வணக்கம் நண்பர்களே....
ஒரு நண்பர் எனக்கு போனில் அழைத்து இருந்தார். நண்பராச்சே...மீடிங்கில் இருந்த போது எடுக்க முடியவில்லையே என்று சங்கடப்பட்டு...மீட்டிங்கை விட்டு வெளிய வந்து பேசினேன்....
மாப்ள....என்னய்யா சொல்லு...நான் கொஞ்சம் பிஸி(ஹிஹி!).....
அது வேற ஒன்னும் இல்ல எனக்கு ஒரு வேல சொல்லி இருந்தேனே....
ஆமாம்...அதுக்கு தான் ஏற்பாடு பண்ணிட்டு வீட்ல சொல்லிட்டாங்களே என்ன ஆச்சி.....
அது வேற ஒன்னும் இல்ல....கொஞ்சம் கஷ்டத்துல வட்டிக்கு வாங்கிட்டேன்....இப்போ ஊருக்கு போக விடமாட்டேங்குறாங்க....என்னத்த பண்றதுன்னு தெரியல(!)....அதனால அந்த மொதலாளிகிட்ட என்னை மன்னிச்சிட சொல்லு(!)....என்னால வர முடியாது.....
டேய் என்ன விளையாடுறியா.....உனக்காக அவர் கிட்ட பேசி உன்னோட விமான டிக்கட்ட கூட வாங்கி கொடுத்திட்டேன்....இப்போ வந்து இப்படி சொன்னா என்ன பண்றது....
இல்ல மாப்ள...எனக்கு ராசியில்லன்னு நெனைக்கிறேன் விட்டுடு...
டேய் பிஞ்சிடும்(!)....மரியாதையா வந்து சேரு....
இல்ல மாப்ள என்னால முடியாது...என் குழந்தை அனாதயாயிடும்...
என்னடா லூசு மாதிரி பேசுறே....எவ்ளோ தரனும் சொல்லு பேசிப்பாப்போம்....கொஞ்ச கொஞ்சமா அடசிடலாம்டா.....
வேணாம் விட்ரு.....நீ சொல்றா மாதிரி நான் ஒரு கரப்பான் பூச்சிதான்(!)....
என்னடா சம்பந்தமே இல்லமா பேசுற....சொல்லு என்ன ஆச்சி!
அவன் விளக்கப்படுத்திய போது எனக்கு திக் என்றது....என் நண்பன் கரப்பான்(!)
மன்னிக்கவும் அவன் மீசையை வைத்து நான் அவனை அப்படித்தான் கூப்பிடுவேன்...அவன் ஒரு சமையல் கலைஞ்சன்...தந்தையின் தொழிலை கற்று தேர்ந்தவன்....பத்தாவதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப நிலை காரணமாக வேலைக்கு சென்று விட்டான்(அப்போது நல்ல படிப்பாளி!)....தகுந்த வயதில் சொந்தக்காரர் பெண்ணை மணமுடித்து வைத்தார்கள்(!)...வாழ்கையை கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தான்.....அதனால் ஒரு ரெஸ்ட்டாரேன்டில் வேலை பார்த்து கொடுத்தேன் சமீபத்தில்....
திடீரென்று அவன் படித்த(!) மனைவி ரெண்டு நாள் முன்பில் இருந்து காணவில்லை என்று தேடி இருக்கிறான்...இப்போது தெரிய வந்து இருக்கிறது அடுத்த வீட்டு படித்த வாலிபனுடன் சென்று விட்டதாக....அந்தப்பெண் திருமணம் முடித்து வரும்போது 12 வது வகுப்பு வரை படித்திருந்தாள்(!)....நண்பன் தன்னால் படிக்க முடியவில்லை என்பதால் அப்பெண்ணின் கல்வி விருப்பத்துக்கிணங்க MA வரை படிக்கவைத்தான்...
