Followers

Friday, August 26, 2011

குட்டிச்சுவர் - பாகம் 3

வணக்கம் நண்பர்களே.....


டங்கு: அப்படி சொல்லாதீங்க அண்ணே...ஏதாவது வழி சொல்லுங்க.....

பியூன்: அது ஒண்ணுதான் தம்பி வழி.....

டிங்கு: என்னடா பண்றது....

டங்கு: விடு மாப்ள பாத்துக்கலாம்......

டிங்கு: ஏன்னே லோன் வந்தப்புறம் அதுல இருந்து எடுத்துப்பாரோ.....

பியூன்: இல்ல தம்பி நீங்க முதல்ல அந்தப்பணத்த கொடுத்தாத்தான் லோனே கிடைக்கும்....புரியாத ஆளுங்களா இருக்கீங்களே....

டிங்கு: சரிண்ணே....

மீனா: டேய் அவன ஏன் முரசிட்டு நிக்கிறே.....வா போய் வேற வழி பார்ப்போம்....

(மீண்டும் குட்டிச்சுவர் அவர்களை வரவேற்றது......அதில் ஏறி மூன்று நண்பர்கள் இந்த விஷயத்தில் இருந்து எப்படி வெளிவருவது என்று யோசித்து கொண்டு இருந்தார்கள்....அப்போது!)

சாந்தி: டிங்கு...மகா போன் பண்ணி இருந்தா...உன்ன பாக்கணுமாம்....நான் உன்கிட்ட சொல்றேன்னு சொன்னேன்....


டிங்கு: அவளுக்கு வேற வேலையே கிடையாது.....

மாப்ள உனக்கு காதலோட மதிப்பே தெரியல....அவ இத்தன தடவை போன் பண்றாளே....ஏன் இப்படி அவளை கஷ்டப்படுத்துற.....ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்துடறது தானே.....

டிங்கு: முயற்சி பண்றேன்....

ஏய் தம்பி இங்க வா.....(குரல் வந்த திசையை பார்த்தார்கள்!)

டிங்கு: யார்ரா இந்த ஆளு....

டங்கு: மாப்ள இவருதாண்டா நிதி நம்ம வார்டு கவுன்சிலரு......

வார்டு: ஏய் உன்னத்தான்......

டிங்கு: சொல்லுங்க....என்ன விஷயம்....

வார்டு: டேய் பிச்சிடுவேன்....இறங்கி வந்து பதில் சொல்லு....

டிங்கு: யோவ் ஊரு காச தூக்கி பேக்கட்டுல போட்டு சுத்துற உனக்கெல்லாம் என்னத்துக்கு மரியாத.....மரியாத நாங்க தானா கொடுக்கணும்.....கேட்டு கொடுக்கக்கூடாது.....

வார்டு: அடிங்....(அடிக்க தன் பைக்கிலிருந்து இறங்கி வந்தார்!).....நான் யாரு தெரியுமாடா ஆளும் கட்சில என் செல்வாக்கு தெரியுமா...உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்...

டங்கு: அண்ணே....ஏன்னே டென்சன் ஆகுறீங்க...அவன் அப்படித்தான்..என்ன விஷயம் சொல்லுங்கண்ணே.....


வார்டு: எலேய் இவங்க அப்பன இந்த தேர்தல்ல எல்லாம் நிக்க வேணாம்னு சொல்லு.....மீறி நின்னா சொல்றதுக்கில்ல....எது வேணா நடக்கும்......

டிங்கு: ஹூம்....ஏன்யா இதான் விஷயமா....போய் பொழப்ப பாரு.....அது அவரோட சொந்த விஷயம்....வேணும்னா அவர்கிட்டயே போய் அத சொல்லு....அத விட்டுட்டு.....எங்கிட்ட வந்து கெஞ்சிட்டு இருக்கா....போய்யா...போ!

