுடன் உலக அரசியல் வித்தியாசமான பதிவு வாழ்த்துக்கள்

செங்கோவி said...

நல்லா இருக்குய்யா.