இதற்கிடையில் பக்கத்து வீட்டு நண்பருடன் ஏற்ப்பட்ட தகாத சகவாசத்தால் அந்தப்பெண் இவனை விட்டு சென்று விட்டாள்(!)....ஒரு பெண் குழந்தை வேறு உள்ளதை நினைத்து பார்க்கும் பொழுது என்ன சொல்வது தெரியவில்லை.....அவனை தேர்த்தி இருக்கிறேன்...அந்தக்குழந்தை எண்ணி அவன் அழுகிறான்...அவனை எண்ணி நான் வருந்துகிறேன்...நண்பா விடியும் பொழுது நலமாக விடிய புறப்பட்டு வா உன் பணிக்கு சீக்கிரம்...கவலை மற...கடமையை நினை!
கொசுறு: என்னுடைய பார்வையில்....என்ன பிரச்னை இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாமே....உள்ளப்பசியை விடவா உடல் பசி பெரியது(!).....பகிரணும்னு தோணிச்சி....நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
20 comments:
ada
முதல் ரசிகன்...
நானும் வந்தாச்சு..
தம்பி.. என்னப்பா டைட்டில் இது?
உங்கள் நண்பர், நடந்ததைப் பற்றி வருந்தாமல், நடக்க வேண்டியதை எண்ணி செயல்படவேண்டும்.
அந்தப் பெண் குழந்தை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.
//உள்ளப்பசியை விடவா உடல் பசி பெரியது(!)//
சரியாகச் சொன்னீங்க.
அன்பை புரிந்து கொள்ளாத காமம் என்பது கசமாலம்.... அந்த கருமத்தை தூக்கி எறிந்து விட்டு நீங்கள் சொன்னது போல் அந்த நண்பருக்கு ஒரு புதிய விடியல் பிறக்கட்டும்
தலைப்பில் ஏதோ நெருடல் இருக்கிறது. முடிந்தால் மாற்றி வைக்கவும்.
அந்த குழந்தையின் எதிர்காலம் ??((
என்னடா பொம்பளைங்க .......என்ன கொடுமை சரவணா .....வேற வழியில்ல ......நண்பரை அடுத்த வாழ்க்கைக்கு தயார் படுத்த வேண்டியதுதான் ......
நாம் என்னதான் கருத்து கூறினாலும், பாதிக்கப்பட்டவருக்குத்தானே வேதனை. அதெப்படி உடல் பசி எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது?
உங்கள் பார்வைதான் சரியான வழி..
சிலருக்கு உடல் பசி உள்ளப் பசியை வென்றுவிடுகிறது..அது தான் பிரச்சினை.
ரொம்ப வருத்தமான விஷயம், வர வர சுயநலப் போக்கு அதிகமாகிட்டு வருது....!
கட்டிய கணவனை கைவிட்டாள், பெற்றெடுத்த பிள்ளையை எப்படி உதறினாள்?
வர வர பெண்கள் ரொம்ப மோசமாகிட்டாங்க
வணக்கம் பாஸ், வாழ்க்கையில் எப்படி நாம் வாழ வேண்டும், எவ்வாறாக அனுசரித்துப் போக வேண்டும், உள்ளத்தின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் வாழ்வில் எப்போதுமே சிக்கல் இல்லை என்பதனை நண்பனின் அனுபவப் பகிர்வினூடாக விளக்கியிருக்கிறீங்க.
தத்துவம் + வாழ்க்கைப் பாடம் இரண்டையும் கலந்து தந்திருக்கிறீங்க.
அடடடா பாவமா இருக்குய்யா.....!!!
//மதுரன் Says:
August 1, 2011 10:52 PM
வர வர பெண்கள் ரொம்ப மோசமாகிட்டாங்க//
என்ன மதுரன் சார் இது????????
ஒட்டுமொத்தமாக எல்லாப் பெண்களையும் சொல்வது போல அல்லவா தெரிகிறது???
மாப்ள இவளுக திருந்தவே மாட்டாளுகளா
பாருங்க அந்த படிச்ச பண்னாட வாலிபன் இந்த பண்னாடைய உடல் பசி தீர்ந்ததும் நடு ரோட்டில விடப்போறான்.. இது சாபமில்ல மாப்பிள நானும் பார்த்திருக்கேன் இப்படி சிலபேர..!?
Post a Comment