வார்டு: இவனுக்கு என்ன திமிரு....டேய் இவன நாலு சாத்து சாத்துனாத்தான் அடங்குவான் போல.....

டிங்கு: ஏய் போயிரு...ஏற்கனவே நான் கொலவெறில இருக்கேன்....

வார்டு: இதோடா...காமடி பண்ணிட்டு இருக்கான்

டங்கு: மாப்ள வேணாம்டா....4 பேரு இருக்கானுங்க....அதுவும் உள்ள சாமான்(கத்தி!) வச்சிருப்பானுங்க போல....சரின்னு சொல்லிடு பின்னாடி பாத்துக்கலாம்....

(பேசிக்கொண்டு இருக்கும்போதே ஒருவன் ஓடி வந்து குத்த முயன்றான் முகத்தில்!)

சினிமா சண்டை போல இல்லாமல்...அந்த நிஜ சண்டை 3 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது....

வார்டு: டேய் எங்கள அடிச்சிட்ட இல்ல...உன்ன விட மாட்டோம்டா....(கூவிக்கொண்டே ஓடினான் அந்த அசிங்க வாதி(!)....

டிங்கு: எலேய்....வந்து இந்த பைக்குகள எடுத்துட்டு போங்கடா....அடப்பாவிகளா...என்னமா ஓட்றானுங்க.....

டங்கு: மாப்ள...எனக்கென்னமோ பயமா இருக்குடா....நம்ம அவசரப்பட்டுட்டமோன்னு....

டிங்கு: விட்ரா பாத்துக்கலாம்....


(வீட்டுக்குள் நிழைகிறான் டிங்கு....அப்பா அவனை பார்த்து.........)

அப்பா: டேய் தடிமாடு......உன்ன பெத்ததுக்கு ஒரு எருமைய பெத்து இருக்கலாம்..அதனலயாவது பலன் உண்டு.....இப்படி ஊரெல்லாம் ரவுடித்தனம் பண்ணி சண்ட போட்டுட்டு வர்றியே...நீயெல்லாம் என்னத்த தின்ற.....

அம்மா: ஏன்டா மரம் மாதிரி நிக்கற....கேக்குறாரு இல்ல பதில் சொல்லு....

டிங்கு: நான் இப்போ எது சொன்னாலும் நீங்க நம்ப போறது இல்ல....என் மனசாட்சிக்கு தெரியும் நான் செய்ஞ்சது தப்பு இல்லன்னு.....

அப்பா: கிழிச்சே.....உனக்கு கடவுள் மேலேயே நம்பிக்க கிடையாது....இதுல மனசாட்சிய பத்தி பேசுற....உன்னக்கு பின்னாடி ஒரு பொண்ணு பெத்து வச்சிருக்கேன்...அத கரை சேக்கணும்...

டிங்கு: கடவுள மனசுல நெனசிக்கிட்டா போதும்...கோயில் கோயிலா போய் கெஞ்சிட்டு இருக்க வேண்டியதில்ல....நான் என்ன பண்ணனும்.....நான்தான் என்னால இப்போதைக்கு முடிஞ்சது கொடுக்கரனே....அப்பா: நீ நைட்டானா எங்க போறே....மாசத்துக்கு 500 ரூவா எந்த வேலை செய்ஞ்சி கொடுக்கறேன்னு தெரியனும்....

தொடரும்.....

கொசுறு: தோல்வி நிலையென நினைத்தால்....மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

34 comments:

FOOD said...

அதிகாலை வணக்கமுங்கோ!

FOOD said...

உங்க ஓட்டு பதியலாமே.

FOOD said...

தமிழ்மணம் இணைப்பு, முதல் ஓட்டு.

FOOD said...

//தோல்வி நிலையென நினைத்தால்....மனிதன் வாழ்வை நினைக்கலாமா...//
அதிகாலை தத்துவம்.

FOOD said...

சரி. பின்னர் சந்திக்கிறேன்.

FOOD said...

