ஊழலுக்கு எதிராக ஒரு வயதான கிழவரின் அணுகுமுறை நமக்கு வியப்பைத்தருகிறது...இந்த கிழவருக்கு இது தேவையா.....சிந்தியுங்கள்....
நாம் யார்(!) நமக்குள்ள பெருமை என்ன கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.....
நம் எதிரி நாடு என்று ஆட்சியாளர்களால் சுட்டிக்காட்டப்படும் சீனா(!) தன் மக்கள் தொகையை குறைத்து வரும் நேரத்தில் நாம் நம் உணவு உற்பத்தியை அல்லவா குறைத்து சாதனை செய்து(!) வருகிறோம்....
இப்பேர்ப்பட்ட உன்னதமான நேரத்தில் இந்த மக்களுக்கு தேவை என்ன....அந்த குழு நடவடிக்கை சத்தியமாக இந்த ஆட்சியாளர்களால் ஏற்ப்பட போவதில்லை....இப்படிப்பட்ட சூழ்நிலையில்....இந்த ஆட்சியாளர்களை எதிர்த்து ஊழலுக்கு எதிராக போராட ஒரு தனி மனிதன்(!) வந்திருக்கிறார்.....
இது வரை வெறும் குரலாக பதிவு செய்தோம்...இந்த நல் ஆதரவு மூலம் ஒழிக எனும் கோஷம் ஊழலுக்கு எதிரான போராட்டமாக வலுக்க ஆசைப்படும் ஓர் பதிவே இது.....
இது வரை வெறும் குரலாக பதிவு செய்தோம்...இந்த நல் ஆதரவு மூலம் ஒழிக எனும் கோஷம் ஊழலுக்கு எதிரான போராட்டமாக வலுக்க ஆசைப்படும் ஓர் பதிவே இது.....
ஜெயிலில் அடைப்போம் என்று முழங்கிய ரிமோட்(!) ஆட்சியாளர்கள் இன்று அமைதிப் பேச்சுக்கு இந்த மனிதரை அழைக்கும் காலம் வந்து இருக்கிறது....இது நம்மைப்போன்ற பொதுமக்களை அழைத்து பேசும் உண்மையை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது....
இந்த புரட்சியை இந்த லோக்பாலுடன்(தங்கபாலு அல்ல!) விட்டு விடாமல் தொடரப்போவதாக அறிதியிட்டு கூறும் ஓர் வயதான இளைஞ்சரின் வழி காட்டுதலுடன் தொடருவோம் என்ற நம்பிக்கையுடன் உறுதி கோரும் உங்கள் நண்பன் விக்கி தக்காளி....
வெளி நாடு வாழ் நண்பர்கள் தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக வெளியிடப்பட்டு இருக்கும் கடிதத்தில் தங்கள் ஆதரவுக்கான கையெழுத்தை இட்டு தங்கள் தேச நலனை காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....இக்கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு செல்ல இருக்கிறது!
கொசுறு: எல்லோரும் இழுத்தால் தான் தேர் நகரும்.....இது தேரோட்டம் அல்ல போராட்டம்(!)...ஒருவர் வடம் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார்...உங்கள் நல் ஆதரவை எதிர் நோக்கும் ஓர் நண்பனாக....ஜெய் ஹிந்த்!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
20 comments:
வடம் பிடிப்போம்!
ஊர் கூடி தேர் இழுப்போம் ... ஜெய் ஹிந்த்
தமிழ் மணம் த்ரீ
அன்னாவின் போராட்டத்தை மேட்டுக்குடியினர் போராட்டம் என்று பழிக்கும், பரம்பரை புரட்சியாளர் வரிசையில் இணைந்து வீட்டிரோ என தலைப்பைப் பார்த்து எண்ணினேன்!தனி நபர் போராட்டம், அரிதானது!
சாத்வீகப் போராட்டம் மட்டுமே மக்களை ஈர்க்கும்என்பதை வன்முறை குழுக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது!
நல்ல பதிவு விக்கி..அன்னா ஹசாரே வாழ்க!
ஜெய் ஹிந்த் .
mm நல்ல பதிவு...உணர்ச்சியுள்ளவங்க நடத்துங்க!
t.m.8
என்ன விக்கி,இப்படி ஒரு தலைப்பு.மற்றப்படி சொன்னதெல்லாம் சரி.
இன்றைய கிச்சி லிக்காஸ்(!)
விக்கியுலகம்(?)
தேவையான தருணத்தில் ஒரு போராட்டம், ஒட்டு மொத்த மக்களும் இதை பயன்படுத்தி அவருக்கு கைகொடுத்தால் நல்ல முடிவு கிடைக்கும்..
அன்னா ஆட்டம் தொடரட்டும்!!
தலைப்பு நெருடலாகவே இருக்கிறது நண்பரே
கவர்ந்திழுக்கும் தலைப்பென்றாலும்,
காத்திரமான பதிவு பாஸ்,
ஹசாரேயின் போராட்டம் வெற்றி பெற்று.
ஊழலற்ற அபிவிருத்தியுடன் கூடிய செழிப்பான பாரதம் மறுமலர்ச்சியடைய என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப்படியும் பேந்தா விளையாடலாமா?
வாழ்த்துக்கள்.
அஞ்சு நாள் ஆஃப். வந்ததும் அடிச்சாரய்யா சிக்ஸர்.
வெறும் சட்டம் நாட்டை மாற்றுமா விக்கி!!??..
எப்பயுமே யாராவது கம்ப்ளைன்ட் குடுத்தா தான் கேஸ் இல்லாட்டி வெறும் நியூஸ்..
இன்னைக்கு இந்தியா-ல இருக்கிற மாதிரி கடுமையான சட்டங்கள் எங்கேயும் இல்லை..
தடா பொடா இன்னும் எவ்வளவோ இருந்தும் இந்தியா-ல பயங்கரவாதம் குறைஞ்சி இருக்கா?
அது மாதிரி தான் இதுவும்
வலுவான ஜன லோக்பால் சட்டம் பேப்பரில் மட்டும் எப்போதும் போல...
sorry net cut
உங்க தலைப்பை தமிழ் மணத்தில பார்த்திட்டு நீங்க சேட்டைக்காரன் குரூப்போட சேர்ந்திட்டீங்களோன்னு நினைச்சி உள்ளே வந்தேன்.
நல்ல வேளை அப்படியெல்லாம் இல்லை
//எல்லோரும் இழுத்தால் தான் தேர் நகரும்.....இது தேரோட்டம் அல்ல போராட்டம்(!)...ஒருவர் வடம் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார்...உங்கள் நல் ஆதரவை எதிர் நோக்கும் ஓர் நண்பனாக....ஜெய் ஹிந்த்!//
உண்மை!
ஜெய் ஹிந்த்!
Post a Comment