அரசியல் மிரட்டல் இப்படித்தான்.

JOTHIG ஜோதிஜி said...

கவிதையைப் போல தலைப்பு.

ரெவெரி said...

கலக்கல்...தொடருங்கள்...தொடர்கிறேன்...

மதுரன் said...

அசத்தல்...

மாய உலகம் said...

தமிழ் மணம் 5 .... குட்டி சுவர்ல குட்டிங்களே வருல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

MANO நாஞ்சில் மனோ said...

டங்கு: மாப்ள வேணாம்டா....4 பேரு இருக்கானுங்க....அதுவும் உள்ள சாமான்(கத்தி!) வச்சிருப்பானுங்க போல....சரின்னு சொல்லிடு பின்னாடி பாத்துக்கலாம்....//

எவம்லேய் அது...? எட்றா அந்த வீச்சருவாளை.....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...

MANO நாஞ்சில் மனோ said...

நைட்டானா எங்கே போவாயிங்க...?? டாஸ்மாக்'குத்தான்.....

தமிழ்வாசி - Prakash said...

குட்டி சுவர் மிரட்டுது

vidivelli said...

கடவுள மனசுல நெனசிக்கிட்டா போதும்...கோயில் கோயிலா போய் கெஞ்சிட்டு இருக்க வேண்டியதில்ல.../

ithuvum sarithaan..
hahaa...
nallaayirukku..
thodarunkaL..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ..

பல்சுவை வலைதளம் விருது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தமிழ்மணம் 10

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில்ல எதுக்கு உம் பேரு? ஹி ஹி

Chitra said...

The pictures are very nice. :-)

சசிகுமார் said...

//நான் இப்போ எது சொன்னாலும் நீங்க நம்ப போறது இல்ல....என் மனசாட்சிக்கு தெரியும் நான் செய்ஞ்சது தப்பு இல்லன்னு..//ஆம்பள பசங்க சொன்னா எங்க எடுபடுது

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

தொடருங்கள் விக்கி இன்னும் என்னென்ன சுவாரசியங்கள் கத்து இருக்கிறது என்பதை அறிய ...

இரவு வானம் said...

சூப்பர் மாம்ஸ், குட்டிசுவர்தான் பல பேரோட வாழ்க்கையில் போதிமரம்

Lakshmi said...

கடவுள மனசுல நெனசிக்கிட்டா போதும்...கோயில் கோயிலா போய் கெஞ்சிட்டு இருக்க வேண்டியதில்ல


ஆமா சரிதானே

M.R said...

தொடர் அருமை தொடருங்கள் ,தொடர்கிறேன்

M.R said...

தமிழ் மணம் 19

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தோல்வி நிலையென நினைத்தால்....மனிதன் வாழ்வை நினைக்கலாமா...Nice.,

ஜீ... said...

SUPER MAAMS! :-)

Unknown said...

ரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்
http://bit.ly/n9GwsR

மகேந்திரன் said...

தொடரின் போக்கு மற்றும் உரையாடல்கள்
அருமையாக இருக்கிறது.
தோல்வியை நிலையென்று எண்ணாதே என
உரைத்துச் சொல்கிறது.....
இன்றுமுதல் தொடரைத் தொடரும் நண்பர்களில்
நானும்.......

கவிதை காதலன் said...

இந்த குட்டிசுவத்துல ஏறி அமருவதும் சுகமாகத்தான் இருக்கிறது

செங்கோவி said...

அண்ணன் பெரிய தாதாவா இருப்பார் போலிருக்கே.

இராஜராஜேஸ்வரி said...

தோல்வி நிலையென நினைத்தால்....மனிதன் வாழ்வை நினைக்கலாமா..

இராஜராஜேஸ்வரி said...

முத்தான பகிர்வுக்கும் அருமையான படங்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்>

நிரூபன் said...

கலக்கலா நகர்த்தியிருக்கிறீங்க.